ஜாதகத்தில் யாருக்கெல்லாம்
"(சனி,சந்திரன்),(சனி,சூரியன்)
(சூரியன்,கேது)" இந்த 3 கிரகச் சேர்க்கைகளில் ஏதேனும் ஒரு கிரகச் சேர்க்கை பெற்று இருப்பவர்களுக்கு அவர்களுக்கு வாழ்க்கையில் எந்த மாதிரி குணங்கள் பிரச்சனைகள் கஷ்டங்கள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கலாம்.
1.

(சனி,சந்திரன் கிரகச் சேர்க்கை)

யாருடைய ஜாதகத்தில் எல்லாம் (சனி,சந்திரன்) கிரகச் சேர்க்கை இருக்கின்றதோ அவர்களுக்கு அம்மா மூலம் வரக்கூடிய அன்பு பாசம் நேசம் அரவணைப்பில் உதவிகள் இவர்கள் எதிர்பார்க்கும் வகையில் இருக்காது.தாய் மூலம் தேவையில்லாத பிரச்சினைகள் ஏமாற்றங்கள் தர்மசங்கடங்கள் இவர்களுக்கு கண்டிப்பாக ஏற்படும்.

இவர்கள் வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்திலும் இவர்கள் அம்மா எடுக்கின்ற முடிவுகள் அது என்றைக்குமே இவர்கள் வாழ்க்கைக்கு சாதகமாக இருக்கிறது பாதகமாக இழப்புகளில் பிரச்சனைகளில் தான் முடிந்திருக்கும் முடியும்.

வலுக்கட்டாயமாக இவர்களின் அம்மா இவர்கள் வாழ்க்கையில் தேவை இல்லாத விஷயங்களில் தலையிட்டு இவர்களுக்கு பிரச்சனைகளை கஷ்டங்கள் ஏற்படுத்துவார்கள்.அம்மா சொல்படி இவர்கள் எந்த விஷயத்தை செய்தாலும் அதனால் இவர்களுக்குத்தான் தேவை இல்லாத இழப்பீடுகள் பிரச்சினைகள் வரும்.

எங்கு நமக்கு அம்மா மூலம் வரக்கூடிய அன்பு பாசம் நேசம் அரவணைப்பு வராமல் போய்விடுமோ அம்மாவால் நமக்கு தேவையில்லாத பிரச்சினைகள் வந்து விடுமோ இது போன்று இவர்களுக்கு தவறான சிந்தனைகள் குணங்கள் இருக்கும்.அதேபோன்று இவர்கள் கையில் எவ்வளவு பணம் இருந்தாலும் இவர்கள் ஆசைப்பட்ட உணவை இவர்களால் சாப்பிட முடியாது.அதாவது இவர்கள் விருப்பப்படும் எந்தவிதமான உணவையும் இவர்களால் அதிகமாக சாப்பிட முடியாது.

செரிமானக் கோளாறுகள் ,அல்சர் கழிவு உறுப்பு சார்ந்த பிரச்சினைகள் அஜீரணக் கோளாறுகள்,food poison,
சளி பிரச்சினை,இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் சிவப்பணுக்கள் குறைவாக இருப்பது, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு,இதுபோன்ற நோய்களில் இவர்களுக்கு ஏதாவது ஒன்று, இரண்டு இருக்கும்.

அதேபோன்று இவர்கள் எங்கு சென்றாலும் தண்ணீர் பற்றாகுறை இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்.தண்ணீரை இவர்கள் மாற்றிக் குடித்தார்கள் என்றால் இவர்கள் உடம்பிற்கு அது ஒத்து வராது.தண்ணீர் மூலமாகவே உடல் ரீதியான பிரச்சினைகள் இவர்களுக்கு ஏற்படும்.

அதேபோன்று இவர்கள் எந்த வாடகை வீட்டிற்கு சென்றாலும் அங்கு தண்ணீர் பற்றாக்குறை இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்.இவர்கள் புதிதாக சொந்த இடத்திலோ அல்லது வேறு ஏதாவது இடத்திலோ இவர்கள் 1000 அடி போர் போட்டாலும் அங்கே தண்ணீர்
வராது.தண்ணீரைப் பார்த்து இவர்களுக்கு எப்போதுமே ஒரு பயம் இருக்கும் ஆறுகள் ஏரிகள் கடல்களை பார்க்கும்போது இவர்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற உணர்வுகள், ஒரு தாழ்மனப்பான்மைகள் ,ஒரு பய உணர்ச்சிகள் இவர்களுக்கு ஏற்படும்.

