Saturday, 15 November 2025

சிவன் ஏன் #பிச்சை எடுக்கப் போகிறார்?

 #


சிவன் ஏன் #பிச்சை எடுக்கப் போகிறார்?

ஒரு முறை பிரமனின் ஒரு தலையை கிள்ளி எடுத்து விட்டார். அந்தத் தோஷம், அந்த மண்டையோடு அவர் கையிலியே ஒட்டிக் கொண்டது. அது அவர் கையை விட்டுப் போக வேண்டுமானால், அந்த மண்டை ஓட்டிலே பிச்சை எடுத்து உண்ண வேண்டும். அப்படி செய்து வந்தால், அந்த மண்டை ஓடு அவர் கையை விட்டுப் போகும்.
இது என்ன அபத்தமான கதையாக இருக்கிறதே என்று தோன்றலாம். கதை அபத்தம் தான். அதன் பொருள் என்ன?
ஒரு வினை செய்தால், அதன் பலனை அனுபவித்தே தீர வேண்டும். அது சிவனாகவே இருந்தாலும், செய்த வினை போகாது.
பலர் நினைக்கிறார்கள், ஏதாவது பாவம் செய்தால், அதற்கு பதிலாக ஒரு நல்லது செய்தால் பாவத்தில் இருந்து தப்பி விடலாம் என்று.
முடியாது.
பாவத்தின் பலனை அனுபவிக்க வேண்டும். பின் நல்லது செய்தால், அதன் பலனையும் அனுபவிக்க வேண்டும்.
"அறம் #பாவம் எனும் அருங் கையிற்றால் கட்டி" என்பார் மணிவாசகர்.
இரண்டுமே நம்மை பிறவி என்ற பந்தத்தில் கட்டிப் போடும். இரண்டுமே செய்யக் கூடாது.
ஒன்றுக்கு ஒன்று சரியாகி விடாது. இரண்டும் தனித் தனி கணக்கு.
கோவிலுக்குப் போவது, #உண்டியலில் காணிக்கை போடுவது, மொட்டை போட்டுக் கொள்வது, விரதம் இருப்பது, அன்ன தானம் செய்வது போன்ற காரியங்களால் செய்த தீவினைகளில் இருந்து தப்பி விடலாம் என்று யாரும் நினைக்கக் கூடாது. அப்படி என்றால் பணம் உள்ளவர்கள் எவ்வளவு தீமை வேண்டுமானாலும் செய்யலாம். பின் நிறைய தான தர்மங்கள் செய்து தப்பித்துக் கொள்ளலாம்.
முடியாது.
சிவனே ஆனாலும், செய்த வினையின் பலனை அனுபவித்தே தீர வேண்டும்.
சிவனுக்கே அந்தக் கதி என்றால், நம் கதி என்ன?
தீவினை செய்யாமல் இருக்க வேண்டும்.
மனதால், வாக்கால், செயலால் தீவினை செய்யக் கூடாது.
சிவன் பிச்சை எடுக்கப் போவது கூட ஏதோ பெருமையாக, அழகாகப் போனாராம்.

No comments:

Post a Comment

சித்தர்கள் ஜீவ சமாதியான இடம்,* _அவர்கள் வாழ்ந்த நாட்கள்._

  சித்தர்கள் ஜீவ சமாதியான இடம்,* _அவர்கள் வாழ்ந்த நாட்கள்._ *1. அகஸ்தியர்* – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார். *2. பதஞ்சல...