Thursday, 18 December 2025

12- மீனம் ராசி அல்லது மீனம் லக்னத்தில்


 மீனம் ராசி அல்லது மீனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இருக்கக்கூடிய பொதுவான குணங்கள்,பிரச்சனைகள்

திறமைகள்,கஷ்டங்கள்,தர்ம
சங்கடங்கள்,ஏமாற்றங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் நாம் மிக தெளிவாக பார்க்கலாம்.
🌹ஒவ்வொரு ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் பொதுவாக சிலவிதமான எண்ணங்கள் திறமைகள் பிரச்சனைகள் தர்மசங்கடங்கள் கஷ்டங்கள் என்பது இருக்கும்.அதன் வகையில் இந்தப் பதிவில் மீனம் ராசி அல்லது மீனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எந்த மாதிரியான பிரச்சனைகள் கஷ்டங்கள் குணங்கள் இருக்கும் என்பதை பார்க்கலாம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
♦யாரெல்லாம் மீன ராசி அல்லது மீன லக்னத்தில் பிறந்திருக்கின்றார்களோ இவர்கள் ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி.
இவர்கள் வாழ்க்கையில் உறவுகள் மூலமாகவும்,சொந்தங்கள்
மூலமாகவும்,தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை மூலமாகவும்,
தனிப்பட்ட வாழ்க்கை மூலமாகவும் தேவையில்லாத பிரச்சினைகள்
தர்ம சங்கடங்கள்,ஏமாற்றங்கள்,
மன கஷ்டங்கள்,மனவேதனைகள் அவமானங்கள்,மன உளைச்சல்கள் இதுபோன்ற அனைத்து விதமான பிரச்சனைகள் இவர்கள் வாழ்க்கையில் அனுபவித்து இருப்பார்கள் அல்லது அனுபவித்துக் கொண்டு இருப்பார்கள்.
♦அதாவது சொந்தங்களாலும் உறவுகளாலும் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையாலும் அதிகப்படியான மனக் காயங்களுக்கு மன வேதனைகளுக்கு இவர்கள் வாழ்க்கையில் அடிக்கடி ஆளாகிக் கொண்டே இருப்பார்கள்.
தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் இவர்களுக்கு தேவையில்லாத பிரச்சனைகள் மனக்கஷ்டங்கள் மனவேதனைகள் மன உளைச்சல்கள்
ஏமாற்றங்கள் இழப்புக்கள் இது போன்ற பிரச்சனைகளை இவர்கள் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.
♦உறவினர்கள் சொந்தங்களாலே இவர்களுக்கு வாழ்க்கையில் அளவுக்கதிகமான பிரச்சனைகள் மனக்கஷ்டங்கள் மனவேதனைகள் தர்ம சங்கடங்கள் அவமானங்கள் போன்ற பிரச்சனைகள் இவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்பட்டு கொண்டிருக்கும்.இவர்ககள் வாழ்க்கையில் என்ன விஷயங்கள் செய்தாலும் அதைப்பற்றி சொந்தக்காரர்கள் இவர்களை குறை சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.
♦இவர்களுடைய சுயமரியாதையும் சுய கௌரவத்தையும் உறவினர்கள் சொந்தக்காரர்கள் அடிக்கடி தேவையில்லாமல் சீண்டிக் கொண்டே இருப்பார்கள். தேவையில்லாத பளிச்சுமையை இவர்கள் மீது போட்டுக்
கொண்டே இருப்பார்கள்.இவர்கள் வாழ்க்கையில் முன்னேற உறவினர்கள் சொந்தக்காரர்களே இவர்களை விட மாட்டார்கள்.நிறைய விஷயங்களில் இவர்களை உறவினர்கள் சொந்தக்காரர்கள் ஏமாற்றி விடுவார்கள்.
உறவினர்களை நம்பி நிறைய விஷயங்கள் இவர்கள் ஏமாற்றம் அடைந்து இருப்பார்கள்.
