Sunday, 30 November 2025

மனித உடலில் உள்ள உறுப்புக்களின் இன்றைய விலையை தெரிந்து கொள்ளுங்கள்


 கடவுள் இலவசமாக கொடுத்த உறுப்புக்களின் இன்றைய விலையை தெரிந்து கொள்ளுங்கள் இனியாவது அந்த உறுப்புகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்....

1. ஒரு செயற்கைப் பல் வைக்க - ரூ 6,000 முதல் 1இலட்சம்வரை.. (இருந்தாலும் இயற்கை பற்கள் போல் இருக்காது).
2.செயற்கை இதயத்தின் விலை - ரூ 80 லட்சம்.
3. ஒரு கிட்னி - ரூ 30 லட்சம் (பொருத்த ஆகும் செலவு ரூ 20 லட்சம்),
4. செயற்கை முடி வைக்க - ரூ 2 லட்சம்..
5. ஒரு செயற்கை விரல் வைக்க - ரூ 1 முதல் 5லட்சம்வரை..
6. செயற்கைக்கால் வைக்க - ரூ 2 லட்சம் முதல் 10 இலட்சம் வரை..
7. கண்ணுக்கு லென்ஸ் பொருத்த - ரூ 50, 000முதல்..
8. எலும்புக்குப் பதிலாக plate வைக்க -ரூ 50,000முதல்..
9. கிட்னிக்குப் பதிலாக ஒரு முறை டயாலிசிஸ் பண்ண - ரூ 3,000முதல்.. (மூன்று நாட்களுக்கு ஒரு முறை டயாலிஸ் செய்ய வேண்டும்).
10. இதயத்தை ஒரு மணி நேரம் செயற்கையாக இயங்க வைக்க -ரூ 45,000முதல்..
11. ஈரலை ஒரு மணி நேரம் செயற்கையாக சுவாசிக்க வைக்க - ரூ 50, 000முதல்..
12. இரத்தம் ஒரு Unit வாங்க - ரூ 2,000முதல்..
( இரத்தத்தின் குரூப்பை பொறுத்து விலை நிர்ணயிக்கப்படும் )
13. மேலும்,நம் உயிருக்கு விலை மதிப்பே இல்லை. அது போனால் என்ன விலை கொடுத்தாலும் வாங்க முடியாது.
14. காதுகளுக்கும் செயற்கை கருவி பொருத்த வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 50000 முதல்..
இதற்கே தலை சுற்றுகிறது அல்லவா..
கெட்ட பழக்கங்களினாலும், பொறுப்பற்ற விபத்துக்களினாலும் ஆரோக்கியமான உறுப்புக்களை சேதமாக்கிக் கொள்வதை இறைவனின் உதவியோடு தவிர்ப்போம்.. முடிந்தவரை உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருங்கள்.. அந்த வாழ்க்கையே தனி சுகம்தான்.. சொன்னால் புரியாது அனுபவித்து பாருங்கள்..
கோடி கோடியாக செலவழித்து செயற்கை உறுப்புகள் பொருத்தினாலும் இறைவன் வழங்கியதைப்போன்று இந்த உறுப்புகள் இயங்க முடியுமா? சிந்திப்போம், பொறுப்புடன் செயல்படுவோம்.
மது, புகையிலை, ஹான்ஸ், இன்னும் பிற போதை பொருட்களைத்தவிர்ப்போம். ஆரோக்கியமாக வாழ்வோம்..
இந்த மனித உறுப்புகளின் புது விலையைப் பட்டியலை மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டும் தயவு செய்து பகிருங்கள்.. இதில் ஒருவர் திருந்தினாலும் நமக்கு மாபெரும் வெற்றிதான்..

கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும்

 தயவு செய்து இந்த விஷத்தை நீங்களும் உங்கள் குழந்தைகளும் உண்ணாதீர்கள் மன்னிக்கவும் யாரும் உண்ண வேண்டாம்

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல்
கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?
இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.
இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.
குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.
1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.
4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.
6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.
7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.
8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.
குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல்சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.
ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.
This is true so Can we avoid
நண்பர்களே இன்றய ஊடகங்களால்
மறைக்கப்பட்ட சதி எனவும் கூறலாம்
பணத்திற்காக நம் பாமர மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி..

