இறைசக்தி என்ற பிரபஞ்ச ஆற்றல் (மனித மூளையாக) நம்மிடமே உள்ளது.
இந்திய திருநாடு உலகம் போற்றும் புனித பூமியாகும். அதிலே தமிழ் நாட்டில் தான் சித்தர்கள், யோகிகள், ஞானிகள் அதிகமாக தோன்றி உள்ளார்கள். ஆன்மாவில் இருக்கும் அருள் அமுதம் சுரந்து, அதை அனுபவித்தால் தான் இறைவனுடைய சுவை என்ன என்பதை அறிய முடியும்.
சங்கு நாதம் என்பது ஓம் என்ற மந்திர அதிர்வு அலையாக புராதன காலத்தில் இருந்து நமக்கு சொல்லப்பட்டு வருவதாகும். "ஓம்" என்ற மின்காந்த அலைகள் வான்வெளி மற்றும் அணுக்கள் மற்றும் தண்ணீர் மற்றும் மனித உடலின் வெற்றிடத்திலும் சென்று செயல்படுவதாக உள்ளது. இந்த மின்காந்த அதிர்வானது வான்வெளியிலும், பூமி சுற்றும் காரணமாக தோன்றும் அதிர்விலும் (7.83 HZ என்ற சமநிலை அலைகள்) அதிகமாக இருப்பதை விஞ்ஞானம் உறுதி செய்துள்ளது. அந்த 7.83 HZ அதிர்வின் ஓசையானது "ஓம்" என்ற அதிர்வாக கேட்கப்படுகிறது.
இதனால் தான் நமது முன்னோர்கள் உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்றும் உடலே இறைவன் குடி கொண்டுள்ள ஆலயம் என்றும், உடம்பினை வளர்க்கும் உபாயம் அறிவதன் அவசியம் பற்றியும் சொல்லிச் சென்றுள்ளனர்.
"உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்தேனே"
- திருமந்திரம்: 717
இந்த உடலானது அழிந்து விட்டால் - உயிர் எதில் இருக்கும்? அதுவும் அழிந்து விடும். இதனால் உண்மையான அறிவையும் அடைய முடியாது போய்விடும். அதனால் உடம்பு அவசியம் என்று கருதி அதனை பாதுகாத்தேன். இதற்கான வழியை நான் அறிந்துள்ளேன் என்கின்றார் திருமூலர். அடுத்த பாடலில் இந்த உடல் நீண்டகாலம் இருக்க வேண்டிய அவசியம் என்ன அது பற்றியும் சொல்கிறார்.
"உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண் டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே.”
என்று திருமூலர் இந்த உண்மையை குறிப்பிடுகிறார்.....
மனிதர்களாக பிறந்த ஒவ்வோருவரும் கடவுளின் பிம்பமாக இருந்தாலும், அனைவரும் முயற்சி செய்தால் மட்டுமே "மனித உடம்பும், மனித வாழ்வும் ஊழிக் காலம் வரை" என்று தன்னை மாற்றிக் கொள்ள வழியுள்ளது என்பதை நம்ப வேண்டும் என்பதே எனது ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
எனவே நமது உடலில் உள்ள அடிப்படை 11 பொருள்களை (ஆற்றல் மிக்கதாக) அதிகப்படுத்துவதே முதல் அவசியமாகும். அப்போதுதான் இறைசக்தியின் செயல்பாடுகளை முழுமையாக அடைய வழி உள்ளது. உடலை தயார் செய்யாமல் (மூளையினை இயக்கச் செய்வதால்) உண்மையான இறைசக்தியை பலரால் அறிய முடியாத நிலையே ஏற்படுகின்றது.
இறைசக்தியின் செயல்பாடுகள் என்பது மூன்று வகையான செயல்பாடாக (அனைத்திலும்) இயக்கமாக அமைந்துள்ளது.
