Wednesday, 24 December 2025

7-துலாம் ராசி அல்லது துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு

 


துலாம் ராசி அல்லது துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இருக்கக்கூடிய பொதுவான குணங்கள்,பிரச்சனைகள்
திறமைகள்,கஷ்டங்கள்,தர்ம
சங்கடங்கள்,ஏமாற்றங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் நாம் மிக தெளிவாக பார்க்கலாம்.
🌹ஒவ்வொரு ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் பொதுவாக சிலவிதமான எண்ணங்கள் திறமைகள் பிரச்சனைகள் தர்மசங்கடங்கள் கஷ்டங்கள் என்பது இருக்கும்.அதன் வகையில் இந்தப் பதிவில் துலாம் ராசி அல்லது துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எந்த மாதிரியான பிரச்சனைகள் கஷ்டங்கள் குணங்கள் இருக்கும் என்பதை பார்க்கலாம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
♦யாரெல்லாம் துலாம் ராசி அல்லது துலாம் லக்னத்தில் பிறந்திருக்கின்றார்களோ இவர்கள் ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி. இவர்களால் வாழ்க்கையில் என்றைக்குமே சும்மா இருக்க முடியாது.ஏதேனும் ஒரு விஷயத்தை செயல்பாடுகளை இவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள்.எப்போதும் இவர்களால் சும்மா ஒரு இடத்தில் உட்கார முடியாது.எப்பொழுதுமே ஏதாவது ஒன்றை இவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள்.
♦அதேபோன்று இவர்கள் மூளை எப்போதுமே சும்மா இருக்காது ஏதேனும் ஒரு விஷயங்களை பற்றி இவர்கள் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள் யோசித்துக் கொண்டே இருப்பார்கள்.இவர்கள் மூளை என்றைக்குமே வெட்டியாக சும்மா இருக்காது.இவர்களின் மூளை மிகவும் வேகமாக செயல்படும் வேகமாக சிந்திக்க கூடிய யோசிக்க கூடிய அந்த ஆற்றல் அறிவு இவர்கள் மூளைக்கு மிக அதிகமாக இருக்கும்.
எப்பொழுதுமே இவர்கள் வேகமாக செயல்படக் கூடியவர்கள் வேகமாக சிந்திக்கக் கூடியவர்கள்.
♦அதேபோன்று மனக்குழப்பங்கள் மனஸ்தாபங்கள் மன அழுத்தங்கள் மனவேதனைகள் இவர்களுக்கு எப்போதுமே மிக அதிகமாக இருக்கும்.எப்போதுமே இவர்கள் மனக்குழப்பத்திலேயே மனவேதனைகளிலேயே இருப்பார்கள்.ஒரு நிலையான மனம் நிலையான என்ன ஓட்டங்கள் சிந்தனைகள் எப்போதுமே இவர்களுக்கு இருக்கிறது தேவையில்லாத சிந்தனைகள் மனவேதனைகள் மனக்குழப்பங்கள் மனவலிகள் தான் இவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.
♦அடுத்தவர்களுக்கெல்லாம் ஒரு பிரச்சனை கஷ்டம் துக்கம் என்று வந்தால் இவர்களைப் போன்று அவர்களுக்கு அறிவுரை சொல்ல ஆலோசனை கொடுக்க யாராலும் முடியாது.எப்பேர்பட்ட கஷ்டம் துக்கம் பிரச்சனை கொண்டவர்களுக்கும், இவர்கள் அறிவுரை ஆலோசனைகள் கொடுத்தார்கள் என்றால் அவர்களுக்கு எல்லாம் அந்த கஷ்டம் துக்கம் பிரச்சினை போய்விடும்.
♦ஆனால் அதே பிரச்சனைகள் அதே கஷ்டம் துக்கம் இவர்களுக்கு வாழ்க்கையில் வந்தால் இவர்களுக்கு யாருமே அறிவுரை சொல்ல ஆலோசனை கொடுக்க யாரும் இவர்களுக்கு முன் வர மாட்டார்கள்.மனதளவில் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் இவர்கள்தான்
அதாவது தேவையற்ற மன அழுத்தங்களால் மன குழப்பங்களால் சிந்தனைகளால் இவர்களுக்கு அளவுக்கு அதிகமாக பிரச்சனைகள் கஷ்டங்கள் இவர்களுக்கு ஏற்படும்.
