மகரம் ராசி அல்லது மகரம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இருக்கக்கூடிய பொதுவான குணங்கள்,பிரச்சனைகள்
திறமைகள்,கஷ்டங்கள்,தர்ம
சங்கடங்கள்,ஏமாற்றங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் நாம் மிக தெளிவாக பார்க்கலாம்.

ஒவ்வொரு ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் பொதுவாக சிலவிதமான எண்ணங்கள் திறமைகள் பிரச்சனைகள் தர்மசங்கடங்கள் கஷ்டங்கள் என்பது இருக்கும்.அதன் வகையில் இந்தப் பதிவில் மகரம் ராசி அல்லது மகரம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எந்த மாதிரியான பிரச்சனைகள் கஷ்டங்கள் குணங்கள் இருக்கும் என்பதை பார்க்கலாம்.

யாரெல்லாம் மகர ராசி அல்லது மகர லக்னத்தில் பிறந்திருக்கின்றார்களோ இவர்கள் ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி.
இவர்களால் வாழ்க்கையில் என்றைக்குமே சும்மா இருக்க முடியாது. ஏதேனும் ஒரு விஷயத்தை செயல்பாடுகளை இவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள்.எப்போதும் இவர்களால் சும்மா ஒரு இடத்தில் உட்கார முடியாது.எப்பொழுதுமே ஏதாவது ஒன்றை இவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள்.

அதேபோன்று இவர்கள் மூளை எப்போதுமே சும்மா இருக்காது ஏதேனும் ஒரு விஷயங்களை பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள் யோசித்துக் கொண்டே இருப்பார்கள்.இவர்கள் மூளை என்றைக்குமே வெட்டியாக சும்மா இருக்காது.இவர்களின் மூளை மிகவும் வேகமாக செயல்படும் வேகமாக சிந்திக்க கூடிய யோசிக்க கூடிய அந்த ஆற்றல் அறிவு இவர்கள் மூளைக்கு மிக அதிகமாகஇருக்கும்.
எப்பொழுதுமே இவர்கள் வேகமாக செயல்படக் கூடியவர்கள் வேகமாக சிந்திக்கக் கூடியவர்கள்.

அதேபோன்று மனக்குழப்பங்கள் மனஸ்தாபங்கள் மன அழுத்தங்கள் மனவேதனைகள் இவர்களுக்கு எப்போதுமே மிக அதிகமாக இருக்கும்.எப்போதுமே இவர்கள் மனக்குழப்பத்திலேயே மனவேதனைகளிலேயே இருப்பார்கள்.ஒரு நிலையான மனம் நிலையான என்ன ஓட்டங்கள் சிந்தனைகள் எப்போதுமே இவர்களுக்கு இருக்கிறது தேவையில்லாத சிந்தனைகள் மனவேதனைகள் மனக்குழப்பங்கள் மனவலிகள் தான் இவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.

அடுத்தவர்களுக்கெல்லாம் ஒரு பிரச்சனை கஷ்டம் துக்கம் என்று வந்தால் இவர்களைப் போன்று அவர்களுக்கு அறிவுரை சொல்ல ஆலோசனை கொடுக்க யாராலும் முடியாது.எப்பேர்பட்ட கஷ்டம் துக்கம் பிரச்சனை கொண்டவர்களுக்கும், இவர்கள் அறிவுரை ஆலோசனைகள் கொடுத்தார்கள் என்றால் அவர்களுக்கு எல்லாம் அந்த கஷ்டம் துக்கம் பிரச்சினை போய்விடும்.

ஆனால் அதே பிரச்சனைகள் அதே கஷ்டம் துக்கம் இவர்களுக்கு வாழ்க்கையில் வந்தால் இவர்களுக்கு யாருமே அறிவுரை சொல்ல ஆலோசனை கொடுக்க யாரும் இவர்களுக்கு முன் வர மாட்டார்கள்.மனதளவில் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் இவர்கள்தான்
அதாவது தேவையற்ற மன அழுத்தங்களால் மன குழப்பங்களால் சிந்தனைகளால் இவர்களுக்கு அளவுக்கு அதிகமாக பிரச்சனைகள் கஷ்டங்கள் இவர்களுக்கு ஏற்படும்.