இது
(1) சூரிய ஒளியின் காலத்தில் நடைபெரும் இயக்க மாற்றங்கள் என்பதாகவும்,
(2) இருட்டு என்ற ஓய்வு நிலைகளில் நடைபெரும் இயக்க மாற்றமாகவும்,
(3) இயற்கையின் சூட்சும நிலையான (பஞ்சபூத சமநிலையின்போது) நடைபெரும், சமநிலை சார்ந்த இயக்க மாற்றமாகவும் அறியப்பட வேண்டி உள்ளது.
மனித உடல் என்பதன் மாற்றம் என்பது;
சூரிய ஒளியின் பகல்:
அதிகாலையில் 4.00 முதல் 6.00 மணிக்குள் விழித்து எழுவது, ஏதோ உணவுகளை சாப்பிடுவது, தினசரி வேகமான உழைப்பது, நம்மை சுற்றி உள்ளவற்றை பற்றிய பல்வேறு புரிதல் மற்றும் சிந்தனைகள் காரணமாக ( உடல் மற்றும் மனத்தின் ) செயல்பாடுகள் அமைகின்றது.
சூரிய ஒளி இல்லாத இருட்டு:
இரவு 9.00 மணிக்குள் உறங்குவது, உறங்கும் அறையில் எந்தவோரு வெளிச்சம் இல்லாத நிலை, அதிகமான இரைச்சல் சப்தம் இல்லாதபோது - மூளையின் கட்டுப்பாட்டில் (உடல் பொருள்களுக்குள் ஆற்றல் மாற்றச் செயல்பாடுகள்) நடைபெருவதாக உள்ளது.
குறிப்பு: இரவு 9.00 மணிக்கு பிறகு விழித்து இருப்பது மற்றும் உறங்கும் அறையில் வெளிச்சம் இருப்பது காரணமாக (உடல் முழுவதும் நடைபெற வேண்டிய இயற்கை மாற்றம்) தடைபடுவதன் காரணமாக சர்க்கரை நோய் மற்றும் கேன்சர் நோய்கள் அதிகமாக உண்டாவது நிரூபிக்கப்பட்டு வருகின்றது.
பஞ்சபூத சமநிலை இட அமைப்பு:
மனித உடலின் சரியான சமநிலை உருவாக (பஞ்சபூத சமநிலை மட்டுமே) காரணமாகின்றது. கண்ணுக்கு எந்தவோரு பொருள்களும் தெரியாத இருட்டு, காதுக்கு எந்தவோரு சப்தமும் கேட்காத அமைதியான சூழ்நிலை, உடலை சுற்றிலும் உள்ள வெப்பநிலை 23 டிகிரியாக குறைந்து இருப்பதால் (உடல் மாற்றம்) விரைவாக நடக்க காரணமாவது, காற்றின் அசைவு அதிகமில்லாமல் சுவாசத்திற்கான ஆக்ஸிஜன் கிடைக்கும் சூழ்நிலை, பூமி மற்றும் வான்வெளியின் கதிர்கள் பாதிப்பு மற்றும் நம்மை சுற்றி இருக்கும் தேவையற்ற பொருள்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு அலைகள் பாதிக்காத (ஓம் என்ற பாதுகாப்பு) கவச ஆற்றல் இயக்கம் இருப்பதால் ஏற்படும் உடல் மாற்றம் என்பது மட்டுமே - உண்மையான மாற்றமாகின்றது.
பஞ்சபூத சமநிலை பற்றிய தகவல்களை (தமிழகத்தில்) முதல் முதலாக கருத்துக்களாக வெளிப்படுத்தி வருகின்றேன்.
வான்வெளி என்ற பிரபஞ்சம் என்பது (இருண்ட ஒன்றுமில்லாத) 99.9% வெற்றிடமாக உள்ளதாக விஞ்ஞானம் அறியச் செய்கின்றது. இந்த வெற்றிடம் முழுவதும் அழுத்தம் மற்றும் மாறுபட்ட பல்வேறு அதிர்வு உள்ள மின்காந்த அலைகளே நிறைந்துள்ளதாக விளக்கம் தருகின்றது. பல்வேறுபட்ட இந்த மின்காந்த அதிர்வுகளில் (ஓம் என்ற 7.83 Hz) அதிர்வு என்பது மட்டுமே, பிரபஞ்சத்தின் எல்லா பகுதிகளிலும் இயக்கமாக உள்ளதாகவும் தெரியப்படுத்துகின்றது.
