கடன் தீரும் . . .
'கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கி நின்றான் இலங்கை வேந்தன்..' என்பதற்கு இணங்க.. கடன் எனும் கர்மா ஒரு மனிதனை ஆட்கொண்டு ஆட்டி வைத்தால் அதிலிருந்து அவன் மீள்வது அத்தனை சுலபம் இல்லை..!!
ஆனால்..
ஜோதிட சாஸ்திரத்தில் கடனிலிருந்து மீள்வதற்கான சூட்சும ரகசியங்கள் ஒளிந்து இருக்கிறது..!!
கடனில் தத்தளிக்கும் ஜாதகரின் சுய ஜனன ஜாதகத்தில் தான் அதற்கான தீர்வும் வழிமுறைகளும் தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்..!!
கடனில் சிக்கித் தவிக்கும் பலரும் செய்யும் தவறு யாதெனில் . . .
வேறொருவர் ஏதேனும் ஒரு கோவில் சென்று அல்லது ஏதேனும் ஒரு பரிகாரம் செய்து கடனிலிருந்து மீண்டிருந்தால்.. அதே கோவிலுக்கு இவர்களும் சென்று அதே பரிகாரத்தையும் செய்து இறுதியில் முன்பை விட இன்னும் அதிகமாக கடன் சுமை கூடும் சூழல் ஏற்படுகிறது..!!
. . .
நான் மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக தொடர்ந்து சொல்லி வருவது இது தான்..!!
எல்லா கோவில்களிலும் எல்லோருக்கும் உகந்தது அல்ல..!!
ஒவ்வொரு கோவிலும் அதன் அதன் அமைப்பில் வெவ்வேறு வகையில் வீரியம் மிகுந்த சக்தி பீடங்கள் என்பதை உணருங்கள்..!!
கோவில்கள் ஒன்றும் திரையரங்கோ.. கடற்கரையோ.. மனமகிழ் மன்றமோ இல்லை..!!
உங்கள் ஜாதகத்திற்கு உகந்த கோவில்களை மட்டும் தேர்ந்தெடுத்து சென்று வாருங்கள்..!!
உங்கள் ஜாதகத்திற்கு உடன்படாத ஸ்தலங்களை முடிந்த மட்டிலும் தவிர்த்து விடுங்கள்..!!
( என் அனுபவத்தில் இருந்து ஓர் உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்..!!
ஒரு குறிப்பிட்ட ஸ்தலம் ஆகாது என்று சொன்ன பிறகும்.. குழந்தைக்கு மொட்டை அடிக்கிற ஒரு வேண்டுதல் வச்சு இருக்கோம்.. இந்த ஒரு முறை மட்டும் போயிட்டு வந்துட்றோம் என்று கூறி ஆகாத ஸ்தலத்திற்கு சென்று வந்த ஜாதகருக்கு..
அந்த மொட்டை அடிக்கும் விழாவிலேயே உடன் வந்த சொந்த பந்தங்களுடன் அந்த கோவில் வளாகத்திலேயே வாய் தகராறு ஏற்பட்டு அந்த கோவில் அமைந்திருந்த ஊரின் காவல் நிலையத்தில் வைத்து பஞ்சாயத்து நடந்து உறவு முறிந்து இரு குடும்பத்தாரும் வெவ்வேறு வண்டிகளில் வீடு வந்து சேர்ந்து இன்று வரை அந்த பகை தீராமல் வாழ்ந்து வருகிறார்கள்..!!)
எந்த ஒரு ஜாதகத்திலும் லக்னாதிபதி ஆறாம் அதிபதி மற்றும் எட்டாம் அதிபதியுடன் தொடர்பில் இருந்தால் ஜாதகருக்கு கடன் ஏற்படும்..!!
அதாவது . . .
1) லக்னாதிபதி ஆறாம் அதிபதி அல்லது எட்டாம் அதிபதியின் நட்சத்திர சாரத்தில் அமர்ந்து இருப்பது
2) லக்னாதிபதி ஆறாம் அதிபதி அல்லது எட்டாம் அதிபதி வீட்டில் அமர்ந்து இருப்பது
3) லக்னாதிபதியை விட ஆறாம் அதிபதி அல்லது எட்டாம் அதிபதி வலுவாக இருப்பது
என்று இப்படி இந்த மூன்று நிலைகளில் ஏதேனும் ஒரு அமைப்பு ஜாதகத்தில் இருந்தாலும் ஜாதகருக்கு நிச்சயமாக கடன் சுமை வந்து விடும் என்பதை நாம் உணர வேண்டும்..!!