♦தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் இவர்களுக்கு தேவையில்லாத பிரச்சனைகள் ஏமாற்றங்கள் இழப்புக்கள் கஷ்டங்கள் மன உளைச்சல்கள் மனவேதனைகள் தர்ம சங்கடங்கள் போன்ற பிரச்சனைகள் இவர்களுக்கு அடிக்கடி வாழ்க்கையில் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.
♦அதாவது தன்னுடைய வாழ்க்கையில் வாழ்நாள் முழுவதும் உறவுகள் மூலமாகவும்,சொந்தங்கள் மூலமாகவும் ,தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை மூலமாகவும் தேவையில்லாத கஷ்டங்கள் பிரச்சனைகள்,ஏமாற்றங்கள்,
தர்ம சங்கடங்கள்,பண இழப்புக்கள்
மனக்கஷ்டங்கள் ,மனவேதனைகள் இது போன்ற பிரச்சினைகளை இவர்கள் வாழ்க்கையில் எப்போதுமே அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள்.
♦மேலும் இவர்கள் ஆணாக இருக்கலாம் பெண்ணாக இருக்கலாம் இவர்களுக்கு குறிப்பிட்டு திருமண வாழ்க்கையில் குடும்ப வாழ்க்கையில் இருவருக்கும் அடிக்கடி தேவையில்லாமல் வாக்குவாதங்கள் சண்டைகள் பிரச்சனைகள் வீண் விவாதங்கள் வந்து கொண்டே இருக்கும்.
♦அதாவது இருவருக்கும் இடையில் சிறிய அளவில் பிரச்சனை வாக்குவாதம் வந்தாலும் அது மிகப்பெரிய பிரச்சினைகளில் சண்டைகளில் பிரிவினைகளில் முடிந்துவிடும்.தேவையில்லாத விஷயங்களுக்காக பெரிய அளவில் பிரச்சனைகள் வாக்குவாதங்கள் சண்டைகள் இவர்களுக்கு வர வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கின்றது.
♦சின்ன சின்ன விஷயத்திற்காக அடிக்கடி இவர்கள் குடும்பத்தில் தேவையில்லாமல் சண்டைகள் வாக்குவாதங்கள் போட்டுக் கொண்டிருப்பார்கள்.எந்த விஷயத்திற்காக சண்டை போட வேண்டும் வாக்குவாதம் செய்ய வேண்டும் என்பதை இவர்கள் தெரிந்திருக்கமாட்டார்கள்.
தேவையில்லாமல் அடிக்கடி இவர்கள் குடும்பத்தில் இருவருக்கும் இடையில் வாக்குவாதங்கள் சண்டைகள் வந்து கொண்டிருக்கும்.
♦இதில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் இருவருக்கும் இடையில் அடிக்கடி வரக்கூடிய இந்த சண்டைகள் வாக்குவாதம் பிரச்சனைகள் கடைசியில் சில பேருக்கு விவாகரத்து வரை செல்ல வாய்ப்புகள் இருக்கின்றது.
இந்தத் தேவையில்லாத வாக்குவாதங்கள் பிரச்சனைகள் கடைசியில் இருவருக்கும் இடையில் விவாகரத்து பிரிவினை வரை செல்ல வாய்ப்பு இருக்கிறது.
♦அதேபோன்று இவர்கள் உத்தியோகத்தில்(job) இருந்தார்கள் என்றால் உத்தியோகம் சார்ந்த விஷயங்களுக்கு தான் அதிகமாக இவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.உத்யோகத்தில் வேலைகளை முடித்துவிட்டு தான் இவர்கள் அடுத்த வேலையை பார்ப்பார்கள்.
♦இவர்களுக்கு தனிப்பட்ட ஏதாவது முக்கியமான வேலைகள் அல்லது விஷயங்கள் பிரச்சனைகள் இருந்தாலும் அதற்கு இவர்கள் முக்கியத்துவம் தராமல் முதலில் உத்தியோகத்தில் தங்களுக்கு இருக்கக்கூடிய வேலைகளை அனைத்துமே முடித்துவிட்டு தான் இவர்கள் அடுத்த தங்களுடைய வேலைகளை பார்ப்பார்கள்.