" கன்னிகாதானம்" என்றால் என்ன?*


 "கன்னிகாதானம்" என்றால் என்ன?*

வயிற்றுப்பசியைப் போக்குகிற அன்னதானமே சிறந்தது என்று சொல்வார்கள்.
நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு.
ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகாதானத்தைதான்!
திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர் தான் பெற்ற பெண்ணை மற்றொரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனுக்கு தானமாக அளித்து அவனிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வையே கன்யாதானம் அல்லது கன்னிகாதானம் என்கிறார்கள்!
இந்த உலகில் பலவித தானங்கள் செய்யப்பட்டாலும் அவை எல்லாவற்றிலும் உயர்ந்தது இந்த கன்னிகாதானமே என்பதற்கு இந்த நிகழ்வின்போது சொல்லப்படுகிற சங்கல்பமும், மந்திரமுமே சாட்சி.
'தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம்,
மம ஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண..' என்று அந்த மந்திரம் நீள்கிறது.
அதாவது, கன்யாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவனது தலைமுறையையும் சேர்த்து ஆகமொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் கரைசேர்க்கும் விதமாக இந்த கன்னிகாதானம் என்று அழைக்கப்படுகிற மகாதானத்தைச் செய்கிறேன் என்பது இந்த மந்திரத்தின் பொருள்.
உன் வம்சவிருத்திக்காக எம் குலவிளக்கை உனக்கு தானமாக அளிக்கிறேன் என்று ஒரு தந்தை செய்யக்கூடிய கன்னிகாதானமே உலகில் அளிக்கப்படுகின்ற தானங்களில் மிகப்பெரியது என்று சாஸ்திரம் போற்றுகிறது.
ஆண்பிள்ளையைப் பெற்றால் அந்தப் பிள்ளை செய்கிற கர்மாவின் மூலம் அந்த ஒரு தலைமுறை மட்டுமே கரையேறும்.
ஆனால், பெண்பிள்ளையைப் பெற்று, அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து, மற்றொருவனின் வம்சவிருத்திக்காக அவளை தானம் செய்து கொடுப்பதால், அவனது வம்சத்தில் 21 தலைமுறைகளும் கரையேறுகிறது என்றால் பெண்பிள்ளையைப் பெற்றவன் எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவன் என சிலாகிக்கிறார்கள் சான்றோர்கள்!
ஆக, பெண்பிள்ளையைப் பெற்றவன், இருபத்தியோரு தலைமுறையைக் கரையேற்றும் வாய்ப்பைப் பெற்றவன் என சாஸ்திரம்சொல்கிறது...
*மகளை பெற்ற என் நண்பர்களுக்கு சமர்ப்பணம்*

