கும்ப ராசி அல்லது கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இருக்கக்கூடிய பொதுவான குணங்கள்,திறமைகள்
பிரச்சனைகள்,கஷ்டங்கள்,தர்ம
சங்கடங்கள்,ஏமாற்றங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் நாம் மிக தெளிவாக பார்க்கலாம்.

ஒவ்வொரு ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் பொதுவாக சிலவிதமான எண்ணங்கள் திறமைகள் பிரச்சனைகள் தர்மசங்கடங்கள் கஷ்டங்கள் என்பது இருக்கும்.அதன் வகையில் இந்தப் பதிவில் கும்ப ராசி அல்லது கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எந்த மாதிரியான பிரச்சனைகள் கஷ்டங்கள் குணங்கள் இருக்கும் என்பதை பார்க்கலாம்.

யாரெல்லாம் கும்ப ராசி அல்லது கும்ப லக்னத்தில் பிறந்திருக்கின்றார்களோ இவர்கள் ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி.
இவர்கள் பிறப்பிலேயே வைராக்கியம் மிக்கவர்கள் வைராக்கியத்தை அதிகமாக கொண்டவர்கள்.இவர்களைப் போன்று வைராக்கியம் கொண்டவர்கள் இந்த உலகத்தில் யாருமே கிடையாது.இவர்களை யாராவது ஏமாற்றி விட்டாலோ இவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாலோ இவர்களை தேவையில்லாமல் திட்டி விட்டாலோ அவர்களுடன் அவ்வளவுதான் இவர்கள் எப்போதுமே சேர மாட்டார்கள் பேச மாட்டார்கள்.

அவ்வளவு எளிதாக இவர்களை ஏமாற்றியவர்கள் இடத்திலும் நம்பிக்கை துரோகம் செய்தவர் இடத்திலும் இவர்கள் சேர மாட்டார்கள் பேசமாட்டார்கள்.
அவர்களை இவர்கள் ஒதுக்கி வைத்து விடுவார்கள் அவர்களுடன் மீண்டும் இவர்கள் அவ்வளவு எளிதாக பழக மாட்டார்கள் சேர மாட்டார்கள்.

இவர்களை யாராவது கேவலப்படுத்தி விட்டாலோ இவர்களே தகாத வார்த்தையில் பேசி விட்டாலோ.அவர்கள் வீட்டிற்கே இவர்கள் செல்வதை நிறுத்தி விடுவார்கள்.மீண்டும் அவர்களை இவர்கள் வாழ்க்கையில் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.

இது போன்ற வெட்டி வைராக்கியத்தால் வாழ்க்கையில் நிறைய சொந்தங்களையும் உறவுகளையும் இவர்கள் இழந்திருப்பார்கள்.நிறைய நண்பர்களுடைய ஆதாயங்களும் இவர்கள்இழந்திருப்பார்கள்.
வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளையும் சந்தரப்பங்களையும் இவர்கள் கோட்டை விட்டு இருப்பார்கள் நலுவ விட்டு இருப்பார்கள்.அதேபோன்று இவர்கள் எதிரிகளை கூட இவர்கள் மன்னித்து விட்டு விடுவார்கள் ஆனால் என்றைக்குமே துரோகிகளை இவர்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.
துரோகிகளை இவர்கள் மறக்கவும் மாட்டார்கள்.

இவர்களுக்கு யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ அவர்களை பழி தீர்க்கும் வரை இவர்கள் விட மாட்டார்கள்.துரோகிகளை பழி தீர்க்க வேண்டும் என்ற வைராக்கியம் என்பது இவர்களுக்கு எப்போதுமே வாழ்க்கையில் இருக்கும்.
இவர்களுக்கு துரோகம் செய்த துரோகிகளை சரியான நேரம் காலம் பார்த்து காத்திருந்து இவர்கள் பழி தீர்ப்பார்கள் இந்த விஷயத்தில் இவர்கள் மிகவும் வல்லவர்கள்
புத்திசாலிகள்.