♦உத்யோகத்தில் வேலைகள் சார்ந்த விஷயங்களில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு இதனை இவர்கள்
சரியாக பின்பற்றுவார்கள்.எவ்வளவு நேரமே ஆனாலும் இவர்கள் உத்தியோகத்தில் வேலை செய்வார்கள்.மேலும் கடன் பிரச்சனைகள் வம்பு வழக்கு கோட்டு கேசு அடிதடி சண்டைகள் இது சார்ந்த விஷயங்களுக்கு கூட இவர்கள் அதிகமாக முக்கியத்துவம் கவனம் கொடுப்பார்கள்.
♦இவர்கள் பக்கத்து வீட்டிலோ அல்லது இவர்கள் வாழும் இடத்திலோ யாருக்காவது சண்டைகள் பிரச்சினைகள் நடக்கிறது என்றால் கடைசியில் அந்த சண்டைகள் பிரச்சனைகள் என்ன ஆனது என்பதை இவர்கள் தெரிந்து கொள்ளாமல் விட மாட்டார்கள்.
♦இவர்கள் யாருக்காவது பணத்தை கடன் கொடுத்தார்கள் என்றால் இவர்கள் செய்த அந்த கடன் உதவியை பற்றி இவர்கள் எப்போதுமே மற்றவரிடத்தில் சொல்லிக் காட்டிக்கொண்டே இருப்பார்கள்.அதனைப் பற்றி இவர்கள் பெருமை பேசிக் கொண்டே இருப்பார்கள்.இவர்களிடத்தில் யாரெல்லாம் பணத்தை கடன் வாங்கினார்களோ அவர்கள் எல்லாம் நாம் இவனிடம் தெரியாமல் பணத்தைக் கடன் வாங்கி விட்டோமே என்று புலம்பி கொண்டு அல்லது வருத்தப்பட்டு கொண்டே இருப்பார்கள்.
♦அடுத்தவர்களுக்கு இவர்கள் செய்த கடன் உதவியை பற்றி என்றைக்குமே இவர்கள் சுட்டிக் காட்டிக்கொண்டே இருப்பார்கள்.நான் கடனாக கொடுத்த பணத்தை வைத்து தான் நீ வாழ்க்கையில் முன்னேறினாய் நீ பிழைத்துக் கொண்டிருக்கிறாய் என்று இவர்கள் எப்போதுமே சொல்லிக் கொண்டே இருப்பார்கள்
♦மேலும் இந்த மீன ராசி மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இவர்களின் கடன் பிரச்சனைகள் தான் இவர்களின் அடையாளமாகவே இருக்கும்.இவர்களின் கடன் பிரச்சனைகளை வைத்து தான் அடுத்தவர்கள் இவர்களை அடையாளம் காணுவார்கள்.
இவர்கள் வாழும் ஊரில் மற்றவர்கள் இவர்களை எப்படி அடையாளப்
படுத்துவார்கள் என்றால் இவர்களின் கடன் பிரச்சனைகளை வைத்து தான் இவர்களை மற்றவர்கள் அடையாளப்
படுத்துவார்கள் அடையாளம் தெரிந்து கொள்வார்கள்.
♦அதேபோன்று இவர்களுக்கு சிலவிதமான எண்ணங்கள் குணங்கள் பொதுவாக இருக்கும் என்னவென்றால் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற கூடிய குணங்கள் அதிகமாக அதிகாரம் செய்வது இவர்கள் சொல்வதை தான் அடுத்தவர்கள் கேட்க வேண்டும் என்ற குணங்கள் இவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.
♦யார் சொல்வதையும் இவர்கள் என்றைக்குமே கேட்க மாட்டார்கள் இவர்கள் சொல்வதுதான் அடுத்தவர்கள் கேட்க வேண்டும் என்ற குணங்கள் தான் இவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.
