Friday, 21 November 2025

மானிட உடலில் மரபணு என ஒன்று உண்டு


 மானிட உடலில் மரபணு என ஒன்று உண்டு அதுதான் வம்ச வம்சமாக பல விஷயங்களை அடுத்த சந்ததிக்கு கடத்துகின்றது , மரபணுவில் எல்லா வம்ச ரகசியங்களும் ஒளிந்திருக்கின்றன, ஒரு உயிரின் எல்லா ரகசியங்களும் அதில் அடங்கியுள்ளது என 1953ல் அந்த அறிவிப்பு வரும்போது உலகமே அரண்டு போனது

அந்த மரபணுவுக்கு Deoxyribo Nucleic Acid (DNA)என பெயரிட்டு அந்த விஞ்ஞானி விளக்கியபோது அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தே போனார்கள், அந்த கண்டுபிடிப்பே மருத்துவ உலகில் பெரும் மாற்றத்தை கொடுத்தது பின் அது பயோ படிப்புகள் எனும் பெரும் விஞ்ஞான பிரிவு தொடங்க அடிப்படையானது அப்படியே புலன் விசாரணைகளிலும் இன்னும் பலவற்றிலும் இது மாற்றத்தை கொண்டுவந்தது
இந்த கண்டுபிடிப்பை உலகுக்கு தந்தவர் ஜேம்ஸ் வாட்சன், அவர் தன் 97ம் வயதில் இன்று காலமானார், நோபல் பரிசு வென்ற அவருக்கு இன்று உலகம் அஞ்சலி செலுத்தி கொண்டிருக்கின்றது
விஞ்ஞான உலகில் இது புதிய கண்டுபிடிப்பு உலகினை மாற்றிய மிக முக்கிய சாதனை என சொல்லபட்டாலும் அது இந்துக்கள் சொனன பெரும் நுணுக்கமான உண்மையின் விஞ்ஞனா விளக்கமே அன்றி வேறல்ல‌
இந்துக்கள் இதனை இந்த ரகசியத்தைத்தான் நாக வழிபாடு என்றார்கள், இன்றைய விஞ்ஞானம் வெறுமனே மானிட உடலின் டி.என்.ஏ எனும் மரபணுவினை கண்டறிந்துவிட்டதாக பெருமை கொள்ளலாம் ஆனால் இந்துமதம் மானிட உடல் தாண்டி அண்ட சராசார இயக்கமே இந்த நாகவடிவில் இருப்பதை அங்கும் ஒரு டி.என்.ஏ தத்துவம் இருப்பதை சொல்லி எல்லாம் ஒரே சக்தியே என்பதை சொன்னது
அதுதான் நாக வழிபாடும் இந்து தெய்வமெல்லாம் கொண்டிருக்கும் நாக அடையாளமுமாயிற்று
நாக வழிபாடு என்பது சந்ததிப் பெருக்கத்துக்கு முக்கியம். அதன் பின்னிப் பிணையும் சக்தி போல மானிட சுபாவமும் உண்டு.
நாகத்தின் சாபமே குழந்தையின்மை என்பதும், கர்மவினை காரணமாக மாய‌ சர்ப்பம் கருமுட்டையினை தின்றுவிடும் என்பதும் இந்துக்கள் என்றோ அறிந்த ஒன்று.
இதனால் எல்லா வரங்களை போலவே குழந்தை வரத்துக்கும் நாகத்தை வணங்கினார்கள், மகப்பேறு வரத்தில் முக்கிய பங்கு நாகத்துக்கு உண்டு என்றார்கள்
இதனாலேயே பாம்பினை வணங்கும் இந்திய, சீன தேசங்கள் எப்போதும் மக்கள் தொகை மிகுந்து காணப்பட்டன, இன்றும் அந்த வளம் உண்டு.
நாக வழிபாடு என்பது ஒரு வகையான சூட்சுமமான பிரபஞ்ச வழிபாடு, டி.என்.ஏ எனும் மரபணுவினை இயக்க நிலைக்கு கொண்டுவந்து பிரபஞ்சத்தோடு தொடர்பு கொள்ள வைக்கும் வழிபாடு
நாக வழிபாடு என அது சொன்னதெல்லாம் பிரபஞ்ச ஞானத்தை பெறும் வழியே
செல்வம், செழுமை, அதிகாரம், உடல் நலம், மனநலம், யோக மேன்மை, ஞானம் என எல்லாமும் அடைய முடியும்.
பாம்பே ஞானத்தின் அடையாளமானது, கேது எனும் கிரகம் ஞானத்தை வழங்கும் கிரகமாக கருதப்பட்டு, நாகம் பிள்ளையாரின் பூனூலாகவும் ஆனது.
இந்துமரபில் பூனூல் அணிவதும் நாக வடிவக் குறியீடே, அதுதான் நெற்றியில் நீண்ட திலகமாகவும் வந்தது, நெற்றியில் ஆற்றல் சுருண்டிருக்கின்றது எனும் வட்ட வடிவ பொட்டாகவும் வந்தது.