அதேபோன்று இவர்களுக்கு மனக்குழப்பங்கள் மன வேதனைகள் மன அழுத்தங்கள் மனம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் பிரச்சனைகள் இவர்களுக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்களும் இவர்கள்தான்.

அடுத்தவர்களுக்கு எல்லாம் ஒரு பிரச்சினைகள் கஷ்டம், துக்கம்,ஏக்கம் என்றால் இவர்களைப் போன்று மற்றவர்களுக்கு அறிவுரை சொல்ல ஆலோசனை கொடுக்க யாராலும் முடியாது எப்பேர் பட்ட கஷ்டம் தூக்கம் கொண்டவர்களுக்கும் இவர்கள் அறிவுரை ஆலோசனைகள் கொடுத்தார்கள் என்றால் அவர்களுக்கு அந்த பிரச்சனைகள் கஷ்டங்கள் போய்விடும்.ஆனால் அதே பிரச்சினைகள் அதே கஷ்டம் இவர்களுக்கு வந்தால் இவர்களுக்கு அறிவுரை சொல்ல ஆலோசனைகள் கொடுக்க யாருமே வர மாட்டார்கள்.

அதேபோன்று இந்த (சனி,சந்திரன்) சேர்க்கை இருப்பவர்கள் சமுதாயத்திற்கு இவர்கள் அடிமையாக வாழ்பவர்கள் 4 பேர் மத்தியில் இவர்கள் பெயர் அடிபட கூடாது மற்றவர்கள் இவர்களைப் பற்றி தவறாக பேசி விடக்கூடாது.
என்ற எண்ணம் இவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.
2.

(சனி,சூரியன் கிரகச் சேர்க்கை)

யாருடைய ஜாதகத்தில் எல்லாம் (சனி,சூரியன்) கிரகச் சேர்க்கை இருக்கின்றதோ அவர்களுக்கு தந்தை மூலம் வரக்கூடிய அன்பு பாசம் நேசம் அரவணைப்பில் உதவிகள் இவர்கள் எதிர்பார்க்கும் வகையில் இருக்காது.தந்தை மூலம் தேவையில்லாத பிரச்சினைகள் ஏமாற்றங்கள் தர்மசங்கடங்கள் இவர்களுக்கு கண்டிப்பாக ஏற்படும்.

தந்தையுடைய சொத்து நிலங்கள் வீடுகள் இவற்றையெல்லாம் அனுபவிக்கக்கூடிய கொடுப்பினைகள் இவர்களுக்கு இருக்காது.முதலில் எதுவுமே இருக்காது மீறி இருந்தாலும் இவர்களால் இவற்றை எல்லாம் அனுபவிக்க முடியாது.

ஒருவேளை அவர்களுக்கு தந்தையுடைய சொத்து வீடுகள் இருக்கிறது என்றால் அதனை இவர்கள் பேருக்கு மாற்ற அல்லது அனுபவிக்க இவர்கள் படாத பாடு பட்டு விடுவார்கள்.தன்னுடைய பெயரில் தந்தையை சார்ந்த எதையும் இவர்கள் நேரடியாக அனுபவிக்க முடியாது.இவர்கள் வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்திலும் இவர்கள் தந்தை எடுக்கின்ற முடிவுகள் அது என்றைக்குமே இவர்கள் வாழ்க்கைக்கு சாதகமாக இருக்கிறது பாதகமாக இழப்புகளில் பிரச்சனைகளில் தான் முடிந்திருக்கும் முடியும்.

வலுக்கட்டாயமாக இவர்களின் தந்தை இவர்கள் வாழ்க்கையில் தேவை இல்லாத விஷயங்களில் தலையிட்டு இவர்களுக்கு பிரச்சனைகளை கஷ்டங்கள் ஏற்படுத்துவார்கள்.தந்தை சொல்படி இவர்கள் எந்த விஷயத்தை செய்தாலும் அதனால் இவர்களுக்குத்தான் தேவை இல்லாத இழப்பீடுகள் பிரச்சினைகள் வரும்.