♦நிர்வாக திறமைகள் இவர்களுக்கு மிக அதிகமாகஇருக்கும்.இவர்களிடம் எத்தனை பேர் கொடுத்தாலும் அவர்களை எல்லாம் மிக கனகச்சிதமாக வேலை வாங்க வைக்க கூடிய திறமைகள் இவர்களுக்கு உண்டு.உடனடியாக ஒரு கூட்டத்தை கூட்ட வேண்டும் ஆட்களை ஒருங்கிணைக்க வேண்டும்.கூட்டத்தை வழிநடத்த வேண்டும் இது போன்ற திறமைகள் இவர்களுக்கு கண்டிப்பாக இருக்கும்.
♦அதேபோன்று இவர்கள் ஒருவேளை உத்தியோகத்தில் இருந்தார்கள் என்றால் உத்யோகத்தில்(job) மேலதிகாரிகள் மூலமாகவும் சக ஊழியர்கள் மூலமாகவும் தேவையில்லாத பிரச்சனைகளை ஏமாற்றங்களை தர்ம சங்கடங்களை இவர்கள் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலைகள் கண்டிப்பாக ஏற்படும்.
♦அதாவது உத்தியோகத்தில் மேல் அதிகாரிகள் இவர்களை மட்டும் வைத்து அதிகமாக வேலை வாங்குவது நயவஞ்சகம் செய்வது, இவர்களை முன்னேற விடாமல் தடுப்பது, தேவையில்லாத அரசியல் செய்வது இதுபோன்ற பிரச்சனைகள்
போன்ற பிரச்சனைகள் இவர்களுக்கு உத்தியோகத்தில் மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் மூலமாக ஏற்படும்.
♦எப்படியாவது இவர்களை வேலையை விட்டு நாம் துரத்தி விட வேண்டும்.இவர்கள் மீது அடிக்கடி தேவையில்லாத பலி சுமத்திக் கொண்டே இருக்க வேண்டும்.என்ற எண்ணம் உத்யோகத்தில் மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்.
♦மேலும் இவர்களுக்கு பொதுவாக வாழ்க்கையில்"ஆன்மீகம்,ஜோதிடம் ,சித்தர்கள்,ஞானிகள்,ஜீவசமாதிகள்,இதிகாசக் கதைகள்,புராதனக் கதைகள், கடவுள் நம்பிக்கை, சிவன் மீது இருப்பது, ஆன்மீக நாட்டங்கள், ஜீவ சமாதிகள் இந்த விஷயங்கள் மீது இவர்களுக்கு அளவுக்கதிகமான நாட்டங்கள் விருப்பங்கள் நம்பிக்கைகள் ஈடுபாடுகள் மிக மிக அதிகமாக இருக்கும்.
♦இவர்களுக்கு என்றைக்குமே "ஆன்மீகம்,ஜோதிடம்,அமானுஷ்ய விஷயங்கள்" இது ரீதியான விஷயங்களில் ஈடுபாடுகள் திறமைகள் ஆர்வங்கள் மிக அதிகமாகத்தான் இருக்கும்.மேலும் இவர்கள் பெரும்பாலும் சிவபக்தர்களாக அல்லது முருக பக்தர்களாக இருப்பார்கள்.
♦சித்தர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வது,ஆன்மீகம் அல்லது அமானுஷ்யம் சார்ந்த விஷயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வது ஜோதிடத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வது இது ரீதியான விஷயங்களில் இவர்களுக்கு கண்டிப்பாக நாட்டங்கள் ஈடுபாடுகள் திறமைகள் கண்டிப்பாக இருக்கும்.
