Saturday, 20 December 2025

கெட்ட சக்தி விலக வெள்ளிக்கிழமை அம்மனை வணங்கி பரிகாரம்:


 கெட்ட சக்தி விலக வெள்ளிக்கிழமை அம்மனை வணங்கி பரிகாரம்:

சில வீடுகளில் குடி கொண்டிருக்கும் துர்சக்திகள், அந்த வீட்டில் இருப்பவர்களை நிம்மதியாக வாழ விடாது. பெரிய அளவில் ஏவல் பில்லி சூனியம், ஆவி பிசாசு இவைகளை மட்டும் துஷ்ட சக்திகள் என்று சொல்ல மாட்டார்கள். கெட்ட நேரம், கண் திருஷ்டி, கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒரு எதிர்மறை ஆற்றல், இவைகளையும் கெட்ட சக்தி என்று தான் சொல்லுவோம். நம்முடைய வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவு வருகிறது.
வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. இரவு படுத்தால் நிம்மதியான தூக்கம் இல்லை. குடும்பத்தில் சண்டை சச்சரவு வருமானம் இல்லை. வந்த வருமானம் வீண்விரய செலவாகிறது. இதுபோல வாழ்நாள் பிரச்சனைகளை கொடுக்கக் கூடியதும் அந்த கண்ணுக்கு தெரியாத எதிர்மறை ஆற்றல், கெட்ட சக்தி தான். இதிலிருந்து விடுபட எக்கச்சக்க பரிகாரங்கள் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதிலிருந்து ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
நாளை வரக் கூடிய வெள்ளிக்கிழமையும் அமாவாசையும் இணைந்து வருகிறது. நாளை இந்த பரிகாரத்தை செய்யுங்கள். ஒரு கற்றாழையை எடுத்துக் கொள்ளுங்கள்.
நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து வாங்கினாலும் சரி, அல்லது காடுகளுக்கு சென்று நீங்களே அந்த கற்றாழை செடியை பறித்து வந்தாலும் சரி. அதை முதலில் மஞ்சள் கலந்த தண்ணீரில் நன்றாக கழுவி விடுங்கள். பிறகு அந்த கற்றாழையை வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் வீட்டின் அருகில் பிரத்யங்கரா, பத்ரகாளி, வாராஹி, பிடாரி, இதுபோல ஏதேனும் உக்கிரமான அம்மன் தெய்வங்கள் இருந்தால், அந்த கோவிலில் இந்த கற்றாழையை வைத்து, முடிந்தால் அம்மன் பாதத்தில் இந்த கற்றாழையை வைத்து, ஒரு பூஜை செய்து, மனதார அம்மனிடம் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
அந்த கற்றாழையை வாங்கி வந்து குலதெய்வத்தின் பெயரை 27 முறை சொல்லி, உங்கள் நிலைவாசல் படியில் கட்டி தொங்க விட்டால், நிச்சயமாக உங்கள் வீட்டில் தங்கியிருக்கும் கெட்ட சக்திகளும் வெளியேறும். வீட்டிற்குள் எந்த ஒரு கெட்ட சக்தியும் நுழைய முடியாது. கூர்மையான ஆயுதங்களில் இந்த உக்கிர தெய்வங்கள் வாசம் செய்யும் என்று சொல்லுவார்கள். அது போல தான் இந்த கூர்மையான கற்றாழை முள் பகுதியிலும் அந்த உக்கிர தெய்வங்கள் அமர்ந்து, உங்கள் வீட்டை பாதுகாப்பார்கள் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.
ஆன்மீகம் சார்ந்த இந்த எளிமையான பரிகாரம் நிச்சயம் உங்களுடைய குடும்பத்திற்கு நிம்மதியை கொடுக்கும். வாங்கி வந்து கட்டிய கற்றாழை ஒரு சில நாட்களில் ரொம்பவும் காய்ந்து விட்டது எனும் பட்சத்தில் பழைய கற்றாழையை எடுத்து தூக்கி தூர போட்டுவிட்டு, மீண்டும் புதிய கற்றழையை வளர்பிறை வெள்ளிக்கிழமை கொண்டு வந்து கட்டுவது சிறப்பான பலனைத் தரும். ஒரு சில எதிர்மறை ஆற்றல் இருக்கும் இடத்தில், கற்றாழை கொண்டு வந்து கட்டிய ஒரு சில நாட்களிலேயே அதனுடைய பச்சை நிற தன்மை மாறிவிடும்.
சில வீடுகளில் எல்லாம் நீண்ட நாட்களுக்கு கட்டிய கற்றாழை பச்சை நிறத்திலேயே இருக்கும். உங்களுடைய வீட்டில் கட்டிய கற்றாழை எந்த நிலைமையை கொண்டுள்ளது, என்பதை கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள். வாடிய கற்றாழை தன்னகத்தே எதிர்மறை ஆற்றலை ஈர்த்து வைத்திருக்கும். அதை வீட்டிலிருந்து அப்புறப்படுத்துவது நல்லது. ஆன்மீகம் சார்ந்த இந்த அரிய தகவல் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும்

No comments:

Post a Comment

விதையின் வீரியம் போல – புத்திர யோகம் போல குழந்தையின் வளர்ச்சி.

 விதையின் வீரியம் போல – புத்திர யோகம் போல குழந்தையின் வளர்ச்சி. ஒரு விவசாயி நிலத்தில் விதை இடும் முன் முதலில் கவனிப்பது விதையின் தரத்தையே. வ...