அஷ்டஐஸ்வரியங்களும், எதிரி வசியமும், சகல காரிய சித்திகளும் அருளும் அஸ்வரூடா அன்னை வழிபாடு.

அஸ்வரூடா தாயை வணங்கினால் அகிலமெல்லாம் ஆளாளலாமென்று பெரியோர்களால் கூறப்படுகிறது.

ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரி தேவி அஸ்வரூதா தேவியை தன் கையில் இருந்த
"பியாச பானம்" மூலம் உருவாக்கினாள் என்று கூறப்படுகிறது.

அவள் எப்பொழுதும் தன் குதிரையில் ஏறி குதிரைப் படைக்கு தலைமை தாங்குகின்றவளாகின்றபடியால்
அவள் சவாரி செய்யும் அந்த குதிரையின் பெயர் "அபராஜிதா" என்று அழைக்கப்படுகிறது. அதாவது "வெல்ல முடியாதது" அல்லது யாராலும் வெல்ல முடியாது என்று பொருள்.

நமது கண்கள் போன்ற ஐந்து உடல் புலன்கள் இந்த குதிரை.இந்தக் குதிரையில் சவாரி செய்யும் தேவி நம் மனசு அல்லது மனதைக் குறிக்கிறது. இவ்வாறு அவள் இந்த பிரபஞ்சத்தில் மில்லியன் கணக்கான மனங்களைக் கட்டுப்படுத்துகிறாள் என்று சொல்லப்படுகின்றது.

குறிப்பாக இந்த தேவியின் வழிபாடு நம் மனதைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் நமது உடல் உணர்வுகளையும் கட்டுப்படுத்துகிறது.

"உலகைக் காக்கும் அம்பிகையின் சக்தியில் இருந்து வெள்ளை குதிரை மீது அமர்ந்தபடி வெளிவந்துள்ள அஸ்வாரூட தேவியே, உன்னை நான் மனதார தியானிக்கிறேன். நீயே என்னுடன் இருந்துகொண்டு, அலைபாயும் என் மனத்தைக் கட்டுப்படுத்தும் சக்தியை கொடுத்து என்றும் அமைதியோடு இருக்க எனக்கு அருள் புரிய வேண்டும். தேவியே உன்னிடமே நான் என் மனதை முழுமையாக சரணடைய வைக்கின்றேன்"

இப்படி மனதார இந்த தாயை போற்றி வணங்கினால் மனம் அமைதியாகும்.
அதைப் போலவே அஸ்வாரூடா படத்தை வீட்டு வாயிலில் காவல் தெய்வமாக மாட்டி வைத்தால் வீட்டில் தீய சக்திகள் நுழைய முடியாது, காரணம் அஸ்வாரூடா எதிரில் வரும் தீய சக்திகளின் அனைத்து சக்திகளும் அவள் கையில் உள்ள தண்டத்தில் அடங்கி விடுவதினால் தீய சக்திகளினால் வீட்டில் நுழைந்து தீமைகளை விளைவிக்க முடியாது.

அப்படி நுழைந்தாலும் வீட்டில் உள்ளவர்களை அவற்றினால் ஒன்றும் செய்ய இயலாது போய்விடும்.

இதனால்தான் இன்றுள்ள நிலையில் அமைதி கிடைக்க பல காலம் மறைந்து வந்திருந்த அஸ்வாரூட யாகங்கள் மற்றும் ஹோமங்கள் மீண்டும் அங்காங்கே நடக்கத் துவங்கி உள்ளன.கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வைகோம் மகாதேவர் ஆலயத்தில் அஸ்வாரூடையின் யாகமும், ஹோமமும் இன்றளவும் நடைபெற்து வருகின்றது.

இந்த தாயை நினைத்து தியானம் செய்யலாம் விருப்பம் உள்ளவர்கள்
இதோ இந்த சுலோகத்தை மனதில் சொல்லலாம்.
பூஜை முறை.
*****************

அதிகாலையில் நதி குளம் போன்ற இடத்தில் குளித்து பச்சை ஆடை அணிந்து வடக்கு முகமாக மாம்பலகையில் அமர்ந்து பதிவில் கொடுத்துள்ள யந்திரத்தை வெள்ளி தகட்டில் வரைந்து, பால், தேன், பஞ்சாமிர்தம், கரும்புசாறு, இளநீர், திருமஞ்சன திரவியம் போன்றவற்றால் அபிஷேகம் செய்து
ஒரு வில்வபலகையில் கிழக்கு முகமாக யந்திரத்தை வைத்து அதற்கு
சந்தனம் குங்குமம், ஜவ்வாது, பன்னீர், புனுகு, பச்சைக்கற்பூரம் போன்றவற்றை குழத்து வைத்து முல்லைப்பூ போட்டு
அதற்கு முன் ஒரு வாழையிலையில்
தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு,
வடை, பாயசம், பால், சர்க்கரை
போன்ற வற்றை வைத்து
தீபதூபம் கொடுத்து சாம்ரானி புகை போட்டு வணங்கி

"பாலாத்கயுத சத்பிரபாம் லோலாம்பு மாலாம்குலாம் மாலாம் ஸ்ரம்
ததிதிம் மனோகர தனும்மன் மிஸ்மிதோ துன்முகின் மன்னம் மன்ன உபேயுஷம் வரையுதும் சம்பும ஜெகத்மோனீயம் வந்தேதேவ முனீந்திரவர்னிதபதாம் இஷ்டார்த்ததாம் பார்வதியே"
இதை மூன்று முறை ஜெபித்து பிறகு
மூல மந்திரம்

"திரும் திருவண்ய பணாய நம,

திரீம் ஷோபண்ய பணாய நம,

கிலீம் வசியகரண்ய பணாய நம,

புலூம் ஆகிருஷண்ய பணாய நம,

சம்சம் மோகண்ய பணாய நம,

ஆம் ஹ்ரீம் க்றோம் ஏஹி ஏஹி
பரமேஸ்வரி ஆகிருஷாய ஆகிருஷாயா ஸ்வாஹா."

இந்த மந்திரத்தை குருமுகமாக உபதேசம் பெற்று தினம் 108 சொல்லவும்.

அஷ்டஐஸ்வரியங்களும், எதிரி வசியமும், சகல காரீய சித்திகளும், சேராதவர்களை சேர்த்து வைக்கலாம், ஆடாதவரையும் ஆட்டிவைக்கலாம்
No comments:
Post a Comment