அதுபோல பூமியானது சுற்றும்போது உண்டாகும் அதிர்வின் அலைகளும் (ஓம் அதிர்வு அலையாக) உருவாகின்றதாகவும் அறியச் செய்கின்றது.
அதுபோல வான்வெளிக்கும், பூமியின் காற்று மண்டத்திற்கும் இடையே (வெற்றிடம்) உள்ளதாகவும், இங்கு உண்டாகும் மின்னல்கள் காரணமாக - இந்த வெற்றிடத்திலும் ஓம் என்ற மின்காந்த அலைகள் மட்டுமே நிறைந்து உள்ளதாகவும் விஞ்ஞானம் தெரியப்படுத்துகின்றது.
Natural Phenomenon: The 7.83 Hz frequency is the fundamental frequency of the Schumann Resonance, a standing EM wave in the cavity between the Earth's surface and the ionosphere, primarily generated by global lightning strikes.
பூமியின் மேற்பரப்புக்கும் அயனோஸ்பியருக்கும் இடையிலான இடைவெளி சுமார் 100 கிமீ தடிமன் கொண்டது, மேலும் இந்த "அலை வழிகாட்டி" குறிப்பிட்ட அதிர்வெண்களில் நிற்கும் அலைகளை உருவாக்குகிறது, 7.83 ஹெர்ட்ஸ் அதிர்வெண் என்பது பூமியின் மேற்பரப்புக்கும் அயனோஸ்பியருக்கும் இடையிலான குழியில் நிற்கும் EM அலையான அடிப்படை அதிர்வெண் ஆகும், இது முதன்மையாக உலகளாவிய மின்னல் தாக்குதல்களால் உருவாக்கப்படுகிறது. இது பூமி-அயனோஸ்பியர் குழிக்குள் மின்னல் தாக்குதல்களால் உருவாக்கப்படும் ஒரு இயற்கை மின்காந்த துடிப்பு ஆகும்.
குறிப்பு: சித்த மருத்துவ நூல்களில் (வானத்தின் இடியில் ஒன்று என்பதை) மின்னலானது பூமியில் விழுகின்ற இடங்களில் கிடைக்கும் மண்ணில், வெடியுப்புச் சத்து அதிகமாக கிடைப்பதை எடுத்து பயன்படுத்த சொல்வதாக அறியலாம். ஆனால் சித்தர் கலையில் (வானத்தின் இடியில் ஒன்று என்பதை) ஓம் அதிர்வாக அறியப்பட வேண்டுவதாக உள்ளது.
பூமியில் உள்ள தண்ணீர் என்பது (ஓம் என்ற 7.83Hz) உள்ள இடங்களில் மட்டுமே, தனது உச்சகட்ட அணுப் பிணைப்பு காரணமாக - ஸ்ரீ சக்கர ஆற்றல் வடிவ நிலையாகி செயல்படுகின்றதாகவும், இந்த ஓம் அதிர்வு இல்லாத இடங்களில் சாதாரணமான (வட்டம், சதுரம், முக்கோணம், செவ்வகம் போன்ற) பல்வேறு மாறுபட்ட பிணைப்பாகவே உலகம் முழுவதுமாக இயங்கி செயல்படுகின்றது.
மனித மூளை என்பது (ஓம் என்ற 7.83Hz) மின்காந்த அலைகள் உள்ள இடத்தில் மட்டுமே, உடலுக்கு தேவையான அனைத்து கட்டளைகளையும் சரியாக தந்து இயங்கச் செய்கின்றது. மனிதர்கள் ஓய்வாக ஆழ்ந்து உறங்கும்போது அல்லது முறையாக கற்ற தியானம் மூலமான மிக அமைதியான மனநிலையின்போது (7.83 Hz) அதிர்வு நிலைக்கு மூளையின் செயல்பாடுகள் இயக்கமாகின்றது. மனித உடலை பொருத்த வகையில் (மூளையும், இருதயமும் மட்டுமே) 7.83Hz அதிர்வு நிலை அடையும்போது, சரியான இயக்கங்களை உடலுக்குள் செயல்படுத்துகின்றதாக உள்ளன.
