Friday, 28 November 2025

அம்மனின் சக்தி பீட வரிசையில்

 அம்மனின் சக்தி பீட வரிசையில்

#மகாசக்தி_பீடம் என்று அழைக்கப்படும் ,
பரசுராமரால் உருவாக்கப்பட்ட
கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டம்
(வடிவேல் பகவதி) திருக்கோயில் வரலாறு:
கொடுங்கல்லூர் பகவதி கோவில் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் கொடுங்கல்லூர் பகுதியில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவில் ஆகும். இங்கு வீற்றிருக்கும் எட்டுக்கரங்கள் கொண்ட இக்கோவில் மூலவரான பத்திரகாளி "கொடுங்கல்லூரம்மை" என்றழைக்கப்படுவதுடன், கண்ணகியாகவும் வழிபடப்படுகின்றாள்.
கேரளாவில் திருச்சூரில் இருந்து 45 கிலோமீட்டர், குருவாயூரில் இருந்து 52 கிலோமீட்டர், எர்ணாகுளத்தில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கொடுங்கலூர்.
இக்கோயிலில் உள்ள அம்மன் கொடுங்களூரம்மா என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் வழிபடப்படும் பத்ரகாளி தேவியின் சிலை எட்டு கைகளைக் கொண்டது. தெய்வத்தின் ஒரு கையில் தரிகாசுரனின் (ஒரு அரக்கன்) துண்டிக்கப்பட்ட தலை உள்ளது, மற்ற கைகளில் வாள், ஈட்டி, வட்டு, வில், பூச்சி மற்றும் சிலம்பு போன்ற ஆயுதங்கள் மற்றும் சின்னங்கள் உள்ளன.
கேரளத் தொன்மத்தின் படி, ஆரம்பத்தில் சிவாலயமாக இருந்த இக்கோவிலில்,பரசுராமரால் பகவதி தேவிக்கு சன்னதி அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. பரசுராமரையும், சேரநாட்டு மக்களையும் வருத்திய "தாரகன்" எனும் அசுரனை அழிப்பதற்காக, ஈசன் ஆணைப்படி இவ்வாலயம் அமைக்கப்பட்டு, பகவதி வழிபடப்பட்டு வந்ததாகவும், பின் தேவி பத்திரகாளி] வடிவெடுத்து, தாருகனை வதைத்ததாகவும், தலபுராணம் சொல்கின்றது. இன்னொரு கருத்தின்படி, மதுரையை எரித்தபின், சேர நாட்டுக்கு வந்த கண்ணகியே இங்கு கோயில் கொண்டிருக்கிறாள். ஆதிசங்கரரால் நிறுவப்பட்டதாக நம்பப்படும் ஆறு சிறிசக்கரங்களே, இத்தேவியின் வரமருள் திறத்துக்குக் காரணம்.
நம்பூதிரிகளும், "அதிகர்" எனப்படும் மதுப்பிராமணர்களும் இங்கு தேவிக்குப் பூசனை புரிகின்றனர். ஆடு, கோழி முதலியன பலியிடப்பட்ட இக்கோவிலில் இன்று, அரச ஆணையால், உயிர்ப்பலி தடுக்கப்பட்டுள்ளது. செஞ்சாயமூட்டிய வேட்டிகளே இத்தேவிக்குரிய முக்கிய காணிக்கையாக இந்நாட்களில் விளங்குகின்றது.
பண்டைய சேரநாட்டுத் தலைநகரான மகோதையபுரத்தின் தொடர்ச்சியான கொடுங்கல்லூர் அரச குடும்பத்தாரின் குலதெய்வமும் இவளே. அம்மையின் திருக்கதவம் திறக்கப்படும் போது, மன்னர் வருகை தந்து, பட்டுக்குடையை விரிப்பது இன்றும் அங்கு தொடரும் நம்பிக்கை. "காவுதீண்டல்" எனும் சடங்கு, அனைத்துக் குலத்தாரும் ஆலயத்துக்க்குள் அனுமதிக்கப்பட்டதை நினைவுகூரும் சடங்காக அமைகின்றது. இக்கோவிலின் மூலக்கோவில் என்று கருதப்படும் ஆதி குரும்பா பகவதி கோவில், கொடுங்கல்லூர் நகரின் தென்புறம் அமைந்திருக்கின்றது. குடும்பி குலத்து மக்கள், இக்கோவிலைப் பராமரித்து வருகின்றார்கள்.