இவர்கள் எடுக்கின்ற கொள்கை முடிவிலிருந்து என்றைக்குமே இவர்கள் பின்வாங்க மாட்டார்கள்.
ஒரு விஷயத்தில் இவர்கள் ஒரு முடிவை எடுக்கின்றார்கள் என்றால் அந்த முடிவு நல்லதாக இருக்கலாம் கெட்டதாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் சரி இவர்கள் எடுத்த அந்த முடிவிலிருந்து இவர்கள் பின்வாங்க மாட்டார்கள் இவர்களால் பின் வாங்கவும் முடியாது.

அதாவது எந்த ஒரு விஷயத்திலும் செயல்களிலும் தான் எடுத்த முடிவில் தான் எப்பொழுதுமே இவர்கள் இருப்பார்கள் யாருக்காகவும் அந்த முடிவை இவர்கள் மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.யார் சொல்வதையும் இவர்கள் கேட்க மாட்டார்கள்.
இவர்களைப் பார்ப்பதற்கு மற்றவர்களை போன்று சாதாரணமான ஆட்களாக இருந்தாலும் இவர்களுடைய வெளிஊலக தொடர்பு வெளியுலக நட்புகள் மிகப்பெரியதாக இருக்கும்.

சமுதாயத்தில் பெரிய அந்தஸ்து கொண்ட நபர்கள், பெரிய பணக்காரர்கள், உயர் அதிகாரிகள்
அரசியல்வாதிகள்,செல்வாக்கு மிக்கவர்கள்,இது போன்றவர்களின் தொடர்பு இவர்களுக்கு சாதாரணமாக இருக்கும்.இதுபோன்ற சமுதாயத்தில் பெரிய நபர்களுடன் இவர்கள் நேரடியாக பழகுவார்கள் பேசுவார்கள்.எந்த ஒரு appointment இல்லாமலும் நேரடியாக இவர்கள் அவர்களிடம் சென்று பேசுவார்கள் பழகுவார்கள்.

ஆனால் இது போன்ற நபர்களுடைய தொடர்பு என்னிடம் இருக்கின்றது என்பதை பற்றி இவர்கள் வெளியில் யாரிடத்திலும் இவர்கள் பீற்றிக் கொள்ள மாட்டார்கள் அதை வைத்து இவர்கள் தேவையில்லாமல் scene போட மாட்டார்கள்.

மேலும் இவர்களுக்கு கோபம் வீரம் ஆத்திரம் அவசரம் பிடிவாதம் ஆக்ரோஷம் உக்கிரம் வைராக்கியம் ரோஷம் இது போன்ற எண்ணங்கள் குணங்கள் மற்றவர்களை காட்டிலும் இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.
யாருக்குமே இவர்கள் அவ்வளவாக பயப்பட மாட்டார்கள் தன்னுடைய சுயமரியாதைக்கு சுய கௌரவத்திற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

யார் என்ன தவறு செய்தாலும் அவர்களை நேருக்கு நேராக எதிர்த்து கேள்வி கேட்கக் கூடிய அந்த குணம் பக்குவம் இவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.மேலும் இவர்களிடத்தில் இருந்து யாராலும் அவ்வளவாக எந்த ஒரு விஷயம் சார்ந்த ரகசியங்களை வாங்கவே முடியாது.எல்லா விஷயங்களையும் இவர்கள் கவனித்துக் கொண்டே இருப்பார்கள் இவர்களுக்கு இவ்வளவு விஷயம் தெரியும் என்பது யாராலும் சரியாக கணிக்க முடியாது.

மேலும் இவர்கள் ஒருவேளை ஆணாக இருந்தார்கள் என்றால் மனைவி மூலமாகவும் மனைவியை சொந்தங்கள் உறவுகள் மூலமாகவும் வாழ்க்கையில் தேவையில்லாத கடன் பிரச்சனைகள் சண்டைகள் ஏமாற்றங்கள் வம்பு வழக்கு போட்டிகள் பொறாமைகள் எதிரிகள் சத்துக்கள் போன்ற பிரச்சனையில் இவர்களுக்கு வாழ்க்கையில் கண்டிப்பாக இருக்கும்.

இவர்கள் மனைவியுடைய குடும்ப உறவினர்களிடமிருந்து பணத்தை கடன் வாங்கினார்கள் என்றால்
பிறகு அந்தக் கடனை அடைக்க முடியாமல் இவர்களுக்கும் மனைவியுடைய குடும்ப உறவினர்களுக்கும் இடையில் தேவையில்லாத சண்டைகள் ஏமாற்றங்கள் வம்பு வழக்கு கோர்ட்டு கேஸ் போன்ற பிரச்சனையில் இவர்களுக்கு ஏற்படும்.