♦இவர்களை யாராலும் அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடியாது அதாவது இவர்களுடைய குணங்களை செயல்பாடுகளை எண்ணங்களை யாராலும் அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடியாது.
ஒரே மாதிரியான பேச்சுக்கள் எண்ணங்கள் செயல்பாடுகள் இவர்களுக்கு இருக்காது.
தினந்தோறும் இவர்களின் எண்ணங்கள் செயல்பாடுகள் பேச்சுக்கள் மாறிக் கொண்டுதான் இருக்கும்.
♦இவர்கள் என்றைக்குமே மற்றவர்களைப் போல வாழ விரும்பாதவர்கள் அதாவது செம்மறி ஆடு போன்று வாழக்கூடிய வாழ்க்கை முறைகள் அந்த வாழ்க்கை ,அந்த வாழ்க்கை பயணங்கள் இவர்களுக்கு வாழ பிடிக்காது.தனித்துவமாக செயல்படக்கூடிய சிந்தனைகள் கற்பனையில் யோசனைகள் செயல்பாடுகள் தான் இவர்களுக்கு வாழ்க்கையில் மிக அதிகமாக இருக்கும்.மற்றவர்களைப் போன்று நடைமுறை வாழ்க்கை இவர்களுக்கு வாழ பிடிக்காது.
♦இவர்களால் வாழ்க்கையில் ஒரு தெளிவான ஒரு முடிவை எடுக்க மாட்டார்கள் அதாவது எந்த ஒரு விஷயத்திலும் இவர்களால் அவ்வளவு எளிதாக ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியாது.தெளிவான ஒரு முடிவெடுக்க முடியாததுதான் இவர்களின் மிகப்பெரிய பிரச்சினை ஆகும்.இவர்களும் தன்னுடைய வாழ்கையில் எந்த ஒரு விஷயத்திலும் ஒரு தெளிவான ஒரு முடிவை எடுக்க மாட்டார்கள் அடுத்தவர்களையும் இவர்களுடைய வாழ்க்கையில் ஒரு தெளிவான முடிவெடுக்க இவர்கள் விட மாட்டார்கள்.
♦மேலும் ஒருவேளை இவர்கள் ஆண்களாக இருந்தார்கள் என்றால் இவர்களுக்கு தன்னுடைய மனைவியாலும் மனைவியுடைய குடும்ப உறவுகள் சொந்தங்களாலும் எந்த ஒரு உதவிகள் நன்மைகள் புரோஜனங்கள் ஆதாயங்கள் இவர்களுக்கு இருக்காது வராது.
♦அதாவது இவர்கள் தன்னுடைய மனைவியிடத்தில் எந்த ஒரு விஷயத்தை எதிர்பார்த்தாலும் ஆசைப்பட்டாலும் விருப்பப்பட்டாலும் அது வராது இவர்கள் ஆசைப்படும் எந்த ஒரு விஷயத்தையும் இவர்கள் மனைவியால் இவர்களுக்கு பெரிய அளவில் தர இயலாது.இதன் காரணமாக சில பேருக்கு திருமண வாழ்க்கையில் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் கஷ்டங்கள் வர வாய்ப்பு இருக்கின்றது.
♦இவர்கள் கால முழுவதும் தன்னுடைய மனைவியிடத்தில் எதை ஆசைப்பட்டாலும் அதனை இவர்கள் மனைவியால் இவர்களுக்கு தர இயலாது.திருமண வாழ்க்கை என்றைக்குமே இவர்கள் எதிர்பார்க்கும் படி இவர்களுக்கு நிம்மதியாக சுகபோகமாக இருக்காது.
♦இவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் தன்னுடைய மனைவிக்காகவும் மனைவியுடைய குடும்ப சொந்தங்கள் உறவுகளுக்காகவும் எவ்வளவுதான் உழைத்துக் கொட்டினாலும் கஷ்டப்பட்டாலும் சரி இவர்களுக்கு ஒரு பிரச்சனை கஷ்டம் வாழ்க்கையில் வந்தால் இவர்களுக்கு உதவி செய்ய மனைவியுடைய குடும்ப சொந்தங்கள் வரமாட்டார்கள்.