எங்கு நமக்கு தந்தை மூலம் வரக்கூடிய அன்பு பாசம் நேசம் அரவணைப்பு வராமல் போய்விடுமோ தந்தையால் நமக்கு தேவையில்லாத பிரச்சினைகள் வந்து விடுமோ இது போன்று இவர்களுக்கு தவறான சிந்தனைகள் குணங்கள் இருக்கும்.இவர்களுக்கு தந்தை உயிருடன் இருக்க மாட்டார். மீறி இருந்தார் என்றால் ஹிட்லர் போன்று இருப்பார்
இல்லையென்றால் தந்தையால் இவர்களுக்கு எந்த ஒரு உதவிகளும் புரோஜனங்களும் இல்லாமல் இருக்கும்.

அதேபோன்று இவர்கள் கையில் எவ்வளவு பணம் இருந்தாலும்.
மருத்துவம் சார்ந்த விஷயங்களில் பிரச்சனைகள்,பணம் இழப்புகள் இவர்களுக்கு அதிகமாக ஏற்படும்.
தரமான மருத்துவ சிகிச்சைகள் இவர்களுக்கு என்றைக்குமே கிடைக்காது.மருத்துவம் சார்ந்த விஷயங்களின் மூலமாகவே இவர்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் பணச் செலவுகள் விரயச் செலவுகள் இவர்களுக்கு அதிகமாக ஏற்படும்.ஒரு சரியான ஒரு மருத்துவம் இவர்களுக்கு வாழ்க்கையில் கிடைக்காது.

என்னதான் இவர்கள் மருத்துவ சிகிச்சைகள் பார்த்தாலும் மருந்து மாத்திரைகள் உட்கொண்டாலும் இவர்களுக்கு நோய்கள் உடல் உபாதைகள் அவ்வளவு எளிதாக குணமாகாது.பலவிதமான மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொள்பவர்கள் இவர்கள்தான்.

அதேபோன்று அரசாங்கத்தின் மூலம் இவர்களுக்கு கிடைக்கக்கூடிய எந்தவிதமான நலத்திட்டங்களும் அவ்வளவு எளிதாக இவர்களுக்கு கிடைக்காது.இவர்கள் நினைக்கும் காலத்திற்குள் நேரத்திற்குள் அரசாங்கத்தின் மூலம் கிடைக்கக்கூடிய எந்தவிதமான நலத்திட்டங்களும் இவர்களுக்கு அவ்வளவு எளிதாகக் கிடைக்காது வராது.

இது சார்ந்த விஷயங்கள் இவர்களுக்கு கிடைப்பதற்கு மிகவும் காலதாமதம் ஆகிக் கொண்டே செல்லும்.அரசாங்கத்தின் மூலம் எந்தவிதமான உதவிகளும் இவர்களுக்கு அவ்வளவு எளிதாக கிடைக்காது.
3.

(சூரியன்,கேது கிரகச் சேர்க்கை)

யாருடைய ஜாதகத்தில் எல்லாம் (சூரியன் கேது) கிரகச் சேர்க்கை இருக்கின்றதோ இவர்கள் தந்தை என்றைக்குமே தன்னுடைய குடும்பத்திற்கு செய்ய வேண்டிய ஆற்ற வேண்டிய கடமைகள் செயல்பாடுகளை சரிவர அவர் செய்ய மாட்டார்.

தந்தையாக தன்னுடைய குடும்பத்திற்கு பிள்ளைகளுக்கு ஆற்ற வேண்டிய செயல்பாடுகளை கடமைகளை இவர்களின் தந்தையால் ஒழுங்காக செய்ய முடியாது.தன்னுடைய குடும்பத்தினரை எப்படி நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் எப்படி சரியான வழியில் தன்னுடைய குடும்பத்தினரை கொண்டு செல்ல வேண்டும் என்பதை இவர் அறிந்திருக்க மாட்டார்.

வெறும் கடமைக்காக கடனுக்காகவும் வேண்டா வெறுப்பான என்னத்துடன் தான் இவர்கள் தன்னுடைய குடும்பத்தினருடன் இருப்பார்கள் வாழ்வார்கள்.தன்னுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து நன்றாக வாழ வேண்டும் என்ற ஆசை இவர்கள் தந்தைக்கு இருக்காது.
எந்த ஒரு விஷயத்தையும் செயல்பாடுகளையும் கடமைகளையும் தன்னுடைய குடும்பத்திற்கு செய்ய இவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள் கஷ்டப்படுவார்கள் நான் ஏன் இதெல்லாம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இருக்கும்.

