மகாபாரத யுத்தத்தில், தன் மகன்
அபிமன்யு சக்ரவியூகத்தில் மாட்டிக் கொண்ட பொழுது, பாண்டவர்கள் அவனுக்கு உதவப் போக முடியாதபடி முன்பு சிவனாரிடம் பெற்ற வரத்தைக் கொண்டு, தடுத்தான் ஜயத்ரதன். இவன் கௌரவர்களின் தங்கை துர்சலையின் கணவன்.
பாண்டவர்களின் வனவாசத்தின் போது பாஞ்சாலியைக் கவர்ந்துச் செல்ல முயன்றான் ஜயத்ரதன். எனவே பாண்டவர்களால் துரத்திப் பிடிக்கப்பட்டு, மொட்டையடித்து ஐந்து குடுமிகளை வைத்து துரத்தியடிக்கப்பட்டான். இதனால் வஞ்சம் கொண்ட ஜயத்ரதன், பாண்டவர்களை வெல்ல வேண்டும்! எனச் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் இருந்தான். சிவனாரும் தோன்றி, அர்ஜுனனுக்குப் பாசுபதத்தை வழங்கியுள்ளேன்! பாசுபதம் வைத்திருப்பவன் எனக்குச் சமமானவன். எனவே அர்ஜுனனை, என்னைத் தவிர வேறு யாராலும் வெல்ல முடியாது! நீ ஒருநாள் போரில் பிற பாண்டவர்களை வெல்வாய்! என வரமளித்தார்
சிவனார். இவ்வர பலத்தாலேயே அர்ஜுனன் இல்லாத வேளையில் சக்ரவியூகத்தில் மாட்டிக் கொண்ட அபிமன்யுவைப் பிற பாண்டவர்கள் காப்பாற்ற முடியாதபடி தடுத்துவிட்டான் ஜயத்ரதன்.
தனியே மாட்டிக்கொண்ட பதினாறு வயது பாலகனும், திருமாணமாகிச் சில காலமே ஆனவனுமான அபிமன்யுவை ஒன்பது மகாரதர்கள் சூழ்ந்து நின்று கொன்றனர். மாவீரன் கர்ணனோ, அபிமன்யுவின் முன் வர பயந்துக் கொழையென, பின்னால் மறைந்து நின்று அவனது அம்பறாதூணியைக் கிழித்து அம்புகள் கீழே விழும்படிச் செய்தான். இதனால் போரிட ஆயதங்களே இல்லாத நிலையில், ஓர் உடைந்த வாளையாவது தானமளி! கர்ணா! கடைசிவரை வீரனாகப் போரிட்டே சாகிறேன்! என்ற அபிமன்யுவிற்குத் *தானமளிக்க மறுத்தான் கொடை வள்ளல் #கர்ணன்.
இத்தனைக்கும் போருக்கு முன்பே பாண்டவர்கள், தன் சகோதரர்கள்!என்ற உண்மையைத் தெரிந்துக் கொண்டவன்! கர்ணன். பின்னர் உடைந்தத் தேர்ச்சக்கரத்தை வைத்து போரிட்ட அபிமன்யுவை, கர்ணன், சகுனி, துரியோதனன், துச்சாதனன், அஸ்வத்தாமா, துரோணர், கிருபர், ஜயத்ரதன் மற்றும் பிற கௌரவர்கள் சூழ்ந்து நின்று அதர்மமாகக் கொன்றனர்.
வஞ்சகமாக அர்ஜுனனைப் போர்களத்தைவிட்டு அகற்றிவிட்டு
அவனைத் தவிர பிறர் அறியாதச் சக்கரவியூகத்தை அமைத்து, யுதிஷ்டிரரைக் கைது செய்ய திட்டமிட்டார்! தளபதி துரோணர். பீஷ்மர் வீழ்ந்ததுமே கௌரவர்களின் பக்கமிருந்தச் சிறிது நேர்மையும் விடைப்பெற்றுக் கொண்டது. தன் பெரியப்பாவைக் காப்பாற்ற தன்னுயிரை இழந்தான் #மாவீரன்_அபிமன்யு.
அர்ஜுனனை வஞ்சகமாக போர்க்களத்தில் இருந்து எதிர் திசையில் வேறு சிலர் அவனுடன் வலுச்சண்டையிட்டு ( துரியோதனனின் திட்டப்படி) போர்க்களத்தை விட்டு நெடுந்தொலைவு அழைத்து சென்றிருந்தனர். கிருஷ்ணர் தடுத்தும் தேரை ஊட்டுங்கள் பரந்தாமா! என்னைப் போர்க்கு அழைப்பவர்களை வதம் செய்து விட்டே முக்கிய போரை கவனிப்பேன்! என்று போர்க்களத்தை விட்டு நெடுந்தோலைவு சென்று போரிட்டு கொண்டிருந்தான் அர்ஜுனன் . பின்னர் அவர்களை வதம் செய்துவிட்டு திரும்பிய பிறகே நடந்ததை அறிந்தான் அர்ஜுனன்.
போர் முடிந்துப் பாசறைக்கு வந்த அர்ஜுனன், மகனின் சடலத்தையும் கர்ப்பவதியாக இருக்கும் அவனது இளம் மனைவி உத்தரையையும் கண்டு தாளாதத் துயரத்தில் மூழ்கினான். தன் மகனுக்கு உதவ யாரும் வராதபடி தடுத்த, ஜயத்ரதனை நாளை சூரிய அஸ்தமனத்திற்குள் கொன்றுவிடுவேன்! இல்லாவிடில் நான் தீயில் விழுந்து உயிரை விடுவேன்! எனச் சபதம் செய்தான்! அர்ஜுனன்.