♦இவர்கள் சும்மா இருந்தாலும் ஆன்மீகம் ஜோதிடம் அமானுஷ்யம் சார்ந்த தூண்டுதல்கள் ஈர்ப்புகள் இவர்களுக்கு தானாக
வந்து கொண்டே இருக்கும் வலுக்கட்டாயமாக அடிக்கடி இவர்களுக்கு ஆன்மீகம் ஜோதிடம் சம்பந்தப்பட்ட தூண்டுதல்கள் ஈர்ப்புகள் இவர்களுக்கு வந்து கொண்டே இருக்கும்.இவர்கள் சும்மா இருக்கும் நேரத்தில் எல்லாம் ஜோதிடத்தை படிப்பது அல்லது ஆன்மீகம் சார்ந்த விஷயங்களை பற்றி படிப்பது, சித்தர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வது,அடிக்கடி கோவிலுக்கு செல்வது இது போன்று தான் இவர்கள் எப்போதுமே இருப்பார்கள்.
♦மேலும் இவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கின்ற அந்தப் பணத்தில் தங்களுக்காக தங்களுடைய விருப்பத்திற்காக ஆசைக்காக என்று 5 சதவீதம் கூட இவர்கள் அந்த பணத்தை அனுபவித்திருக்க மாட்டார்கள்.இவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் எவ்வளவு பணத்தை சம்பாதித்தாலும் அந்த பணத்தை இவர்கள் விருப்பத்திற்காக ஆசைக்காக என்று இவர்களால் வாழ்க்கையில் அவ்வளவாக அனுபவிக்க முடியாது.
♦இவர்கள் வாழ்க்கையில் சம்பாதிக்கின்ற பெரும்பாலான பணம் கடன் பிரச்சனைகளுக்கு அல்லது EMI ,loan credit card,
இது போன்ற விஷயங்களுக்குகோ குடும்பத்திற்காகவோ மற்றவர்களுக்காகவோ வெட்டிச் செலவுகளுக்கு விரைய செலவுகளுக்கு மருத்துவ செலவுகளுக்குகாகவோ தான் இவர்கள் வாழ்க்கையில் சம்பாதிக்கின்ற பெரும்பாலான பணம் போய்க்கொண்டிருக்கும்.
♦இது போன்றவற்றிற்காக தான்
இது இவர்கள் சம்பாதிக்கின்ற பெரும்பாலான பணத்தை இவர்கள் செலவு செய்து கொண்டிருப்பார்கள்.
தங்களுக்காக என்று வாழ்க்கையில் இவர்கள் சம்பாதிக்கின்ற பணத்தை அவ்வளவாக இவர்களால் அனுபவிக்க முடியாது.
♦ஒன்று போனால் ஒன்று இவர்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனைகள் கஷ்டங்கள் என்பது இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்,வந்து கொண்டே இருக்கும்
தேவையில்லாத
பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் இவர்கள் அடிக்கடி வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.
♦வாழ்நாள் முழுவதும் இவர்கள் ஆற்ற வேண்டிய செயல்பாடுகள் கடமைகள் தேவைகள் என்பது இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்.இதில் குறிப்பாக இவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் என்பது இவர்களுக்கு வாழ்க்கையில் எப்போதுமே இருக்கும்.தன்னுடைய குடும்பம் சொந்தங்கள் உறவினர்கள் இவர்களுக்காக தன்னுடைய வாழ்க்கையில் இவர்கள் ஆசைப்பட்ட விருப்பப்பட்ட நிறைய விஷயங்களை இவர்கள் விட்டுக் கொடுத்திருப்பார்கள் அல்லது தியாகம் செய்திருப்பார்கள்.
♦பணம் சேமிப்பு சார்ந்த பிரச்சினைகள்(Money savings problem) இவர்களுக்கு வாழ்க்கையில் எப்போதுமே இருக்கும்.இவர்கள் எவ்வளவுதான் பணத்தை சம்பாதித்தாலும் இவர்களால் அந்த பணத்தை அவ்வளவாக சேமித்து வைக்க முடியாது இவர்கள் கையில் பணம் தாங்காது நிற்காது.