தமிழ்நாட்டில் பிறந்த கோவலன் கண்ணகி மாதவியுடன் கோவலன் தொடர்பு வைத்ததன் காரணமாக செல்வத்தையெல்லாம் இழந்து கண்ணகியின் காற்சிலம்பை விற்க மதுரைக்கு செல்ல அச்சமயத்தில் மகாராணியின் காறசிலம்பு திருடுபோன தகவலறிந்த பொற்கொல்லன் கோவலனை திருடன் என்று கருதி மன்னர் முன் நிறுத்த மன்னன் சற்றும் ஆராயாமல் அவன் மேல் கொலைப்பழி சுமத்தி கொலைக்களத்திற்கு அனுப்பி கோவலனின் கதையை முடித்தார் .
விபரம் அறிந்த கண்ணகி வெகுண்டு தன் காற்சிலம்புடன் மன்னனிடம் சென்று நீதிகோரி தன் கணவன் திருடன் அல்ல என்று நிரூபித்தார் .நிரூபித்த பிறகு மன்னன் மாண்ட பிறகும் அவருடைய கோபம் தணியவில்லை. மதுரை மாநகரை தீக்கிரையாக்கிய பிறகும் தனியாத கோபத்துடன் சேரநாடு நோக்கிச் சென்றார் .கண்ணகியின் கற்பின் தன்மையை உணர்ந்த சேர மன்னன் அவளுக்கு அங்கு ஒரு கோயில் கட்டினார். அக்கோயில் அக்காலத்தில் கண்ணகி கோயிலாக இருந்து பின் மருவி பகவதி கோயில் என்று ஆனது.
அதுவே தற்போதுள்ள கொடுங்கலூர் பகவதி ஆலயம் .திருச்சூருக்கு அருகில் உள்ளது .இதைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு .
கேரள தேசத்தை உருவாக்கியவர் பரசுராமர் என்று அனைவருக்கும் தெரியும் .ஆதி காலத்தில் கேரள தேசம் பரசுராம க்ஷேத்திரம் என்றே அழைக்கப்படும்.
பரசுராமர் தியானத்தில் இருக்கும் போதெல்லாம் அவரை தியானம் செய்ய விடாது தாருகன் என்னும் அசுரன் துன்புறுத்திக் கொண்டிருப்பான். அவனுடைய துன்புறுத்தலை தாங்கமுடியாத பரசுராமர் சிவபெருமானைக் குறித்து தவம் செய்து அவரிடம் தன்னை தாருகனிடம் இருந்து காத்து அருளும்படி வேண்டினார். பரசுராமரின் கோரிக்கையை ஏற்று சிவபெருமான் பராசக்தியான காளியை வழிபடுமாறு கூறினார் . சிவபெருமான் கூறியபடி காளியை பூஜை செய்து அவருக்காக உருவாக்கிய கோயிலே கொடுங்கல்லூர் பகவதி என்று அழைக்கப்படுகிறது என்பது புராண வரலாறு.
இந்த அம்மன் ஆதிகாலத்தில் உக்கிரமாக இருந்ததாகவும் மிகவும் அதிகமாக உயிர்பலி கேட்டதாகவும் அதன் காரணமாக பலவகையான மிருகங்களைப் பலியிட்டு சாந்தி செய்ததாகவும் மிருகங்களின் ரத்தத்தை எடுத்து குருதி பூஜை செய்ததாகவும் பழங்கால கதைகள் கூறுகின்றன. அதுமட்டுமன்றி இந்த அம்மனுக்கு கள் சாராயம் முதலியவற்றை நேர்த்திக்கடனாக செலுத்தியதாகவும் கூறுவர்.
ஒரு முறை ஆதிசங்கரர் இந்த கோவிலுக்கு விஜயம் செய்து அம்மனின் உக்கிரத்தைத் தணிப்பதற்காக எந்திரம் பிரதிஷ்டை செய்து அம்மனின் உக்ரகத்தை தணித்ததாகவும் குருதி பூஜைக்கு பதிலாக குங்குமத்தை நீரில் கரைத்து பூஜை செய்ததாகவும் கள் சாராயம் முதலியவற்றுக்கு பதிலாக இளநீரை அபிஷேகம் செய்ததாகவும் அதில் இருந்து அக்கோவிலில் விலங்கு பலியிடுவது கள் சாராயம் படையலிடுவது கிடையாது என்றும் குங்குமம பூஜையும் இளநீர் அபிஷேகமும் மட்டுமே இன்று வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இக்கோயிலில் மஞ்சள் பொடி வைத்து வழிபட்டால் வைசூரி நோய் தாக்காது என்றும் அவ்வாறு தாக்கியிருந்தால் நோயின் தீவிரம் படிப்படியாக குறையும் என்றும் பக்தர்கள் இங்குள்ள வைசூரி சமாதியில் மஞ்சள்பொடி வைத்து வழிபடுகின்றனர் .இக்கோவிலில் குழந்தைகளுக்காக துலாபாரம் செய்வதும் மிகவும் சிறப்பு.