இவர்களை யாராலும் அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடியாது அதாவது இவர்களுடைய குணங்களை செயல்பாடுகளை எண்ணங்களை யாராலும் அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடியாது.
ஒரே மாதிரியான பேச்சுக்கள் எண்ணங்கள் செயல்பாடுகள் இவர்களுக்கு இருக்காது.
தினந்தோறும் இவர்களின் எண்ணங்கள் செயல்பாடுகள் பேச்சுக்கள் மாறிக் கொண்டுதான் இருக்கும்.

இவர்களால் வாழ்க்கையில் ஒரு தெளிவான ஒரு முடிவை எடுக்க மாட்டார்கள் அதாவது எந்த ஒரு விஷயத்திலும் இவர்களால் அவ்வளவு எளிதாக ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியாது.தெளிவான ஒரு முடிவெடுக்க முடியாததுதான் இவர்களின் மிகப்பெரிய பிரச்சினை ஆகும்.இவர்களும் தன்னுடைய வாழ்கையில் எந்த ஒரு விஷயத்திலும் ஒரு தெளிவான ஒரு முடிவை எடுக்க மாட்டார்கள் அடுத்தவர்களையும் இவர்களுடைய வாழ்க்கையில் ஒரு தெளிவான முடிவெடுக்க இவர்கள் விட மாட்டார்கள்.

மேலும் இவர்களுக்கு அம்மா மூலமாகவும் அம்மா உடைய சொந்தங்கள் உறவுகள் மூலமாகவும் வாழ்க்கையில் இவர்களுக்கு எந்தவிதமான உதவிகள் நன்மைகள் பயன்கள் பிரயோஜனம் இருக்காது.

இவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு பிரச்சனை கஷ்டம் துக்கம் என்று வந்தால் அம்மா மற்றும் அம்மா உடைய சொந்தங்கள் யாருமே இவர்களுக்கு அவ்வளவாக உதவி செய்ய முன்வர மாட்டார்கள்.இவர்கள் அம்மா மற்றும் அம்மாவுடைய சொந்தங்கள் உறவுகளிடத்தில் என்ன விருப்பப்பட்டாலும் ஆசைப்பட்டாலும் எதிர்பார்த்தாலும் அது இவர்களுக்கு வராது.அம்மா மற்றும் அம்மாவுடைய சொந்தங்கள் உறவுகளால் இவர்களுக்கு வாழ்க்கையில் எந்தவிதமான பிரயோஜனமும் இருக்காது.

மேலும் இவர்களால் "வீடு, சொத்து நிலங்கள்" இது சார்ந்த விஷயங்களை அனுபவிக்க கூடிய கொடுப்பினைகள் பிராப்தம் என்பது இவர்களுக்கு வாழ்க்கையில் எப்போதுமே கிடையாது.
இவர்கள் பெயரில் வீடு சொத்து நிலங்கள் இருந்தால் அது எவ்வளவு பண மதிப்பு போனாலும்,அதாவது எத்தனை லட்சத்திற்கு எத்தனை கோடிக்கு அந்த சொத்து வீடு நிலங்கள் மதிப்பு இருந்தாலும் அதனால் இவர்களுக்கு எந்த விதமான பிரயோஜனம் இருக்காது.

ஏனென்றால் இந்த சொத்து வீடு நிலங்கள் இவற்றை இவர்கள் விற்றால் கூட அதன் மூலம் வரக்கூடிய அந்த பணத்தை இவர்களுடைய விருப்பத்திற்காக ஆசைக்காக சுயநலத்திற்காக
என்று அந்தப் பணத்தை இவர்களால் அனுபவிக்க முடியாது.வீடு சொத்து நிலங்கள் இவர்கள் பெயரில் இவர்கள் வாங்கினாலும் அல்லது இவர்கள் பெயரில் இதெல்லாம் இருந்தாலும் அதனால் இவர்களுக்கு எந்தவிதமான ஆதாயமும் பிரயோஜனமும் பயனும் இருக்காது.

மேலும் இவர்களுக்கு மாந்திரீகம்,
தாந்திரீகம்,ஜோதிடம் இதிகாசங்கள்,புராதன கதைகள் கடவுள் நம்பிக்கை,சிவன் மீது ஈர்ப்பு இருப்பது,ஆன்மீக நாட்டங்கள், ஜீவசமாதிகள்,அமானுஷ்யம் இது சார்ந்த விஷயங்களில் இவர்களுக்கு அளவுக்கதிகமான ஈடுபாடுகள் திறமைகள் ஆர்வங்கள் நம்பிக்கைகள் மிக மிக அதிகமாக இருக்கும்.

