Saturday, 20 December 2025

6- கன்னி ராசி அல்லது கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு


 கன்னி ராசி அல்லது கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இருக்கக்கூடிய பொதுவான குணங்கள்,பிரச்சனைகள்

திறமைகள்,கஷ்டங்கள்,தர்ம
சங்கடங்கள்,ஏமாற்றங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் நாம் மிக தெளிவாக பார்க்கலாம்.
🌹ஒவ்வொரு ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் பொதுவாக சிலவிதமான எண்ணங்கள் திறமைகள் பிரச்சனைகள் தர்மசங்கடங்கள் கஷ்டங்கள் என்பது இருக்கும்.அதன் வகையில் இந்தப் பதிவில் கன்னி ராசி அல்லது கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எந்த மாதிரியான பிரச்சனைகள் கஷ்டங்கள் குணங்கள் இருக்கும் என்பதை பார்க்கலாம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
♦யாரெல்லாம் கன்னி ராசி அல்லது கன்னி லக்னத்தில் பிறந்திருக்கின்றார்களோ இவர்கள் ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி.
இவர்களுக்கு முதல் எதிரிகளே இவர்கள் தான்.இவர்கள் மூலமாகவே இவர்களுக்கு தேவையில்லாத பிரச்சனைகள் சண்டைகள் ஏமாற்றங்கள் இழப்புக்கள் கஷ்டங்கள் இவர்களுக்கு ஏற்படும்.
♦இவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் எடுக்கக்கூடிய தவறான முடிவுகளாலும் செயல்களாலும் தேவை இல்லாத பிரச்சனைகளை ஏமாற்றங்களை இழப்புக்களை இவர்கள் சந்திப்பார்கள்.இவர்களுடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய பெரும்பாலான பிரச்சனைகளுக்கும் கஷ்டங்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் இவர்கள் தான் மிக முக்கியமாக காரணமாக இருப்பார்கள்.
♦இவர்களாகவே தனக்கு எதிரிகளை சத்துருக்களை பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்வார்கள்.எனவே தான் இவர்களின் வாழ்க்கையில் முதல் எதிரி யாரும் இல்லை இவர்கள் தான் இவர்களுக்கு முதல் எதிரியே.
இவர்கள் வாழ்க்கையில் நடக்கக்கூடிய மிக முக்கியமான பெரிய பிரச்சனைகளுக்கும் கஷ்டங்களுக்கும் இவர்கள் தான் காரணம்.
♦மேலும் இவர்களுக்கு இருக்கக்கூடிய பொதுவான குணங்கள் பொதுவான பிரச்சனைகள் என்னவென்றால் இவர்களால் வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்திலும் ஒரு தெளிவான ஒரு முடிவை அவ்வளவு எளிதாக எடுக்க மாட்டார்கள்.தெளிவான ஒரு முடிவுவை எடுக்க முடியாமல் வாழ்க்கையில் இவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.
♦மேலும் இவர்களால் வாழ்க்கையில் ஒரு அசிங்கங்களையும் அவமானங்களையும் இவர்களால் தாங்க முடியாது.அதேபோன்று அகங்காரத்தில் ஆணவத்தில் ஆடுபவர்களை கண்டாலே இவர்களுக்கு பிடிக்காது.
