#அகம்பிரமாஸ்மி தன்னுள்ளே இறைவனை உணர்ந்து அனுபவித்தால் என்ற நிலைப்பாடு ..
சிதம்பரம் என்றால் கோயில், கோயில் என்றால் சிதம்பரம் என்பது யாவரும் அறிந்ததே ..
முதலில் சிதம்பரம் சென்று எல்லா கோயிலை போலவே இங்கும் அனுபவித்தது உண்டு ..
ஆனால்
அங்கு போகப்போக இவனுள்ளே நிறைய மாற்றங்கள்,
என் உடலையே கோயிலாக கொண்டு அதனுள்ளிருந்து அதை இயக்கி ஆளும் அற்புதத்தை இவனுள்ளே உணரும்படி யான திருவருளை குறித்தே இப்பதிவு .. பதியவிட்டவன் திருவருளால்
அம்பலவாணர் என்று கூறப்படும் தில்லை நடராஜா பெருமான் இருக்கும் பொன்னம்பலம் நம் உடலோடு அப்படியே பொருந்தும் தன்மை பெற்றதே ..
நம் உடலில் 9 துவாரங்கள் 9 கலசங்களாக
நாம் வாழ்வே சுவாசத்தை பிராதனாமாக கொண்டே அந்த சுவாசம் ஒவ்வொரு உடலும் 21,600 தங்க ஓடுகள் கொண்ட கூரையில்,
அந்த சுவாசத்தை கொண்டு 72,000 (ஆணிகள் ) நாடி நரம்புகள் வழியே கட்டப்பட்ட இந்த உடலின் உள்ளே
இடது பாகமாக ஆனந்த தாண்டவம் ஆடும் பிரபஞ்ச இயக்க நாயகன் ஆதலால் உள்ளே அம்பலத்தில் இடது பக்கமாக நடராஜ பெருமான் திருவுரு ..
நம் உருவத்தை உருவமாக தக்கவைக்க அவனது திருநடனமே பிரதானமாக,
அந்த இருதய துடிப்பின் வழியே அவன் ஆடும் திருநடனம் என்ற ஆற்றல் வழியே நாம் உடலில் ஒவ்வொரு அணுக்களும்/ உறுப்புகளும் .. இயங்க .
சுவாசம் என்ற காற்று எதன்வழியே உள்ளடங்கி அது இருதய இயக்கமாக திருநடனத்தின் வழியே உந்தப்பட்டு இந்த 72,000 நாடி நரம்புகள் இயக்கப்பட்டு அவனே உருவமாய் ( இருதயம் ), அருவுருவாய் ( ரத்தம் / சதை / திசு ), அருவாய் ( உடலில் உள்ளே வெற்றிடமாய் ) இருந்து இயக்க படவதாலேயே,
நாம் நாமாக இருக்கிறோம் ..
அமபலத்தில் ஆடும் நாயகன் உங்கள் உள்ளே உங்களை பிணைத்து, நாடி நரம்புகள் வழியே ஒரு உருவமாக கட்டி, அதில் உருவாய் / அருவுருவாய் / அருவாய் இருந்து உங்களுள் புரியும் திருநடனத்தால் தான் எதுவும் அதுவாக இருக்கிறது ..
இந்த அமபலத்தை கண்ணால் அனுபவிக்கும் வரையில் உணர முடியாத உங்களை அவனிடம் சரணாகதி என்ற நிலையில் இருந்து அனுபவிக்கும்போது ..
உங்களை மீறிய ஒன்றாய் உங்களை அவனே உங்கள் உடலை சிற்றம்பலம் - சின்ன அமபலமாக ( கோயிலாக ) கொண்டு,
உங்களுள் அணுவணுவாக அவன் ஆட்டத்தின் வழியே பின்னிபிணைத்து அவனது இருப்பை உங்களுள் ஒரு சில நொடிகளாவது அவன் உணர்வாய் ஆக்கிரமித்து உணர்வற்ற நிலையில் உங்களை வைத்து ..
தன் இருப்பை உங்களுள்ளும் உணர்விப்பான் ..
அந்த உணர்வை நீங்கள் பெறும் வரையில் #சிற்றம்பலம்(என் உடல்) என்ற நிலையில் இருந்து, திரு (இறைவனால்) இருந்து இயக்கப்படும் என்ற மெய்யை அனுபவிக்க #திருச்சிற்றம்பலம் ஆகா அனுபவிக்க தொடங்கும் ..
அந்த இருப்பை நீங்கள் மீண்டும்மீண்டும் உங்களுள் கொண்டு வர இந்த சில நொடிகள் ஆக்கிரமித்து அருளிய மெய்யை, நான் என்ற மாயையை கொஞ்சம் கொஞ்சமாக உணரதொடங்குவோம் ..
