Saturday, 20 December 2025

வரும்முன் காப்போம் என்பது தமிழர்களின் தாரக மந்திரம்.


 வரும்முன் காப்போம் என்பது தமிழர்களின் தாரக மந்திரம். அதற்கான பயிற்சிகளை வாழ்வியல் முறையாகவே வைத்திருந்தார்கள்.

"நொடிக்கொரு முறை இதயம் துடிக்கனும், நிமிடத்துக்கொருமுறை மூச்சிழுக்கனும், நாளுக்கொருமுறை மலம் வெளியேறனும், வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்கனும். மாதமொருமுறை விரதம் இருக்கனும். வருடம் ஒரு முறை குடலை சுத்தம் செய்யனும்ன்னு முறை வைத்து நோயின்றி வாழ்ந்தார்கள். புத்துணர்வுன்னு வந்துவிட்டால் உடலுக்கு உணவும் மருந்தும் மனதிற்கு பயணம் என்பது தானே சிறப்பு…!
ஒரு பயணத்தில் நமது உடலும் வலுவாகி மனதும்புத்துணர்ச்சி அடையும் என்றால் அது வரம் தானே..?
"எங்கள் தேனி தன்வந்திரி வைத்தியசாலாவின் ஆயுர்வேத மருத்துவ பயணம் (Ayurvedic Medical Tourism)"
வார இறுதியில் அல்லது உங்களுக்கு விருப்பமான நாளில் தேனியில் ஒரு மலை அடிவாரத்தில் ஆர்கானிக் ஃபார்மில் தங்கி இயற்கையுடன் ஐக்கியமாவோம். ஒரு இரவு இரண்டு பகல் தோட்டத்தில் தங்கி, ஒரு நாள் மூலிகை தைல மசாஜ் அளிக்கப்படும். சந்தனம், தான்வந்திரம், கற்பூராதி, கொட்டன்சுக்காதி போன்ற உடல் வலி நீக்கும் மூலிகைகளை கொண்டு உடல் முழுக்க மசாஜ் செய்த பின் எருக்கலை, எலுமிச்சை, குங்குமாதி, ஏலாதி, சதகுப்பை போன்ற மூலிகைகளை பொட்டலம் கட்டி அவற்றை மூலிகை தைலத்தில் ஊற வைத்து சூடு பண்ணி உடல் முழுதும் ஒத்தடம் கொடுக்கும் உயர்தர பஞ்ச கர்மா சிகிச்சையில் உங்கள் உடலுக்கு வலி நீக்கி புத்துணர்வு அளிக்கப்படும்.
முடிவில், நிறைவாக நீராவி குளியல் கொடுத்து உடலை பக்குவப்படுத்துவோம். இதற்கு நடுவில் ஆற்றில் குளியல், மலை அடிவாரத்தில் அதிகாலை ட்ரெக்கிங் , யோகா பயிற்சி, என தொடர்ச்சியான மனம் மகிழும் பயிற்சிகள் நடக்கும். சிறிய இடைவேளையுடன் , முல்தானிமட்டி, புற்று மண், களி மண் கலந்த கலவையில் “மண் குளியல்” நடை பெறும், மொத்த உடலையும் குளிர செய்து உடனே சூடு பறக்க செய்யும் ஒரு அற்புத சிகிச்சை இது. இதன் முடிவில் உங்கள் தோல் வளவளப்பு பெறுவதையும் அழுக்கு நீங்கி நிறம் பளிச்சிடுவதையும் காணலாம். வியர்வை சுரப்பிகள் முழுதும் திறந்து கொள்ள உங்கள் தேகம் மூச்சு விட ஆரம்பித்து உடல் சூட்டினை வெளியேற்றுவது ஒரு வாழ்னாள் அனுபவமாக இருக்கும். சிகிச்சை முடிவில் மூலிகை கஷாய குளியல் மேலும் புத்துணர்வு அளிக்கும்.
இவற்றுடன் முகம் பளீரிட ஹெர்பல் ஃபேஸ் பேக், தலை முடி வலுவடைய ஹெர்பல் ஆயில் மசாஜும் அளித்து முழு உடலையும் மனதையும் ஆரோக்கியமாக்கி பயணம் நிறைவு பெறும். இந்த பயணத்தின் சிறப்பே உங்களுக்கு அளிக்கப்படும் பாரம்பரிய உணவுகள் தான். சுக்கு காபி / இளனீர் / மூலிகை கஷாயம், நல்லெண்ணெய் ஊற்றிய நாட்டுக்கோழி சாறு, அல்லது ஆர்கானிக் காய்கறிகளில் செய்த உணவுகள், பால் கொழக்கட்டை, பருத்திப்பால், கருவாட்டு குழம்பு, புட்டு கடலைகறி என்று வயிற்றை நிறைய செய்யும் அற்புத உணவுடன், மனம் மகிழ இரண்டு நாள் உங்கள் ஆரோக்கியத்துகாக செலவழியுங்கள். உங்கள் உடலும் மனமும் ஆத்மார்த்தமாக நன்றி சொல்வதை பின்வரும் நாட்களில் அனுபவியுங்கள்…. 

No comments:

Post a Comment

விதையின் வீரியம் போல – புத்திர யோகம் போல குழந்தையின் வளர்ச்சி.

 விதையின் வீரியம் போல – புத்திர யோகம் போல குழந்தையின் வளர்ச்சி. ஒரு விவசாயி நிலத்தில் விதை இடும் முன் முதலில் கவனிப்பது விதையின் தரத்தையே. வ...