திருவிளையாடல் புராணம்


 திருவிளையாடல் புராணம்

🔱றைவனே கால் மாறி ஆடிய பக்தியின் உச்சம் – கால் மாறி ஆடிய படலம் 🔱
இறை அன்பிற்கு இணங்க நடனமே மாற்றிய ஈசன்!
மதுரையை நல்வழியில் ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னன் இராசசேகர பாண்டியன்—
சிவபக்தியின் உச்சமே அவன் வாழ்க்கை.
அவன் சொக்கநாதர்மேலும், வெள்ளியம்பலத்துள் நடனம் புரியும் வெள்ளியம்பலவாணன்மேலும் உயிரையே பணயமாக வைத்த பக்தி கொண்டவன்.
அவனுக்கு ஆயகலைகள் அறுபத்துநான்கில்,
பரதக்கலை தவிர மற்ற 63 கலைகளும் கைவந்திருந்தன.
அத்தனை திறமையும் இருந்தும்…
“இறைவன் ஆடும் பரதக்கலையை,
என் மனித உடலால் கற்றுக் கொண்டு,
அவனுக்கு இணையாக ஆடக் கூடாது…”
என்று எண்ணி, பரதக்கலையை அவன் கற்றுக்கொள்ளவே இல்லை.
🌿 புலவனின் சொல் – மனதைக் குத்திய உண்மை
ஒருநாள் சோழநாட்டைச் சேர்ந்த ஒரு புலவன், இராசசேகர பாண்டியனின் அவைக்கு வருகிறான்.
அவனை மன்னன் மிகுந்த மரியாதையுடன் வரவேற்று, தன் அருகிலேயே அமரச் செய்கிறான்.
அப்பொழுது அந்தப் புலவன் சொன்ன வார்த்தை:
“எங்கள் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தான்,
அறுபத்துநான்கு கலைகளையும் கற்றவன்.
ஆனால், தங்களுக்கோ...
பரதக்கலை மட்டும் தெரியாதே!”
இந்த சொல்
மன்னனின் அகந்தையை அல்ல, அகந்தையே இல்லாத அவன் உள்ளத்தைத் தட்டியது!
அவன் கோபப்படவில்லை.
புலவனை பரிசுகளால் கௌரவித்தே அனுப்பினான்.
ஆனால் மனத்தில் ஓர் எண்ணம் முளைத்தது:
“இது இறைவன் என்னைச் சோதிக்கும் சமயம் போலும்…
நான் பரதக்கலையை கற்றாக வேண்டும்!”
💢 பரதக்கலை – உடல்வலி – மனவேதனை
இராசசேகர பாண்டியன்,
பிரபல Guru-க்களிடம் பரதக்கலையை கற்றுத் தொடங்கினான்.
ஆனால்…
அரச உடலுக்கு கடுமையான அசைவுகள் தாங்கவில்லை.
கால் வலி… இடுப்பு வலி… உடல் வலி… சோர்வு…
ஒருநாள் அந்த வலியில் துடித்தபடியே அவன் எண்ணினான்:
“நான் இவ்வளவு வலியுடன் கலை கற்றால்,
தினமும் வெள்ளியம்பலத்தில்,
பிரபஞ்சம் நிற்கும் வகையில் கூத்து ஆடும்
என் இறைவனுக்கும்
இவ்வளவு வலி ஏற்பட்டிருக்கும் அல்லவா?”
அந்த எண்ணமே அவன் மனதைப் பிளந்தது.
கண்ணீருடன் இறைவனை நோக்கினான்.
“நீங்கள் ஒரே காலில் நின்று ஆடுவதால் தான் இந்த வலி…
திருவடியை மாறி மாறி ஊன்றினால்,
அந்த வலி குறையுமே…”
🔱 சிவராத்திரி – உயிரையே பணயமாக வைத்த நேரம்
சிவராத்திரி நாள்.
மன்னன் வெள்ளியம்பலவாணனின் சன்னிதியில் நின்று அழுதான்:
“இறைவா!
நீங்கள் தூக்கிய திருவடியை ஊன்றியும்,
ஊன்றிய திருவடியைத் தூக்கியும்
கால் மாறி ஆட வேண்டும்!
அப்போது தான் என் மன வேதனை தீரும்!
இதைச் செய்யவில்லை என்றால்…
இந்த உயிரை இன்றே விடுகிறேன்!”
என்று சொல்லி…
தன் வாளை தரையில் நட்டு,
அதன் மீது பாய்ந்து உயிர் விடத் தயாரானான்!
✨ இறைவன் கால் மாறி ஆடிய அதிசயம்
அவன் வாளில் பாயப் போகும் அந்த நிறைய வினாடியில்…
🏵️ இறைவன் அருள் கருணை பொங்கி ஓடினது!
வெள்ளியம்பலவாணன்:
🌸 இடது காலைத் தூக்கி…
🌸 வலது காலைக் ஊன்றியும்…
🌸 கால் மாறி கால் மாறி…
அற்புதமான திருநடனம் ஆடினார்!
அந்த நொடியே—
✅ இராசசேகர பாண்டியனின் உடல் வலி நீங்கியது
✅ மன வேதனை தீர்ந்தது
✅ அவனுக்குள் இருந்த மும்மலங்களும் (அஞ்ஞானம், அகங்காரம், கர்மம்) அழிந்தது
✅ அவன் பேரானந்தக் கடலில் மூழ்கினான்!
🙏 இறுதியில் மன்னன் கேட்ட வரம்
இறைவனைப் பார்த்து இராசசேகர பாண்டியன் கதறினான்:
“வெள்ளியம்பலத்துள் கூத்தாடும் எம் தந்தையே!
எக்காலத்திலும்
இவ்வாறே
கால் மாறிய திருக்கோலத்தில்
நின்று அருளளிக்க வேண்டும்!
இதுவே அடியேனின் வரம்!”
அன்று முதல் இன்றளவும்—
வெள்ளியம்பலத்தில் கூத்தர் பெருமான்
கால் மாறிய திருக்கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்!
🌼 இந்த படலம் சொல்லும் அர்த்தம்
“உண்மையான பக்தியுடன்,
உயிரையே பணயமாக வைத்து வேண்டினால்,
இறைவனே தன் நிலையை மாற்றி
அருள் செய்வான்!”
இதுவே
“கால் மாறி ஆடிய படலம்” கூறும் தெய்வீக உண்மை!