பொதுவாக மனித மூளையானது (கண்ணால் பார்ப்பது, காதால் கேட்பது, மூக்கால் நுகர்வது, நாக்கால் சுவைப்பது, உடலால் தொடு உணர்வு, நம்மை சுற்றியுள்ள பொருள்களின் மின்காந்த அலைகளால் மனதில் உண்டாகும் எண்ணங்களால்) தனது இயல்பான அதிர்வில் மாறுபட்டுக் கொண்டே இயங்குவதாக உள்ளது.
மூளை அலைகள் மற்றும் உணர்வு நிலைகள்: தியானம் பற்றிய அறிவியல் ஆய்வுகள், வெவ்வேறு உணர்வு நிலைகளை குறிப்பிட்ட மூளை அலை அதிர்வெண்களுடன் இணைக்கின்றன:
மனித உடல் செயல்பாடு மற்றும் வாழும் இடத்தின் பஞ்சபூத ஆற்றல் மாறுபாடுகள் காரணமாக மனித மூளைக்குள் 5 வகையான அதிர்வு மாற்றங்கள் உண்டாகிறது. இது முறையே
(1) காமா அலைகள் Gamma waves (35 - 100 Hz) 35 ஹெர்ட்ஸ்க்கு மேல் 100 ஹெர்ட்ஸ் வேகத்தில், மூளைக்குள் உற்பத்தி செய்யப்படும் அதிவேக மூளை அலைகள் ஆகும். உயர்நிலை அறிவாற்றல் செயல்பாடு நீங்கள் தீவிர கவனம் செலுத்தும்போது அல்லது சிக்கலைத் தீர்ப்பதில் தீவிரமாக ஈடுபடும்போது உயர் மட்ட தகவல் செயலாக்கம், அல்லது கடினமான உழைப்பு மற்றும் கடினமான சிந்தனை செலுத்தும்போது நுண்ணறிவின் வெடிப்புகள் மற்றும் உயர்ந்த கருத்து, உணர்தல், கற்றல் மற்றும் தகவல் செயலாக்கம் மனித மூளை காமா அலைகளை உண்டாகுவதாக உள்ளது.
(2) பீட்டா அலைகள் (Beta Waves) 12 – 35 Hz – பதினான்கிற்கும் மேற்பட்ட சிபிஎஸ் அலைகள் பீட்டா அலைகள். நாம் பெரும்பாலும் இருப்பது இந்த அலைவரிசையிலேயே. சாதாரண விழிப்பு உணர்வு, சுறுசுறுப்பான சிந்தனை, செறிவு, பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் இயல்பான விழிப்புணர்வு மற்றும் பகுத்தறிவு உணர்வு,
(3) ஆல்ஃபா அலைகள் (Alpha Waves) 8 – 12 Hz – எட்டிலிருந்து பதிமூன்று சிபிஎஸ் வரை உள்ள அலைகள் ஆல்ஃபா அலைகள். இது தூக்கம் தழுவுவதற்கு முன்னும், அரைத் தூக்கத்திலும் ஏற்படும் அலைகள். தியானத்தின் ஆரம்பத்திலும் இந்த அலைகள் ஏற்படும். (இது கற்பனை என்ற கனவு மயக்க நிலைக்கு மட்டுமே செல்ல உதவும்.) நிதானமான விழிப்பு (கண்களை மூடிய நிலையில்), ஆழ்ந்த உடல் மற்றும் மன தளர்வு, ஆழ் மனதிற்கான நுழைவாயில், லேசான தியானம் மற்றும் காட்சிப்படுத்தலுடன் தொடர்புடையது.
