Monday, 1 December 2025

பணம்_இருந்தால் நீங்கள் உயர்ந்தவன்

 *#யாரெல்லாம்_நம்மோடு இருப்பார்கள்,* *விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை.*

*அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் முடிவு செய்கிறது.*
.
*#வாய்_தவறி விழும் பேச்சுக்கள். கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது.*
*யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள்.*
.
*#நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை.*
*வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை.*
.
*#மற்றவர் தவறைக் கவனித்துக்கொண்டே இருப்பவர்கள்.*
*தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.*
.
*#பணம்_இருந்தால் நீங்கள் உயர்ந்தவன் குணம் இருந்தால் நீங்கள் குப்பை.*
*நடித்தால் நீங்கள் நல்லவன்.*
*உண்மை பேசினால் பைத்தியக்காரன்.*
*அன்பு காட்டினால் ஏமாளி.*
*எடுத்துச் சொன்னால் கோமாளி.*
.
*,#இறைவன் தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகப் பொறுப்புகளை கொடுத்து.*
*அதன் பொருட்டு சோதனைகளை ஏற்படுத்தி.*
*பக்குவத்தையும், நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறான்.*
.
*#நிலவை....தூரத்தில் இருந்து ரசிப்பதை போல.*
.
*,#சில_உறவுகளையும்..... தூரத்திலிருந்து ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.*
*சில வலிகள் இல்லாமல் இருக்கலாம்.*
.
*#தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான் சரியன்று வாதாடுபவர்கள் மத்தியில் அமைதி மட்டும் உங்கள் ஆயுதமாக வைத்துக்கொள்ளுங்கள்.அவர்களுக்கு புரியவைக்க வரும் காலம் ஒன்று உள்ளது.*
*#சிந்தித்து செயல்படுங்கள்.* *இதுவும் கடந்து போகும் அல்லது இதுவும் பழகி போகும்.*
.
*#நிலையென்று ஒன்றுமில்லை இவ்வுலகில்.*
*ஒவ்வொரு சோகமும், துன்பமும் வாழ்க்கையில் நல்ல பாடத்தை கற்று தரவே வருகின்றது.*
.
*#யாரும் உங்கள் கண்ணீரை பார்ப்பதில்லை.*
*யாரும் உங்கள் கவலைகளை பார்ப்பதில்லை.*
*யாரும் உங்கள் வலிகளை பார்ப்பதில்லை.*
*ஆனால் எல்லோரும் உங்கள் தவறை மட்டும் பார்ப்பார்கள்.*
.
*#மனிதனும் வாழை மரமும் ஒன்று தான். தேவைப்படும் வரை வைத்திருப்பார்கள்.*
*தேவை முடிந்தவுடன் வெட்டி வீசி விடுவார்கள்.*
.
*இந்த பதிவு எல்லோருக்கும் பொருந்தும் என்பதால் பதிவிட தோன்றியது.*
.

137 அனுபவங்கள் :
இதை தாண்டி இன்னும் தேவையானு தெரில. இதை படித்து நீங்க நடந்தால் உன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.
.
.
1.நீயே அறிவாளி. ( நாம் )
.
.
2.நல்லவர் போல பேசுவர்கள் அனைவரும் .நடிக்க தெரிந்த கெட்டவர்கள்.
( நாடக பேச்சு )
.
3.பணம் இருந்தால் உன் அருகில் ஆயிரம் காக்கைகள்,
பணம் இல்லை என்றால் உன் அருகில் ஒரு ஈ கூட இருக்காது.
( மக்கள் )
.
4.எதிரியை கூட நம்பலாம்
ஏனென்றால் அவன் உன் பலம் தெரிந்தவன். ( எதிரி )
.
.
5.கூட இருப்பவனை நம்பாத.
ஏனென்றால் உன் பலவீனம் தெரிந்தவன். எப்ப வேண்டுமானாலும் உன் பலவீனத்தை பயன்படுத்தி உனக்கு எதிரான வேலை செய்வான் ( நண்பன் )
.
.
6.நல்ல உறவினர் என்று யாருமில்லை.
(சொந்தகாரர்கள் )
.
.
7.நல்லவர்கள்
என்று எதையும் அவரிடம்
கூறாதே.
( நாளைக்கே அவர் போஸ்ட் ஒட்டுவார் )
.
.
8.சுயநலம் மிக முக்கியம்.
( இல்லைய என்றால் இளிச்சவாயன் )
.
.
9.யார் மீதும் கோபம் கொள்ளாதே.
யாரை பற்றியும் யாரிடமும் கூறதே.
( டைம் வேஸ்ட் )
.
.
10.கெட்டவர்களிடம் பேச்சுவார்த்தை கூட தேவை இல்லை.
( எவ்ளோ பெரிய மனிதனா இருந்தாலும் )
.
.
11.கடவுள் உண்டு. அவன் உன்னை பார்த்து கொண்டு தான் உள்ளான்.
( விதி )
.
.
12.வார்த்தைகளை கொட்டாதே. மனதில் வைத்து கொள்.
( பக்குவம் )
.
.