♦ஒருவேளை இவர்கள் பெண்களாக இருந்தார்கள் என்றால் இவர்களுக்கு தன்னுடைய கணவராலும் கணவருடைய குடும்ப உறவுகள் சொந்தங்களாலும் எந்த ஒரு உதவிகள் நன்மைகள் புரோஜனங்கள் ஆதாயங்கள் இவர்களுக்கு இருக்காது வராது.
♦அதாவது இவர்கள் தன்னுடைய கணவரிடத்தில் எந்த ஒரு விஷயத்தை எதிர்பார்த்தாலும் ஆசைப்பட்டாலும் விருப்பப்பட்டாலும் அது வராது இவர்கள் ஆசைப்படும் எந்த ஒரு விஷயத்தையும் இவர்கள் கணவரால் இவர்களுக்கு பெரிய அளவில் தர இயலாது.இதன் காரணமாக சில பேருக்கு திருமண வாழ்க்கையில் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் கஷ்டங்கள் வர வாய்ப்பு இருக்கின்றது.
♦இவர்கள் கால முழுவதும் தன்னுடைய கணவரிடத்தில் எதை ஆசைப்பட்டாலும் அதனை இவர்கள் கணவரால் இவர்களுக்கு தர இயலாது.திருமண வாழ்க்கை என்றைக்குமே இவர்கள் எதிர்பார்க்கும் படி இவர்களுக்கு நிம்மதியாக சுகபோகமாக இருக்காது.
♦இவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் தன்னுடைய கணவருக்காகவும் கணவருடைய குடும்ப சொந்தங்கள் உறவுகளுக்காகவும் எவ்வளவுதான் உழைத்துக் கொட்டினாலும் கஷ்டப்பட்டாலும் சரி இவர்களுக்கு ஒரு பிரச்சனை கஷ்டம் வாழ்க்கையில் வந்தால் இவர்களுக்கு உதவி செய்ய கணவருடைய குடும்ப சொந்தங்கள் வரமாட்டார்கள்.
♦இவர்கள் ஒருவேளை சொந்தமாக தொழில் செய்கின்றார்கள் என்றால் இவர்களுக்கு தொழில் சார்ந்த விஷயங்களில் நிலை இல்லாத தன்மை,நிலை அற்ற தன்மைகளை கொண்டதாக இருக்கும்.இவர்கள் சொந்த தொழில் இவர்களுடைய பெயரில் செய்கின்றார்கள் என்றால் தொழிலில் இவர்களுக்கு நிலையான வருமானம் என்பதே இருக்காது கிடையாது.ஆறு மாதம் தொழிலில் நல்ல லாபம் முன்னேற்றம் வருமானம் இருக்கும் பிறகு ஆறு மாதம் இவர்களுக்கு தொழிலில் வருமானம் லாபம் முன்னேற்றம் என்பது இருக்காது.
♦அதாவது 3 மாதம் தொழிலில் நல்ல வருமானம் இவர்களுக்கு வரும் பிறகு 3 மாதம் தொழில் இவர்களுக்கு வருமானம் ஏதும் வராது.அதாவது தொழில் இவர்களை போட்டு முழுவதுமாக குழப்பம்.ஒரே மாதிரியான வருமானம் தொழில் சார்ந்த விஷயங்களில் இவர்களுக்கு எப்போதுமே வாழ்க்கையில் இருக்காது.
♦மேலும் இவர்களுக்கு தொழில் சார்ந்த விஷயங்களில் அளவுக்கு அதிகமான பணவிரயங்கள் ,பண செலவுகள்,வெட்டி விரயங்கள், வெட்டிச் செலவுகள்,என்பது இவர்களுக்கு எப்போதுமே ஏற்பட்டு கொண்டே இருக்கும்.இவர்கள் என்றைக்குமே கூட்டுத் தொழில் (partnership business) செய்யவே கூடாது.இதுபோன்று இவர்கள் கூட்டுத் தொழில் செய்தார்கள் என்றால் அதன் மூலம் மிகப்பெரிய இழப்புக்குள் நஷ்டங்கள் ஏமாற்றங்கள் பண இழப்புகள் தான் இதற்கு வரும்.
♦மேலும் இவர்கள் ஒருவேளை உத்தியோகத்தில் வேலை செய்கின்றார்கள் என்றால் உத்தியோகத்தில் மூலமாக இவர்கள் வாங்கக்கூடிய சம்பள பணம் சம்பாதிக்கின்ற பணம் இவர்களுடைய விருப்பத்திற்காக ஆசைக்காக என்று இவர்களால் பெரிதாக அனுபவிக்க முடியாது.
