Wednesday, 31 December 2025

சுக்கு மருத்துவக் குணங்கள்:-


 சுக்கு மருத்துவக் குணங்கள்:-

1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.
5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.
7. சுக்கு, கருப்பட்டி, மிளகு(Pepper) சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.
9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.
10. சுக்கு, மிளகு, சீரகம்(Cumin), பூண்டு(Garlic) சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.
11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.
12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.
13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.
14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.
15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.
16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.
17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.
18. சுக்கு(Dry Ginger) , மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.
19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.
20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.

மூன்றாம்_பாவகம்:

 


#மூன்றாம்_பாவகம்:

ஜாதகத்தில் உள்ள ராசி கட்டத்தில் லக்னத்தில் இருந்து மூன்றாவது கட்டமாக இருப்பதே மூன்றாம் பாவகமாகும். இது சகோதர பாவகமாக உள்ளது. இதில் ஜாதகருக்கு பின்னும் சகோதர, சகோதரிகள் இருக்கிறார்களா? என்பது பற்றியும், அந்த சகோதரர்கள் வாழ்க்கை தரம் பற்றியும், அவர்களுக்கு வரக்கூடிய நோய்கள் பற்றியும் அவர்களது மனோபாவ நிலைகளை பற்றியும் எடுத்துக் கூறலாம்.
அதே போல் ஜாதகரின் மனம், அந்த மனதின் நிலைபாடுகள் பற்றியும் பார்க்கலாம். கடல் அளவு துன்பம் வந்தாலும் அதனை தாங்கி நிற்கும் மனதைரியம் பற்றி பார்க்கலாம். இவரது மனதில் தோன்றும் ஆயிரம் ஆசைகள் மற்றும் கற்பனைகள், எண்ணங்களின் வடிவமாக தோன்றக்கூடிய கனவுகள், எதிர்பாராமல் நடக்கும் சில சம்பவங்கள் அதன் நினைவு அலைகள் பற்றி இந்த மூன்றாம் பாவம் தான் கூறுகிறது.
மூன்றாம் பாவத்தில் #சூரியன் நின்றால், ஜாதகருக்கு சிம்ம குரல் இருக்கும். அவசியமற்ற தேவையற்ற சிந்தனைகள், கற்பனைகளை வளர்த்துக் கொள்ள மாட்டார்கள். அசுரத்தனமான மன தைரியம் கொண்டவர். இவரது மனமும், உடலும் வேகமாக இருக்கும். இவருக்கு பின் சகோதரர் இருப்பார்.
மூன்றாம் பாவத்தில் #சந்திரன் நின்றால், ஜாதகருக்கு மெல்லிய குரல் இருக்கும். கற்பனைத் தேரில் பறந்து கொண்டே இருப்பார். சந்திரன் மூன்றில் மறைவதால், ஏதாவது நோய் தொல்லை இருந்து கொண்டே இருக்கும். சமயத்திற்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றிக் கொள்வார்கள். ஆன்மிகம், தியானம் இவற்றில் மனம் நாடும். ஜாதகருக்கு பின் சகோதரி ஒருவர் இருப்பார்.
* மூன்றாம் பாவத்தில் #செவ்வாய் நின்றால், அந்த ஜாதகர் எப்போதும் டென்ஷனாக இருப்பார். பேச்சுகளில் அதட்டல் குரல் வெளிப்படும். மனதில் கள்ளம் கபடம் இன்றி நேர்மையாக இருப்பார்கள். இவர்களுக்கு உடல் சூடு இருக்கும். இவர்களுக்கு மனம் ஒருநிலை கொள்ளாது இருப்பதே ஒருவகை நோய் தான். நாசி பகுதியிலும், கழுத்துப் பகுதியிலும் வலிகள் வந்து போகும்.