13.யாரையும் நம்பாதே.
( உண்மை )
.
.
14.உனக்கு தெரியாதவை யாருக்கும் தெரியாது . கண்டிப்பாக உனக்கு தெரியும் . முயற்சி செய்
.
.
15.புகழ்ச்சிக்கு அடிமை ஆகாதே.
( ஆணவத்தின் முதற்புள்ளி )
.
.
16.உன் வழி தனி வழி
( சரியான சிந்தனை )
.
.
17.ரகசியத்தை யாரிடமும் கூறதே.
( மற்றவர் செயல்படுத்துவார்கள்
.
.
18.விடா முயர்ச்சி வீண் போகாது.
( தொடர்ந்திரு )
.
.
19.தன்னம்பிக்கை மிக முக்கியம்.
( நம்மீது )
.
.
20.நல்லா அக்கரையா பேசுகிறார் அவர் நல்லவர் என்று நினைக்காதே. கஷ்டத்தில் கொஞ்சம் பணம் கேட்டு பார்.உன் பக்கமே திரும்ப மாட்டார்
( பட்டு திருந்தினேன் )
.
.
21. தெரியாதவரிடம் கூட கருணை காட்டு , தெரிந்தவர்களிடம் கருணை காட்டாதே . . ( பழிப்போர் உலகம் )
.
.
22.உன்னுடயதை சாப்பிட்டவர் மட்டுமே
உனக்கு கெட்டதை செய்வார்கள்.
( நன்றி மறந்த உலகம் )
.
.
23. பொறுமை மிக முக்கியம்
( காத்திரு நடக்கும் )
.
.
24.எதிலும் யாரையும் நம்பி இருக்காதே
கைவிட்டு விடுவார்கள்.
( கைவிட்டு சென்றால் நற்கதி தான் )
.
.
25.உன்னை புகழ்ந்து பேசும் போது அமைதியாக இரு.
( கேட்கலாம் )
.
.
26.உன்னை இகழ்ந்து பேசும் போது கேட்காமல் இரு. ( காத்திரு காலம்
வெற்றி தரும் )
.
.
27.கடமை என்று செய்தால் வெற்றி கிடைக்கும். கடமைக்கு என்று செய்தால் தோல்வி பெருவாய்.
( பொறுப்பு வேண்டும் )
.
.
28.எதையும் நாளை என்று தள்ளி வைக்காதே.
(அது நடக்காது )
.
.
29.சோம்பல் வாழ்வின் எதிரி.
( தோல்வின் காரணம் )
.
.
30.வாய்மையே வெல்லும் என்பது பொய்.
பொய் தான் ஜெய்க்கும்.
பொய் தான் நம்புவார்கள்.
( நல்லவர்கள் ஏழையா வாழ காரணம் )
.
.
31. பணம் , கள்ளத்தனம் , பொய் , பித்தாலாட்டம் , அடுத்தவர் உடமையை சுரண்டல் , மனசாட்சி இல்லாதவர்களுக்கு மட்டுமே இந்த சமூதாயம் மதிப்பு மரியாதை தரும்.
( சமுதாயத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர் உண்மையான செயல் )
.
.
32.குடும்பத்தை தவிர யார் மீதும் அதிக அன்பு வைக்காதே.
(அவர்கள் உன்னை ஏமாற்றினால் தாங்கமாட்டாய் )
.
.
33. ஊரை விட்டு விலகி வாழ்.
( எந்த பிரச்சினைலும் உன் பெயர் இருக்காது )
.
.
34. உன்னால் கண்டிப்பாக எதையும் செய்ய முடியும் முயற்சி செய்
.
.
35.உறவினர்கள் அனைவரும் உள்ளத்தில் விஷத்தை வைத்து வெளியில் தேனாய் பேசுவார்கள்.
( 99% உறவினர் உண்மையான குணம் )
.
.
36. சிறியவர்களிடம் வேடிக்கை வேண்டாம்
( சின்ன கல்லில் மலத்தை துடைத்ததை போல் அசிங்க படுவாய் )
.
.
37.இன்று உன்னோடு இருப்பவர்கள் நாளை வேறொருவருடன் இருப்பார்கள்.
( பணம் , குணம் இரண்டும் மாற்றும் உலகம் )
.
.
.
38. உன் பேச்சை மீறாத பெண்ணை காதலி , திருமணம் செய். பேச்சை மீறி நடக்கும் மனைவி பின்னாடி என்ன கீழ்த்தரமான வேலை வேண்டும் என்றாலும் செய்வாள்
( பெண்ணால் உயர்வு , தாழ்வுக்கான காரணம் )
.
.
39. இன்று உனக்காக பொய் பேசும் பெண். பின்பு மற்றவர்காக உன்னிடமே பொய் பேசுவாள்.
( கண்டிப்பா நடக்கும் )
.
.
40. நல்ல எண்ணத்தோடு நல்லது செய்தால் கடவுள் மட்டும் உன்னோடு இருப்பார் எந்த கஷ்டத்திலும்.
( கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் உணர )
.
.
41. யாரையும் ஏமாற்றதே அது திரும்ப வரும்
.
.
