குதிகால் மற்றும் கால் பாதம் சுற்றிலும் வெடிப்பு இருப்பவர்கள் கவனத்திற்கு....
குதிகால் வெடிப்பு ஒரு பிரச்சினையா...இருந்தா crack cream வாங்கி apply பண்ணிட்டு போய்ட்டே இருக்க வேண்டியதுதான்....
அப்படீன்றவங்க தயவு செய்து அப்படியே போய்டுங்க....படிக்காதீங்க....
இவ்வாறு கூறுவதற்குக் காரணம், பெரும்பாலானோர் பாத வெடிப்பிற்கான மூல காரணத்தைத் தெரிந்து, அதை சரிபடுத்திக் கொள்ள முன்வராமல், வெளிபூச்சுகளை மட்டும் பயன்படுத்திக் கொண்டே இருப்பதுதான். இது தற்காலிக தீர்வு மட்டுமே. சில நேரங்களில் அதுவும் கிடைக்காது. காரணம் தெரிந்துகொண்டால், பூச்சுகளே தேவை இல்லாமல் சரியாகிவிடும்.


பொதுவான முதல் காரணம்......உடலில் நீர்ச்சத்து பற்றாக் குறை

இதற்கு, நீர்ச்சத்துள்ள பந்தல் வகைக் காய்களை, பழங்களை தினசரி உணவில் சேர்ப்பது, குறைந்த பட்சம் 2.5 லிட்டர் தண்ணீர் குடிப்பது, கஞ்சி, மோர், பழச்சாறுகள், சூப் போன்றவற்றை தினமும் கட்டாயமாக்க வேண்டும்.
வெயில் காலத்தில் கிடைக்கும் நுங்கு, தர்பூசணி, வெள்ளரி, இளநீர் போன்றவையும் மிகவும் நல்லது.


நோய்நிலை - இரண்டாவது காரணம்.....கட்டுப்பாடற்ற நீரிழிவு நுண்ணிய இரத்த நாளங்களைப் பாதிக்கும் neuropathy இருந்தால். நம் கவனத்தில் வாராத அளவிற்கு கால் மற்றும் பாதங்களில் உலர் தன்மை ஏற்படுத்திய, வெடிப்புகளை உண்டாக்கி, தொற்றும் உண்டாக்கும். அதற்கான முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிக உடல் எடை

இதற்கு உடல் எடை குறைப்பு கவனம் செலுத்தி, உடற்பயிற்சிகள் செய்து, உணவுக் கட்டுப்பாடு பின்பற்றி, வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற உடல் எடைக்கு வர வேண்டும்.


மூன்றாவதாக.....தைராய்டு பிரச்சினை

இதற்கு, என்ன குறைபாடு ( பெரும்பாலும் hypothyroidism இதுபோல் ஏற்படுத்தும்) என்று கண்டறிந்து, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.


சில நேரங்களில், இறுக்கமான ஷூ அல்லது செருப்பு, தரமற்ற காலணிகள், உடலுக்கு ஏற்றுக்கொள்ளாத பொருட்களில் தயாரிக்கப்பட்ட காலணிகள் அணிவதும் குதிகால் வெடிப்பு ஏற்படுத்தலாம். அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒவ்வொன்றிற்கும் ஏற்றாற்போல் சிகிச்சை தேவை.
இவை தவிர்த்து....பொதுவாகவே..

குளிக்கும்போது, கால், விரல் இடுக்குகள், பாதம் சுற்றியும், குதி கால் போன்றவற்றிற்கும் நேரம் ஒதுக்கி, நன்றாக அழுக்கு நீங்குமாறு தேய்த்துக் கழுவ வேண்டும். அதற்காக இருக்கும் கற்கள் கூட உபயோகப் படுத்தலாம்.

வாரம் இரு முறையாவது, உப்பும், எலுமிச்சை சாறும் கலந்து வெதுவெதுப்பான நீரில் கால் பாதங்களை 15 வைத்திருந்து கழுவி எடுக்கவும். எப்சம் உப்பு பயன்படுத்தியும் பாதங்களைக் கழுவலாம்.

தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சிறிதளவு பாதம், விரல் இடுக்குகள், குதி கால் என்று அனைத்துப் பகுதிகளிலும் தேய்த்து மசாஜ் செய்து விடவேண்டும்.
No comments:
Post a Comment