#கோயில் அமைப்பு:
ஒருபுறமும் சிவனும் மறுபுறம் கணபதியும் ஏழ்கன்னியரும் அமர்ந்திருக்க, நடுவே தேவி நிறுவப்படவேண்டும் எனக்கூறும் "ருருஜித் விதானம்" எனப்படும் தாந்திரீக முறைப்படியே இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. வடக்குப் பார்த்த இக்கோவில் ஆல், அரசு மரங்கள் நிறைந்த பத்து ஏக்கர் பரப்பளவுள்ள நிலப்பரப்பில் அமைந்து விளங்குகின்றது. வெளிவீதியில் மேற்குப் பார்த்த நிலையில், பன்னிரண்டு அடி உயரத்தில் சேத்திரபாலரும், தென்மேற்கு மூலையில், வடக்குப் பார்த்தவளாக கூரையற்ற ஆலயத்தில் "வைசூரிமாலை"யும் வீற்றிருக்கின்றனர். அம்மை முதலான நோய்கள் தீர, வைசூரிமாலைக்கு மஞ்சள் பூசி வழிபடுவது இங்குள்ள வழக்கமாக இருக்கின்றது. சேத்திரபாலரும் வைசூரிமாலையும் தான் கோவலனும் கண்ணகியும் என்ற நம்பிக்கையும் உண்டு.
நடுவிலுள்ள வடக்கு நோக்கிய கருவறையில், ஏழடி உயரத்தில், எட்டுக்கரங்களுடன், பலாமரத்தாலான சிற்பமாக அருள்பாலிக்கிறாள் கொடுங்கல்லூர் பகவதி. இங்கு எப்போதும் மூடப்பட்டே இருக்கும் சிற்றறை ஒன்றில், சிறிசக்கரமோ அல்லது வேறேதும் மறைகுறியோ வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது. இதன் அருகே கிழக்கு நோக்கியவண்ணம், பழைமைவாய்ந்த ஈசனின் கருவறை அமைந்திருக்கின்றது. பகவதி சன்னதியின் மறுபுறம் பிள்ளையாரும் ஏழ்கன்னியரும் அமர்ந்திருக்கும் சன்னதி உள்ளது. கோயிலிலிருந்து ஐம்பது மீற்றர் தள்ளி, தீர்த்தக்குளமான "புஷ்கரிணி" விளங்குகின்றது.
கும்பமாதத்து பரணி விண்மீன் தொடங்கி, மீனமாதத்துப் பரணி வரை நிகழும் பரணி விழா, கேரளத்தின் புகழ்பெற்ற விழாக்களில் ஒன்றாகும். "கோழிக்கல்லுமூடல்" எனும் உயிர்ப்பலியுடன் பரணி விழா ஆரம்பிக்கும். கொடுங்கல்லூர் மன்னரின் மேற்பார்வையில், இங்கு நிகழும் "காவு தீண்டல்" பரணி விழாவின் இன்னொரு முக்கியமான நிகழ்வு ஆகும். இதன்போது, கெட்ட வார்த்தைகளால் திட்டியபடியே, ஆலயத்தைச் சுற்றிப் பக்தர்கள் ஓடி வலம்வருவது காவுதீண்டலின் முக்கிய அம்சம். "சந்தனப்பொடி சார்த்தல்" எனும் இன்னொரு நிகழ்வும் இதன்போது இடம்பெறுவதுண்டு.
மகர மாதத்தில் (யனவரி - பெப்பிரவரி) நான்குநாட்கள் இடம்பெறும் தாலப்பொலி, இன்னொரு முக்கியமான விழா. மகர சங்கிராந்தியன்று மாலை தொடங்கி, நான்கு நாட்கள் இடம்பெறும் தாலப்பொலியில், குடும்பி குலத்துப் பெண்டிரும், ஏனைய பக்தையரும், யானைகள் முன்செல்ல, பஞ்சவாத்தியம் முதலான வாத்தியங்கள் முழங்க, தேங்காய், அரிசி, தீபம் என்பன கொண்ட தாலத்தை (தட்டு) ஏந்தியவர்களாக ஊர்வலமாக ஆலயம் வருவர்.
சிலையைச் சுற்றியுள்ள கற்களைச் சுற்றி சிவப்பு பட்டுத் துணியில் சேவல் பலியிடும் சடங்கு இதில் அடங்கும். இந்த சடங்கு தெய்வத்திற்கும் எதிரியான தாரிகாவிற்கும் இடையிலான சண்டையை குறிக்கிறது. இருப்பினும், இந்த சடங்கு 1977 முதல் செய்யப்படவில்லை, இப்போது சிவப்பு பட்டு துணியால் கற்களை மூடும் நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளது.