42.கெட்ட பழகத்திலிருந்து விலகி நில்.
உன்னை நீ தனியாய் அறிவாய்...
.
.
43. நி செய்யும் ஒவ்வொன்றும் நாளை உன்னை தேடி வரும். அது நல்லதா கெட்டதா என்று முடிவு செய்து கொள்.
( கண்டிப்பா திரும்ப வரும் )
.
.
44. கடவுளிடம் பக்தி தேவைஇல்லை பயம் வேண்டும். அது உன்னை கெட்ட செயலிடம் இருந்து விலகி வைக்கும்.
( பயம் தான் )
.
.
45. எதிலும் நீயே அனுபசாலி நி செய்யும் வேலையில் நுணுகங்களையும் குறைகளையும் கண்டுபிடி. உன்னை விட அந்த வேலைய சிறப்பாக செய்ய ஆளே கிடையாது..என்றும் நீயே முதலாளியாக இருப்பாய்..
( நாம் )
.
.
46. வேலை தெரிந்தவன் தினக்கூலி.
வேலையில் நுணுக்கம் தெரிந்தவன்
முதலாளி..
( பெரிய தொழிலதிபரின் வளர்ச்சின் ரகசியம் )
.
.
47. உன்னை அவமான படுத்தியவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் கெட்டவர்களாக இருந்தாலும் எதிரியாக நினைக்காதே. அவர் உனக்கு செய்ததை நினைத்து வருந்தும் அளவிற்க்கு வாழ்ந்து காட்டு...
( முயற்சி பண்ணு )
.
.
48. யாருக்கும் அறிவுரை கூறாதே. கேட்டு பின்னாடி உன்னை தப்பா பேசுவான். அவங்களே வந்து கேட்டா கூட தெரியலனு சொல்.
( கெட்டவன் எல்லாம் நல்லா இருக்கான் நாம் தான் அப்டியே இருக்கோம் )
.
.
49.ஒருவருக்கு அவசரத்துக்கு செய்வது உதவி . அடிகடி செய்தால் நி அடிமை அவர்களுக்கு. அதனால் உன் தன்மானத்தை இழப்பாய்..
உதவி செய் அடிமை ஆகாத.
( அடிமையா நினைக்கிறாங்க )
.
.
50.இந்த வாழ்க்கை நிலையானது . நம்மை யாரும் ஒன்றும் பன்ன முடியாதுனு ஆணவம் எப்போதும் வேண்டாம். எதுவும் நிலை இல்லை.
( சிலரின் வாழ்ந்த கெட்ட அனுபவம் )
.
.
51.உன்னை யாரென்று உனக்கே புரியவைத்தவன் எதிரி. எனவே எதிரி கண்டிப்பா தேவை
( எதிரி )
.
.
52. உன்னை ஆயிரம் பேர் தவறா பேசினாலும் அதை காதில் வாங்காத. நி ஒழுங்கா இரு. உயர்ந்து வருவாய்.
( ஊர் வாய் )
.
.
53. கஷ்டத்தில் உடன் இருந்து உதவியவனை மறக்காதே வாழ்நாளில். இன்பத்தில் உடன் இருந்து தின்றுவிட்டு கஷ்டத்தில் ஓடி போனவனையும் மறக்காதே.
( கூட ஒட்டி இருந்தவர்கள் குணம் )
.
.
54.மன்னிப்பு என்பது தவறுக்கு
துணை இருப்பது..
( உண்மை )
.
.
55.தெரியாமல் செய்த தவறை மன்னித்துவிடு.தெரிந்தே செய்த தவறை தண்டிக்க மறக்காதே..
இல்லை என்றால் அதவிட பெரிய தவறு செய்வார்கள்..
( செய்தார்கள் )
.
.
56.உன்னை வெறுப்பவர்களும் எதிர்ப்பவர்களும் எதிரிகள் அல்ல.
நி அழிய வேண்டும் என்று நினைப்பவர்களே எதிரி..
( உன் கூட இருப்பர்கள் கூட )
.
.
57.குடும்பம் என்னும் வண்டியில் ஆண் முன் சக்கரமாகவும் பெண் குடும்ப பாரத்தை சுமக்கும் , இன்ப துன்பம் என்னும் கரடான பாதையில் குடும்பம் சென்றாலும் அதை பொருத்து தாங்கி செல்லும் பின் சக்கரமாக பெண் இருக்க வேண்டும்.
எவ்வளவு குடும்ப பாரம் தாங்கி சென்றாலும் ஆண் என்னும் முன் சக்கரத்தை பெண் என்னும் பின் சக்கரம் முந்தி செல்ல கூடாது.
அவ்வாறு சென்றால் குடும்பம் என்னும் வண்டி சிதைந்து போகும்.
( பெண் என்றால் இதான் )
.
.
58. காரியவாதிகளுக்கு நிரந்திரமாக எதிரி கிடையாது. காரியம் சாதிக்க
அன்பாக அக்கறையா பேசி காலில் விழக்கூட தயங்க மாட்டார்கள்.
உன்னால் காரியம் நடந்தாலும் நடக்காட்டாலும் உன்னை தூக்கி எறிவார்கள். உன்னை பற்றி தவறாக பேசுவார்கள்...