இவர்களுக்கு மனைவியின் மூலமாகவும் மனைவியுடைய சொந்தங்கள் குடும்ப உறவினர்கள் மூலமாகவும் கடன் பிரச்சனைகள் ஏமாற்றங்கள் சண்டைகள் வம்பு வழக்கு போன்ற பிரச்சனைகள் இவர்களுக்கு வாழ்க்கையில் கண்டிப்பாக வரும்.மனைவி மூலமாகவே மனைவியுடைய சொந்தங்கள் உறவினர்கள் மூலமாகவே இவர்களுக்கு வாழ்க்கையில் போட்டிகள் எதிரிகள் பெறாமைகள் சத்துருக்கள் உருவாகுவார்கள்.

மேலும் இவர்கள் அடுத்தவர்களின் தொழிலை பார்த்துக் கொள்கிறார்கள் அல்லது வழி நடத்துகிறார்கள் என்றால் அந்த தொழில் சார்ந்து இவர்களுக்கு போட்டிகள் பொறாமைகள் எதிரிகள் சத்துறுக்கள் என்பது மிக மிக அதிகமாக இருக்கும்.அடுத்தவர்களின் தொழிலை இவர்கள் பார்த்துக் கொள்வதற்கு இவர்கள் படும் பாடு என்பது மிக மிக அதிகமாக இருக்கும்.இவர்களை தொழிலில் வீழ்த்துவதற்கு என்றே சில பேர் சில கூட்டம் எப்போதுமே இருக்கும்.

மேலும் இவர்கள் வாழ்க்கையில் சம்பாதிக்கும் பணத்தை இவர்களின் மனைவியிடத்தில் கொடுத்தார்கள் என்றால் இவர்கள் மனைவி அந்த பணத்தை அடுத்தவர்களிடம் கொடுத்து ஏமாந்து விடுவார்கள்.
இல்லையென்றால் ஏதேனும் ஒரு விஷயத்தில் இவர்கள் மனைவி அந்த பணத்தை போட்டு இழந்து விடுவார்கள்.இவர்கள் வாழ்க்கையில் சம்பாதிக்கின்ற பணத்தை மனைவியிடத்தில் கொடுத்தார்கள் என்றால் இவர்கள் மனைவியால் அந்த பணத்தை சேமித்து வைக்க முடியாது.

அதேபோன்று இவர்கள் ஒருவேளை பெண்ணாக இருந்தார்கள் என்றால் கணவர் மூலமாகவும் கணவர் உடைய சொந்தங்கள் உறவுகள் மூலமாகவும் வாழ்க்கையில் தேவையில்லாத கடன் பிரச்சனைகள் சண்டைகள் ஏமாற்றங்கள் வம்பு வழக்கு போட்டிகள் பொறாமைகள் எதிரிகள் சத்துக்கள் போன்ற பிரச்சனையில் இவர்களுக்கு வாழ்க்கையில் கண்டிப்பாக இருக்கும்.

இவர்கள் கணவர் உடைய குடும்ப உறவினர்களிடமிருந்து பணத்தை கடன் வாங்கினார்கள் என்றால்
பிறகு அந்தக் கடனை அடைக்க முடியாமல் இவர்களுக்கும் கணவர் உடைய குடும்ப உறவினர்களுக்கும் இடையில் தேவையில்லாத சண்டைகள் ஏமாற்றங்கள் வம்பு வழக்கு கோர்ட்டு கேஸ் போன்ற பிரச்சனையில் இவர்களுக்கு ஏற்படும்.

இவர்களுக்கு கணவர் மூலமாகவும் கணவர் உடைய சொந்தங்கள் குடும்ப உறவினர்கள் மூலமாகவும் கடன் பிரச்சனைகள் ஏமாற்றங்கள் சண்டைகள் வம்பு வழக்கு போன்ற பிரச்சனைகள் இவர்களுக்கு வாழ்க்கையில் கண்டிப்பாக வரும்.கணவர் மூலமாகவே கணவர் உடைய சொந்தங்கள் உறவினர்கள் மூலமாகவே இவர்களுக்கு வாழ்க்கையில் போட்டி எதிரிகள் பெறாமைகள் சத்துருக்கள் உருவாகுவார்கள்.