* மூன்றாம் பாவத்தில் #புதன் நின்றால், நடைமுறைக்கு சாத்தியப்படாத கற்பனையில் வாழ்வார்கள். இவர்களுக்கு மூச்சுக்குழாய் இறுகிக் கொள்வது, உணவு உண்பதில் சிரமம், அடிக்கடி தொண்டை குழி வறண்டு போவது, தொண்டை வலி போன்றவை உண்டாகும். சில சமயம் மூச்சு திணறல் மற்றும் தூசி படலத்தால் ஒவ்வாமை இருக்கும். கழுத்தில் மருக்கள், மச்சம் இருக்கும். இந்த ஜாதகர் சாந்தமான குரல் கொண்டிருப்பார்.
மூன்றாம் பாவத்தில் #குரு நின்றால், கழுத்து பகுதியில் சதை பற்று அதிகமாக இருக்கும். கணீர் என்ற வெண்கல குரல் இருக்கும். காதுகளில் நமைச்சல் உணர்வு இருக்கும். மன வசீகர சக்தி இருக்கும். சுவாச கோளாறுகள் வரக்கூடும். வயது ஆகும் போது சில இடங்களில் வாயுத்தொல்லை ஏற்படும்.
* மூன்றாம் பாவத்தில் #சுக்ரன் நின்றால், இனிமையான குரலில் பேசும் தன்மை கொண்டவராக இருப்பார். இவர்களுக்கு நாசியில் பிரச்சினை வரக்கூடும். காதுகளிலும் நரம்புகளிலும் பிரச்சினை வரலாம். கற்பனைகள், கனவுகளுக்கு அளவு இல்லை என்றாலும், அவை எல்லைகடந்ததாக இருக்கும். முதுமை காலத்தில் சில பிரச்சினைகள் வரும்.
* மூன்றாம் பாவத்தில் #சனி நின்றால், ஜாதகர் கழுத்து மற்றும் நாசி பகுதியில் பிரச்சினைகள் வரும். மனம் கெட்டவைகளை பற்றியே சிந்திக்கும். காது மந்தமாக கேட்கும். மூச்சு பிடிப்பு, கழுத்து பிடிப்பு இருக்கக்கூடும். அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவதால் தொண்டையில் எலும்புகள், மீன் முள் அடிக்கடி மாட்டிக் கொள்ள வாய்ப்பு உண்டு. பேசுவது கூட பிறருக்கு கேட்காதபடி மந்தக்குரலாக இருக்கும்.
* மூன்றாம் பாவத்தில் #ராகு நின்றால், கழுத்து நீண்டு இருக்கும். நல்ல குரல் ஓசை இருக்காது. அடிக்கடி விக்கல் வரும். உணவு குழாய் சீராய் வைத்து கொள்ள வேண்டும். மனக்குழப்பம், மனதைரியம் இல்லாமல் இருப்பதாலேயே பாதி நோய்க்கு ஆளாகி விடுவார்கள்.
மூன்றாம் பாவத்தில் #கேது நின்றால், மனம் கெட்டதையே நாடும். பொறாமை, சூது, வஞ்சம் என்கிற மனப்போக்கில் இருப்பார்கள். மன தைரியம் குறைந்தாலும், காரியத்தில் கண்ணாக இருப்பார்கள். உணவும், சுவாசமும் இவற்றில் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும். கழுத்து வலி, கழுத்தில் மருக்கள், மச்சம் இருக்கும். குரல் ஓசை கேட்கும்படியாக இருக்காது.
மூன்றாம் பாவம் என்னும் மறைவு ஸ்தானங்களில், நவக்கிரகங்களும் நின்றால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கே பார்த்தோம். இந்த பாவத்தில் கூட்டுக் கிரகங்கள் இருந்தால் அவற்றுக்கு ஏற்றபடி பலன்கள் மாறுபடும்.
மூன்றாம் பாவத்தில் எந்த கிரகமும் இல்லையென்றாலும் மூன்றாம் பாவ அதிபதி எங்கு உள்ளார் என்பதைப் பொறுத்தும், எந்த கிரகத்தோடு சேர்ந்து இருக்கிறாரோ அவற்றுக்கு ஏற்றபடியும் பலன்கள் மாறுபடும்.
அதாவது மூன்றாம் பாவாதிபதி மற்றும் மூன்றாம் பாவத்தை பார்க்கும் கிரகத்தை விட மூன்றாம் பாவத்தில் நின்ற கிரகமே வலிமையான கிரகமாக இருக்கும்.
மூன்றாம் பாவத்தில் சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்ரன் இந்த கிரகங்கள் நின்றால் நல்லது. இவை தவிர செவ்வாய், சனி, ராகு, கேது நிற்கக் கூடாது.
மறைந்த இடத்தில் கெட்ட கிரகங்கள் நின்றால் நல்லது என்றாலும் அதன் பாதிப்புகள் துன்பத்தைத் தருவதாக அமைந்து விடும்.
மூன்றாம் பாவம், சுப கிரக பார்வையில் இருந்தால் சில நன்மைகள் நடைபெறும் வாய்ப்பு உண்டு.

