Monday, 3 November 2025

#நுரையீரல்_பிரச்சனைக்கு_தீர்வு



அரை ஸ்பூன் விழுதி இலை பொடியை எடுத்து நன்றாக குழைத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து 21 நாட்கள் வீதம் குடித்து வந்தால் கருமுட்டைகள் உருவாக்கம் அதிகரிக்கும். கருமுட்டை ஆரோக்கியமாக இருக்கும். குழந்தைப்பேறு விரைவில் நடக்கும். பெண்களுக்கு வெள்ளை வேட்டை பிரச்சனையும் நீங்க கூடும்.
மூட்டு வலி என்றால் எலும்பு தேய்மானம் மட்டும் அல்ல, மூட்டுகளில் வாய்வு நீர் சேர்வதும் கூட மூட்டு வலிக்கு காரணமாகலாம். இந்த மூட்டுகளில் இருக்கும் நீர் வெளியேறினாலே மூட்டு வலி பாரம் குறையக்கூடும். அதற்கு இந்த விழுதி இலை பொடியை சேர்க்கலாம். இதை சூப் போன்று செய்து குடிப்பதன் மூலம் பலன் கிடைக்கும்.விழுதி இலை பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து சிறிது மிளகை இடித்து சேர்த்து தூளாக்கி விடவும். பிறகு சீரகம், பூண்டு சேர்த்து சிறிது விளக்கெண்ணெயில் தாளித்து குழைத்த விழுது சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்கி கொத்துமல்லி தழை, உப்பு சேர்க்கவும். ரசம் போல் செய்து சாதத்தில் அல்லது அப்படியே சூப் ஆக்கி குடித்து வரவேண்டும்.
தொடர்ந்து ஒரு மண்டலம் வரை குடித்து வந்தால் மூட்டுகளில் வலி காணாமல் போகும். விளக்கெண்ணெய் ஒப்புகொள்ளாதவர்கள் நல்லெண்ணெய் சேர்க்கலாம். இதை குடிக்கும் போதே படிப்படியாக மூட்டு வலி குறைவதை உணர்வீர்கள்
இது உடல் அசதி, இடுப்பு வலி, கை, கால் வலி பிரச்சனைகளையும் குறைக்கும் .வாதங்களால் உண்டாகும் கட்டிகள், வீக்கங்கள் போன்றவற்றை கரைக்க விழுதி இலை பொடி பயன்படுத்தப்படுகிறது. கட்டிகள் உடையாமல் இருந்தால் விழுதி இலை பொடியை நன்றாக குழைத்து அதை கட்டிகள் இருக்கும் இடத்தில் பற்று போட வேண்டும்.
கட்டிகள் இருக்கும் இடத்தை சுத்தமாக கழுவி காலை , இரவு என இரண்டு வேளை பற்று போட்டு வந்தால் கட்டிகள் கரையும், வீக்கம் வற்றும், சகலவிதமான நோய்களை போக்கும் தன்மை விழுதி இலை பொடிக்கு உண்டு.
சளி, இருமல், காய்ச்சல் காலங்களில் தலை குளிக்கவே அச்சப்படுவோம். ஆனால் இந்த விழுதி இலை பொடிகள் இந்த மூன்றையும் இல்லாமல் செய்து விடும்.
சளி, இருமல், காய்ச்சல் இருக்கும் போது விழுதி இலை பொடியை எடுத்து குழைத்து அதன் சாறை எடுத்து சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி இறக்கி ஆறவைத்து அதை தலையில் தடவி குளித்து வந்தால் இருமல், சளி, காய்ச்சல் ஓடி விடும். பதமாக தைல பதத்துக்கு காய்ச்சி பயன்படுத்தவும்.விழுதி இலை பொடி வாதம் பித்தம் கபம் மூன்றையும் கட்டுப்படுத்தி சமநிலையில் வைக்க செய்யும். உடல் பலவீனம் நீக்கி தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவும்.
சிலருக்கு நடந்தால் படிக்கட்டுகளில் ஏறினால் இறங்கினால் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும். சுவாசம் சீராக இருந்தாலும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கூடும். இவர்கள் விழுது இலை நீரை 48 நாள் (1மண்டலம் ) கண்டிப்பாக பருக வேண்டும்.
நாள் பட்ட தீராத சளி மற்றும் ஆஸ்துமா பிரச்சனைகளை சரி செய்ய உதவும் 

No comments:

Post a Comment

ஐப்பசி அன்னாபிஷேக ரகசியம் பற்றிய பதிவு*

 ஐப்பசி அன்னாபிஷேக ரகசியம் பற்றிய பதிவு* *ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்...