♦இவர்களைப் போன்று உழைப்பாளியும் யாரும் கிடையாது இவர்களைப் போன்று சோம்பேறியும் யாரும் கிடையாது.ஒரு வேலையை இவர்கள் செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்தார்கள் என்றால் அந்த வேலை எதுவாக இருந்தாலும் ஒரு நாள் முழுவதும் கூட இவர்களால் சாப்பிடாமல் தூங்காமல் தொடர்ந்து வேலை செய்ய முடியும்.அதேபோன்று வாரக் கணக்கில் மாத கணக்கில் கூட இவர்களால் எந்த வேலையும் செய்யாமல் வெட்டியாக சும்மா இருக்க முடியும் இந்த இரண்டு விதமான எண்ணங்கள் குணங்கள் இவர்களுக்கு கலந்தே தான் இருக்கும்.
♦மேலும் "PF,pension life, retirement Life Insurance, Health Insurance, LIC ,Mutual Funds"இதுபோன்ற விஷயங்களில் இவர்கள் பணத்தை முதலீடு செய்தார்கள் என்றால் அந்தப் பணம் கடைசி காலத்தில் இவர்களுக்கு பயன்படாமல் போய்விடும்.
♦அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்த விஷயங்கள் மூலம் இவர்களுக்கு வரக்கூடிய அந்த பணத்தை இவர்களுக்காக இவர்கள் விருப்பத்திற்காக ஆசைக்காக என்று அனுபவிக்க முடியாமல் போய்விடும்.
அந்தப் பணத்தால் இவர்களுக்கு பிரயோஜனம் இல்லாமல் போய்விடும்.
♦அதேபோன்று ஒரு வேளை இவர்களுக்கு உடன்பிறந்த இளைய சகோதரர்கள் அல்லது சகோதரிகள் இருந்தார்கள் என்றால் அவர்கள் மூலமாகவும், நெருங்கிய நண்பர்கள் மூலமாகவும் வாழ்க்கையில் தேவையில்லாத அசிங்கங்களுக்கும் அவமானங்களுக்கும் பிரச்சனைகளுக்கும், தர்ம சங்கடங்களுக்கும் இவர்கள் வாழ்க்கையில் ஆளாகுவார்கள்.
♦மேலும் இவர்கள் பெண்ணாக இருந்தார்கள் என்றால் கணவரும் கணவருடைய குடும்ப உறவுகளும் இவர்களை வைத்து அதிகாரம் செய்வார்கள் கட்டுப்படுத்த பார்ப்பார்கள்.கணவர் மற்றும் கணவருடைய உறவினர்கள் அனைவருமே தான் பிடித்து முயலுக்கு மூன்று கால் என்று சொல்லக்கூடிய குணங்கள் அதிகாரம் செய்யக்கூடிய குணங்கள் இவர்கள் சொல்வதை தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்ற குணங்கள் அவர்களுக்கு இருக்கும்.
♦மேலும் இவர்கள் ஆணாக இருந்தார்கள் என்றால் மனைவியும் மனைவியுடைய குடும்ப உறவுகளும் இவர்களை வைத்து அதிகாரம் செய்வார்கள் கட்டுப்படுத்த பார்ப்பார்கள் மனைவி மற்றும் மனைவியுடைய உறவினர்கள் அனைவருமே தான் பிடித்து முயலுக்கு மூன்று கால் என்று சொல்லக்கூடிய குணங்கள் அதிகாரம் செய்யக்கூடிய குணங்கள் இவர்கள் சொல்வதை தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்ற குணங்கள் அவர்களுக்கு இருக்கும்.
♦மேலும் இவர்கள் வாழ்க்கையில் உறவுகள் மூலமாகவும்,சொந்தங்கள்
மூலமாகவும்,தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை மூலமாகவும்,
தனிப்பட்ட வாழ்க்கை மூலமாகவும் தேவையில்லாத பிரச்சினைகள்
தர்ம சங்கடங்கள்,ஏமாற்றங்கள்,
மன கஷ்டங்கள்,மனவேதனைகள் அவமானங்கள்,மன உளைச்சல்கள் இதுபோன்ற அனைத்து விதமான பிரச்சனைகள் இவர்கள் வாழ்க்கையில் அனுபவித்து இருப்பார்கள் அல்லது அனுபவித்துக் கொண்டு இருப்பார்கள்.
♦அதாவது சொந்தங்களாலும் உறவுகளாலும் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையாலும் அதிகப்படியான மனக் காயங்களுக்கு மன வேதனைகளுக்கு இவர்கள் வாழ்க்கையில் அடிக்கடி ஆளாகிக் கொண்டே இருப்பார்கள்.
தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் இவர்களுக்கு தேவையில்லாத பிரச்சனைகள் மனக்கஷ்டங்கள் மனவேதனைகள் மன உளைச்சல்கள்
ஏமாற்றங்கள் இழப்புக்கள் இது போன்ற பிரச்சனைகளை இவர்கள் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.
♦உறவினர்கள் சொந்தங்களாலே இவர்களுக்கு வாழ்க்கையில் அளவுக்கதிகமான பிரச்சனைகள் மனக்கஷ்டங்கள் மனவேதனைகள் தர்ம சங்கடங்கள் அவமானங்கள் போன்ற பிரச்சனைகள் இவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்பட்டு கொண்டிருக்கும்.
♦சொந்தக்காரர்கள் உறவினர்கள் அடிக்கடி இவர்களை தேவையில்லாமல் மன கஷ்டங்களுக்கு ஆளாக்கிக் கொண்டே இருப்பார்கள்.இவர்களை வாழ்க்கையில் என்ன விஷயங்கள் செய்தாலும் அதைப்பற்றி சொந்தக்காரர்கள் இவர்களை குறை சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.
♦இவர்களுடைய சுயமரியாதையும் சுய கௌரவத்தையும் உறவினர்கள் சொந்தக்காரர்கள் அடிக்கடி தேவையில்லாமல் சீண்டிக் கொண்டே இருப்பார்கள். தேவையில்லாத பளிச்சுமையை இவர்கள் மீது போட்டுக்
கொண்டே இருப்பார்கள்.இவர்கள் வாழ்க்கையில் முன்னேற உறவினர்கள் சொந்தக்காரர்களே இவர்களை விட மாட்டார்கள்.நிறைய விஷயங்களில் இவர்களை உறவினர்கள் சொந்தக்காரர்கள் ஏமாற்றி விடுவார்கள்.
உறவினர்களை நம்பி நிறைய விஷயங்கள் இவர்கள் ஏமாற்றம் அடைந்து இருப்பார்கள்.
♦தன்னுடைய வாழ்க்கையில் உறவினர்களை சொந்தக்காரர்களை நம்பி நிறைய விஷயங்களில் இழப்புகளையும் ஏமாற்றங்களையும் கஷ்டங்களையும் அனுபவிப்பவர்கள் இவர்கள்தான்.மேலும் இவர்களுக்கு தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையும் இவர்கள் எதிர்பார்க்கும் படி நிம்மதியாக சந்தோசமாக இவர்களுக்கு இருக்காது.
♦மேலும் இவர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் இவர்கள் தொழில் சார்ந்த எந்த ஒரு முக்கியமான விஷயங்களையும் நம்பகத்தன்மை வாய்ந்த விஷயங்களையும் இவர்களால் ரகசியமாக வைத்துக் கொள்ள முடியாது.
♦தொழில் சம்பந்தப்பட்ட முக்கியமான விஷயங்களையும் நம்பகத்தன்மை வாய்ந்த விஷயங்களையும் திட்டங்களையும் இவர்களால் என்றைக்குமே ரகசியமாக வைத்துக் கொள்ள முடியாது.ரகசியத்தை இவர்கள் கையாளவும் மாட்டார்கள்.
♦இவர்களுக்கு மிக முக்கியமான பிரச்சனை என்னவென்றால் தொழில் சார்ந்த முக்கியமான விஷயங்களை நம்பகத்தன்மை வாய்ந்த விஷயங்களைப் பற்றி இவர்கள் வெளி உலகத்தில் ஒருவருக்கு சொன்னால் கூட அது ஊர் முழுக்க பரவி அடுத்தவர்களின் தேவை இல்லாத கண் திருஷ்டி, பொறாமைகள்,வயிறு எரிச்சல்கள் இவர்களுக்கு தொழில் மீது பட்டு
பிறகு தொழிலையே இவர்கள் இழுத்து மூடும் படியாகவும்,நஷ்டம் ஏற்படும் படியாகவும் இவர்களுக்கு ஆகிடும்.
♦அடுத்தவர்களுடைய கண் திஷ்டிகள்,பொறாமைகள்,வயிறு எரிச்சல்கள் என்றைக்குமே இவர்களுக்கு தொழில் மீது பட்டுக் கொண்டே இருக்கும்,இருந்து கொண்டே இருக்கும்.தொழில் சார்ந்த விஷயங்களில் இவர்களுக்கு நம்பிக்கையானவர்கள் கிடைக்க மாட்டார்கள்.