மேலும் இவர்கள் வாழ்க்கையில் சம்பாதிக்கும் பணத்தை இவர்களின் கணவர் இடத்தில் கொடுத்தார்கள் என்றால் இவர்கள் கணவர் அந்த பணத்தை அடுத்தவர்களிடம் கொடுத்து ஏமாந்து விடுவார்கள்.
இல்லையென்றால் ஏதேனும் ஒரு விஷயத்தில் இவர்கள் கணவர் அந்த பணத்தை போட்டு இழந்து விடுவார்கள்.இவர்கள் வாழ்க்கையில் சம்பாதிக்கின்ற பணத்தை கணவர் இடத்தில் கொடுத்தார்கள் என்றால் இவர்கள் கணவரால் அந்த பணத்தை சேமித்து வைக்க முடியாது.

மேலும் ஒருவேளை இவர்கள் சொந்தமாக தொழில் செய்கின்றார்கள் என்றால் தொழில் சார்ந்த விஷயங்கள் மூலம் வாழ்க்கையில் ஒரு அசிங்கத்திற்கும் அவமானத்திற்கும், தர்ம சங்கடத்திற்கும்,ஏமாற்றத்திற்கும் இவர்கள் ஆளாகி இருப்பார்கள் அல்லது ஆளாகுவார்கள்.

தொழில் சார்ந்து இவர்களுக்கு சூது மணப்பான்மை போன்று எண்ணங்கள் குணங்கள் இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.அடுத்தவர்களுடைய பேச்சைக் கேட்டு இவர்கள் ஏதாவது ஒரு தொழிலை கண்மூடித்தனமாக செய்து பிறகு அந்த தொழிலில் நஷ்டங்கள் ஏமாற்றங்கள் இழப்புகள் இவர்களுக்கு ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் இவர்களுக்கு வாழ்க்கையில் கண்டிப்பாக வரும்.

மற்றவர்கள் இவர்கள் இடத்தில் அடிக்கடி வந்து நீ அந்த தொழில் செய்தால் என்ன, இந்த தொழில் செய்தால் என்ன,தொழிலில் இதுபோன்று மாற்றம் செய் அடுத்தவர்கள் இவர்களை தேவையில்லாமல் உசுப்பேத்திக் கொண்டே இருப்பார்கள் அல்லது சீண்டிக் கொண்டே இருப்பார்கள்.
தொழில் சார்ந்த அடுத்தவர்கள் இவர்களை மூளைச்சலவை (brainwashing)செய்ய பார்ப்பார்கள்.

அடுத்தவர்களின் பேச்சைக் கேட்டு இவர்கள் தவறான தொழிலை செய்து பிறகு அதனால் இவர்களுக்கு தேவையில்லாத நஷ்டங்கள் இழப்புகள் பிரச்சனைகள் என்பது இவர்களுக்கு வாழ்க்கையில் கண்டிப்பாக ஏற்படும்.தவறான பாதையில் தவறான செயல்பாடுகளை செய்து தொழில் செய்ய வேண்டும் என்ற சூதுமனப்பான்மையில் இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்.
அதாவது நேர்மையாக தொழில் செய்து வெற்றி பெற வேண்டும் என்று ஆசைகள் இவர்களுக்கு வராது.

இந்த இயற்கை பிரபஞ்சம் இவர்களை என்ன செய்யும் என்றால் தொழில் சார்ந்த விஷயங்களில் தவறான வழிகளையும் தவறான செயல்பாடுகளையும் செய்து வெற்றி பெற இந்த பிரபஞ்சமே இவர்களுக்கு வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் கொடுத்து இவர்களை கடைசியில் ஏமாற்றி விடும்.

இயற்கை என்ன செய்ய வேண்டும் என்றால் இவர்களை தவறான பாதையில் தவறான வழிகாட்டுதலுடன் தொழில் செய்ய வைத்து பிறகு இவர்களை மிகப்பெரிய பிரச்சனைகளை சிக்கல்களில் சிக்க வைத்து விடும்.
பிறகு தேவை இல்லாத தேவையற்ற அசிங்கத்திற்கும் அவமானங்களுக்கும் வம்பு வழக்கு போட்டு கேஸ் போன்ற பிரச்சனைகளுக்கும் இவர்கள் ஆளாக வேண்டியிருக்கும்.