அந்த பணத்தையும் இவர்களால் எதிர்பார்க்கும் படி சேமித்து வைக்க முடியாது.
♦மேலும் இவர்களுக்கு மருத்துவம் சார்ந்த விஷயங்கள் மூலமாகவும் சுப விரயச் செலவுகள் சார்ந்த விஷயங்கள் மூலமாகவும் வாழ்க்கையில் தேவையில்லாத கடன் பிரச்சினைகள் ஏமாற்றங்கள் சண்டைகள் வம்பு வழக்கு கோட்டு கேசு இதுபோன்ற பிரச்சனைகள் இவர்களுக்கு வாழ்க்கையில் கண்டிப்பாக ஏற்படும்.
♦மருத்துவம்(Medicine) சார்ந்த விஷயங்களின் மூலமாகவே இவர்களுக்கு வாழ்க்கையில் கடன் பிரச்சினைகள் ஏற்படும்.கடன் வாங்கி, சீட்டு எடுத்து loan எடுத்து இவர்கள் மருத்துவம் சார்ந்த செலவுகள் பார்க்கும் படியாயான நிலைமைகள் இவர்களுக்கு வாழ்க்கையில் கண்டிப்பாக ஏற்படும்.
♦பிறகு அதன் மூலமாக இவர்களுக்கு தேவையில்லாத கடன் பிரச்சனைகள் ஏமாற்றங்கள் வம்பு வழக்கு அடிதடி சண்டைகள் கோர்ட்டு கேஸ் இதுபோன்ற பிரச்சனைகள் இவர்களுக்கு கண்டிப்பாக வாழ்க்கையில் ஏற்படும்.
♦அதேபோன்று சும்மா இருக்கின்றோம் என்று வெட்டிச் செலவுகளுக்காக கடன் வாங்கி, சீட்டு எடுத்து, loan எடுத்து இவர்கள் செலவு செய்து பிறகு அந்த கடனை அடைக்க முடியாமல் அதனால் தேவையில்லாத பிரச்சனைகள் சண்டைகள் வம்பு வழக்கு ஏமாற்றங்கள் கோர்ட்டு கேஸ் போன்ற பிரச்சனைகள் இவர்களுக்கு கண்டிப்பாக வாழ்க்கையில் ஏற்படும்.
♦மேலும் இவர்களுக்கு சுப விரைய செலவுகள் மூலமாக வாழ்க்கையில் தேவையில்லாத கடன் பிரச்சனைகள் கண்டிப்பாக ஏற்படும்.சுப விரயச் செலவுகள் சார்ந்த விஷயத்திற்காக வாழ்க்கையில் இவர்கள் கடன் வாங்கி, சீட்டு எடுத்து, loan எடுத்து இவர்கள் செலவு செய்து பிறகு அந்த கடனை அடைக்க முடியாமல் அதனால் தேவையில்லாத பிரச்சனைகள் சண்டைகள் வம்பு வழக்கு ஏமாற்றங்கள் கோர்ட்டு கேஸ் போன்ற பிரச்சனைகள் இவர்களுக்கு கண்டிப்பாக வாழ்க்கையில் ஏற்படும்.
♦அதேபோன்று இவர்கள் என்றைக்குமே அம்மா பாசம் கொண்டவர் அம்மா சொல்லை மீறாதவர்கள்.தன்னுடைய வாழ்க்கையில் எக்காலத்திற்காகவும் தன்னுடைய அம்மாவை விட்டுக் கொடுக்காதவர்கள் அம்மா சொல்லை தட்டிக் கழிக்காதவர்கள்.
அளவுக்கு அதிகமான தாய் பாசம் கொண்டவர்கள் இவர்கள்தான்.
எந்த சூழ்நிலையும் அம்மாவை எதற்காகவும் இவர்கள் வாழ்க்கையில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
♦இவர்கள் மீது இவர்களின் அம்மா அளவுக்கு அதிகமான அன்பு பாசம் நேசத்தை வைத்திருப்பார்கள்.