காரியவாதிகளின் பேச்சு கல்லும் கரையும் மாறி பேசுவார்கள்.
காரியவாதிகள் என்றும் பொய்யே
பேசுவார்கள்
அவர்களிடம் எச்சரிக்கை...
( கேட்டு இருக்கோம் )
.
.
59. நம்ம யாருக்கும் எந்த கெட்டது பன்னல கெட்டதும் நினைகிறது இல்ல நமக்கு மட்டும் ஏன் இந்த கஷ்டத்த கடவுள் கொடுகிறானு வருந்தாத.நல்லவர்கள்
பாண்டவர்கள் 13
வருடம் சோறுக்கே வழி இல்லாம வனவாசம் அனுபவித்தார் ஆனால் அந்த 13 வருடம் கெட்டவன் துரியோதனன் ராஜயோக வாழ்க்கை அனுபவித்தான். நாட்டையே ஆண்டான் பின்பு மாண்டு தான் போனான். திரும்ப நல்லவர்களே ஆண்டாரகள். கடவுள் கெட்டவனுக்கு நல்ல வாழ்க்கை கொடுப்பான் ஆனால் நிரந்தரமாக அல்ல.
( நினைச்சு பார்த்தது )
.
.
60. நல்லவர் வாழ கிருஷ்ணன் போல உடன் இருப்பான் கடவுள்.
கெட்டவர் அழிய சகுனி போல உடன் இருப்பான் கடவுள்.
( பார்த்தது )
.
.
61. ஒருவர் உன்னிடத்தில் மற்றவரை பற்றி தப்பாக பேசி கலகம் செய்தால் . காதில் வாங்காதே.. எங்க அவரிடம் நி போய் கேட்பாய் என்று.
அவர்களே அவர்களிடம் போய் அந்த தப்பாய் பேசியதாலாம் நி தான் என்று உன்னை பற்றி பல மடங்கு கலகம் செய்வார்கள். பொதுவாக கலகம் செய்வோரிடம் பேச்சு வார்த்தை வேண்டாம்.
( நடந்தது )
.
.
62.வெற்றி பெற்றால் வருவது ஆணவம்.
தோல்வி பெற்றால் வருவது அனுபவம்.
( இன்னும் தொடருது )
.
.
.
.
63.தோல்வியே எதிலும் சிறந்தது.
தோல்வியால் நி அனுபவசாலி ஆகிறாய்.5000 ரூபாய் விசயத்தில் ஏமாந்து தோற்ற நி. 5,00,000 விசயத்தில் எஎச்சரிக்கையாய் காப்பாற்ற படவாய்.
அதே 5000 ஜெய்த்தவன் அதே நம்பிக்கையில் 5,00,000 தோற்று
போவான்
( தப்பித்து இருக்கேன் )
.
64.சிறிய விசயத்தில் பெற்ற தோல்வியே பெரிய வெற்றியின் ரகசியம்.
( பார்த்து இருக்கோம் )
.
.
65.பெரிய தோல்வியின் காரணம் சிறிய வெற்றி பெற்றதே. தொழில் , நட்பு , உறவு , காதல் , எல்லாவற்றுக்கும் பொருந்தும்...
நி தோல்வி பெற்ற அனுபவசாலியாக இரு.
( உணர்ந்திட்டோம் )
.
.
66.அதிகம் பேசாத. அதிகமாக கேள்.
பேசும் போது மூளை சரியாக புரிந்து கொள்ளாது , கேட்கும் போது அதிகம் புரிந்து கொள்ளும்.
( உண்மை புரிய நாள் ஆகும் )
.
.
67.உதட்டுக்கு ஓய்வு கொடு
செவிக்கு வேலை கொடு.
( அப்போ அப்போ மாறி போகுது )
.
.
68.நீ தான அறிவாளி மற்றவரின் பேச்ச கேட்டாலும் அத அப்படியே செய்யாதே. அடிமைகள் அப்படி செய்யும்.உன் அறிவுக்கு அது சரியா வருமா என்று யோசி. அதில் எதாவது செய்தால் அதவிட சிறப்பாக செய்ய முடியுமா என்று யோசி.
( நம் குணம் )
.
.
69.உன் அருகில் உள்ளதை எதை அதிகம் உதாசின படுத்துகிறாயோ
அது உன்னை விட்டு போன பின்பு அதன் அ ருமை உணர்ந்து மீண்டும் அது கிடைக்காமல் வருத்தபடுவாய்.
( இழந்தது நிறைய உண்டு )
.
.
70.உனக்கு எதிலும் குரு தேவை இல்லை .
நீயே அறிவாளி.. அவர் சொல்லி ஒரு தடவை செய்த வேலையை செய்து அப்டியே மறப்பதை விட
நி உன் அறிவில் 5 தடவை செய்து தோற்று போ . ஆயுள் முழுவதும் மறக்கமாட்டாய் அந்த வேலையை.
( நம் குணம்)
.
.