கொடையாளி_மாவீரன்_கர்ணன் 9. #கர்ணனனின்_மரணம்

 பதினேழாம் நாள் போரில் கர்ணனும், அர்ஜுனனும் சமநிலையில் கடுமையாகப் போரிட்டுக் கொண்டனர். இரு மலைகள் மோதுவதைப் போல இருவரும் தாக்கிக்கொண்டனர். கர்ணனைப் பாதுகாக்க, அவனை சுற்றி நின்ற வீரர்களையும் அர்ஜுனன் கடுமையாகத் தாக்கினான். அவனது தாக்குதலைத் தாங்க இயலாது கௌரவ வீரர்கள் ஓடினர். வீரர்களே! நீங்கள் அனைவரும் கர்ணனை விட்டு ஓடாதீர்கள்! எனத் துரியோதனன் எத்தனையோ எடுத்துரைத்தும், அவர்கள் அர்ஜுனனின் தாக்குதலை சமாளிக்க இயலாது ஓடினர்.

அர்ஜுனன் ஆயிரக்கணக்கான அம்புகளை கர்ணனின் மீது செலுத்தி அவனை அம்புகளால் மூட செய்தான். அர்ஜுனன் தாக்குதலை சமாளிக்க இயலாது தவித்தான் கர்ணன். முன்பு காண்டவ வனத்தை அர்ஜுனன் தனது பாணங்களால் எரித்து இந்திரபிரஸ்தம் ஆக்கிய போது அங்கிருந்த நாகங்கள் அர்ஜுனனின் அம்புகளால் எரிந்து போயின. அப்பொழுது #அசுவசேனன் என்ற பாம்பு அர்ஜுனனின் அம்பில் இருந்து தப்பிப் பூமிக்குள் பதுங்கியிருந்தது.
கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் போர் நடைபெறுவதை அறிந்த அந்தப் பாம்பு அம்பாக மாறி கர்ணனுடைய அம்பறாத்தூணியில் தஞ்சம் புகுந்திருந்தது. அர்ஜுனனை பழி வாங்குவதற்காகவே நாகாஸ்திரமாக மாறியிருந்த அந்த பாணம் கர்ணனுக்கு நினைவுக்கு வந்தது. எனவே அதை அர்ஜுனனின் முகத்துக்கு குறிவைத்து அந்த #நாகாஸ்திரத்தை வில்லில் பூட்டினான் கர்ணன்.
கர்ணனின் தேர் சாரதியாக இருந்த #மாவீரன்_சல்லியன் இதைப் பார்த்துவிட்டு கர்ணா! நீ அர்ஜுனனின் கழுத்துக்கு குறி வை! நீ அவனது முகத்திற்கு குறி வைத்திருக்கிறாய். உனது குறி தவறி விட போகிறது என்றான். எனது குறி ஒரு நாளும் தவறாது! நீ தேர் ஓட்டும் வேலையை மட்டும் கவனி! எனக்கு நீ வில்வித்தையைக் கற்றுத் தரவேண்டாம்!என்று மன்னனான மாவீரன் சல்லியனைக் கடுமையாக பேசிவிட்டு நாகாஸ்திரத்தை இழுத்துவிட்டான் கர்ணன்.
#நாகாஸ்திரம் வருவதை கண்ட கிருஷ்ணர் தனது வல்லமையால் தேரைப் பூமியில் அமிழும்படி செய்தார். இதனால் அர்ஜுனனின் முகத்துக்கு ஏவிய நாகாஸ்திரமானது அவனது கிரீடத்தை மட்டும் தட்டி மண்ணில் விழ வைத்தது. இந்திரனால் வழங்கப்பட்ட நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட பொன்னாலான கிரீடம் மண்ணில் விழுந்தது.