அதாவது தவறான வழிகளிலும் தப்பான முறைகேடுகளிலும் இவர்களை தொழில் செய்ய வைத்து பிறகு நல்ல லாபத்தையும் வருமானத்தையும் முதலில் இவர்களுக்கு கொடுத்து கடைசியில் இந்த இயற்கை பிரபஞ்சம் இவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்றால் இவர்கள் எந்த வழியில் எந்த முறைகேடு செய்து தொழிலில் சம்பாதித்தார்கள் என்பதை எல்லாருக்கும் தெரியப்படுத்தி விடும்.

பிறகு அதனால் இவர்களுக்கு வாழ்க்கையில் தேவை இல்லாத அசிங்கங்கள் அவமானங்கள் இழப்புக்கள் கஷ்டங்கள் வம்பு வழக்கு போன்ற பிரச்சனைகளை இந்த பிரபஞ்சம் இயற்கை இவர்களுக்கு கொடுத்து விடும்.

மேலும் ஒருவேளை இவர்கள் உத்தியோகத்தில் இருந்தார்கள் என்றால் உத்தியோகம்(job) சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இவர்களுக்கு இருக்கும்.அதாவது படித்த படிப்புக்கு ஏற்றவாறு உத்தியோகம் கிடைக்காமல் இருப்பது அல்லது கிடைத்த உத்தியோகத்தில் வேலைச்சுமை மிக அதிகமாக இருப்பது. ஒரு நிறுவனத்தில் இவர்களால் தொடர்ந்து வேலை செய்யவே முடியாமல் இருப்பது.இதுபோன்ற ஏதாவது ஒரு பிரச்சினை இவர்களுக்கு இருக்கும்.

முதலில் இவர்களுக்கு உத்தியோகம் என்பது கிடைக்காது கிடைத்தாலும் இவர்கள் படித்த படிப்பிற்கும் பார்க்கும் வேலைக்கும் சம்மந்தமே இல்லாத உத்தியோகம் வேலை தான் இவர்களுக்கு கிடைக்கும்.அல்லது ஒரு நிறுவனத்தில் இவர்களால் தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் இருக்கும்.

உத்தியோகத்தில் இவர்களுடன் வேலை செய்யும் சக ஊழியர்கள் அடிக்கடி தேவையில்லாமல் இவர்களின் சுயமரியாதையும் சுய கௌரவத்தையும் சீண்டிக் கொண்டே இருப்பார்கள்.
அதாவது இவர்களுக்கு கோபத்தையும் எரிச்சலையும் அடிக்கடி மற்றவர்கள் ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

மேலும் இவர்கள் சுயமரியாதைக்கு அதிகமாக வாழ்க்கையில் இவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள் யாராவது இவர்களின் சுயமரியாதை சீண்டினார்கள் என்றால் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை எதிர்த்து கேள்வி கேட்க கூடிய தைரியம் அந்தப் பக்குவம் இவர்களுக்கு இருக்கும்.

இதன் காரணமாகவே இவர்கள் உத்தியோகத்தை விட்டு வெளியே வந்துவிடுவார்கள்.இவர்களால் உத்தியோகத்தில் தொடர்ந்து நிலைத்திருக்கவேமுடியாது.
உத்தியோகம் வேலை சம்பந்தப்பட்ட பேச்சு எடுத்தாலே இவர்களுக்கு கோபம் ஆக்ரோஷம் ஆவேசம் மிக அதிகமாக வரும்.மற்றவர்களை காட்டிலும் உத்தியோகத்தில் இவர்களுக்கு தான் வேலை சுமை,வேலை அழுத்தம் மிக அதிகமாக இருக்கும்.

மேற்கொண்டு யாரெல்லாம் கும்ப ராசி அல்லது கும்ப லக்னத்தில் பிறந்திருக்கின்றீர்களோ நீங்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி நீங்கள் இந்த பதிவில் நான் குறிப்பிட்டுள்ள விஷயங்களை உங்களுடைய நடைமுறை வாழ்க்கையில் பொருத்திப் பாருங்கள் எல்லாம் மிகச் சரியாக இருக்கும்.
No comments:
Post a Comment