♦அதேபோன்று தொழில் சார்ந்து இவர்கள் செய்யக்கூடிய திட்டங்கள் அல்லது முக்கியமான விஷயங்கள் தகவல்களை இவர்கள் வெளி உலகத்தில் ஒருவருக்கு சொன்னாலும் அந்த திட்டம் செயல்பாடு விஷயம் எல்லாருக்குமே தெரிந்து விடும்.இவர்கள் தொழில் சார்ந்து எந்த எந்த விஷயங்களை ரகசியமாக கையாள்கிறார்கள் என்பதை எல்லாருக்குமே தெரிந்து இருக்கும்.
♦இவர்கள் எதாவது புதியதாக ஒரு தொழிலை ஆரம்பிக்கலாம் என்று நினைத்தார்கள் என்றால் அந்தத் தொழிலை இவர்கள் ஆரம்பிப்பதற்கு முன்பாக நான் இதுபோன்று தொழில் செய்யப் போகிறேன் ஆரம்பிக்கிறேன் என்பதை யாருக்கும் இவர்கள் வெளி உலகத்தில் சொல்லக்கூடாது.அப்படி மீறி இவர்கள் சொல்லிவிட்டார்கள் என்றால் இவர்கள் ஆரம்பிக்க நினைத்த தொழிலை இவர்களால் ஆரம்பிக்க முடியாது தடைப்பட்டுவிடும்.
♦அதேபோன்று இவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தவர்கள் தொழில் சார்ந்து அதை செய்கிறேன் இதை செய்கின்றேன் இவ்வாறு உங்களை தொழிலில் வளர்ச்சி அடைய வைக்கின்றேன் என்று சில பேர் இவர்களிடம் சில வாக்குறுதிகளை கொடுத்து கடைசியில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இவர்களை ஏமாற்றி இருப்பார்கள் இவர்களுக்கு துரோகம் செய்து இருப்பார்கள்.
♦இவர்களும் தொழில் சார்ந்த விஷயங்களில் அடுத்தவர்களை நம்பி வாழ்க்கையில் ஏமாந்து போய் இருப்பார்கள்.அடுத்தவர்களை நம்பி தொழிலில் தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கு பவர்களும் இவர்கள்தான்.தொழில் சார்ந்த விஷயங்களில் இவர்களுக்கு யாருமே நேர்மையாக கடமை கண்ணியதுடன் இருக்க மாட்டார்கள்.
♦தொழிலுக்கு ஒழுங்காக வேலை ஆட்கள் கிடைக்காமல் இருப்பது இல்லையென்றால் தொழிலில் வேலை செய்யும் வேலையாட்கள் மூலமாகவே பிரச்சினைகள் ஏமாற்றங்கள் தர்ம சங்கடங்கள் ஏற்படுவது இதுபோன்ற பிரச்சனைகள் இவர்களுக்கு கண்டிப்பாக இருக்கும்.
♦வேலையாட்களால் பிரச்சினைகள் ஏமாற்றங்கள் துரோகங்கள் நஷ்டங்கள் ஏற்படுவது இவர்களுக்கு தான்.தவறாக தொழிலில் பணத்தை முதலீடு செய்து நஷ்டம் அடைபவர்கள் ஏமாற்றம் அடைபவர்களும் இவர்கள்தான்.
எவ்வாறு தொழிலில் முதலீடு செய்ய வேண்டும் என்ற நுணுக்கத்தை இவர்கள் தெரிந்திருக்க மாட்டார்கள்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌹மேற்கொண்டு யாரெல்லாம் கன்னி ராசி அல்லது கன்னி லக்னத்தில் பிறந்திருக்கின்றீர்களோ நீங்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி நீங்கள் இந்த பதிவில் நான் குறிப்பிட்டுள்ள விஷயங்களை உங்களுடைய நடைமுறை வாழ்க்கையில் பொருத்திப் பாருங்கள் எல்லாம் மிகச் சரியாக இருக்கும்.

No comments:

Post a Comment

விதையின் வீரியம் போல – புத்திர யோகம் போல குழந்தையின் வளர்ச்சி.

 விதையின் வீரியம் போல – புத்திர யோகம் போல குழந்தையின் வளர்ச்சி. ஒரு விவசாயி நிலத்தில் விதை இடும் முன் முதலில் கவனிப்பது விதையின் தரத்தையே. வ...