#காவு தீண்டல்:
கொடுங்கல்லூர் மன்னன் சிவப்பு சம்பிரதாய குடையை அவிழ்க்கும்போது காவு தீண்டல் தொடங்குகிறது. அதன்பின், அரிவாள் அல்லது மூங்கில் குச்சிகளுடன் சிவப்பு நிற உடையணிந்த பக்தர்கள் கோவிலைச் சுற்றி ஆவேசமாக ஓடுவார்கள். மேலும் கோயிலின் மேற்கூரையிலும், உள் மாடவீதிகளிலும் தேங்காய், மஞ்சள் பொடிகளை வீசி அசுத்தம் செய்கின்றனர். இந்த விழாவிற்குப் பிறகு, கோவில் ஒரு 'சுத்திகரிப்பு' விழாவிற்கு ஒரு வாரம் மூடப்படும்.
#முக்கிய அம்சங்கள்:
ஸ்ரீ குரும்பா பகவதி கோவில் கொடுங்கல்லூர் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கோயில் முழுவதும் ஆலமரங்களால் சூழப்பட்டுள்ளது. கோயிலின் ஸ்ரீகோவில் வடக்கு நோக்கி உள்ளது. உள் கோவிலின் மேற்கு மண்டபம் சப்தமாத்ருக்களின் (ஏழு அன்னையர்) இருக்கையாகும், அவர் வடக்கு நோக்கியும் இருக்கிறார். சன்னதியில் கணபதி மற்றும் வீரபத்திரர் சிலைகள் முறையே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி உள்ளன. கோயிலின் இடதுபுறம் வைசூரியின் சமாதி உள்ளது. கொடுங்களூரம்மாவின் சிலை 6 அடி உயரம், பலா மரத்தில் கட்டப்பட்டது.
மஞ்சள் முக்கியமாக பத்ரகாளி தேவிக்கு அவரது பக்தர்களால் சமர்ப்பிக்கப்படுகிறது. எண்ணற்ற பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து அம்மனை மனதார வழிபடுகின்றனர். கோயிலில் இருந்து 50 மீட்டர் தொலைவில் புஷ்கரிணி என்ற புனித குளம் உள்ளது, இங்கு பக்தர்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு முன்பு புனித நீராடுவார்கள். அம்மன் தன் வாளால் நிலத்தைத் தொட்டபோது இந்தக் குளம் தோன்றியதாகக் கருதப்படுகிறது.
கொடுங்கல்லூர் பரணி என்பது கொடுங்கல்லூர் கோயிலின் முக்கிய திருவிழாவாகும். இது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோவிலில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா முக்கியமாக 'கோழிக்கல்லு மூடல்' என்ற சடங்குடன் தொடங்குகிறது, இதில் சேவல்களைக் கொன்று அதன் இரத்தம் சிந்தப்பட்டு காளி தேவிக்கு இரத்த பிரசாதம் வழங்கப்படுகிறது. வலிமைமிக்க காளி தேவியையும் அவளது பிசாசுகளையும் மகிழ்விப்பதற்காக இந்த சடங்கு இரத்த பிரசாதம் மூலம் செய்யப்படுகிறது.
கொடுங்கல்லூர் பகவதி கோயிலில் அதிகாலை 3 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணிக்கு முடிவடையும் சடங்குகளின் கடுமையான தினசரி வழக்கத்தைப் பின்பற்றுகிறது.
கேரளாவின் அருகிலுள்ள நகரங்கள், நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து கொடுங்கல்லூர் பகவதி கோயிலை எளிதில் அணுகலாம். கொச்சியில் உள்ள நெடும்பாசேரி சர்வதேச விமான நிலையம் கோயிலுக்கு அருகில் உள்ள விமான நிலையம் ஆகும். இது வட திருச்சூரில் இருந்து 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கோவிலில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள இரிஞ்சாலக்குடாவில் அருகிலுள்ள ரயில் நிலையம் அமைந்துள்ளது. திருச்சூர் தெற்கு இரயில்வேயின் குறிப்பிடத்தக்க இரயில் முனையாகும், மேலும் இது கேரளாவிற்குள்ளும் வெளியேயும் உள்ள பல நகரங்கள் மற்றும் நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. சாலை வழியாகவும் கோயிலை அடையலாம். NH47 வழியாக திருச்சூரில் இருந்து பல்வேறு இடங்களுக்கு அடிக்கடி பேருந்து சேவைகள் உள்ளன. குருவாயூர், மலபுரம் மற்றும் ஷோர்னூர் போன்ற அருகிலுள்ள இடங்களுக்குச் செல்ல, கோயிலில் இருந்து தனியார் பேருந்துகளும் ஏறலாம்.
அம்மே நாராயணா 🙏
தேவி நாராயணா 🙏
ஓம் சக்தி 🙏🙇

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...