பொதுவாக இவர்களுடைய குணங்கள் எப்படி என்றால் இவர்கள் சும்மா இருக்கும் நேரத்தில் எல்லாம் ஏதாவது ஜோதிடம் சார்ந்த விஷயங்களைப் பற்றி படிப்பது, அல்லது ஆராய்ச்சி செய்வது சித்தர்களைப் பற்றி படிப்பது, அமானுஷ்யம் சார்ந்த விஷயங்களை பற்றி படிப்பது,இதிகாச கதைகள் அல்லது புராதனக் கதைகளை பற்றி படிப்பது,இதுபோன்று செயல்களைத் தான் இவர்கள் சும்மா இருக்கும் நேரத்தில் பெரும்பாலும் செய்வார்கள்.

இவர்களுக்கு வரக்கூடிய கனவுகளே வித்தியாசமாக இருக்கும் விசித்திரமாக இருக்கும் அதாவது யாரும் போகாத ஒரு காட்டிற்குள் செல்வது போன்றும்.யாரும்
போகாத ஒரு குகைக்குள் செல்வது போன்றும்,அமானுஷ் ஆராய்ச்சி செய்வது போன்றும்,பேய்கள் சார்ந்தும் ஆவிகள் சார்ந்தும்
புதையல் கிடைப்பது போன்றும்,
விபத்துக்கள் கண்டங்கள் ஏற்படுவது போன்றும் ஏதாவது சாகசம் செய்வது போன்றும் தான் இவர்களுக்கு கனவுகளே எப்போதும் வரும்.

அதாவது விசித்திரமான வித்தியாசமான கனவுகள் கற்பனைகள் தான் இவர்களுக்கு எப்போதுமே இருக்கும்,ஆன்மீகம்,
ஜோதிடம்,மாந்திரீகம்,தாந்திரீகம் அமானுஷ்யம் ரீதியான கனவுகள் கற்பனைகள் இவர்களுக்கு எப்போதுமே வந்து கொண்டே இருக்கும்.

சித்தர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும்,அமானுஷ்யம் சார்ந்த விஷயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும், அமானுஷ்யம் நிறைந்த இடங்களுக்கு செல்ல வேண்டும், யாரும் போகாத ஒரு காட்டிற்குள் செல்ல வேண்டும்,ஏதாவது ஒரு அமானுஷ்ய சக்தியை பெற வேண்டும்,மாந்திரீகம்,தாந்திரீகம் அமானுஷ்ய கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும்,ஜோதிடத்தை கற்றுக் கொள்ள வேண்டும் இது ரீதியான விஷயங்களில் தான் இவர்களுக்கு பெரும்பாலும் ஆசைகள் ஈடுபாடுகள் விருப்பங்கள் நாட்டங்கள் மிக அதிகமாக இருக்கும்.

மேலும் இவர்களுக்கு தந்தை மூலமாக ,தந்தை வழி உறவினர்கள் சொந்தங்கள் மூலமாக வாழ்க்கையில் தேவையில்லாத கடன் பிரச்சனைகள் ஏமாற்றங்கள் வம்பு வழக்கு அடிதடி சண்டைகள் கோர்ட்டு கேஸ் போட்டிகள் பொறாமைகள் எதிரிகள் சத்துருக்கள் இதுபோன்ற எல்லாவிதமான பிரச்சனைகள் இவர்களுக்கு வாழ்க்கையில் கண்டிப்பாக ஏற்படும்.

இவர்கள் தந்தை உடைய சொந்தங்கள் உறவினர்கள் இடத்தில் இவர்களின் நம்பி பணத்தைக் கடன் கொடுத்தார்கள் என்றால் அந்தப் பணம் இவர்களுக்கு திரும்ப வராது ஏமாற்றம்தான் அடைவார்கள்.
பிறகு அதனால் தந்தை வழி உறவினர்களுக்கும் இவர்களுக்கும் இடையில் தேவையில்லாத பிரச்சனைகள் சண்டைகள் பிரிவினைகள் ஏமாற்றங்கள் என்பது வாழ்க்கையில் கண்டிப்பாக ஏற்படும்.

