Friday, 19 December 2025

சபரிமலையின்🙏 ஏழு அம்சங்கள்



சபரிமலையின்🙏 ஏழு அம்சங்கள்🌻.. என்னென்ன தெரிந்து கொள்ளலாம் வாங்க..!!

🙏🏼🐅🔥#சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!
🌻 #கார்த்திகை மாதத்தில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும். எனவே கார்த்திகை மாதம் மாலை அணிந்து சபரிமலைக்கு பக்தர்கள் செல்கின்றனர்.
🌻 🔥#ஐயப்பன் எழுந்தருளியுள்ள சபரிமலை ஏழு அம்சங்களை கொண்டு திகழ்கிறது. அவற்றை பற்றி பார்க்கலாம் வாங்க..
🌻 பதினெட்டு மலைகள் சூழ்ந்த நிலையில் சபரிமலை சுயம்புவாக எழுந்து அனைத்து மலைகளையும்விட உயர்ந்து காணப்படுகிறது. இங்கு ஒவ்வொரு வருடமும் மகர சங்கராந்தி புனித நாளில் பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி உருவாய் காட்சியளிப்பார்.
🌻 #பம்பை நதிக்கரையில் முனிவர்கள், குடில்கள் அமைத்து யாகம் செய்ததாக புராண வரலாறு கூறுகிறது. அதனால் இது மகாயாகம் நடந்த யாக பூமியாகும். இன்றும் ஐயப்ப பக்தர்கள் இங்கு யாக பூஜை செய்து வருகின்றனர்.
🌻 ரம்பாசுரனின் மகனாக பிறந்த மகிஷன் தவம் மேற்கொண்டு, பிரம்மனிடம் அரிய பல வரங்களை பெற்றான். அதனால் விளைந்த ஆணவத்தால் தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் பராசக்தியை வேண்டினர். பராசக்தி, மகிஷனிடம் போர் புரிந்து அவனை வதைத்தாள். அதனால் இது பக்திமார்க்க தர்மயுத்தம் நடந்த பலிபூமியானது.
🔥🏹 #ராம, லட்சுமணன் :
🌻 🏹🔥#ராமபிரானும், லட்சுமணனும் தேவியை தேடி கானகத்தில் அலைந்தனர். அப்போது மதங்க மாமுனிவர் ஆசிரமம் தென்படவே அங்கு சென்றார்கள். அவரது குடிலில் இருந்த நீலி என்ற பெண் ராம, லட்சுமணர்களை வரவேற்று, தான் இங்கு முனிவருக்கு பணிவிடை செய்வதாகவும், தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவள் என்றும் கூறினாள். ராமபிரான், மனிதர்கள் எல்லோரும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். இதில் உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் என்ற பாகுபாடில்லை. உன்னை போற்றி புகழும் நிலையை உனக்கு அளிக்கிறேன் என்று சொல்லி அந்த பெண்ணை அழகான அருவியாக மாற்றி புனிதம் பெற அருள்புரிந்தார். மாறிய அந்த பெண் பம்பா நதியாக பாய்ந்து தட்சிண கங்கை என்று சிறப்பு பெயர் பெற்றாள்.
🔥🔱#ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரி :
🌻 🔥#ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரியை பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் தவமிருந்து வழிபட்டபோது, அவர்களின் முன் தேவி தோன்றி என்ன வரம் வேண்டும்? என்று கேட்டாள். தங்களின் விஸ்வரூப தரிசனத்தை காண வேண்டும் என்று கேட்க, உடனே தேவி விஸ்வரூப தரிசனம் தந்தாள். தேவி தன்னுடைய இதயத்தில் ஒரு லட்சம் இதழ்கள் கொண்ட தாமரை பூவில் ஒரு சக்தியை வைத்து கொண்டிருந்தாள். அந்த சக்திதான் மகாசாஸ்தா.
🌻 இதனை கண்ட சிவனும், விஷ்ணுவும் ஏக காலத்தில் இந்த மகாசாஸ்தா தங்களுக்கு குழந்தையாக பிறக்க வேண்டுமென்று மனதிற்குள் நினைத்தார்கள். அவர்கள் நினைத்ததை புரிந்து கொண்ட தேவி, ஆசி புரிந்தாள். தேவி அருளிய வரத்தின்படி சிவனுக்கும், மோகினி அவதாரம் எடுத்து வந்த விஷ்ணுவுக்கும் ஹரிஹர அம்சமாக அவதரித்தார் சாஸ்தா.
🙏🏼🔥#பம்பா உற்சவம் :
🌻👹 #மகிஷனின் சகோதரியான மகிஷியை, ஐயப்பன் வதம் செய்தார். இதனால் தேவர்களால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட தவ பூமியாகவும் சபரிமலை திகழ்கிறது. இங்குள்ள பம்பை நதிக்கரையில் மகரவிளக்கு பூஜைக்கு முன்னர், விளக்கு உற்சவம் நடைபெறும். இதற்கு 'பம்பா உற்சவம்' என்று பெயர்.
🌻 🙇🔥#ராமாயண காலத்தில், சபரி என்ற பெண் ராமபிரானை சந்திக்கும் பாக்கியம் பெற்றாள். அவள், ராமபிரானுக்கு சுவையுள்ள பழங்களை கொடுத்து உபசரித்தாள். அவள் இப்பகுதியில்தான் வசித்தாள் என்பர். மேலும் பல ரிஷிகள் பம்பை நதிக்கரையோரம் தவமிருந்ததால் இத்தலம் யோக பூமியாகவும், யோகிகள் வாழ்ந்த தபோ பூமியாகவும் போற்றப்படுகிறது...🙏🏼

No comments:

Post a Comment

விதையின் வீரியம் போல – புத்திர யோகம் போல குழந்தையின் வளர்ச்சி.

 விதையின் வீரியம் போல – புத்திர யோகம் போல குழந்தையின் வளர்ச்சி. ஒரு விவசாயி நிலத்தில் விதை இடும் முன் முதலில் கவனிப்பது விதையின் தரத்தையே. வ...