Thursday, 27 November 2025

சிறப்பு பரிகாரம்


 சிறப்பு பரிகாரம்

வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லாமல் இருக்கும் சிலருக்கு தங்களின் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள சிறப்பு பரிகாரத்தை செய்து பலன் பெறலாம். அது என்ன பரிகாரம் என்பதை இங்கு பார்க்கலாம்...!!
இன்றைய காலக்கட்டத்தில் பலவித சூழ்நிலையில் பலதரப்பட்ட மனிதர்களை பார்க்கிறோம். அப்படி ஒரு சிலர் மற்றவரை உதாசீனப்படுத்துவதும், மட்டம் தட்டுவதும் இயல்பான ஒரு விஷயமாக இருக்கிறது.
நாம் எங்கு சென்றாலும் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகமாக தேவைப்படுகிறது. எவர் ஒருவர் நம்மை உதாசீனப்படுத்தினாலும், நமது திறமையைக் கண்டு அவரே நம்மை தேடி வந்து பாராட்ட வேண்டும். எந்தவொரு தவறும் செய்யாமல் மற்றவர் கூறும் பொய் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளக்கூடாது.
தைரியமாக அந்த இடத்தில் எதிர்த்து நமது பக்க நியாயத்தை பேச வேண்டும். இப்படி போட்டிகள் இருக்கின்ற உலகத்தில் திறமையும், தன்னம்பிக்கையும், தைரியமும் இல்லாவிட்டால் எந்தவொரு காரியத்திலும் நம்மால் வெற்றி பெற முடியாது.
வாழ்க்கையில் வெற்றி பெற முதலில் நமக்கு கடவுளின் அருள் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு செயலிலும் வெற்றியை கொடுக்கக்கூடிய முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்கு இந்த எளிய பரிகாரத்தை செய்தால் மட்டும் போதும்.
முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்குரிய பரிகாரம் :
இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவைப்படும் ஒரு அற்புதமான பொருள் என்னவென்றால் சுக்கு. முதலில் பூஜை அறையில் கடவுளின் முன் அமர்ந்து கொண்டு ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றிக் கொள்ள வேண்டும்.
பின்னர் சிறிதளவுள்ள ஒரு சுக்கினை வலது கையில் வைத்து இறுக்கமாக மூடிக் கொள்ள வேண்டும். பின்னர் கண்களை மூடி முருகப்பெருமானை நினைத்து எனது வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்க வேண்டும், எனது வேலையில் எனக்கு உயர் பதவி கிடைக்க வேண்டும், எனது வியாபாரம் சிறந்து விளங்க வேண்டும், நான் செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடிய வேண்டும், இதற்கு எனக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகமாக வேண்டும் என்று சொல்லி 'ஓம் முருகா ஓம் முருகா" என 108 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து உங்கள் பிரார்த்தனையை முடித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இந்த சுக்கினை சிறிய பேப்பரில் மடித்து கொண்டு ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்கள் உபயோகிக்கும் பர்சில் வைத்து இதனை தங்களுடனேயே வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து நீங்கள் செய்கின்ற செயல்கள் அனைத்தும் நிச்சயம் வெற்றியடையும்.

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...