இதில் குறிப்பிடத்தக்க சங்கதி யாதெனில் . . .
1)மேஷ ராசி
2) விருச்சிக ராசி
3) ரிஷப ராசி
4) துலாம் ராசி
இந்த நான்கு "லக்னத்தாருக்கும்" லக்னாதிபதியே ஆறு / எட்டாம் அதிபதிகளாக வருவதால் இந்த நான்கு லக்னத்தாரும் கடன் விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்..!!
ஜாதகர் தனக்கு ஏற்பட்ட கடனை தீர்க்க வேண்டும் என்று மனதார விரும்ப வேண்டும்..!!
ஜாதகருக்கு கடனை அடைக்கும் நோக்கம் இல்லை என்றால் அது மிகப்பெரிய கர்ம வினைகளை அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏற்பட்டு விடும்..!!
உண்மையாக கடனை தீர்க்கும் எண்ணம் உடையோர் சிறுகச் சிறுக வேணும் உங்கள் கடனை திருப்பி தந்து விடுவதே உங்களது சந்ததியினருக்கு நீங்கள் விட்டுச் செல்லும் பாக்கியம் என்பதை மறக்காதீர்கள்..!!
கடனை வாங்கி விட்டு திரும்பி செலுத்தும் எண்ணமில்லாத நீங்கள் பிறரை ஏமாற்றிப் பிழைக்கும் நாணயமற்றவர்..!! ஏமாற்றுக்காரர்..!! அவ்வளவே..!!
நீங்கள் எத்தனை தெய்வங்களை வணங்கினாலும் உங்கள் கர்ம வினை ஒரு இம்மியளவும் குறையாது..!!
கடனை திருப்பி செலுத்த மிக உகந்த திதியானது..
"தேய்பிறை அஷ்டமி திதி..!!"
தேய்பிறை அஷ்டமி அன்று சிவாலயம் சென்று பைரவருக்கு தேங்காய் மூடியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தீரும் வழி பிறக்கும்..!!
போலவே . . .
தேய்பிறை அஷ்டமி அன்று நீங்கள் கடனை திருப்பி செலுத்த வேண்டிய நபரிடம் கடனில் ஒரு சிறு தொகையேனும் கொடுத்து விடுங்கள்..
அல்லது..
தேய்பிறை அஷ்டமி அன்று நீங்கள் செலுத்த வேண்டிய கடனில் ஒரு சிறு தொகையினை தனியாக எடுத்து ஒரு காகிதத்தில் மடித்து உங்கள் வீட்டில் ஒரு சாமி படத்தின் முன் வைத்து விடுங்கள்..!!
அதற்கு அடுத்த நகர்வுகளில் நீங்கள் அந்த கடன் மொத்தத்தையும் அடைத்து விடும் சூழல் உருவாகும் என்பதை கண்கூடாக காண்பீர்கள்..!!
உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதிக்கும் ஆறு மற்றும் எட்டாம் அதிபதிகளுக்குமான தொடர்பை ஆராய்ந்து அதை கண்டெடுத்து..
அதற்கு உரிய கடவுளை தேர்ந்தெடுத்து அவர் வீற்றிருக்கும் ஸ்தலத்திற்கு அதற்கு உரிய நாள் கிழமையில் அந்த குறிப்பிட்ட கோவிலுக்கு நீங்கள் சென்று தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் உடனடி தீர்வு கிடைத்து கடன் அடையும் என்றால் அது மிகையாகாது..!!
ஆனால் . . .
இதெல்லாம் நடந்தேற அந்த ஜாதகர் முழு நம்பிக்கையுடன் இந்த பரிகாரங்களையும் படிநிலைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்..!!
ஜோதிட ஜாதக வெற்றி என்பது ஜோதிடரும் ஜாதகரும் இணைந்து கைகோர்த்து வென்றெடுக்க வேண்டிய வெற்றி என்பதை நாம் உணர வேண்டும்..!!
மன உறுதியும்.. மனோ திடமும்.. தன்னம்பிக்கையும்.. நம்மை படைத்த இறைவன் மீதிருக்கும் பெரும் பற்றும் ஒன்றிணைந்தால்..
எப்பேர்ப்பட்ட நிதி நெருக்கடியும் சீராகும்..!!
உங்கள் கடன் அத்தனையும் தீரும்..!!
ஆமாம் . . .
கடன் தீரும்..!!~


No comments:
Post a Comment