இங்கு எல்லாமே நாக தத்துவம், அதுவன்றி வேறல்ல‌.
மிகபெரிய ரகசியம் ஒன்றை இந்துக்கள் பாம்பில் வைத்தார்கள் ஒரு மாபெரும் தத்துவத்தை சொன்னார்கள், அது உலக இயக்கம் உடல் இயக்கம் இன்னும் எலல இயக்கத்துக்குமான ஒற்றுமை
ஆம், இங்கே எல்லாமே அலை வடிவில் இயங்குகின்றது, இந்த பிரபஞ்சமே ஒருவித அலைவரிசையில் இயங்குவதாக் விஞ்ஞானம் சொல்கின்றது
ஏறி இறங்கி செல்லும் ஒரு அலை அது, சக்தியின் இயக்கம் அலை அலையாக இயங்குகின்றது
இந்த அலைவடிவத்தை வரைபடத்தில் வரைந்தால் ஏறி இறங்கி ஏறி இறங்கி செல்வதை காணமுடியும், அதனை நன்றாக கவனித்தால் அது பாம்பு நெளிந்ததை போல் இருக்கும்
இந்த பிரபஞ்சம் அப்படி அலையால் இயங்குகின்றது, மானிட உடலில் ரத்தம் அப்படி அலை அலையாய் பாய்கின்றது, காற்றும் கடலும் எல்லா இயக்கமும் அந்த அலை போன்ற இயக்கத்திலேதான் இயங்குகின்றன‌
(மின்சாரம் கூட அந்த இயக்கமே, மின்னணு கருவிகளும் அந்த இயக்கமே, இதனாலே வரைபடங்களில் அலை அலையான வடிவங்களை நாகம் போல் காணமுடியும்
இதுதான் நாகதத்துவம்)
இந்த சூட்சுமத்தை உணர்ந்த ரிஷிகள் ஏழு பெரும் சக்திகள் உலகை இயக்குவததை உணர்ந்து அதை ஏழு பெரும் நாகங்கள் என்றார்கள்
மானிட மனதில் அலை அலையாய் எழும் சிந்தனைகளுக்கும் அந்த இயக்கத்துக்கும் ஒற்றுமையினை உணர்ந்தார்கள்
இந்த சலனம் இந்த இயக்கத்தை கட்டுபடுத்தும் ஒரே சக்தி அந்த பரம்பொருள் என்றார்கள்
அந்த பரம்பொருளே இந்த இயக்கத்துக்கெல்லாம் அதிபதி எல்லாமே அவன் கட்டுப்பாடு என சொல்ல இறைவனை அந்த நாகத்தோடு சொன்னார்கள்
இயக்கம் இறைவனுக்கு கட்டுபட்டது என சொல்ல விஷ்ணுவினை பாம்பின் மேல் படுக்க வைத்தார்கள் நாகம் அவனுக்கு சுருண்டு கட்டுபட்டது என்பது இயக்கத்தை கட்டுபடுத்துவது பரமாத்மா என்றார்கள்
சிவனுக்கு அப்படியே கழுத்தில் நாகமிட்டு சொன்னார்கள், முருகனுக்கும் விநாயகனுக்கும் சூரியனுக்கும் அன்னை சக்திக்கும் சொன்னார்கள்
எல்லா இயக்கத்தையும் நாக வடிவில் சொல்லி அதனை கட்டுபடுத்துவது இறைவன் என்றார்கள்
இன்னொன்றை சூசகமாக சொன்னார்கள், இயக்கத்தை கட்டுபடுத்தும் அந்த சலனமற்ற நிலையே இறைநிலை என்றார்கள், பாம்பு என்பது இயக்கம் அதை கட்டுபடுத்துவது இறை நிலை,மனதை கட்டுபடுத்தினால் இறைநிலை அடையலாம் என அழகாக சொன்னார்கள்
இந்துஸ்தானில் நாக அடையாளமில்லாமல் வழிபாடே இல்லை, கோவில்கள் இல்லை, பூஜைகள் இல்லை, எதுவுமில்லை.
இந்துக்கள் நாகங்களில் பிரபஞ்ச இயக்கம் கண்டார்கள், உடல் நலனை கண்டார்கள் உடலின் செல் முதல் விந்துமுதல், ரத்தகுழாய், மரபணு முதல் நரம்பு நாடி குடல் வரை பாம்பின் சாயலை கண்டார்கள்
மூலத்தில் சுருண்டிருக்கும் சக்தி எழும்பி தலையில் விரியும் அந்த இயக்கத்தை நாகமென உணர்ந்தார்கள்
இந்துக்களின் தர்ப்பணம் எனும் முன்னோர் வழிபாடும் அதன் தாத்பரியமே
இன்றைய விஞ்ஞானம் மனித மரபணுக்களில் 84 அம்சங்கள் உள்ளன. அதில் முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாகக் கொடுப்பது உண்டு. சில அம்சங்கள் ஆதியில் இருந்து வருவதும் உண்டு