அர்ஜுனா! காண்டவ வனத்தின் போது உன்னிடம் இருந்து தப்பிய #அசுவசேனன் என்ற பாம்பு வஞ்சம் காரணமாகக் கர்ணனிடம் இருந்தது. எனவே இதை நீ உனது பாணங்களால் துண்டித்து விடு! என்றார். எனவே அர்ஜுனன் அந்த அசுவசேனன் என்ற நாகத்தின் மீது ஆறு பாணங்களை எய்தான். பாம்பு துண்டு துண்டாக உடல் அறுபட்டு விழுந்து மடிந்தது.
பின்னர் கிருஷ்ணர் கீழே இறங்கி பூமியில் ஆழப்பதிந்திருந்தச் சக்கரங்களை தூக்கி நிறுத்தினார். இதைக் கண்டு கோபம் கொண்ட கர்ணன், அர்ஜுனன் மீது நூற்றுக்கணக்கான பாணங்களையும், கிருஷ்ணரின் மீது இரண்டு பாணங்களையும் எய்தான். இதனால் கோபம் கொண்ட அர்ஜுனன் ஆயிரக்கணக்கான பாணங்களை விட்டு கர்ணனின் கவசத்தை உடைத்தான்! கிரீடத்தை கீழே தள்ளினான். அம்புகளால் அவனது உடலை காயப்படுத்தினான். குண்டலங்களும், கவசங்களும் இழந்து அர்ஜுனன் விட்ட பாணத்தால் இரத்தம் ஒழுக மூர்ச்சையாகிப் போனான் கர்ணன்.
மூர்ச்சையற்று கிடந்த கர்ணனைக் கொல்ல அர்ஜுனனுக்கு மனம் வரவில்லை. அப்போது கிருஷ்ணர், அர்ஜுனா! வீரம் உள்ளவர்கள் காலத்தை அறிந்து எதிரிகளை கொன்று, தர்மத்தையும், கீர்த்தியையும், தனத்தையும் அடைகிறார்கள். கர்ணன் அதர்மம் செய்தவன். திரௌபதியின் துகிலுரித்தலுக்கு முக்கிய காரணமாக இருந்தவன். உன் மகன் அபிமன்யுவை பின்னால் இருந்து அம்பறாதூணியைக் கிழித்து அவனை நிராயுதபாணி ஆக்கியவன். வாலிபனான அவனைப் பலரோடு சேர்ந்து, அதர்மமான முறையில் கொன்றவன். அப்பொழுது எந்த தர்மத்தை அவர்கள் பின்பற்றினர்? இப்பொழுது நீ அவன் மயக்கமடைந்து இருக்கிறான் என்று இரக்கம் காட்டுவது தவறு. அதர்மமே வாழ்வென்று இத்தனை காலமும் வாழ்ந்திருந்தான் கர்ணன்.
துரியோதனனின் அனைத்து அதர்மங்களும் துணையாக நின்றவன் கர்ணன். எனவே நீ அவனுக்கு இரக்கம் காட்டாது கொன்றுவிடு! என்றார் ஸ்ரீகிருஷ்ணர். எனவே அர்ஜுனன் அம்பை அம்பைத் தொடுக்கத் தொடங்கினான். அப்பொழுது கர்ணன் மயக்கம் தெளிந்து எழுந்தான். மீண்டும் இருவரும் கடுமையாகப் போரிட்டனர். பரசுராமரிடம் இருந்து தான் கற்ற அஸ்திரங்களை அர்ஜுனனின் மீது பிரயோகம் செய்ய நினைத்தான் கர்ணன். ஆனால் முக்கிய போரில் உனக்கு நீ கற்ற கல்வி பயன்படாமல் போகட்டும்! என்று பரசுராமர் விடுத்த சாபத்தினால் அது அவனுக்கே நினைவுக்கு வரவில்லை! அவனால் அதை பிரயோகிக்க முடியவில்லை. பசுவை இழந்த அந்தணன் ஒருவன் முன்பு கர்ணனுக்கு இட்ட சாபத்தினால் அவனது தேர்ச் சக்கரங்கள் பூமியில் புதையுண்டு இடப்புறம் முழுமையும் பூமியில் மறைந்துவிட்டது. இதை கண்டு கலங்கினான் கர்ணன்.