ராம_நாம_மகிமை

 #


ராம_நாம_மகிமை

1. நமக்கு நன்மை வரவேண்டுமானால் 'ராம நாமத்தை' இடைவிடாமல் கூறவேண்டும். நமது ஒவ்வொரு மூச்சும் 'ராம் 'ராம்' என்றே உட்சென்றும் , வெளியேறுதலும் வேண்டும்.
2. நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே
மிகச்சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் , தண்டனையை ஏற்பதுவும், பிராயசித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும் ஒவ்வொரு அடியும் 'ராம் ' என்றே நடக்கவேண்டும் .
3. எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் 'ராம நாம ஜெபமே.' கிழக்கு நோக்கி செல்ல செல்ல மேற்கிலிருந்து விலகிடுவோம். அதுபோல ராம நாமாவில் கரைய கரைய துக்கத்திலிருந்து விலகிசெல்கிறோம்.
4. ' ராம நாம' ஜெபத்திற்கு குரு கிடைக்கவேண்டும் என்று கால தாமதம் செய்தல் கூடாது. ஏனெனில் 'ராம நாமமே ' தன்னுள் குருவையும் கொண்டுள்ளது . நாமமே பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.
5. காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்லவேண்டியது 'ராம நாமம்.' எழுந்து கடமைகளை செய்யும்போதும் சொல்லவேண்டியதும் 'ராம நாமம்.' அந்த நாள் நமக்கு 'ராம நாம' நாளாக இருக்கவேண்டும்.
6. ' ராம நாம ' ஜெபத்தில் நாம் இருந்தால் , நமது கர்ம வினையின்படி ஏதேனும் துக்கமோ , அவமானமோ நிகழவேண்டியதாயின் அவைகள் தடுக்கப்படும் அல்லது நமக்கு அது பாதிப்பு இன்றி மாற்றி அமைக்கப்படும். பாதிப்பினை தாங்கும் வலிமையையும், அதுவும் பிரசாதமாக ஏற்கும் பக்குவமும் வரும்,
7. எந்த இடத்திலும், எந்த நிலையிலும் 'ராம நாமா' சொல்லலாம். எங்கும் உணவு உண்ணுமுன் 'ராம நாமா' சொல்லிசாப்பிடலாம். இறைவனும் அவனது நாமாவும் ஒன்றே!
8. 'ராம நாமா' எழுத மனம், உடம்பு, கைகள் ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால் 'ராம நாமா' சொல்ல மனம் மட்டும் போதும்.
இதைதான் "நா உண்டு, நாமா உண்டு" என்றனர் பெரியோர்கள் .
9. ஒரு வீட்டில் உள்ள பெண் 'ராம நாமா' சொன்னால் அந்த பெண்ணின் குடும்பம், கணவன் குடும்பம், குழந்தைகள், பெற்றோர்கள் அனைவரும் பிறப்பு, இறப்பு சக்கரத்திலிருந்து விடுபடுவார்கள். அந்த வீட்டினில் தெய்வீகம் நிறைந்துவிடும். அதுவே கோவிலாகும் .
10. எல்லாவித சாஸ்திர அறிவும் 'ராம நாமாவில் அடங்கும். எல்லாவித நோய்களுக்கும் 'ராம நாமா' சிறந்த மருந்து, துன்பங்களுக்கும் அதுவே முடிவு .
11. நமது இலட்சியம் அழியா ஆனந்தமே. அது 'ராம நாம ஜெபத்தால் பெற முடியும். 'ராம நாமாவினால் வினைகள் எரிந்து, எரிந்து நோய்கள் குறையும். சஞ்சிதம், ஆகாமியம் கருகி ப்ராரப்தம் சுகமாக அனுபவித்து ஜீரணிக்கபடும்.
12. நமது பயணத்தில் பஸ்சிலோ, காரிலோ , ரயிலிலோ, பைக்கிலோ செல்லும்போதும் 'ராம நாமா' சொல்லலாம். அதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படும்.
காசி விஸ்வநாதர் கோவிலில் மாலை வழிபாட்டின் போது ( சப்தரிஷி பூஜையின் போது )