71.உடலில் உணவு ஜீரணம் ஆகி வெளியேறுவது போல் மனதை விட்டு கெட்ட எண்ணங்களை ஜீரணமாக்கி வெளியேற்று.
ஜீரணமாகி உருவாகும் சுத்த ரத்தம் போல் நல்ல எண்ணம் உண்டாகும்...
நல்லதே நடக்கும் வாழ்வில்.
( பழக்கபடுத்தினு வரேன் )
.
72.ஆன்மிக பாதை தவறை தவிற்க்கும் பாதை.
( கண்டிப்பா )
.
73.எதை ஒன்றை அதிகம் நேசிகிறாயோ அதுவே உன்னை அதிகம் வேதனைப்படுத்தும்.
( அனுபவம் )
.
74..கனவு என்பது நிழல் போல . உன்னை பின் தொடர்வது..
பயம் வேண்டாம்..
( பயந்த காலம் உண்டு )
.
75.உலகில் விளைமதிப்பற்றது கண்ணீர் உனக்காக மற்றவர் கண்ணில் அது வரும் போது...
( உணர வேண்டியது )
.
76.நீ எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னை உன் கர்மா பின் தொடர்ந்து வருகிரது. எனவே பாவம் மேல் பாவம் சேர்க்காதே..
( செய்ய கூடாதது )
.
77.வாழ்க்கையில் எல்லாவற்றிலும் ஏற்படுவது ஒரு வகையான பசியே. அந்த பசிக்கு மட்டும் உணவு கொடு. இல்லை என்றால் அது உன்னையே விழுங்கி விடும்
( ஆசையிலும் சிக்கனம் வேண்டும் )
.
78.சிக்கனத்திலும் சின்ன சின்ன உதவி செய்
( நல்லவர்களுக்கு மட்டும் )
.
79.தான் என்ற கர்வம் உன்னை அழிப்பது மட்டும் இல்ல உன்னை சார்ந்தவர்களையும் அழிக்கும்.
( பலரை அழித்து உள்ளது )
.
80. முடிந்தவரை காலனி அணியாமல் நடந்து பழகு..
மூளையில் புது உணர்ச்சி இருக்கும்.
சரியான முடிவே நீ எடுப்பாய்.
( பழக்கம் உள்ளது )
.
81.உனக்கு ஏற்படும் வலிக்கு மருந்து
நல்ல தூக்கமும் நல்ல சாப்பாடும்.
இரண்டும் நன்றாக இருந்தால் மன வலியும் உடல் வலியும் விலகி விடும்.
( இன்னும் கிடைக்காத வேதனை )
.
82.கெட்டவர்களுக்கு கெட்டவரை பிடிக்கும் . நல்லவனாய் நீ இருந்தால் நல்லவர்க்கு மட்டுமே உன்னை பிடிக்கும்.
( இன்னும் கெட்டவர்கள் பழக்கம் இல்ல )
.
83.கெட்டவன் கேடு நினைப்பான். இறைவனும் அவனுக்கு துணை இருப்பான். அது விதி.
( விதி )
.
84.நீ வெளியில் சொல்வது நடப்பதில்லை. சொல்லாததது நடக்கும்.
எதுவும் சொல்லாதே.
( ஒன்னும் நடக்கில )
.
85.மானம் ஒன்றே பெரிது . சின்ன விசயங்களில் நீ அசிங்கபடலாம். அது
அனுபவமாக கொள்.
( அப்டி நினைச்சாலும் வாழ்ந்தாலும் கடவுள் ரொம்ப அசிங்க படுத்துவான் )
.
86.உன்னை மதிப்போரை மதி.மதிக்காதவர் பெரிய ஆளா இருந்தாலும் மதிக்காதே.
( பழக்க தோஷம் )
.
86.வாழ்க்கை இன்பம் பாதி துன்பம் . துன்பத்தை அனுப்பவிக்கும் போது சோர்ந்து போகாதே இன்பம் வர போகிறது என்று உற்சாகமாக இரு.
( பட் முடில )
.
87.வார்த்தைகள் கூர்மையான ஆயுதம் அதனை மற்றவர் மீது செலுத்தாதே.
( கட்டுபடுத்து உன் நாக்கு )
.
88.அடிப்பட்ட பிறகு நீ அனுபசாலி. மீண்டும் அந்த தவறை செய்யாதே.
( கண்டிப்பா இல்ல )
.
89.இரக்கம் காட்ட வேண்டிய இடத்தில் மட்டும் காட்டு.
( உண்மை )
.
90.நீயே உயர்ந்த மனிதன்.
( கண்டிப்பா நினை )
.
91.தகுதி தராதரம் இல்லாதவரிடம் பழகாதே . ரொம்ப அசிங்கபடுவாய்...
( பல தடவை )
.
92.நி ஒருவனுக்கு இலவசமாய் கொடுத்த பெரிய பொருளுக்கு மதிப்பு இல்லை.....
அதே அவனிடம் வாங்கிய சிறிய பொருளுக்கும் சிறிய
பணத்திற்கும் மதிப்பு உண்டு....
( பல தடவை )
.
உன் பொருள் மண் ஆனாலும் அதற்க்கு மதிப்பு கொடுத்து கொடு . .