♦இவர்கள் வங்கிக் கணக்கில் அல்லது இவர்கள் கையில் பணம் வந்தால் உடனே அந்த பணத்திற்கு வேட்டு வைக்க ஆப்பு வைக்க இவர்களுக்கு ஒரு விஷயம் அல்லது ஒரு பிரச்சனை எப்போதுமே காத்துக் கொண்டிருக்கும்.பணம் சேமிப்பு சார்ந்த பிரச்சினைகளால் அதிகமாக இவர்கள் வாழ்க்கையில் கஷ்டப்படுவார்கள்.
♦மேலும் இவர்களின் வருமானத்திற்கு சக்திக்கு அதிகமான செலவுகள்,தேவைகள், வெட்டி விரயங்கள்,பண தேவைகள்,பண செலவுகள் என்பது இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.அதாவது இவர்கள் சம்பாதிக்கக்கூடிய பணத்திற்கு வருமானத்திற்கு அதிகமான வெட்டிச் செலவுகள்,வெட்டி விரயங்கள்,
விரைய செலவுகள்,பண செலவுகள், தேவைகள் என்பது இவர்களுக்கு எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும்.
♦அதேபோன்று தன்னுடைய வாழ்க்கையில் பெரும்பாலான நேரத்தையும் காலத்தையும் இவர்கள் மற்றவர்களுக்காகவே செலவிடுவார்கள் செலவிடுவார்கள்.
தன்னுடைய குடும்பத்திற்காக என்றைக்குமே இவர்கள் தன்னுடைய நேரத்தை காலத்தை பெரிதும் பயன்படுத்த மாட்டார்கள்
♦மற்றவர்களுக்காக தன்னுடைய வாழ்க்கையில் எதையும் தியாகம் செய்யக்கூடிய உதவி செய்யக்கூடிய மனோபாவம் இவர்களுக்கு மிக அதிகம்.இவர்களுக்கு ஈவு இரக்க குணம் மிக அதிகமாக இருக்கும்.
இவர்களால் நிறைய பேர் மற்றவர்கள் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறி சென்று இருப்பார்கள் பயனடைந்து இருப்பார்கள்.
♦மற்றவர்களுக்கு உதவுவதை இவர்கள் பெருமையாக நினைத்துக் கொண்டிருப்பார்கள்.வெளி உலகத்தில் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதன் மூலமாக வரக்கூடிய பெயர் புகழ் அந்தஸ்தை இவர்கள் பெரிதும் விரும்புவார்கள்.
மற்றவர்களுக்கு உதவி செய்வதே தியாகம் செய்வதே இவர்களுக்கு பெரிய போதையாக இருக்கும்.தன்னிடத்தில் உள்ள எதையும் இவர்கள் தியாகம் செய்ய துணிவார்கள்.
♦ஆனால் இவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் யாருக்கெல்லாம் உதவி செய்கின்றார்களோ அவர்களால் இவர்களுக்கு எந்த ஒரு பிரயோஜனமும் பயனும் இருக்காது
தனக்கு ஒரு பிரச்சனை கஷ்டம் இழப்புக்கள் வரும்போது இவர்கள் யாருக்கெல்லாம் உதவி செய்தார்களோ அவர்கள் இவர்களுக்கு உதவி செய்ய முன்வர மாட்டார்கள்.
♦எல்லாரும் வேலை முடிந்த உடனே இவர்களை ஏமாற்றி விடுவார்கள் இவர்களுக்கு துரோகம் செய்து விடுவார்கள்.இவர்களை மற்றவர்கள் சுலபமாக ஏமாற்றி விடுவார்கள்.
நம்பிக்கை துரோகத்தால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் இவர்கள் தான்.
யாருக்குமே இவர்கள் பாரபட்சம் பார்த்து உதவி செய்ய மாட்டார்கள் தகுதி இல்லாத நபர்களுக்கு பணத்தை கடன் கொடுத்து பிறகு ஏமாற்றம் துரோகம் இழப்புக்களை சந்திப்பவர்கள் இவர்கள் தான்.