அதேபோன்று தந்தை வழி உறவினர்கள் சொந்தக்காரர்கள் இடத்திலிருந்து இவர்கள் பணத்தை கடன் வாங்கினார்கள் என்றால் அந்த பணத்தை அவர்களிடத்தில் இவர்களால் கொடுக்க முடியாமல் போய்விடும்.பிறகு அதன் மூலமாகவும் தந்தை வழி உறவினர்களுக்கும் இவர்களுக்கும் இடையில் தேவையில்லாத பிரிவினைகள் சண்டைகள் வாக்குவாதங்கள் பணக்கஷ்டங்கள் பண இழப்புகள் போன்ற பிரச்சனை இவர்களுக்கு ஏற்பட்டுவிடும்.

தந்தை மூலமாகவே இவர்களுக்கு வாழ்க்கையில் தேவையில்லாத கடன் பிரச்சனைகள் ஏமாற்றங்கள் பிரிவினைகள் பணக்கஷ்டங்கள் என்பது இவர்களுக்கு வாழ்க்கையில் கண்டிப்பாக ஏற்படும்.தந்தையுடைய கடன் பிரச்சனைகளை ஒருவேளை இவ்வாறு ஏற்றுக் கொண்டார்கள் என்றால் இவர்களால் தந்தையுடைய கடன் பிரச்சனையை அடைக்க முடியாது பிறகு அதனால் இவர்களுக்கு தேவையில்லாத பிரச்சனைகள் ஏமாற்றங்கள் என்பது இவர்களுக்கு வாழ்க்கையில் கண்டிப்பாக ஏற்படும்.

தந்தை வழி உறவினர்கள் சொந்தங்கள் மூலமாகவே இவர்களுக்கு வாழ்க்கையில் போட்டிகள் பொறாமைகள் எதிரிகள் சத்துக்கள் என்பது உருவாகுவார்கள்.
அதேபோன்று "உயர்கல்வி, மேற்படிப்பு" படிப்பதற்காக இவர்கள் கடன் வாங்கி சீட்டு எடுத்து இவர்கள் செலவு செய்தார்கள் என்றால் பிறகு அந்த கடனை அடைக்க முடியாமல் அதன் மூலமாக இவர்களுக்கு கடன் பிரச்சனைகள் ஏமாற்றங்கள் சண்டைகள் வம்பு வழக்கு போன்ற பிரச்சனைகள் இவர்களுக்கு வாழ்க்கையில் கண்டிப்பாக ஏற்படும்.

மேலும் இவர்கள் மேற்படிப்பு உயர்கல்வி படிக்கின்றார்கள் என்றால் இந்த விஷயங்கள் மூலமாகவும் இவர்களுக்கு போட்டிகள் பொறாமைகள் எதிரிகள் சத்துருக்கள் என்பது மிக மிக அதிகமாக இருக்கும்.

அதேபோன்று இவர்கள் ஒருவேளை வெளிநாடு செல்கின்றார்கள் என்றால் வெளிநாட்டு பயணத்திற்காக பணத்தை கடன் வாங்கி இவர்கள் செலவு செய்தார்கள் என்றால் பிறகு அந்த கடனை அடைக்க முடியாமல் அதன் மூலமாக இவர்களுக்கு கடன் பிரச்சனைகள் ஏமாற்றங்கள் சண்டைகள் வம்பு வழக்கு போன்ற பிரச்சனைகள் இவர்களுக்கு வாழ்க்கையில் கண்டிப்பாக ஏற்படும்.

இவர்கள் வெளிநாட்டிற்கு செல்கின்றார்கள் என்றால் அந்த விஷயங்களில் கூட இவர்களுக்கு தேவையில்லாத போட்டிகள் பொறாமைகள் எதிரிகள் சத்துக்கள் என்பது இவர்களுக்கு இருக்கும்.

அதேபோன்று இவர்களுக்கு வாழ்க்கையில் கடன் பிரச்சனை சீட்டு லோன் உத்தியோகம் வேலைகள் நகை அடமானம் வைப்பது வம்பு வழக்கு பிரச்சனைகள் எந்த விஷயம் ரீதியான எந்த ஒரு தகவல்களையும் விஷயங்களையும் நீங்கள் என்றைக்குமே ரகசியமாக வைத்துக் கொள்ள மாட்டீர்கள்.