அப்போது தான் நீயும் மதிக்கபடுவாய்
.
93. மனசுபோல வாழ்க்கை இல்ல
மனசாட்சி இல்லாதவர்க்கே வாழ்க்கை
( ஊர்ல பார்த்தா நல்லா வாழரவன் எல்லோரும் )
.
94.உண்மையான நட்பு , உறவு , குடும்பம் மூன்றையும் பெற்றவர்கள் கண்களுக்கு
பார்க்கும் எல்லாம் பசுமையாக தான் தெரியும்
அதில் வலி கண்டவர்கள் கூறும்போது
மறுக்க தான் செய்வார்கள் . நீ சரியா இருந்தா அவர்கள் சரியா இருந்திருப்பார்கள் என்று கூறுவார்கள்..
( கேலி செய்பவர்களுக்கு )
.
வலியும் வேதனையும் வந்த பின்னே உணர்வார்கள்..
.
95.
விதி என்று வாழ்பவர் தனக்கு கிடைத்தது இவ்ளோதான் என்று எந்த தவறும் செய்யாமல் வாழ்கிறார்கள்
( நல்லவர்கள் )
.
விருப்பம் இல்லாமல் வாழ்பவர்கள் தான் விரும்பியதை அடைய எல்லா தவறும் செய்கிறார்கள்..
( கெட்டவர்கள் )
விதியை நம்பியவர்கள் நல்லவர்கள்..
கிடைத்ததை கொண்டு வாழ்ந்து முன்னேற பார்...
விரும்பியது எல்லாம் வேண்டும் என்றால் தவறான செயல் தான் செய்வாய்...
.
96.குடும்பத்தை விட மற்றவரை நேசித்தும் நம்பிய பிறகு தான் தெரியும்
கண்ணீர் ,மரண மனவேதனை இரண்டுக்கும் அவர்கள் தான் காரணம் என்று.
குடும்பத்தை மட்டும் நேசி.
( உண்மை )
.
97. தேவைபடும்போது தேடும் உறவை விட
தடுக்கி விழும்போது தாங்கும் உறவை நேசி
வாழ்வில் துன்பம் இல்லை
( இன்னும் இல்ல )
.
98.சொல்ல ஆசைகள் ஆயிரம் இருந்த போதும் மௌனத்தோடு வாழும் இதயத்திற்கு மட்டுமே தெரியும்
அவை வெளிய விட்டால் நம்மை அழித்துவிடும் என்று
ஆசை துன்பத்திற்கு காரணம்.
( ஆசை என்ற வார்த்தை இல்ல )
.
99.வாழ்க்கையிலும் சரி வண்டியிலும் சரி
பொறுமையாக போக வேண்டும்
பயணம் தாமதமானாலும்
சேரவேண்டிய இலக்கு பிரச்சனையின்றி அடையலாம்..
( பழக்கமாயிடுச்சு )
.
100.அடுத்தவனின் காசை எடுத்து அவன் காசிலே அவனுக்கு உதவி செய்து அந்த காசில் கொஞ்சம் உன் பாக்கெட்டில் வைத்து கொள்
நீ நல்லவன் என்று என்றும் புகழப்படுவாய்.
.
அதே உன் பாக்கெட்டில் உன் காசை எடுத்து அவனுக்கு செலவு செய்து உதவி செய்தால் நீ கெட்டவன்
நீ அவன் காசை திண்றவன் என்று இழகபடுவாய்.
.
கலியுக உண்மை..
( நடந்துன்னு வருது )
.
101.உயிராய் அன்பாய் பேசும்
பொய்யான உதடே உத்தமன்
என்று வாழும் என்றும்..
.
உண்மைகாக ஊமையாய் வாழும் உதடு
கெட்டவன் என்று வாழும் என்றும்.
( நாடக கம்பனியை நடத்தரவன் நல்லவன் )
.
102.தேவைக்கு நம்மை ஊறுகாயாய் அவமானத்தோடு பயன்படுத்தும் உறவுகளின் மத்தியில்
தனிமையில் தன்மானத்தோடு வாழ்வது கௌரவம்....
( கேடுகெட்ட உறவினர்கள் )
.
103.காலம் முழுவதும் செய்தவன் உதவி
கடைசியில் முன்நின்றவன் பெயரில்
பதிவு செய்து காலம் முழுவதும்
பேசப்படும்...
( இதான் நடக்கிறது )
.
104.நேரம் சொல்லாமல் மெளனமாக இருக்கும் போது
ஊர் ஆயிரம் சொல்லும்.
அதான் நேரம் ....
.
.
நேரம் கூறும் நேரம்
ஊர் ஊமையா இருக்கும்..
அதான் நேரம்..
( விதி )
.
105.உண்மையானவர்கள் யார்க்கும் எதற்கும் இறங்கி போகமாட்டார்கள்...
பொய்யானவர்கள் மட்டுமே எல்லாவற்றுக்கும் இறங்கி போவார்கள்..
பொய்யானவர்கள் முதலில் ஜெயித்தாலும் முகத்திரை கிழிக்கபட்டு
உண்மை வெல்லும் கடைசியில்...