ஒவ்வொரு நாளும், வில்வ தளங்களில் சந்தனத்தால் ராம நாமம் எழுதி, அவற்றை விஸ்வநாதருக்கு சமர்ப்பிக்கிறார்கள்.
13. பெண்களின் மாதாந்திர நாட்களிலும் 'ராம நாமா' சொல்லுவதன் மூலம் அந்த பிரபஞ்ச சக்தியிடமே அடைக்கலமாகிறோம்.'ராம நாமா' சொல்ல எந்த ஒரு விதியும் இல்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு.
பெண்கள் சமைக்கும்பொழுது ராம நாமம் சொல்லி சமைத்தால், அந்த உணவே ராம பிரசாதமாகி ......அதை உண்பவருக்கு தூய குணங்களையும் , நோயற்ற தன்மையையும் அவர்களது உடல் ஆரோக்கியத்தையும் பெறும். நோய்கள் இருப்பின் குணமாகும்.
14. வேதங்களின் படி ஒருவன் புண்ணிய நதிகளில் நீராடி பின்பு வேதம் கற்று, பூஜைகளை நியதிப்படி செய்தவனாய், யோகியாய் முந்தய ஜன்மங்களில் வாழ்ந்தவனாக இருந்தால், சுமார் 40,00,000 பிறவிகளை கடந்தவனாக இருந்தால் மட்டுமே அவனால் 'ராம நாமா' வை ஒரு முறை சொல்லமுடியும்.
15. 'ராம நாமாவை உரக்க சொல்லுங்கள். காற்றில்
ராம நாம அதிர்வு பரவி, உங்களை சுற்றிலும் காற்றில் ஒரு தூய்மையை ஏற்படுத்தும். கேட்கும் மற்றவருக்குள்ளும் அந்த தூய அதிர்வு ஊடுருவி தூய்மை மற்றும் அமைதியை கேட்பவருக்கும் தரும்.
சுற்றியுள்ள மரம், செடி கொடிகள் , பறவைகள், விலங்குகள் எல்லாம் 'ராம நாமா' கேட்டு கேட்டு ..... அவைகளும் மிக உயர்ந்த பிறவிகளை பெறலாம். இதுவும் சேவையே! ..... யார் அறிவர்? நமது முந்தய பிறவிகளில் நாமும் 'ராம நாமா' கேட்டு கேட்டு இப்போதைய பிறவியினை பெற ஏதேனும் ஒரு பக்தரின் வீட்டருகில் மரமாய், ..செடியாய் ...பறவையாய் ....விலங்காய் இருந்தோமோ ! என்னவோ ........ அப்புண்ணிய பலனை ..... ராமனே அறிவான்.
'ராம நாமா' சொல்லும்பொழுது ஏற்படும் தூய அதிர்வானது காற்றில் பதிந்துள்ள மனிதர்களின் தீய எண்ணங்களால் ஏற்பட்ட தீய அதிர்வுகளை ,தீய சக்திகளை....... .....நோய்க்கிருமிகளை அழித்துவிடும்.
'ராம நாமா அதிர்வு நமது ரத்தத்தில் உள்ள DNA மற்றும் gene coding...இல் உள்ள குணங்களுக்கு காரணமான ........கோபம் , வெறுப்பு, பொய், பொறாமை , சூது, போன்ற தீய குணங்களின் தன்மைகளுக்கு காரணமான....gene coding யை அழித்து .........ராம நாம அதிர்வு ..........சாந்தம் , பொறுமை , பணிவு , உண்மை........ தூய்மைக்கு காரணமான ராமரின் குணங்களை ஏற்படுத்தும்.('யத் பாவோ தத் பவதி'--எதை நினைக்கிறாயோ அதுவே ஆகிறாய்!)
'ராம நாமா' சொல்ல சொல்ல .........பரப்ரம்மமே ஆகிவிடுகிறோம் .
அகில உலகையும் வியாபித்து காக்கும் விந்தை மிக்கதோர் நுண்ணிய சக்தியே " ராம் ".
அதுவே உருவம் கொண்டபோது , தசரத ராமனாக , சீதாராமானாக, ரகுராமனாக , கோதண்ட ராமனாக பெயருடன் ( நாம ரூபமாக ) வந்தது.
உண்மையில் சத்தியமாம் ஒரே உண்மை ராம் ஒருவனே. ராம் அனைத்திலும் உள்ளான், அனைத்தும் ராமில் உள்ளன. ராம் ஒருவனே உண்மையான , பேரன்பே வடிவான உணர்வுமய வஸ்து .........பிரம்மம் என்பதும் அவனே !