(4) தீட்டா அலைகள் (Theta Waves) 4 – 8 Hz – நான்கிலிருந்து ஏழு சிபிஎஸ் வரை உள்ள அலைகள் தீட்டா அலைகள். இவை குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகின்றன. அதே சமயம் ஆழ்ந்த தியானத்தின் போதும் வெளிப்படுகின்றன. இது இறை அதிர்வான ஓம் என்ற 7.83 HZ அதிர்வு அலையாக உள்ளது. மனித மூளையானது இறை நிலை உணர்வுகளை அடையவும் − மனித உடல் மற்றும் மனதால் இறை நிலையுடன் இணைய "இறை அதிர்வான" ஓம் என்ற 7.83 HZ அதிர்வு ஒன்று மட்டுமே காரணமாகின்றது. லேசான தூக்கம் (REM), ஆழ்ந்த தியானம், ஹிப்னாஸிஸ் மற்றும் REM கனவு நிலை, ஆழ் மனம் மற்றும் படைப்பாற்றலுடன் தொடர்புடையது, அமைதி மற்றும் தடுப்பு மூலம் கவனத்தை கட்டுப்படுத்துதல்.
(5) டெல்டா அலைகள் (Delta Waves) 0.5 – 4 Hz – நான்கிற்கும் குறைவான சிபிஎஸ் உள்ள அலைகள் டெல்டா அலைகள். பிறந்து சில மாதங்கள் வரை குழந்தைகளிடம் காணப்படுகின்றன. யோகிகள், சித்தர்களிடமும் இந்த டெல்டா அலைகள் காணப்படுகின்றன. ஆழ்ந்த, கனவில்லாத தூக்கம், மற்றும் மிகவும் ஆழமான ஆழ்நிலை தியானம், மயக்கமடைந்த மனம் மற்றும் குணப்படுத்துதலுடன் தொடர்புடைய உடலின் மீட்சி நிலை.
இந்த காமா அலைகள் மற்றும் பீட்டா அலைகளில் நாம் எந்த அதீத சக்தியும் பெற முடிவதில்லை. ஆனால் மற்ற அலை வரிசைக்குள் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடியும் போது எல்லா அதீதமான சக்திகளும் நமக்கு சாத்தியமாகின்றன.
குழந்தையும் தெய்வமும் பல வகையில் "ஒன்றுபட்ட பண்பிலே சிறப்பன" என்ற உண்மை, தமிழ்நாட்டுப் பழம் பெரு வழக்கம் ஆகும். ஆம் அவை இரண்டும் ஒரே தன்மை உடையன. குழந்தையைக் தெய்வமாகக் கொண்டாடுவதன்றித், தெய்வத்தையே குழந்தையாகக் கொண்டாடும் மரபும் தமிழ் நாட்டுக்குப் புதியதன்று. கடவுளரைப் பிள்ளையாகப் போற்றிப் பிள்ளைத் தமிழ்பாடி வழிபடும் வழக்கம் தமிழ் நாட்டில் இடைக் காலக்கில் சிறந்திருந்தது.
இதனால் மனித மூளையானது எப்போதும் (காமா அலைகள், பீட்டா அலைகள்) 10HZ க்கும் அதிகமான 100HZ இயக்கமாகவே செயல்பட்டு, நமது உடலை இயக்கக் காரணமாகி செயல்படுகின்றது. ஆனால் குழந்தையின் மனநிலை என்ற 7.83 HZ அதிர்வு நிலையே இறைவன் உணர்வு அதிர்வாக செயல்படுவதாகின்றது. இதனால்தான் குழந்தையும் - தெய்வமும் ஒன்றுபட்ட மனநிலை என்பதாக நமது முன்னோர்கள் சொல்லியதாக அறிய வேண்டி உள்ளது.
மனித மூளையானது;
(1) 7.83 HZ என்ற ஓம் என்ற அதிர்வு உள்ள இடங்களுக்குள் இருக்கும்போது, இந்த அதிர்வையே அதிகமாக பெற்று அதற்கான இயக்கச் செயல்பாடாக மாறிச் செயல்படுகிறது.