அதாவது கொடுத்த கடன் பணம் இவர்களுக்கு வருவதாக இருந்தாலும் சரி அல்லது உங்களுக்கு யாராவது பணத்தை கடன் தருவதாக இருந்தாலும் சரி, அதேபோன்று உத்தியோகத்திற்கு புதியதாக செல்வதாக இருந்தாலும் சரிஅல்லது உத்தியோகத்தில் ஏதாவது உங்களுக்கு சம்பள உயர்வு பதவியேற்பு வருவதாக இருந்தாலும் சரி அதேபோன்று ஏதாவது இவர்கள் புதியதாக லோன் சீட்டு எடுப்பதாக இருந்தாலும் சரி இது சார்ந்த அனைத்து விதமான விஷயங்களைப் பற்றி இவர்கள் மற்றவர்களுக்கு ஒருவருக்கு சொன்னாலும் அது ஊர் முழுக்க பரவி சர்ச்சைக்கு உள்ளாகி பேசுபொருள் ஆகி பிறகு மற்றவர்களின் கண் திருஷ்டி பொறாமைகள் இவர்களுக்கு இந்த விஷயம் மீது பட்டுவிடும் பிறகு இது சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் இவர்களுக்கு தடைகள் இழப்புக்குள் ஏமாற்றங்கள் கஷ்டங்கள் வரும்.

மேலும் ஒருவேளை
இவர்கள் சொந்தமாக தொழில் செய்கின்றார்கள் என்றால் தொழில் சார்ந்த விசயங்களுக்காக இவர்கள் வாழ்க்கையில் தங்களுக்கு பிடித்த ஆசைப்பட்ட ஏதாவது ஒரு விஷயத்தை தொழிலுக்காக இவர்கள் விட்டுக் கொடுத்து இருப்பார்கள் அல்லது தியாகம் செய்து இருப்பார்கள்.அல்லது இழந்திருப்பார்கள்.

வலுக்கட்டாயமாக இவர்களுக்குப் தொழில் சார்ந்த விசயங்களுக்காக இவர்கள் வாழ்க்கையில் தங்களுக்கு பிடித்த ஆசைப்பட்ட ஏதாவது ஒரு விஷயத்தை தொழிலுக்காக இவர்கள் விட்டுக் கொடுத்து இருப்பார்கள் அல்லது தியாகம் செய்து இருப்பார்கள்.அல்லது இழந்திருப்பார்கள்.இவர்கள் தொழிலில் எவ்வளவு உழைத்து கொட்டினாலும் கஷ்டப்பட்டாலும் அதற்கு நிகரான லாபம் வருமானம் இவர்களுக்கு வராது.பாதி வருமானம் பாதி லாபம் தான் இவர்களுக்கு வரும்.

உழைப்புக்கு தகுந்த வருமானம் லாபம் இவர்களுக்கு தொழில் எந்த காலத்திலும் வராது.தொழிலில் இவர்களுக்கு அதிகமான மனக் குழப்பங்களை அந்த பாவம் கொடுத்துவிடும்.இவர்கள் என்ன நினைப்பார்கள் என்றால் நாம் தொழிலில் எவ்வளவு கஷ்டப்படுகிறமே ஆனால் ஏன் நமக்கு வருமானம் லாபம் சரியாக வருவதில்லை என்று நினைப்பார்கள்.

அதாவது தொழிலில் இவர்களுடைய உழைப்புக்கு தகுந்தவாறு கஷ்டத்திற்கு தகுந்தவாறு இவர்கள் எதிர்பார்க்கக் கூடிய வருமானம் லாபம் பணவரவு இவர்களுக்கு வராது.எவ்வளவுதான் இவர்கள் தொழிலில் கஷ்டப்பட்டாலும் உழைத்துக் கொட்டினாலும் அதற்கு நிகரான லாபம் என்பது இவர்கள் வாழ்க்கையில் எதிர்பார்க்க முடியாது.
தொழில் சார்ந்த விஷயங்கள் மூலமாக இவர்களுக்கு வாழ்க்கையில் மன அழுத்தங்கள் மனக்குழப்பங்கள் மனவேதனைகள் என்பது இவர்களுக்கு மிக அதிகமாக ஏற்பட்டு கொண்டே இருக்கும்.

மேற்கொண்டு யாரெல்லாம் மகர ராசி அல்லது மகர லக்னத்தில் பிறந்திருக்கின்றீர்களோ நீங்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி நீங்கள் இந்த பதிவில் நான் குறிப்பிட்டுள்ள விஷயங்களை உங்களுடைய நடைமுறை வாழ்க்கையில் பொருத்திப் பாருங்கள் எல்லாம் மிகச் சரியாக இருக்கும்.

ஜாதகத்தில் இந்த சூட்சமத்தை பொருத்திப் பாருங்கள் எல்லா மிகச் சரியாக இருக்கும்.
No comments:
Post a Comment