வாழைப்பழம் பழுக்க வைக்கும் முறை பற்றி பார்ப்போம்*
2.காய் நன்கு முற்றிய பின் அறுவடை செய்து ஒரே நாள் இரவு ஊதுபத்தி அல்லது பால இலை போன்றவற்றை போட்டு வைத்து அடுத்த நாள் எடுத்து விடுவது. இதுவும் இயற்கையான முறை தான் எந்தவித பாதிப்பும் இல்லை.
3.காய் முற்றாமலேயே வெட்டினாலும் கால்சியம் கார்பைடு வைத்து பழுக்க வைப்பது. பழங்களுடன் கால்சியம் கார்பைடு வைக்கும் பொழுது அசிட்டிலின் வாயு உருவாக்கி காய்களை வேகமாக பழுக்க வைக்கிறது. இவ்வாறு வைக்கும் போது பழத்துடன் ஆர் சனிக்,பாஸ்பரஸ் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சேர்மங்கள் சேர வாய்ப்புண்டு.
நமது நல்வழி இயற்கை விவசாயிகள் விற்பனை நிறுவனத்தில் மேற்கண்ட இரண்டு முறையில் மட்டுமே பயன்படுத்தி வாழைப்பழங்கள் விற்பனைக்கு வருகின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
பெரும்பாலும் முதல் முறையே பின்பற்றப்படுகிறது. பின்வரும் புகைப்படத்தில் உள்ள தேன் வாழைப்பழம் என் தோட்டத்தில் மரத்திலிருந்து வெட்டப்பட்டது இரண்டு பழங்களை குருவிகள் கிளிகள் சாப்பிட்டு விட்டது இரண்டு சீப் வீட்டுக்கு வைத்துவிட்டு மீதம் உள்ளதை நல்வழியில் விற்பனைக்கு கொண்டு வருவோம்.
மேலும் இது போன்ற நஞ்சில்லா உணவுப் பொருட்களை வாங்கி பயன்பெற
நல்வழி இயற்கை விவசாயிகள் நேரடி விற்பனை நிறுவனத்தோடு இணைந்து இருங்கள்.

No comments:
Post a Comment