(2) ஆழ்ந்த உறக்கத்தின்போது (கனவுகள் இல்லாத அமைதியான நிலையில்) மட்டுமே, ஓம் என்ற அதிர்வின் நிலையாகி மூளை செயல்படத் தொடங்குகிறது.
(3) முறையாக தியானம் பயிற்சி காரணமாக (ஆழ்ந்த அமைதியான மற்றும் முழுமையான ஓய்வு மனநிலையின்போது) நமது மூளையானது ஓம் என்ற அதிர்வு நிலைக்கு செல்வதாக உள்ளது. இந்த நிலையானது எல்லோருக்கும் கிடைப்பதில்லை என்பதே உண்மையாகும்.
(4) உடலின் தண்டுவடப் பகுதியில் இருந்து மூளைக்குள் மட்டுமே, உருவாகி இயங்கும் DMT திரவம் என்பது (முழுமையான அமைதி மற்றும் இயக்கம் இல்லாத ஓய்வான உடல் நிலை அல்லது அதீத ஆனந்த நிலையான - எல்லா உயிர்கள் மீதும் அன்பு மனநிலை காரணமாக) சிறிதளவு நேரம் ஓம் என்ற அதிர்வு நிலையாகவும் இயக்கமடைகின்றது.
மனித உடலில் இயல்பாக மனித மூளைத் தண்டுவட திரவத்தில் 0.12 நானோகிராம்கள் (ng) முதல் 0.0001 மில்லிகிராம்கள் (mg) வரையிலான செறிவுகளில் எண்டோஜெனஸ் N,N-டைமெதில்ட்ரிப்டமைன் (DMT) கண்டறியப்பட்டுள்ளது . இருளில் ஆழ்ந்த தியானத்திற்கும் மாற்றப்பட்ட நனவு நிலைகளுக்கும் மனோவியல் விளைவை உருவாக்க (ஓம் என்ற அதிர்வு நிலைக்கு விரைவாக சென்று இயக்கமடைய ) சுமார் 25 மில்லிகிராம் DMT இன் விரைவான உற்பத்தி தேவைப்படும் என்பதாக அறிவியல் விளக்கம் தருகின்றது.
(5) ஆனால் பூமிப் பகுதியில் இயக்கமாக உள்ள ( பஞ்சபூத இயக்கங்களால் பாதிப்பு அடையாத ) சமநிலை உள்ள இடங்களில் சும்மா இருந்து வருகின்றபோது மட்டுமே, எந்தவோரு முயற்சியும் செய்யாமல், எல்லா நேரமும் ஓம் அதிர்வு நிலைச் செயல்பாடாக மூளையானது இயங்க தொடங்குகின்றது.
சும்மாயிரு சொல்லற நிற்றலுமே,
அம்மா பொருளொன்று மறிந்திலனே
என அருணகிரி நாதரும் குறிப்பிடுகிறார்.....
மனித மூளையில் நடுவில் உள்ள பீனியல் சுரப்பியில் இருந்து சுரக்கும் மெலடோனின் திரவமே, தினசரி உடல் இயக்கங்கள் சரியாக இயங்கும் கட்டளைகளாகி - உடல் சரியாக இயங்கச் செய்வதாக உள்ளது.
அதிகாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரையிலும் கிடைக்கும், சூரிய ஒளிக் கதிர்கள் கண்களின் வழியாக ஊடுருவிச் செல்லும்போது மட்டுமே - தினசரி உடல் இயக்கத்திற்கு காரணமான அளவு மெலடோனின் melatonin சுரக்கின்றது. காலை 6.00 மணிக்கு பிறகு பீனியல் சுரப்பி செயல்படுவது நின்று விடுகின்றது.