அதாவது பிள்ளைகளை இவர்கள் அம்மா பிள்ளைகளாக பார்க்க மாட்டார்கள் எனக்கு எல்லாமே என்னுடைய குழந்தைகள் தான்
என்னுடைய பிள்ளைகள் தான் என்னுடைய உலகம் என்று தான் இவர்கள் அம்மா இவர்களை பார்ப்பார்கள்.அதாவது பெற்ற பிள்ளைகள் மீது அளவுக்கு அதிகமான அக்கறைகள் அரவணைப்பு என்பது என்றைக்குமே இவர்கள் அம்மாவிற்கு இருக்கும்.
♦அதேபோன்று இவர்களுடைய வாழ்க்கையில் இவர்களின் அம்மா எடுத்த எடுக்கிற எல்லாவிதமான விஷயங்களும் தலையீடுகளும் முடிவுகளும் அது இவர்களுக்கு என்றைக்குமே சாதகமாக அமைந்திருக்காது.பாதகமாக இழப்புகளில் பிரச்சனைகளில் தான் முடிந்திருக்கும்.
♦எந்த ஒரு விஷயங்களிலும் இவர்களுடைய அம்மா எடுக்கின்ற முடிவுகள் என்றைக்குமே இவர்களுக்கு நல்லதாக சாதகமாக முடிந்து இருக்காது பிரச்சனைகளில் இழப்புகளில் கஷ்டங்களில் தான் முடிந்திருக்கும்.அம்மாவின் உடைய தலையிட்டால் வாழ்க்கையில் நிறைய விஷயங்களில் இவர்களுக்கு தேவையில்லாத கஷ்டம் பிரச்சனை ஏற்பட்டிருக்கும்.
♦அம்மா சொல்படி எந்த ஒரு விஷயங்களையும் செயல்களையும் இவர்கள் கண்முடித்தனமாக செய்தார்கள் என்றால் அதனால் இவர்களுக்குத் தான் வாழ்க்கையில் இழப்புகள் கஷ்டங்கள் வரும்.அம்மா பாசத்தால் வாழ்க்கையில் நிறைய இழப்புகளை பிரச்சனைகளை கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் இவர்கள்தான்.
♦மேலும் இவர்களுக்கு அம்மா உயிருடன் இருக்க மாட்டார்.அதாவது சிறு வயதிலேயே தாயை இழப்பது,
இல்லையென்றால் அம்மா எடுத்த எடுக்கின்ற முடிவுகளால் வாழ்க்கையில் மிகப்பெரிய இழப்புக்களையும் பிரச்சனைகளையும் கஷ்டங்களையும் அனுபவிப்பது
இது போன்ற ஏதாவது ஒரு பிரச்சினை இவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கும்.
♦அதேபோன்று இவர்களுக்கு அம்மா மூலமாக அன்பு பாசம் நேசம் உதவிகள் பிரயோஜனங்கள் மிக அதிகமாக இருக்கிறது என்றால் இவர்களுக்கு மாமியார் மூலமாக பிரச்சனைகள் கஷ்டங்கள் சண்டைகள் ஏற்படும்.
அல்லது மாமியார் மூலமாக இவர்களுக்கு உதவிகள் நன்மைகள் புரோஜனங்கள் ஆதாயங்கள்
அன்பு பாசம் அதிகமாக இருக்கிறது என்றால் இவர்களுக்கு அம்மா மூலமாக தேவையில்லாத பிரச்சினைகள் இழப்புகள் கஷ்டங்கள் ஏற்படும்.இந்த இரண்டில் ஒன்றை தான் இவர்கள் வாழ்க்கையில் அனுபவிக்க முடியும்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌹மேற்கொண்டு யாரெல்லாம் துலாம் ராசி அல்லது துலாம் லக்னத்தில் பிறந்திருக்கின்றீர்களோ நீங்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி நீங்கள் இந்த பதிவில் நான் குறிப்பிட்டுள்ள விஷயங்களை உங்களுடைய நடைமுறை வாழ்க்கையில் பொருத்திப் பாருங்கள் எல்லாம் மிகச் சரியாக இருக்கும்.

No comments:

Post a Comment

ருத்ராட்சமும், விபூதியும் அணிந்தவன் ஒருபோதும் எமலோகம் செல்வதில்லை

  ருத்ராட்சமும், விபூதியும் அணிந்தவன் ஒருபோதும் எமலோகம் செல்வதில்லை ‘ருத்ராட்சமும், விபூதியும் அணிந்தவன் ஒருபோதும் எமலோகம் செல்வதில்லை. ஐஸ்வ...