எண்ணம் , மனம் ,செயல் , உள்ளம் , உயிர் அனைத்தும் ராமில் ஒடுங்கவேண்டும்.
இடைவிடாது ராம நாமத்தை ஜெபித்து வந்தால் அழியா இன்பத்தை ராம் அருள்வான் என ஸ்வாமி பப்பா ராமதாஸ் தமது தந்தையிடம் உபதேசமும் பெற்று ராம நாமத்தில் கரைந்து ராம ரசமாய், அதன் மயமாய் தானே ஆனார்.
16. நமது ஒரே அடைக்கலம் 'ராம நாமா'. அதுவே நம்மை சம்சார சாகரத்தில் இருந்து
கரையேற்றும். பிறவித்தளையை அறுக்கும் .
17. மற்ற எல்லா தர்மங்களும் ஒன்று பாவத்தை நீக்கும் . மற்ற ஒன்று புண்ணியத்தை தரும். ஆனால் 'ராம நாமா' ஒன்றே பாவத்தை அறுத்து, புண்ணியமும் அர்ப்பணமாகி பாவ, புண்ணியமற்று ( நிச்சலதத்வம் .......ஜீவன்முக்தி ) முக்தி தரும்.
18. 'ராம நாமா' மட்டுமே நன்மையே கொண்டு வந்து தரும் . மருந்தின் தன்மை தெரியாமல் சாப்பிட்டாலும் அது நோயினை குணப்படுத்திவிடும். அது போல 'ராம நாமா' வும் சொல்ல சொல்ல பிறவி நோயை, துக்க நோயை ,
ஆசை என்ற சம்சார நோயை அழித்துவிடும்.
19. நமது கைகளால் எது கொடுத்தாலும், அது நமது தலைவனாகிய ஸ்ரீ ராமனுக்கே ( எதிரில் உள்ள மனித வடிவில் உள்ள எஜமான் ஸ்ரீ ராமனுக்கே ) கொடுக்கிறோம். எது , எதனை எவரிடம் இருந்து பெற்றாலும் நமது அன்னையாகிய ஸ்ரீ ராமனே ( எதிரில் உள்ள மனித வடிவில் ) கருணையுடனும், அன்புடனும் நமது நன்மைக்காக தருகிறான். இந்த உணர்வு பெருக, பெருக ஸ்ரீ ராமனே தந்து , வாங்குகிறான். ( எதிரில் உள்ள மனிதரை கவனிக்காமல் அவரின் ....அந்தராத்மவுடனே பேசுகிறோம்.......ராம்! அன்னையே இந்த உடலுள் இருந்து நீயே பேசி, இயங்கி, செயல்படுகிறாய் ......என வணங்க, நமஸ்கரிக்க ) .....கொடுப்பவன் ஸ்ரீ ராமன் ..........வாங்குபவன் ஸ்ரீ ராமன்.
20. 'ராம நாமா' சொல்ல , சொல்ல நிகழும் எல்லா செயல்களும் , நிகழ்ச்சிகளுக்கும் ' அந்த ஒன்றே !' காரணமாகிறது என்பதும் ...... எல்லாம் அந்த பிரம்மத்தின் விளையாட்டே !.......என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியாய் உணரப்படும் .
21.'ராம நாமா' சொல்லச்சொல்ல ..........சொல்லுவதன் மூலம் ..... பார்ப்பது ராம் , பார்வை ராம், பார்க்கப்படுவது ராம், கேட்பது ராம், கேள்வி ராம், கேட்கபடுவது ராம், புலன்கள் ராம், உணர்வது ராம், உணரபடுவது ராம், உணர்வு ராம், இந்த பிரபஞ்சம் ராம், இந்த மனம் ராம் , புத்தி ராம், உடலும் ராம், ஆன்மா ராம், 24 தத்துவங்கள் ராம் , ..... .........நன்மை, தீமை , இன்பம் துன்பம் , எல்லாம் ராம் , எல்லாம் ராம் , எல்லாம் ராம்.
இத்தகைய .'ராம நாமா' வில் பைத்தியமாவதே ....அனைத்தும் .... ராமனாக .........ஆன்மாவாக ........
( ஏகாக்கிரக சித்தமாக ) அனைத்தும் ஒன்றாக அறிவதே உண்மையான அறிவு. அனைத்தும் ஒன்றாக ......ராமனாக ( ஆத்மா ராமனாக ) பார்ப்பதுவே ......... எல்லா எண்ணங்கள் ....... எல்லா செயல்கள் ........எல்லா உணர்ச்சிகளிலும் ...........இறை உணர்வை உணர்வதுவே ............இந்த பிறவியின் பயனாகும்.