அர்ஜுனன் மாண்டால் போர் முடிந்துவிடும்! என நினைத்தத் துரியோதனன், தன் மைத்துனன் ஜயத்ரதனை மாபெரும் படையின் நடுவே மிகப் பாதுகாப்பாக வைத்தான். சூரிய அஸ்தமனத்திற்கு முன்வெளியே வந்துவிடாதே! என மறைந்திருக்கச் செய்தனர்! #கௌரவர்கள். மாபெரும் சேனையினரும், துரியோதனன், கர்ணன் போன்றோரும் அவனுக்கு பாதுகாவலாக இருந்தனர். காலையிலிருந்தே போரிட்டு, படைகளை அழித்தும், ஜயத்ரதனை நெருங்கவும் முடியவில்லை! காணவும் முடியவில்லை! அர்ஜுனனால்.
என்ன இது கிருஷ்ணா..? சூரியன் அஸ்தமிக்கும் நேரமாகிறதே! ஜயத்ரதனை எப்படிக் கொல்வது? என்றான் அர்ஜுனன். எதையும் யோசியாமல் கால நேரத்தை முடிவசெய்து, உன்னை யார் சபதம் செய்யச் சொன்னது? எனக் கடிந்துக் கொண்டார்! கிருஷ்ணர். பகவானே! நீயே சரணம்! எப்படியாவது உதவு! என்றான் பார்த்தன்.
பகவான், தனது
சக்ராயுதத்தை ஏவி, சூரியனை மறைத்தார். எங்கும் இருள் சூழ, சூரியன் அஸ்தமனமானான்! என ஆனந்தமாகக் கூச்சலிட்டனர்! கௌரவர்களும், சகுனி, கர்ணன் போன்றோரும். இதைக் கேட்ட #ஜயத்ரதன் பெரும் மகிழ்வோடு,
சூரியன் அஸ்தமித்து விட்டான்! இனி பயமில்லை! அர்ஜுனன் தீக்குளித்து விடுவான்! என வெளியே வந்தான்.
அர்ஜுனனை நெருங்கி வந்து கேலி பேசிய ஜயத்ரதனைப் பார்த்து புன்னகைத்தவாறே, சக்ராயுதத்தை அகற்றினார்! மாயக்கண்ணன்.
விஜயா! ஜயத்ரதன் தலையை ஓர் அம்பால் வீழ்த்தி, தலை கீழே விழாது, அவனது தந்தையின் மடியில் தள்ளு! எனறார் கிருஷ்ணர். ஜயத்ரதனுடைய தந்தை #விருத்தட்சரன். இவன் தவம்செய்து பெற்ற மகனே ஜயத்ரதன். இவன் தன் மகனின் தலையை யார் கீழே தள்ளுகிறானோ, அவனது தலை நூறு சுக்கலாகி வெடிக்கட்டும்! என்று தவமியற்றிக் கொண்டிருந்தான்.
இந்த விபரத்தை அர்ஜுனனுக்கு சொல்லி "உன்னால் அறுபட்டு இந்தத் தலை கீழே விழுந்தால், உன் தலை வெடித்து விடும்! அதனால் தொலைவில் தவம் செய்யும் விருத்தட்சரனின் மடியில் அந்தத் தலையைத் தள்ளு! என்றார் கிருஷ்ணர். அர்ஜுனனும் அப்படியே செய்ய, கண்களை மூடி தவம் செய்துக் கொண்டிருந்த விருத்தட்சரன், என்னவோ எனப் பயந்து அதைக் கீழே தள்ள, அவனது தலை வெடித்துச் சிதறியது.
நாம் என்னத் தான் *சூழ்ச்சி செய்தாலும், சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும், யாரையும் *வஞ்சகத்தால் வீழ்த்தி விட இயலாது. #அனைவரின்_வாழ்க்கையையும் #நடத்தி_வைப்பவனும், அதைத் தீர்மானம் செய்வதும், #பகவான்_தான். அதனால் தமது பாரங்களையெல்லம், பகவானிடம் ஒப்புவித்துவிட்டு, "பகவானே! உன் சித்தம்.! எனக்கு எது நல்லதோ அதைச் செய்! என்று சொல்லி, அர்ஜுனனைப் போல, அந்தப் பரந்தாமனைச் சரணடையவேண்டும். நம்மை எப்படியாவது காப்பாற்ற வேண்டியது பகவானின் கடமை! பகவான் நம்மைக் காப்பார்.
*இதில் கவனிக்க வேண்டிய குறிப்பு என்னவென்றால் #கிரகண_நாட்களில் #போரை_நடத்தமாட்டார்கள்; எனவே #சூரியகிரகணம்இல்லாதநாளிலேயே இந்த அதிசயம் நிகழ்ந்தது! என்பது முக்கியமாகும். கௌரவர்களே இதைச் சொல்லி பின்னர் புலம்பினர்! எவ்வாறு சற்று நேரம் சூரியன் மறைந்தான் என?.
எனவே இறைவன் நினைத்தால் நடக்க இயலாதவற்றையும் நடத்திக் காட்டுவான். மாயக்கண்ணனால் முடியாததும் உண்டோ? இறைவனை நம்பினோர் கைவிடப்படார். கணநேரத்தில் எதிரிகளை துவம்சம் செய்து மாயாஜால வித்தையைப் போல அனைத்தையும் நலமாக நிறைவேற்றி வைப்பான் அந்தப் பரந்தாமன்_மாதவன். 

No comments:
Post a Comment