அதாவது வெளி உலகத்தில் தன்னுடைய சமூகத்தில் யாருக்காவது ஒரு பிரச்சனை கஷ்டம் என்றால் இவர்கள் உடனடியாக சென்று அவர்களுக்கு உதவி செய்வார்கள்.அதாவது தன்னுடைய ஊரில் மற்றவர்களெல்லாம் ஒரு பிரச்சனை என்றால் உதவி செய்யக் கூடிய இவர்கள் தன்னுடைய குடும்பத்தினரை கண்டு அவ்வளவாக கொள்ள மாட்டார்கள்.

அதாவது மற்றவர்களுக்கு எல்லாம் இவர்கள் பாரபட்சம் பார்க்க மாட்டார்கள் ஆனால் தன்னுடைய குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் ஏதாவது வாங்க வேண்டும் என்றால் மட்டும் இவர்கள் பாரபட்சம் பார்ப்பார்கள்.

குடும்பத் தலைவராக இவர்கள் என்றைக்குமே சரியாக நடந்து கொள்ள மாட்டார்கள். ஆணாதிக்கம் தலைமை தாங்கக்கூடிய குணங்கள் நிர்வாகம் செய்யக் கூடிய குணங்கள் இவர்களுக்கு அதிகமாக இருக்காது.
அதாவது ஊருக்கெல்லாம் உதவக்கூடிய இவ்வாறு தன்னுடைய குடும்பத்தையும் பிள்ளைகளையும் கண்டு கொள்ள மாட்டார்.

இவர்கள் என்றைக்குமே வீட்டில் டம்மி பீஸ் ஆக இருப்பார்கள்.
குடும்பத்தில் இவர்களின் பேச்சு எடுபடாது.குடும்பத்தினர் இவர்களே ரொம்ப மதிக்க மாட்டார்கள்.வீட்டில் அம்மாவிடத்தில் திட்டு வாங்கக் கூடிய நபராகவும் இருப்பார்கள்.
இவர்கள் வீட்டில் என்றைக்குமே அம்மா தான் குடும்ப தலைவராக இருப்பார்கள்.

இந்த "(சூரியன் கேது)" கிரக சேர்க்கை கொண்டவர்களின் தந்தையும் இதே போன்று தான் இருப்பார் இவர்களும் இதே போன்று தான் இருப்பார்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான குணங்கள் தான் இருக்கும்.தந்தையும் இதே போன்று தான் இருப்பார்கள் இவர்களும் இதே போன்று தான் இருப்பார்கள்.

அதாவது இது போன்ற "(சூரியன் கேது)" கிரகச் சேர்க்கை கொண்டவர்களின் தந்தைக்கும் இது பொருந்தும்,இவர்களுக்கும் இது பொருந்தும் இருவரும் இதே போன்று தான் இருப்பாரு நடந்து கொள்வார்கள்.இருவருக்கும் நான் மேல் சொன்ன அனைத்து விதமான விஷயங்களும் பொருந்தும்.

மேற்கொண்டு யாருடைய ஜாதகத்தில் எல்லாம் "(சனி,சந்திரன்),(சனி,சூரியன்),(சூரியன்,கேது) "இந்த 3 கிரக சேர்க்கைகளில் ஏதேனும் ஒரு கிரக சேர்க்கை இருக்கின்றதோ அவர்கள் இந்த பதிவில் நான் சொல்லியிருப்பதை உங்களுடைய நடைமுறை வாழ்க்கையில் பொருத்திப் பாருங்கள் எல்லாம் மிகச் சரியாக இருக்கும்.

ஜாதகத்தில் இந்த சூட்சமத்தை பொருத்தி பாருங்கள் எல்லாம் மிகச் சரியாக இருக்கும்.

அடுத்த பதிவில் ராகு பகவானை பற்றிய சில விஷயங்கள் பார்க்கலாம்.

உங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் நல்ல வழிகாட்டுதல்களையும் உங்களுடைய எதிர்கால பலன்களையும் தெரிந்து
கொள்ள விருப்பம் உடையவர்கள்
No comments:
Post a Comment