எமனிடம் கர்ணன் கேட்ட வரம் என்ன தெரியுமா


 

எமனிடம் கர்ணன் கேட்ட வரம் என்ன தெரியுமா*🌹
மகாபாரத போரில் கொல்லப்பட்ட பிறகு, உரிய மரியாதைகளோடு கர்ணனை எமன் அழைத்து சென்றார். பூவுலகில் உனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல், கேட்டவர்களுக்கு கேட்டதை கொடுத்தாய். அதனால் சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக வாழ்வாய்’’ என கர்ணனிடம் எமன் கூறினான். கர்ணனும் சொர்க்கத்தில் வசிக்க தொடங்கினான். ஒரு நாள், கர்ணனுக்கு பசி ஏற்படுகிறது. அங்கிருப்பவர்களிடம் உணவு கிடைக்கும் இடம் பற்றி கேட்கிறார். அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.சொர்க்கத்தில் வசிப்பவர்களுக்கு பசிக்காது. அதனால் உணவுக்கு இங்கு வேலையில்லை என்றனர். ஆனால், கர்ணனால் பசிதாங்க முடியவில்லை. உடன் தேவ குரு பிரகஸ்பதியிடம் கேட்கிறான், கர்ணன். அவர் கர்ணனிடம், ‘‘உன் ஆள் காட்டி விரலை வாயில் வைத்து சுவை’’ என்கிறார். அவனும் சுவைத்தான், பசி அடங்கியது. இது பற்றி பிரகஸ்பதியிடம் கேட்டான் கர்ணன். “கர்ணா, நீ வள்ளல்தான். யார் எது கேட்டாலும் கொடுத்தாய். ஆனால், அன்னதானம் மட்டும் செய்யவில்லை.அதனால்தான் உனக்கு இங்கு பசி ஏற்பட்டது. பூவுலகில் நீ இருந்தபோது, ஒருநாள் ஒரு ஏழை உன்னிடம் சாப்பாடு எங்கு கிடைக்கும் என பசியுடன் கேட்டான். அதற்கு நீ, அவனுக்கு உணவு வழங்காமல் உணவு கிடைக்கும் இடத்தை உன் ஆள் காட்டி விரலால் சுட்டிக் காட்டினாய். அந்த புண்ணியத்தின் பலன்தான் இப்போது ஆள் காட்டி விரலை நீ உன் வாயில் வைத்தவுடனே, உன் பசி அடங்கியது’’ என்றார் பிரகஸ்பதி. கர்ணன் கண்ணீர் மல்க எமதர்மனிடம் சென்றான்.“எமதர்மா… நான் பூவுலகுக்கு சென்று அன்னதானம் செய்ய வேண்டும். நான் பூமிக்கு 15 நாள் செல்ல அனுமதி வேண்டும்’’ என வரமாகக் கேட்டான். எமதர்மனும் அனுமதித்தார். பூலோகம் வந்து யாரும் அடையாளம் கண்டு கொள்ளாத இடத்தில், அன்னதானம் செய்தான் கர்ணன்.15 நாள் முடிந்த பின் மீண்டும் எமலோகத்துக்கு கர்ணன்சென்றான்.ஸ்ரீஎஸ்வி
*ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் சிறுகதையும், அருள் மொழியும்*
ஒருமுறை கோயிலுக்குச் சென்ற ராமகிருஷ்ண பரமஹம்சரிடம், ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம்
எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன. கடவுளுக்கும் படைக்க முடியவில்லை. பக்தர்களுக்கும் கொடுக்க முடியவில்லை என்று முறையிட்டனர் கோயில் பணியாளர்கள். இதைக் கேட்ட பரமஹம்சர் சொன்னார்; இன்றைக்குக் கோயில் வாசலிலே ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைத்துவிடுங்கள் அப்புறம் எறும்புகள் உள்ளே வராது. அதன் படியே கோயில் வாசலில் சர்க்கரை போட்டதும், எறும்புகளெல்லாம் மொய்த்துவிட்டு அப்படியே திரும்பிப் போய்விட்டன.கோயிலுக்குள் வரவில்லை. உள்ளே விதவிதமாக பிரசாதங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த எறும்புகள் வாசலில் இருக்கிற சர்க்கரையை மட்டும் மொய்த்து விட்டுத் திரும்பிப் போய்விட்டனவே! என்று எல்லாரும் ஆச்சர்யப்பட்ட போது, பரமஹம்சர் சொன்னார்; எறும்புகளும் மனிதர்களும் ஒன்றுதான். மனிதர்களும், வாழ்க்கையில் உயரிய லட்சியமெல்லாம் வைத்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், நடுவிலே கிடைக்கிற அற்ப சந்தோஷத்துக்கு மயங்கி முன்னேறாமலேயே இருந்துவிடுவார்கள். அப்படி இல்லாது முன்னேறிச் செல்ல வேண்டும்.
*லிங்கோத்பவரை வணங்கினால் குற்றங்களும் மறைந்துவிடும்*
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் லிங்கோத்பவரை வணங்கினால், நாம் செய்த அனைத்துக் குற்றங்களும் மறைந்துவிடும். இனி குற்றம் செய்யும் எண்ணமும் வராது. நமக்கு வேண்டிய அனைத்தையும் அளிக்க வல்லவர். இங்கு பௌர்ணமி கிரிவலம் மிக விசேஷமானது. மேலும், இவரை வணங்க சூரிய கிரகணத்தால் உண்டாகும் அனைத்து பிரச்னைகளும் விலகும். மேலும் வென்னிற நந்தியாவர்த்தம் மலரால் அர்ச்சனையும், சாதம் அல்லது பால் நைவேத்தியமும் பௌர்ணமி அன்று கொடுக்க சித்தம் தெளிவடையும்.🌹

