எல்லோருக்கும் தெரிந்தது கூத்தனுர் சரஸ்வதியும் ஹயகிரிவரும். இன்னமும் சிலர் சுவாமிமலையை கருத்தில் எடுத்து கொள்வார்கள்.
ஆனால் இவைகளை தவிர பல கோவில்கள் நம் தமிழகத்தில் உள்ளன.
1. சீர்காழி முல்லை வன நாதர். பார்வதிக்கு சிவன் பிரணவ மந்திரம் சொல்லி தந்த ஸ்தலம்.
2. திருவானைக்காவல் சிவபெருமான் குருவாகவும், உமையவள் மாணவியாகவும் உள்ள ஸ்தலம்.
3. திருக்காட்டுப்பள்ளி அக்னிபுரீஸ்வரர் - யோக குரு சிவன் அம்பாளுக்கு போதிக்கும் வடிவம்.
4. திருவெண்காடு பிரம்மனுக்கு அம்மன் போதித்த ஸ்தலம்.
5.
தொட்டியம் திருநாராயணபுரம் வேதநாராயணபெருமாள் = தலைக்கு கீழே 4
வேதங்களையும் வைத்து கொண்டு இருப்பார். பிரம்மனுக்கு மறந்து போன வேதங்களை
பெருமாள் உபதேசித்த ஸ்தலம்.
6.
காஞ்சி மறைநூபுரம்- யுகத்தின் முடிவில் வேதங்கள் சிவனை வழிபட்டுச்
சிவபெருமானுக்கு காலில் அணியும் சிலம்பம் ஆகின. சிவபெருமான், தமது தூக்கிய
திருவடியை அசைத்து சிலம்பொலி மூலம் பிரம்மனுக்கு வேதங்களை உபதேசித்த தலம்.
7.
ஓமாம்புலியூர் இறைவன் தட்சிணாமூர்த்தியாக உமையம்மைக்கு பிரணவ மந்திரத்தை
விளக்கிய தலம் இது. இத் தலத்திற்கு ‘பிரணவ வியாக்கியான புரம்’ என்ற பெயரும்
உண்டு.
8. திருவேற்காடு வேதபுரீஸ்வரர்= நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று சிவபெருமானை வழிபட்ட ஸ்தலம்
9. வேதாரண்யம்- நான்கு வேதங்களும் தல மரங்களாக உள்ள ஸ்தலம்.
10. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மாமரம், நான்கு கிளைகள் நான்கு வேதங்கள்
குற்றாலம் பலா மரம் - வேதங்களாக உள்ள ஸ்தலம்.
11. கோலியனூர் வாலீஸ்வரர் கோவில்: சப்த கன்னியருக்கு குரு உபதேசம் செய்து அவர்களுக்கு கொலை பாவம் நீங்க அருள் செய்த ஸ்தலம்.
இன்னமும் சில ஸ்தலங்கள் கூட உள்ளன.

No comments:
Post a Comment