தனது மரணம் நெருங்கிவிட்டதை அறிந்த கர்ணன் பேசத் தொடங்கினான். தர்மம் தலைகாக்கும்! என்று கூறுவார்கள். நான் செய்த தான தர்மங்கள் இப்பொழுது என்னைப் பாதுகாக்கவில்லை! என்று புலம்பினான் கர்ணன். தேரில் இருந்தபடியே வேறுசில பாணங்களால் அர்ஜுனனையும், கிருஷ்ணரையும் தாக்கினான் #கர்ணன். #அர்ஜுனன் மீது பிரம்மாஸ்திரத்தை விட்டான். அர்ஜுனன் ஐந்தாஸ்திரத்தைகு கராணன் மீது விடுத்தான் . இப்பொழுது கர்ணனின் தேர் சக்கரங்கள் இரண்டும் முழுமையாக பூமியில் புதைந்து விட்டன. இதனால் கீழே இறங்கி தேரை தூக்க முயன்றான் #சல்லியன். ஆனால் அவனால் முடியவில்லை. எனவே கர்ணனும் சேர்ந்து தேரைத் தூக்க முயற்சித்தனர்! ஆனால் முடியவில்லை.
எனவே பயம் கொண்ட கர்ணன் அர்ஜுனனைப் பார்த்து பேசத் தொடங்கினான். அர்ஜுனா! நான் தேரின்றி நிற்கிறேன். அந்தணன், போரில் புறமுதுகிட்டு ஓடுபவன், வணங்குபவன், சரணாகதி அடைந்தவன், ஆயுதங்கள் இன்றி இருப்பவன், யாசிப்பவன், கவசம் இல்லாதவன் ஆகியோர்களை கொல்லக்கூடாது. நீ மாவீரன், யுத்த தர்மங்களை அறிந்தவன்! எனவே சற்றுப் பொறுத்திரு! தேரில் நிற்கும் நீ, தரையில் நிற்கும் என் மேல் அம்புகளை போட வேண்டாம்! என்றான் கர்ணன்.
இதைக் கேட்டு ஶ்ரீகிருஷ்ணர் அவனுக்கு பதில் கூறத் தொடங்கினார்.கர்ணா! தர்மத்தைப் பற்றிய நினைவு உனக்கு இப்பொழுதாவது வந்ததே. #பாண்டவர்கள்_எப்பொழுதும் #தர்மத்திற்குக்_கட்டுப்பட்டவர்கள். அதனால்தான் அவர்கள் மேன்மை அடைந்துக் கொண்டிருக்கிறார். #கௌரவர்கள்_எப்பொழுதும்
எனவே தாழ்வான நிலையை அடைந்து கொண்டிருக்கின்றனர். அதர்மவாதிகள் மேலான நிலையை அடையும் பொழுது, தம்மைப் பெருமைப்படுத்தி பேசிக்கொள்வார்கள்! தெய்வத்தையும் நிந்தித்திப்பர். ( இக்காலத்திலும் இதுவே நடைபெறுவது _ வேடிக்கை).