( நம்பிக்கை உண்டு இது நடக்கும் என்று )
.
106. அரசனுக்கு கொடுக்க மறுத்த பெண்
கள்வனோடு ஓடி போனாளாம்
.
விதி யாரை விட்டது
( விதி )
.
107.வேண்டாம் என்று வெறுத்து சொன்னதை யோசித்து பார்
உன்னோடு இருப்பதெல்லாம்
அவைகள் தான் ..
வேண்டும் என்றதை நினைத்து பார்
ஊரே அதை வெறுத்து இருக்கும்..
கடவுள் எப்போதும் உயர்ந்தவன்..
( உண்மை )
.
108.பறவையின் அடக்கமும் அமைதியும் கூட்டில் அடைந்து இருப்பதை வைத்து முடிவு செய்வது முட்டாள்தனம்..
கூட்டைவிட்டு வெளிவந்தபின் நாட்டை தாண்டி கூட போகுமாம்..
( சிலர் வீட்டுஉள்ள நல்ல புள்ள வெளிய வேற )
.
109.மற்றவர்கள் உன்னை பெருமையாய் பேசி கிடைக்கும் பொய்யான சந்தோசத்தை விட ,
நீ உனக்காக செய்து உன் மனதளவில் அடையும் உண்மையான சந்தோசமே வாழ்க்கை கண்ணீரின்றி அமையும்.
( நம் குணம் )
.
110.என்ன தான் பாம்புக்கு பால் ஊத்தி வளர்த்தாலும்
அந்த பால் அது உடம்புல விஷமா தான் ஊரும்.
.
என்ன தான் கெட்டவர்களுக்கு
நீங்க நல்லது பண்ணலாம்
உங்களுக்கு கெட்டது தான் செய்வார்கள்.
( அனுபவம் )
.
111.உபதேசமும் மருந்தும் பாதிக்க பட்டவனுக்கு மட்டுமே கொடு
.
மற்றவனுக்கு கொடுக்காதே
.
கொடுத்தால் இழப்பது
உன் மரியாதையை தான்..
( கண்டிப்பா )
.
112.சிலரின் தேவைக்கு நீ உப்பாக இரு
அளவோடு உன்னை பயன்படுத்துவார்கள்
.
தண்ணீராக இருக்காதே தாகத்துக்கு மட்டும் அல்ல சாக்கடைக்கும்
உன்னை பயன்படுத்துவார்கள்
( இதான் உலகம் )
.
113.சில நேரங்களில் சிலர் பார்வைக்கு நீ கெட்டவனாக தெரியலாம்
.
அதனால் நீ உன்னை மாற்றி கொள்வது தவறு.
.
என்றும் நீ நீயா இரு
உலகம் உன்னை புரிந்து கொள்ளும் ஒருநாள்...
( நடக்கும் )
.
114.வேண்டும் என்று தேடி
கிடைக்காமல் வருந்துவதை விட
வேண்டாம் என்று இருந்து பார்
.
நீ எதிர்பார்க்காத அளவிற்கு தேடி வரும்
அனைத்தும்.
( ஆசை எதிலும் இல்ல )
.
115.ஒருவரின் சுயநலமும் துரோகம் தான் உன்னை தோற்கடித்தால்
.
அது உன் தோல்வி அல்ல
.
அது உன் அனுபவம் இனி புரிந்து நட.
( நடக்கிறேன் )
.
116.மாறுவது உலகம் அல்ல
மனித மனம் மட்டுமே
இந்த உலகம் நிலையானது
உன் தேவைக்கு உலகம் அல்ல
அதன் தேவைக்கு தான் நீ
உதவியாக இரு அடிமையாக இருக்காதே.
( உதவி தான் செய்றேன் )
.
117.தினமும் நீ தூரத்தில் இருந்து
சுமந்து வந்து நீர் ஊற்றி உயிரை காப்பாற்றினாலும்.
.
ஏதோ ஒருநாள் வந்து பெய்யும்
மழையை தான் இந்த உலகம்
தூக்கி பேசும்...
.
காலம் முழுவதும் நீ செய்த உதவி
கடைசியில் வந்து செய்தவன் பெயரில்
எழுதப்படும்...
( நடந்துனு வருது )
.
118.ஒருவன் நல்லவனா கெட்டவனா ?
அவன் உயர்ந்தவனா தாழ்ந்தவனா ? என்று
அவன் ஆடையும் பேச்சும் வைத்து தீர்மானிக்கிறது இந்த சமூகம்...
.
அவன் மனம் மற்றும் செயல் கண்டு அல்ல....
( உலக இயல்பு )
.
119.அமைதியானவர்கள் கோபுரம் போல்
நிரந்தரமாக நின்று வாழ்கிறார்கள்
.
.
தீடீர் என்று வாழ்வு வந்தவர்கள் பளபளக்கும்
காத்தாடி போல உயரே பறக்கும் போது
நாம் கோபுரத்தை விட உயரத்தில் இருக்கோம் என்று ஆணவத்தில் ஆடி பறந்து கடைசியில்
கீழே தான் விழுகிறார்கள்..
( கடைசியில் தெரியும் )
.
