Thursday, 27 November 2025

*கொலுசு சத்தம்...கண்ணாடி வளையல்...அதிர்ஷ்டத்தை பெருக செய்யும்...*


 *கொலுசு சத்தம்...கண்ணாடி வளையல்...அதிர்ஷ்டத்தை பெருக செய்யும்...*

எதையும் பாசிட்டிவாக நினைப்பது போல், எதையும் பாசிட்டிவாக பேசவும் வேண்டும். ஒவ்வொரு வார்த்தைக்கும் வலிமையான செயலும் உண்டு. திருவள்ளுவர் கூறியது போல் தீயினால் சுட்ட புண் உள்ளாறும், ஆனால் நாவினால் சுட்ட புண் எப்போதும் ஆறுவதில்லை. நீங்கள் வீசும் வார்த்தைகள் தடித்தால், அதனுடைய விளைவுகளும் அந்த வீட்டை சுற்றி உலா வந்து கொண்டிருக்கும். அதனால் தான் இனிமையான வார்த்தைகள் பேசும் வீட்டில் செல்வ வளம் அதிகமாக காணப்படுகிறது. கெட்ட வார்த்தைகள் பேசுபவர்கள் வீட்டில் வறுமை குடிகொண்டிருக்கிறது.
சனியனே, உருப்பட மாட்ட, விலங்க மாட்ட, நாசமா போவ என்பது போன்ற வார்த்தைகளை தப்பித் தவறியும் உபயோகிக்காதீர்கள். இதன் சத்தமானது, அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை பெருக செய்து விடும். அது போல் நல்ல சத்தங்களும் அதிர்ஷ்டத்தை பெருக செய்யும். அவ்வகையில் பெண்கள் அணியும் கொலுசு சத்தம் பேரதிர்ஷ்டத்தை உண்டு பண்ணும்.
வீட்டில் எப்பொழுதும் கொலுசு சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தால், அந்த வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி வைப்ரேஷன் எப்போதும் நிலைத்து நிற்கும். அதனால் தான் பெண்களை கொலுசு அணியாமல் இருக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அதிக முத்துக்கள் கொண்ட கொலுசை அணிவது வீட்டில் மகிழ்ச்சியை நிறைந்திருக்க செய்யும். ஆனால் பெண்கள் இப்போதெல்லாம் அதிக முத்துக்கள் இருக்கும் கொலுசுகளை விரும்புவதில்லை.
அதே போல் பெண்கள் அணியும் வளையல்களில் தங்கத்தை விட சிறந்தது கண்ணாடி வளையல் தான். கண்ணாடி வளையல் சத்தம் ஒரு வீட்டில் தினமும் கேட்டுக் கொண்டே இருந்தால் அந்த வீட்டில் அதிர்ஷ்டம் நிச்சயம் வந்து சேரும். சிலருக்கு இயற்கையாகவே சில நேரங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். ஆனால் அந்த அதிர்ஷ்டம் நிலைக்குமா? என்பதில் தான் சூட்சமம் உள்ளது. இப்படி வரும் அதிர்ஷ்டத்தை நிலைக்க வைப்பதில் பெரும் பங்கு கண்ணாடி வளையல் சத்தத்திற்கு உண்டு. அதிர்ஷ்டத்தை தடை செய்யும் இடையூறுகளை தகர்த்தெறிந்து வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொண்டு வரும்.
பெண்கள் வளையல் அணியாமல் ஒருபோதும் பூஜைகளை செய்ய கூடாது. பெண்கள் அணியும் வளையல் கண்ணாடி வளையல் ஆக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் நல்ல பலன்கள் கிடைக்கும். நிறைய கண்ணாடி வளையல்களை அணிந்து கொண்டு இருப்பவர்களுக்கு நிறைய நல்ல விஷயங்களும் நடக்கும். ஒரு வீட்டில் தொடர்ந்து கண்ணாடி வளையல் சத்தம் மற்றும் கொழுசு கேட்டுக் கொண்டே இருந்தால் அந்த வீட்டில் நிச்சயம் பெரும் அதிர்ஷ்டம் மற்றும் யோகம் வந்து சேரும்.
திருமீயச்சூர் தலத்தில் அமர்ந்து அருளாட்சி நடத்தி வரும் அன்னை லலிதாம்பிகைக்கு இங்குள்ள அர்ச்சகர்கள் கால் கொலுசு தவிர அனைத்து வகை ஆபரணங்களையும் அணிவித்து வந்தார்கள். தனது காலுக்கு கொலுசு அணிவிக்கப் பட வேண்டும் என அன்னை விரும்பினாள்.
1999-ம் வருடம் நவம்பர் மாதத்தில் ஒரு நாள் பெங்களூரில் மைதிலி ராஜகோபாலாச்சாரி என்பவர் இரவில் அவருடைய கனவில் அம்பிகை வடிவில் ஓர் உருவம் தோன்றி, எல்லா ஆபரணங்களும் எனக்கு உள்ளது. ஆனால் காலுக்கு அணிந்து கொள்ள கொலுசு இல்லை. அதனை நீதான் எனக்கு செய்து போட வேண்டும் என கட்டளையிட்டு மறைந்தது.கோவிலின் அர்ச்சகர்களை தொடர்பு கொண்டார். தனது கனவில் அம்பாள் வந்து கொலுசு கேட்ட விவரத்தையும் அதை அணிவிக்க தான் திருமீயச்சூருக்கு வருவதாகவும் கடிதம் எழுதினார்.
அதன்பிறகு அர்ச்சகர்கள் லலிதாம்பிகையின் கால்களில் மிகுந்த கவனத்துடன் தேடுகையில்தான் அந்த அதிசயத்தை உணர்ந்தனர். அம்பிகையின் கணுக்காலின் அருகே அழுத்தம் ஏற்பட்டிருந்தது. அந்த இடத்தை நன்கு அழுத்தி பார்த்தால் முக்கால் அங்குலத்தில் துவாரம் இருப்பதைக் கண்டனர்.ஆண்டுக் கணக்கில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்ததில் அபிஷேக பொருட்கள் அத்துவாரத்தை அடைத்து விட்டிருந்தது. பின்னர் மைதிலி தான் கொண்டு வந்த கொலுசினை லலிதாம்பிகைக்கு அணிவித்து பேரானந்தம் அடைந்து அம்பாள் தனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றினார். அன்றைய தினத்திலிருந்து அனுதினமும் பக்தர்கள் லலிதாம்பிகைக்கு கொலுசு அணிவித்து தங்களுடைய பிரார்த்தனையை செலுத்தி வருகிறார்கள்...!!!

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...