முன்னோர்களிடம் இருந்து பெற்ற இந்த மரபணுக்களை அடுத்த சந்ததிக்குக் கொண்டு செல்ல வேண்டியது, அதை வருங்கால சந்ததிக்கு கொண்டு செல்லுவது ஆண்கள் கடமை என்பதால் அவர்களாலே தான் அது முடியும் என்பதால் ஆண்களை முன்னிறுத்தினார்கள்.
அதே நேரம் பெண்கள் குறிப்பிட்ட நிலையில் குறிப்பிட்ட, இடங்களில் தர்ப்பணம் செய்யவும் இந்துமதம் அனுமதித்தது.
ஏன் சில தலைமுறை பெயர்களை சொல்லச் சொன்னார்கள்?
ஒரு மனிதன் தன் எல்லா தலைமுறையும் அறிந்திருக்க முடியாது. அது சாத்தியமுமில்லை. ஆனால் சில தலைமுறையினை அறிந்திருந்தால் வந்த வழி தெரியும். பூர்வீகம் தெரியும். இச்சமூகத்துக்கு அவர்கள் என்னென்ன கடமைகள் செய்தார்கள் என்பதும் தெரியும்.
அப்படியே நாம் என்ன செய்யவேண்டும் என்பதும் தெரிய வரும் அல்லது என்ன செய்யக்கூடாது என்பதாவது தெரிய வரும்.
இதனாலே சில தலைமுறைகளை நினைத்துப் பார்க்கச் சொன்னவர்கள், இன்னும் ஆழமாகச் சிந்திக்கச் சொன்னார்கள்.
மூன்று அல்லது ஏழு தலைமுறைக்கு முன் யார் மூலம், அதன் முன்னோர்கள் யார், அவர்கள் முன்னோர்கள் யார் என்பதை சிந்திக்க சொன்னார்கள்.
அப்படி சிந்திக்கும் போது மூல மரபணு ஒன்றே என்பதும், எல்லோரும் அங்கிருந்துதான் உருவானோம் என்பதும் தெரிய வரும்.
விஞ்ஞானம் இதனை மிகத் தெளிவாகச் சொல்கின்றது. அதன் பரிணாம விதிப்படி தொடக்கத்தில் இருந்த ஒரு உயிரில் இருந்து தான் இங்கு எல்லாமும் தோன்றிற்று. மானிடனும் அதனில் இருந்து வந்தவனே என்கின்றது.
இதைத்தான் தர்ப்பணம் செய்யும் போதும் இந்துமதம் போதித்தது.
இன்று டி.எ.ஏ என விஞ்ஞானம் சொல்லும் மரபணுவினை என்றோ போதித்தது இந்துமதம் இதனாலே சிலவகை பெரும் நோய்கள் குலதெய்வ கோவிலில் தீரும் என்றது, காரணம் குலதெய்வ கோவிலில் இருக்கும் சக்தியும் காலம் காலமாக அந்த மரபில் நிற்கும் சக்தி இந்த மரபணுவினை தொடும்போது அதனுடன் கலக்கும் போது அந்த உடல் நோயில் இருந்துவிடுதலையாகின்றது
குலதெய்வ வழிபாடு ஏன் அவசியம் என்றால் அங்கேதான் வம்ச வம்சமாக வரும் அந்த பலமும் அருளும் இந்த பிரபஞ்சத்துடனான தொடர்பும் பெருகும் அது ஒருவனை மனதாலும் உடலாலும் பலமாக்கி வழிநடத்தும்
இந்த சூட்சுமமெல்லாம் கொண்டதே முன்னோர் வழிபாடு
இந்த ஜேம்ஸ் வாட்சன் சொன்ன மரபணு படம் அப்படியே இந்துக்கள் சொன்ன இரு நாகங்கள் வடிவாக இருந்தது, மரபணு என இன்றைய விஞ்ஞானம் சொன்னதையே அன்று நாக வழிபாடு என சொல்லி அது முன்னோர்களுடம் பிரபஞ்சத்துடனும் கலந்திருக்கும் வழிகளையும் சொல்லி, உடல் நலம் பிள்ளைபேறு மனநலம் பிரபஞ்ச யோக சக்தி என எல்லா சக்திகளையும் பெற போதித்த மதம் இந்துமதம்
விஞ்ஞானம் என்பது இந்துக்களின் எல்லா ஞான ரகசியங்களையும் விளக்கி நிருபிக்க வந்த வடிவமே அன்றி அது புதிதாய் சொல்லவோ உருவாக்கவோ எதுவுமில்லை, இந்துமதம் சிகரத்தில் ஏறி நின்று கண்ட உண்மைகளை சாட்சியாய் சொல்ல இப்போதுதான் மலை அடிவாரத்தின் அருகே வந்து கொண்டிருக்கின்றது விஞ்ஞானம்

No comments:

Post a Comment

சித்தர்கள் ஜீவ சமாதியான இடம்,* _அவர்கள் வாழ்ந்த நாட்கள்._

  சித்தர்கள் ஜீவ சமாதியான இடம்,* _அவர்கள் வாழ்ந்த நாட்கள்._ *1. அகஸ்தியர்* – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார். *2. பதஞ்சல...