♦மேலும் யாரெல்லாம் இவர்களை ஏமாற்றினார்களோ யாரெல்லாம் இவர்களுக்கு துரோகம் செய்தார்களோ மீண்டும் அவர்களுக்கே உதவி செய்து மறுபடியும் ஏமாற்றம் அடைபவார்கள் இவர்கள்தான்.யாருக்கு உதவி செய்ய வேண்டும் யார் நல்லவர்கள் என்பதை இவர்கள் தெரிந்திருக்க மாட்டார்கள்.தன்னை ஏமாற்றுபவர்களையும் துரோகம் செய்துபவர்களையும் பெரியதாக இவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள்.
♦என்னதான் மற்றவர்கள் மூலமாக இவர்கள் பெரிய அளவில் துரோகங்களை இழப்புக்களை கஷ்டங்களை சந்தித்தாலும் இவர்கள் திருந்தவே மாட்டார்கள்.
அடுத்தவர்களுக்காக உதவி செய்யக்கூடிய தியாகம் செய்யக்கூடிய இவர்கள் தன்னுடைய குடும்பத்திற்காக இவர்கள் எதையுமே வாழ்நாளில் செய்யாமல் இருப்பார்கள்.
♦மேலும் இவர்களுக்கு தந்தை உயிருடன் இருக்க மாட்டார் அதாவது அற்ப ஆயுளில் இறந்து போயிருப்பார்.ஒருவேளை தந்தை உயிருடன் இருந்தார் என்றால் அவரால் இவர்களுக்கு எந்த விதமான பிரயோஜனங்கள் உதவிகள் இல்லாமல் இருக்கும்.
இல்லையென்றால் தந்தை ஹிட்லர் போல இருப்பார்.தந்தை உடைய அன்பு ,பாசம்,நேசம்,அரவணைப்பு, உதவிகள் எதுவுமே இவர்களுக்கு வாழ்க்கையில் இவர்கள் எதிர்பார்க்கும் வகையில் இருக்காது.
♦அதேபோன்று தந்தையுடைய சொத்தை அனுபவிக்க கூடிய கொடுப்பினை இவர்களுக்கு கிடையாது.அதாவது தந்தை மூலம் வரக்கூடிய எந்த விதமான ஆதாயமும் இவர்களுக்கு இல்லாமல் இருக்கும்.ஒருவேளை இவர்களுக்கு தந்தை இருந்தார் என்றால் தந்தை இவர்கள் வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகள் மூலம் இவர்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் தர்ம சங்கடங்கள், ஏமாற்றங்கள், பண இழப்புக்கள், கஷ்டங்கள், போன்ற பிரச்சனைகள் இவர்கள் வாழ்க்கையில் ஏற்படும்.
♦தந்தையுடைய கடன் பிரச்சனைகளை இவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள் என்றால் அந்த கடனை இவர்களால் அடைக்க முடியாமல் வாழ்க்கையில் தேவையில்லாத பிரச்சனைகள் தர்ம சங்கடங்களை அனுபவிக்கக் கூடிய சூழ்நிலைகள் இவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்படும்.
தந்தையுடைய தலையிடால் இவர்களுக்கு வாழ்க்கையில் பெரிய பண இழப்புக்கள், ஏமாற்றங்கள்,தர்ம சங்கடங்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌹மேற்கொண்டு யாரெல்லாம் மீன ராசி அல்லது மீன லக்னத்தில் பிறந்திருக்கின்றீர்களோ நீங்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி நீங்கள் இந்த பதிவில் நான் குறிப்பிட்டுள்ள விஷயங்களை உங்களுடைய நடைமுறை வாழ்க்கையில் பொருத்திப் பாருங்கள் எல்லாம் மிகச் சரியாக இருக்கும்.
🌹ஜாதகத்தில் இந்த சூட்சமத்தை பொருத்திப் பாருங்கள் எல்லா மிகச் சரியாக இருக்கும்.

No comments:

Post a Comment

திருக்கானப்பேர்(காளையார்கோவில்) :

  #திருக்கானப்பேர் (காளையார்கோவில்) : சண்டாசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவம் நீங்க காளி இத்தலத்தை அடைந்து இங்குள்ள சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்...