Monday, 1 December 2025

விதுரர் நீதி

 விதுரர் எம தர்மரின் அம்சமாவர். அவர் தருமத்தைத் தவிர எதையும் சொன்னதில்லை. திருதராஷ்டிரன் பாண்டவர்களுக்கு கொடுக்க வேண்டிய ராஜ்யத்தை பிரித்து கொடுக்கவில்லை. அதில் திருதராஷ்டிரனுக்கு விருப்பமும் இல்லை. அவருக்கு உபதேசிப்பதே விதுர


நீதி ஆகும்:-

நம்மை யாரும் வசவு பாடினாலோ, நிந்தித்தாலோ நாம் பதிலுக்கு எதுவும் கூறாமல் இருக்க வேண்டும். நாம் தர்ம வழியில் இருக்கும்போது நம்மை பிறர் வசவு பாடினால் நாம் அதற்காக வருத்தமோ, மன வேதனையோ பட வேண்டியதில்லை. அவ்வாறு நம்மை ஒருவர் திட்டினால் நாம் செய்த பாவங்கள் அவருக்கு சென்று விடும். மேலும் அவர் செய்த புண்ணியங்கள் நம்மை வந்து சேர்ந்து விடும். நம்மை ஒருவர் திட்டினால் அவர் நம்மீது அம்பு விடுவதாக நினைத்து ஒதுங்கி விட வேண்டும். நாம் அதை தடுத்தால் நாமும் போருக்கு தயார் என்று அர்த்தம். எனவே நாம் புத்திசாலியாக இருந்து நம்மை யாரும் திட்டினாலோ வசவு பாடினாலோ பேசாமல் இருந்து புண்ணியத்தை தேடிக் கொள்ள வேண்டும்.
பேசக் கூடாத இடத்தில் பேசாமல் இருந்தால் நல்லது. அவ்வாறு பேச வேண்டிய கட்டாயம் ஆகி விட்டால் உண்மை பேசுவது சிறந்தது. உண்மை பேச வேண்டிய கட்டாயம் ஆகி விட்டால் பிறருக்கு பிரியம் ஏற்படுமாறு பேசுவது சிறந்தது. அதுவும் கட்டாயம் ஆகி விட்டால் தர்மம் பேசுவதே சிறந்தது.
விதுரர் அடுத்ததாக கீழ் கண்ட ஆறும் கத்தி போல் வெட்டி ஆயுசை குறைத்து விடும் கூறியுள்ளார்.
1. செருக்கோடு வாழ்தல்.
2. அதிகம் பேசுதல் (சத் விஷயங்களைத் தவிர )
3. பிறருக்கு ஒன்றையும் விட்டுக் கொடுக்காமல் இருத்தல்.
4. கோபப்படுத்தல்.
5. நண்பனுக்கு துரோகம் செய்தல்.
6. பிறரை கெடுத்தல்.
சொர்கத்துக்குச் செல்லும் எட்டு பேர்கள் என அவர் குறிப்பிடுவது:
1. பெரியோர் உபதேசத்தை கேட்பவர்கள்.
2. நீதி தெரிந்தவர்கள்.
3. கொடுக்கும் குணம் உள்ளவவர்கள்.
4. நைவேத்தியம் செய்யப்பட உணவையே உண்பவர்கள். அதாவது பகவானுக்கு உணவை அர்ப்பணித்து விட்டு உண்பவர்கள்.
5. பிறரை மனத்தாலோ, உடம்பாலோ அல்லது சொல்லாலோ இம்சிக்காதவர்கள்.
6. உலகத்தில் ஒருவருக்கும் தீங்கு செய்யாதவர்கள்.
7. செய்நன்றி மறக்காதவர்கள்.
8. சத்தியமே பேசுபவர்கள்.
விதுரர் தர்மத்தின் அம்சம் ஆவார். அவர் சொன்ன கருத்துக்கள் லோக ஷேமத்திற்கு சொன்னது ஆகும். விதுர நீதி திருதராஷ்டிரனுக்கு உபதேசித்ததாக இருந்தாலும், சனாதன தர்மத்திற்கு சொன்னதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

No comments:

Post a Comment

டாக்டர்களின் எதிரி யார்???

 டாக்டர்களின் எதிரி யார்??? * #நிலக்கடலை * தான்... சூழ்ச்சியறியா மக்களும் நிலக்கடலையும்..!! #நிலக்கடலை_சர்க்கரையை_கொல்லும் ..!! நம் நாட்டில்...