தினசரி சாப்பிடும் உணவின் சத்துக்கள் என்பது, இரவில் 9.00 மணிக்குள் உறங்கும்போது - மெலடோனின் திரவச் செயல்பாடு நன்றாக இயங்கி, உடலின் எல்லா செல்களுக்கும் சத்துக்கள் சென்று சேரக் காரணமாகின்றது. இரவு 9.00 மணிக்குமேல் தூங்காமல் விழித்து இருக்கும் போதும் அல்லது அதிக வெளிச்சமான இடங்களில் விழித்திருந்து வேலை செய்வதாலும் அல்லது தூங்கும் இடத்தில் நமது உடல்மீது (இருட்டாக இல்லாமல்) வெளிச்சம் பட்டுக் கொண்டே இருந்தால் - மெலடோனின் திரவத்தின் செயல்பாடு தடைபடுவதாக அமைகின்றது. இதனால் உடலுக்கான சமநிலையானது (இரவில் செயல்படாமல்) தடுக்கப்படுகின்றது. இதனால் பலவிதமான நோய்கள் உருவாக காரணம் ஏற்படுகிறது. குறிப்பாக சர்க்கரை வியாதி மற்றும் கேன்சர் உருவாக காரணமாகிறது.
The chemical formula for melatonin is 𝐶13𝐻16𝑁2𝑂2 and for dimethyltryptamine (DMT) is 𝐶12𝐻16𝑁2.
மெலடோனின் என்பதன் வேதியியல் சமன்பாடு. 𝐶13𝐻16𝑁2𝑂2 ஆகும். அதுபோல DMT திரவத்தின் வேதியியல் சமன்பாடு 𝐶12𝐻16𝑁2 ஆகும். கண்களுக்கு வெளிச்சம் தெரியாத மற்றும் உடல்மீது வெளிச்ச ஒளிகள் படாதபோது மட்டுமே மூளையின் செயல்பாடு சிறப்பாக அமைகின்றது.
சில தாவரங்களில் DMT திரவம் கிடைக்கின்றது. தாவரங்களில் கிடைக்கும் DMT திரவ பயன்பாடு 20 முதல் 30 நிமிட நேரம் மட்டுமே உடலுக்குள் செயல்படுவதாக உள்ளது. உடல் இந்த திரவத்தை உடனடியாக உடைத்து நீங்கச் செய்து விடுகின்றது. தொடர்ந்து தாவரங்களில் கிடைக்கும் அதிகமான பயன்பாடால், மனம் மற்றும் உடல் சார்ந்த பாதிப்புகள் உண்டாவது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக அளவில் DMT திரவத்தை மனிதர்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. நமது மூளையில் இருந்து DMT சுரக்கும்போது மட்டுமே, உடல் செல்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டு இயக்கமடைகின்றன.
சாதாரணமான மனிதர்களுக்கு (தினசரி உடல் இயக்கங்கள் சரியாக இயங்க) மெலடோனின் சுரப்பு உதவுகின்றது. சித்தர் நிலையை அடைய முயற்சிக்கும் மனிதர்களின் மூளையின் நடுவில் உள்ள பீனியல் பகுதியில் இருந்து (மெலடோனின் சுரப்பது) நிற்பதற்கு காரணமாகவும் இருட்டு மற்றும் ஒளிக் கதிர் உடல்மீது படாமல் இருக்க வேண்டும்.
உடல்மீது வெளிச்ச ஒளிகள் படாத இருட்டு இடத்தில் (சுமார் 4 வாரங்களுக்கு பிறகு) பீனியல் சுரப்பானது மெலடோனின் திரவத்திற்கு பதிலாக DMT திரவத்தை சுரக்க ஆரம்பிக்கின்றது. நமது மூளையில் இருந்து சுரக்கும் DMT திரவத்தை, நமது உடல் செல்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டு இயக்கமடைவதே - சித்தர் கலையாக அறிய வேண்டும்.
பஞ்சபூத சமநிலை இடம் காரணமாக (விரைவான மற்றும் உடலை பாதிக்காத) இயல்பான மாற்றங்கள் உண்டாகிடத் தொடங்கும் என்பதை அறிய வேண்டும். 24 மணி நேரமும் (மனித மூளை என்பது ) ஓம் என்ற பிரபஞ்ச அதிர்வு நிலையில் இருக்க காரணமாவது, பஞ்சபூத ஆற்றல் சமநிலை மட்டுமே ஆகும். மற்ற எல்லா வழிமுறைகளும் (மிகச் சிறிய நேரம்) மட்டுமே, இந்த அதிர்வின் நிலையை அறிய மட்டுமே உதவுகின்றது.