ஐந்து புத்திரர்களின் தாயான #திரௌபதி சபையில் அவமானப்பட்ட பொழுது உன்னுடைய தர்மம் எங்கே போய்விட்டது? அவளை விலைமகளைப் போன்றவள் என்றாயே? விலைமகளுக்கு ஆடை எதற்கு? என்று பேசினாயே? அரக்கு மாளிகையில் அவர்களை தீயிட்டு அழித்த போது துரியோதனனுக்கு நீ ஏன் அறிவுரை கூறவில்லை? பீமனுக்கு விஷம் வைத்து துரியோதனன் கொடுத்தானே? அப்பொழுது நீ ஏன் தடுக்கவில்லை? அபிமன்யுவை ஒன்பது பேர்கள் இணைந்து அநியாயமாக, நிராயுதபாணியாக்கிச் சூழ்ந்து கொன்றீர்களே! அப்பொழுது உனது தர்மம் எங்கே போயிற்று? அவனது எதிரில் வர பயந்து, அவனது முதுகிற்குப் பின்னால் மறைந்து நின்று, அவனது அம்பறாத்தூணியைக் கிழித்து அவனை நிராயுதபாணி ஆகியதே நீதானே? இப்பொழுது உனக்கு துயரம் என்றபோதும் மட்டும் நீ தர்ம நியாயத்தை பேசுகிறாய்! என்றார் ஶ்ரீகிருஷ்ணர். இதனால் வெட்கத்தால் தலை கவிழ்ந்தான்! கர்ணன்.
ஆனாலும் தரையில் நின்றவாறே அர்ஜுனனிடம் போரிட்டான். இருவரும் கடுமையாக திவ்ய அஸ்திரங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அப்பொழுது கர்ணன் விட்ட ஒரு பாணத்தால் எங்கும் இருள் சூழ்ந்தது! சுழல்காற்று வீசியது! திசைகளும் புழுதியால் மூடப்பட்டன. இதைப் பயன்படுத்திக்கொண்டு, அந்தத் தேரை தூக்கி நிறுத்த முயன்றான் கர்ணன். ஆனால் அவனால் இயலவில்லை. அப்பொழுது கிருஷ்ணர், அர்ஜுனனைப் பார்த்து, கர்ணன் தேரில் ஏறும் முன்பு உனது அம்புகளால் அவனைக் கொன்று விடு! இவன் காலமெல்லாம் அதர்மத்திற்குத் துணை நின்றவன். கர்ணன் இதுவரை எந்த நியாயத்தையும் கடைப்பிடிக்கவில்லை, நீ ஏன் அவனுக்காக காத்திருக்கிறாய்? என்று கர்ணன் அதுவரை செய்த அதர்மங்களை எல்லாம் கூறிய கிருஷ்ணர், பாணங்களை விடு என்றார்! அர்ஜுனனிடம்.
எனவே அர்ஜுனன் தனது பாணத்தை விட்டு அவனது தேர்க் கொடியைச் சாய்த்தான். இதனால் கௌரவர்கள் மனவேதனையடைந்தனர். கர்ணன் வெற்றி பெறுவான்! என இதுவரை நம்பியிருந்த அவர்கள் நினைத்திருந்தனர். பின்னர் #அஞ்சலிகம் என்ற அம்பைக் காண்டீபத்தில் பூட்டினான் அர்ஜுனன். சிறப்புமிக்க இந்த பாணம் எதிரியின் உயிரை வாங்கும் தன்மையுடையது. #நான்_செய்தத்தவம்பலிக்குமானால் இது கர்ணனைக் கொல்லட்டும்! என்று அந்த பாணத்தை விட்டான்! #அர்ஜுனன்.
இதனால் அண்ட சராசரங்களும் நடுக்கம் கொண்டன. அந்த அம்பானது கர்ணனின் தலையைத் துண்டித்து கீழே வீழ்த்தியது. கர்ணனுடைய உடலிலிருந்து புறப்பட்ட ஓர் ஒளியானது பிரகாசத்துடன் ஆகாயத்தில் சென்று *சூரியனை அடைந்தது. கர்ணன் மாண்டான்! என்பதை அறிந்த பாண்டவர்கள், தத்தம் சங்கங்களை எடுத்து ஊதினர்.