பூஜையறையில் கண்ணாடி வைப்பதன் நன்மை – தீமைகள் தெரியுமா?


 பூஜையறையில் கண்ணாடி வைப்பதன் நன்மை – தீமைகள் தெரியுமா?

வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும்
👉 வாஸ்து மற்றும் ஆற்றல் சார்ந்த தாக்கம் உண்டு என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அந்த வகையில்
கண்ணாடி என்பது
ஒளியையும், பிரதிபலிப்பையும் மட்டுமல்ல
👉 ஆற்றலையும் பெருக்கக்கூடிய ஒரு பொருள் என்று நம்பப்படுகிறது.
அதனால் தான்
கண்ணாடியை
👉 எங்கு வைக்க வேண்டும்
👉 எப்படி வைக்க வேண்டும்
என்பதற்கு தெளிவான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.
🏠 வீட்டில் கண்ணாடி வைப்பதற்கான பொதுவான விதிகள்
❌ வீட்டில் எங்கும் கண்ட இடத்தில் கண்ணாடி வைக்கக் கூடாது.
❌ உடைந்த அல்லது கீறல் உள்ள கண்ணாடியை வைத்திருப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
👉 இது மனஅமைதி குறைவு, எதிர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
🚪 வரவேற்பறை & நிலைவாசல் – சரியான இடம் எது?
வரவேற்பறையில்
👉 வீட்டுக்குள் வரும் நபர்களின் முகம் நேரடியாக பிரதிபலிக்கும்படி கண்ணாடி வைப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
திருஷ்டி போக்குவதற்கான கண்ணாடி
👉 வீட்டின் வெளிப்புறத்தில்,
👉 பிரதான வாசல் (Main Gate) அருகில்
👉 வெளியிலிருந்து உள்ளே வருபவர்களின் முகம் அதில் தெரிவதுபோல் வைக்கலாம்.
வீட்டிற்குள் நுழைந்தவுடன் முகம் தெரியும்படி கண்ணாடி வைத்தால்
👉 எதிர்மறை ஆற்றல்கள் உள்ளே பெருகும் என வாஸ்து கூறுகிறது.
🛕 பூஜையறையில் கண்ணாடி – நன்மைகள்
பூஜையறையில் கண்ணாடி வைப்பது
👉 பழங்கால வழக்கமாக இருந்து வருகிறது.
✨ ஆன்மிக காரணங்கள்:
பூஜையறையில் வைக்கப்படும் கண்ணாடி
👉 ஒளியை பிரதிபலித்து,
👉 தெய்வீக அதிர்வுகளை பெருக்குவதாக நம்பப்படுகிறது.
தண்ணீர் பாத்திரம் & கண்ணாடி
👉 இரண்டும் சேர்ந்து
👉 சுத்தம், அமைதி, ஆன்மிக ஒழுங்கை குறிக்கின்றன.
குலதெய்வ வழிபாட்டில்
👉 சிலர் கண்ணாடிக்கு சந்தனப் பொட்டு வைத்து
👉 மனதில் குலதெய்வத்தை நினைத்து வழிபடுவார்கள்.
இது தியானம் மற்றும் மன ஒருமைப்பாட்டுக்கான ஒரு வழி என எடுத்துக் கொள்ளலாம்.
📌 கண்ணாடியில் தெய்வம் நேரடியாக தோன்றும் என்பது
சாஸ்திரங்களில் உவமை மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான விளக்கம் ஆகும்.
🛏️ படுக்கையறையில் கண்ணாடி – கவனம் தேவை
✔️ படுக்கையறையில்
ஆள் உயர கண்ணாடி
முகம் மட்டும் தெரியும் கண்ணாடி
வைக்கலாம்.
❌ ஆனால்
படுக்கையில் படுத்திருக்கும் போது
👉 உங்கள் உருவம் பிரதிபலிக்கும்படி கண்ணாடி இருந்தால்
👉 மனஅமைதி பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
👉 அதனால்
இரவில் தூங்கும் போது கண்ணாடியை திரை போட்டு மூடி வைப்பது நல்லது.
இது
கணவன்–மனைவி உறவில்
மன அழுத்தம், தேவையற்ற எண்ணங்கள்
குறைவதற்கு உதவும் என நம்பப்படுகிறது.
🚿 குளியலறையில் கண்ணாடி
✔️ முகம் மட்டும் தெரியும்படியான கண்ணாடி போதுமானது.
❌ மிகப் பெரிய அல்லது தேவையற்ற பிரதிபலிப்பு கண்ணாடி வேண்டாம்.
🧭 எந்த திசையில் கண்ணாடி வைக்கலாம்?
✔️ கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி வைப்பது நல்லது.
❌ தெற்கு திசை நோக்கி வைப்பது தவிர்க்கப்படுகிறது.
🌿 பூஜையறை கண்ணாடியின் ஆன்மிக பலன்கள் (நம்பிக்கையின்படி)
✨ நேர்மறை ஆற்றல் அதிகரிப்பு
✨ மன ஒருமைப்பாடு
✨ பிரார்த்தனையில் ஈடுபாடு
✨ மன அமைதி & ஆன்மிக உணர்வு
👉 இது வாழ்க்கையின் கஷ்டங்களை
மன ரீதியாக சமாளிக்கும் வலிமையை தரும். 

