இந்த பொங்கல் சீசனில் கிடைக்ககூடிய இந்த செடி சிறுநீரக சதை அடைப்பு சிறுநீரக நோய்கள் போன்றவற்றிற்க்கு அருமருந்து..சாலையோர கடைகளில் இப்போது தாரளமாய் கிடைக்கிறது..
வருடம் முழுவதும் உடல் உள் உறுப்புகளில் ஏற்படும் காயங்கள்,உறுப்பு பலமின்மை , போன்றவை அதற்கான பருவ நிலை வரும் போது சரியாகும்..நுரையீரல் தன்னை மழைகாலங்களில் சரிசெய்துகொள்ளும்...சிறுநீரகம் சிறுநீரகப்பை ,கர்ப்பபை,விதைப்பை போன்ற உறுப்புகள் குளிர்காலங்களில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தில் தம்மை சரிசெய்துகொள்ளும்..
உறுப்புகள் தம்மை சரிசெய்து கொள்ளும் நிகழ்வில் இந்த உறுப்புகளினால் சில தற்காலிக தொந்தரவுகள் வெளிபடும்..
கர்ப்பபை கட்டிகள்,சிறுநீரக சதை வளர்ச்சி,
விதைப்பை வீக்கம்,விதைப்பை நரபு சுருள் நோய்,சீறுநீரக தடை போன்ற நோய்கள் குளிர்காலத்தில் இதன் தொந்தரவுகள் உச்சமடைந்து நிவாரணம்(உறுப்புகள் பலம்) அடையும்..
இந்த செடியின் வேர் பகுதியை சிறுகைபிடி எடுத்து இரண்டு டம்ளர் நீரில் ஒரு டம்ளராக சுண்டகாய்ச்சி தினமும் காலை 5 நாள் தொடர்ந்து குடிக்க சிறுநீரக கல் சதை அடைப்பு பிரச்சனை சரியாகும்..
இதனுடன் சிறுநெரிஞ்சி முள் ம் சேர்த்து குடிக்கும் போது விரைவான பலன் தெரியும் .-சிறிய அளவிலான பித்தப்பை கற்களும் கரையும்..
சிறுகண் பீளை,நெருஞ்சி முள்ளுடன் முக்கிரட்டை கீரையும் சேர்த்து கசாயம் வைத்து குடிக்க சிறுநீரகத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்..
கடையில் விற்கும் பொடிகள் உறுதியான பலன் தராது..நீங்களாக பறித்து பொடி செய்து வைத்து கொண்டு பயன்படுத்தலாம்..
சிறுபீளை செடி வேர் அல்லது இலையும் தண்டுடன் பயன்படுத்தலாம்..
மேலே சொன்ன மூலிகைகளின் வரிசையில் மருதம் பட்டை இலவமர பட்டை இன்னும் சில மூலிகைகள் சேர்க்கும் போது சிறுநீரகத்திற்க்கு செல்லும் ரத்தகுழாய்கள் வலுவடைந்து சிறுநீரக செயல் இழப்பும் சரியாகும்..
உள் ஊறுப்புகள் வீங்கியிருக்கிறது கட்டி இருக்கிறது இரத்தம் அடைத்திருக்கிறது என ஸ்கேன் பரிசோதனையில் கண்ட உடனே பீதியும் பயமும் அடைய தேவையில்லை..பருவ நிலை மாற்றத்தின் போது உடல் தன்னை சரிசெய்துகொள்ளும் என நம்பிக்கையோடு இருங்கள் மருந்தில்லாத நோய் என்று எதுவும் இல்லை...!
No comments:
Post a Comment