உடலுக்கு அடிப்படையாக உள்ள 11 தனிமங்கள் ஆற்றல்மிக்கதாக தனது உடலுக்குள் உருவாக்கிக் கொண்ட பிறகே. இருட்டு அறைக்குள் செல்லும்போது (DMT சுரப்பு காரணமாக) ஓம் அதிர்வு உடலின் எல்லா செல்களுக்குள் மாற்றத்தை உணரச் செய்யும்.
இன்றைய மனிதர்களின் உடல் செல்களில் உள்ள 11 தனிமங்கள் குறைவு மற்றும் ஆற்றல் இயக்கம் மிகக் குறைவாகவே இருப்பதால், பலராலும் ஓம் அதிர்வு காரணமான உண்டாகும் உடல் மாற்றத்தை பெற முடியாது என்பதே உண்மையாக உள்ளது. எனவே தியானம் மூலமாக (தண்டுவடத்தில் இருந்து DMT திரவத்தை) இயக்கி, ஓம் என்ற அதிர்வு நிலைக்கு செல்ல முயற்சிக்கும்போது - பலராலும் வெற்றி பெற்றிட முடிவதில்லை.
எல்லா உயிர்கள்மீதும் அன்பு செலுத்தும் மனநிலையிலேயே (எப்போதும் நினைத்தபடி இருப்பது) எல்லோராலும் முடியாத ஒன்றாக உள்ளது. ஆனால் உடலுக்ககான 11 அடிப்படை தனிமங்களை அதிகரித்துக் கொண்டு, ஆற்றல் செயல்பாடு அதிகமாக்கிக் கொண்ட பிறகு (பஞ்சபூத சமநிலை இடத்தில்) சென்று, சும்மா இருந்து வரும்போது, எல்லா மனிதர்களும் ஓம் என்ற அதிர்வு நிலையில் மூளையின் செயல்பாடு அமைத்துக் கொள்ள வழியுள்ளது.
எனவே மனமானது இறை ஆற்றல் இயக்கமாகிடவும், உடலானது அழிவில்லாமல் நிலையாக்கவும், பிரபஞ்ச ஒளி உடலாக்கவும் தேவையான (ஓம் என்ற 7.83HZ அதிர்வு) மூளைக்குள் உருவாக DMT திரவ செயல்பாடே காரணமாகின்றது.
எனவே கார்பன் 12 உள்ள தண்ணீர் மற்றும் எண்ணை பயன்பாடு அவசியமாகும். அதுபோல செல்களுக்குள் ஹைட்ரஜன் அளவு அதிகரிப்பும் அவசியமாகும். உடலின் சமநிலை இயக்கமடையச் செய்வதாகவும் - ஹைட்ரஜனின் செயல்பாட்டை நிலைப்படுத்தி - மூளைக்குள் மின்சார இயக்கத்தை பராமரித்து - வயோதிகம் உண்டாவதை குறைக்க காரணமான மெக்னீசிய பயன்பாடு மிகமிக அவசியமாக அறியப்பட வேண்டும். கர்மா என்ற பாவப் பதிவுகளான (செல்களில் பதிந்துள்ள தேவையற்ற) மின்காந்த பதிவுகளை நீக்கிட உதவும் தங்கத் தண்ணீர் பயன்பாடும் அவசியமாகும்.
சித்தர் நிலை என்பதை அடைய, உடலை தயார் செய்த பிறகே முயற்சி செய்ய வேண்டி உள்ளது. உடலை தயார் செய்யாமல் முயற்சி செய்வதால், முழுமையான மாற்றச் செயல்பாடு நிலைக்கு உடலானது செல்வது தடைபடும் என்பதை அறிவது அவசியமாகும்.
No comments:
Post a Comment