#இதிகாசமான_வியாசபாரதத்தின்படி #கர்ணன்_கொல்லப்படும்வரை #சல்லியன்_தேரிலேயே_இருந்தான். கர்ணன் மாண்டதால் சாபம் நீங்கியதால், அவனது தேரைச் சல்லியன் வெளிக்கொண்டு வந்து, ஓட்டிச் சென்றான். கர்ணன் கொல்லப்பட்டதால் தன் சபதம் நிறைவேறிய மகிழ்ச்சியோடு அர்ஜுனன் சென்றான்.
சல்லியன் தேரை விட்டு ஓடவில்லை. தர்ம தேவதை வந்து கர்ணனின் அம்புகளை தாங்கிக் கொள்ளவுமில்லை. அர்ஜுனனின் அம்புகள் மலர்மாலைகளாக மாறவும் இல்லை. கர்ணன் மாண்ட பின்னர் குந்திதேவி வந்து அழவுமில்லை. கர்ணன் இறக்கும் வரையிலும் குந்திதேவி அவன் தன் மகன் என்பதை யாரிடமும் கூறவேயில்லை. போர் முடிந்த பிறகு அனைவருக்கும் ஈமக் கிரியைகளைச் செய்யும் பொழுதுதான் #குந்திதேவி பாண்டவர்களிடம், கர்ணனும் என் மகனே! என்ற உண்மையைக் கூறினாள். எனவே அப்பொழுது பாண்டவர்கள், கர்ணனுக்கும் சேர்த்து ஈமக்கிரியைகளைச் செய்தனர்.
நாகாஸ்திரத்தை இரண்டாம் முறை கர்ணன் ஏவாததற்குக் காரணம்__ கிருஷ்ணர் அர்ஜுனனின் தேரைப் பூமியில் அழுத்தியதும் #நாகாஸ்திரம் தவறி மண்ணில் விழுந்தது. உடனே அந்த நாகத்தை தனது பாணங்களால் துண்டாக்கினான் அர்ஜுனன். எனவே மீண்டும் அந்த நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது ஏவ முடியாமல் போய்விட்டது! கர்ணனுக்கு. இதுவே கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் நடந்த போரின் சுருக்க விவரம்.
கர்ணனுக்கு இரு மனைவியரும், ஒன்பது மகன்கள் இருந்தனர். அவனது திருமணம் காதல் திருமணமல்ல. துரியோதனன் அவனது பிறப்பறியாத நிலையைக் கூறாது, அங்கதேச மன்னன் எனக் கூறி திருமணம் செய்து வைத்தான்.
அவனது மகன்கள்__ விருசசேனன் சுதமா; ஷத்ருஞ்ஜயா; திவிபடா; சுஷேனா; சத்தியசேனா; சித்ரசேனா; சுஷர்மா (பனசேனா); மற்றும் விருச்சகேது.
இதில் #விருச்சகேது குருச்சேத்திரப் போரில் இறக்காத ஒரு மகன். போருக்குப் பின் இவன் அர்ஜுனனின் அரவணைப்பில் இருந்தான். அவனை நாட்டின் ஒரு பகுதிக்கு மன்னனாக்கினர் பாண்டவர்கள். மிகவும் அன்புடன் கர்ணனின் மகன் விருச்சகேதுவை
தன் மகனைப் போலவே அரவணைத்து காத்தான்! *அர்ஜுனன்.🙏
(கர்ணன்_தொடரும்)

ஒரு குரு இருந்தார்.

 ஒரு குரு இருந்தார். ஒரு நாள் அவரை தேடி ஒருவன் வந்தான். ஐயா நான் ரொம்ப துன்பத்திலே இருக்கிறேன். அதிலிருந்து விடுதலையடைய ஆசைப்படுகிறேன். துன்...