பழமையானாலும் கோபுரம் கோபுரம் தான்...
.
120.கஷ்டப்படுவர்கள் ஒதுக்கப்படுவார்கள்
சீன் போடுபவர்கள் மதிக்கபடுவார்கள்..
( இதுவரை நடந்துன்னு வருது )
121. வசதி வாய்ப்பு வந்த உடன் குணம் மாறுபவர்கள் நாகத்தை விட விஷம் கொண்டவர்கள் . அவர்களிடம் விலகி இருப்பது நல்லது .
.
122 . கண்மூடிதனமாக யாரையும் நம்ப கூடாது . பெரிய விளைவுகள் சந்திக்க நேரிடும்
.
123. இந்த உலகம் தன் சுய தேவைக்கும் தன் சுய இன்பத்திற்காகவும் உன்னை பயன்படுத்த தயங்காது ,
.
124 . நேற்று உன்னோடு பழக்கம் , நாளை இன்னொருவரிடம் பழக்கம் . மாறி கொண்டே போவார்கள் . நீ மாறாமல் இருந்தால் அது உன் முட்டாள் தனம் .
.
125 .தகுதி தராதரம் இல்லாவர்களை நினைத்து நீ எவ்வளவு வருந்தினாலும் அவர்கள் உணர மாட்டார்கள் . நீ உன்னை மாற்றுவதே சிறந்தது .
.
126. சமூகத்தில் அவன் பெரிய இடத்தில் இருக்கிறான் அவன் நல்லவன் , தவறு செய்ய மாட்டான் என்று நீ அவனை நம்பினால் பெரிய அளவில் ஏமாற்றபடுவாய் .
.
127. பொய்யாக நடித்தால் மட்டுமே இந்த உலகம் உன்னை நல்லவன் என்று கூறும் , பொய்யாக நடிக்க விருப்பம் இல்லை என்றால் கெட்டவன் என்று ஒதுக்கப்படுவாய் . .
.
128 . அறிவுரையும் , ஐடியாவையும் கொடுப்பவன் உயர்ந்த இடத்தில் இருந்தால் அவன் தவறாகவே கூறினாலும் ஏற்றுக்கொள்வார்கள் . . ஆனால் ஒருவன் தாழ்ந்த இடத்தில் இருந்து சரியாகவே அறிவுரையும் , ஐடியா கூறினாலும் அது தவறாகவே எண்ணி அசிங்கப்படுத்துவார்கள் . .
.
129. உன்னை மதிகாதவர்களை ஒருநாளும் நினைத்து வருத்தப்படாதே. அவர்களிடம் இருந்து விலகி இரு.
.
.
130 . இந்த உலகம் தன் சுயநலத்திற்கும் , தன் சுயலாபத்திற்கும் மட்டுமே உன்னை பயன்படுத்த நினைக்கும் , நீ சுயநலமாக இல்லாவிட்டால் பெரிய அளவில் ஏமாற்றபடுவாய் .
.
131. உன்னை மதிக்காத பெண் ஒருநாளும் உனக்கு நல்ல மனைவியாக இருக்க மாட்டாள் , அவள் மதிக்கும் மனிதர்களை தேட சொல்லிவிட்டு உன்னை மதிக்கும் பெண்ணை திருமணம் செய் .
.
132. காதலிக்கும் பெண்ணோ , மனைவியோ உன்னை அதிகம் காயப்படுத்தினால் நீ அவர்களை திருத்த முயல வேண்டாம் , அவர்களை விட்டு விலகி செல் . அவர்கள் வருந்தும் நிலமை வரும் அப்போது உணர்வார்கள் .
.
133 . திறமையாலும் அறிவாலும் உயர்ந்தவர்கள் ஒருநாளும் எங்கும் தன்னை உயர்த்தி காட்டிக்கொள்ள மாட்டார்கள் , அதிர்ஷ்டத்தாலும் நல்ல நேரத்தாலும் உயர்ந்தவர்கள் எப்போதும் தன்னை எல்லா இடங்களிலும் உயந்தவர்களாக காட்டி கொள்வார்கள் ,
.
134. உன்னை அடக்கி ஆள நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அடங்கி போவாதீர்கள் , விலகி செல்லுங்கள் , அவர்களால் உங்களுக்கு எப்போதும் ஆபத்தே
.
.
135 . ஒருசிலர் தவறை செய்தாலும் அதனால் தன்னை பற்றி தவறாக பேசினாலும் அதன் மூலம் பிரபலமாக முடியும் என்றால் அந்த தவறான காரியத்தை செய்ய தயங்கமாட்டார்கள் .
.
.
136. ஒருநாளும் தவறானவர்களுக்காக வருந்தாதே வாழ்ந்து காட்டு.
.
137. வாழ்க்கையில் வேலை தேடி பணம் சம்பாதிப்பதை விட வாழ்க்கையில் நிம்மதியை தேடு , அந்த நிம்மதியை கொடுபவர்களை சம்பாதி ,

No comments:

Post a Comment

நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து).......

 நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து)....... . இதய பிரச்சினைகளுக்கு, (ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன்...