அதற்க்கு பிறகு
நாமே நம்மை கவனித்து பார்க்க விளைந்தால், நாம் இதுவரையில் எங்கு சென்று என்ன கடவுளை எப்படி அனுபவித்தாலும் அது உங்கள் உள்ளே ஒரு தனித்துவமாக அனுபவத்தை தந்திருக்கும் .. அந்த அனுபவத்தை ஏன் எப்படி எதற்காக என்று வெளியே விவரித்து சொல்ல முடியாவிட்டாலும் அந்த அனுபவம் உங்கள் உள்ளே நிகழ்திருக்கும் ..
இது கடவுள் என்ற ஒன்றை கடந்து சில உயிர்கள் / உறவுகள் / நிகழ்வுகள் என்று உங்களுள் ஓர் ஆத்மார்த்தமான அனுபவத்தை தந்திருக்கும் ..
என்னதான் வெளியே நாம் ஆயிரம் அனுபவித்தாலும் ?? அனுபவித்ததாக நினைத்தாலும் அது அத்தனையும் உங்கள் உள்ளே ஒரு தனித்துவமாக அனுபவத்தையே தந்திருக்கும் ..
அதாவது உங்களை இயக்கும் பேராற்றல் என்ற பிரபஞ்ச பொதுநடனம் வழியே உங்களுள் அனுபவித்ததே யாவும் ..
எது எல்லாம் உங்களுள் இயக்கப்படும் அதிர்வலைகளோடு பொருந்தி போகிறதோ அதுவெல்லாம் உங்களுக்கு இன்பமாகவும் / விருப்பமாகவும் இருக்கும் ..
அந்த அதிர்வலைகள் கொஞ்சம் வேறுபாடுகள் உடன் இடம்பெறும் போது நம் உணர்வுகள் மாறும் ..
அப்போது உங்கள் உடலின் இயக்கம் கடந்து !!
உங்கள் உணர்வின் வெளிப்பாடும் அவனது இயக்கத்தை பொறுத்தே நிகழ்கிறது ..
இதை ஒவ்வொரு ஆன்மாவும் அதற்க்கான பரிபக்குவ நிலையில் இருந்து அனுபவிக்க ..
நான் என்று பெருமை / சிறுமை கொள்ள ஏதுமில்லாது ..
உன்னை உன்னை மீறி இயக்கி அருள்பவனே உன்னை நீ யாக காட்டிகொண்டு இருக்கிறான் என்ற மெய் புரியும் ..
அதில் அகம்பிரமாஸ்மி என்பது நானே கடவுள் என்று வெளியே கேலிகூத்தாக சித்திகரிக்க படுகிறது ..
ஆனால்
அகம் என்ற நம்முள்ளே நம்மை இயக்கி கொண்டு இருப்பதே ..
பல கோடி கோள்களை கொண்ட இந்த பிரபஞ்சத்தை இயக்கி அருளி கொண்டு இருக்கிறது என்று உணர்வது தான் ..
அதுமட்டும் இல்லாது ..
நம்மை இந்த பிரபஞ்ச இயக்கத்தோடு பொருத்தி எப்போதும் நம்மை மீறி நம்மை இயக்கி அருளிக்கொண்டு இருப்பதால் தான் .. நாமே நாமாக தெரிகிறோம் ..
இப்படி அகத்தை அனுபவிக்க !!!
அது பரத்தை உணர்விக்க !!
இரண்டும் வேறல்ல இரண்டையும் இயக்கியருள்வது ஒன்றே என்ற நிலைப்பாட்டை ..
நாம் ஆன்மா எய்தும் போது ..
நிர்வான நிலை என்ற ஒன்று தானே வெளிப்பட துவங்கி விடும் ..
அதுவரையில் நான் ?? நான்தான் ?? என்ற சுழற்ச்சியில்
அது தான் இறைவன் !! அங்கு தான் இருக்கிறான் !! அப்படிதான் வணங்க வேண்டும் .. போன்ற பாவனைகள் தொடரும் ....
ஒவ்வொரு ஆன்மாவும் அனுபவித்துணர வேண்டிய அற்புதமே, உருவம் கடந்து, உலகம் கடந்து, அண்டம் கடந்து, பேரண்ட பெருவெளியாக , பிரபஞ்சமாக வியாபித்து இருக்கும் நடராஜா என்று நாமமும் கடந்த இறைப்பேராற்றல் ..
திருச்சிற்றம்பலம்

No comments:
Post a Comment