ஒருமுறை மட்டுமே மரகதமேனி தரிசனம்ஆண்டுக்கு

 


ஒருமுறை மட்டுமே மரகதமேனி தரிசனம்ஆண்டுக்கு

உண்மையாகவே ஆச்சரியமூட்டும் நடராஜர் அதிசயங்கள்!
தமிழ்நாட்டில் எத்தனையோ சிவத்தலங்கள் இருந்தாலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்தரகோசமங்கை தனித்துவமானது.
இங்குள்ள நடராஜர் சிலையும், அதைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளும் அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் இடைப்பட்ட ஒரு பெரும் மர்மம்.
1. உலகிலேயே பெரிய மரகதத் திருமேனி! இங்குள்ள நடராஜர் சிலை சுமார் 5.5 அடி உயரம் கொண்டது.
இது விலைமதிப்பற்ற, தூய பச்சை மரகதக் கல்லால் ஆனது. உலகில் இவ்வளவு பெரிய மரகதச் சிலை வேறு எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2. ஏன் 364 நாட்கள் சந்தனக் காப்பு?
மரகதம் ஒரு மென்மையான கல்.
இது ஒளி, ஒலி மற்றும் காற்று ஆகியவற்றின் அதிர்வுகளால் விரிசல் அடைய வாய்ப்புள்ளது. இந்தச் சிலையைப் பாதுகாப்பதற்காகவே ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பு சாத்தப்பட்டிருக்கும்.
மேள தாளங்கள் கூட இந்தச் சிலைக்கு அருகில் பலமாக இசைக்கப்படாது.
3. அந்த ஒரு நாள் அதிசயம்!
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வரும் ஆருத்ரா தரிசனத்தன்று காலை சந்தனம் களையப்படும்.
அன்று ஒரு நாள் மட்டுமே சிலையைப் பச்சை நிற மரகத மேனியில் தரிசிக்க முடியும்.
அப்போது சிலையின் மீது சூரிய ஒளி படும்போது, சிலை உயிர்ப்புடன் இருப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்தும்.
மிகவும் நுணுக்கமாக கவனித்தால், சிலையின் உடலில் மனிதர்களுக்கு இருப்பது போன்ற நரம்புகள் தெரிவதை இன்றும் காணலாம். இதுதான் இந்தச் சிலையின் மிகப்பெரிய அதிசயம்!
4. அதிசய அபிஷேகமும் தீர்த்தமும்!
மரகத சிலையின் மீது அபிஷேகம் செய்யப்படும்போது, அந்தப் புனித நீர் மற்றும் சந்தனம் பல்வேறு நோய்களைத் தீர்க்கும் மருந்தாகக் கருதப்படுகிறது.
குறிப்பாகச் சிலையிலிருந்து எடுக்கப்படும் அந்தப் பழைய சந்தனம் பக்தர்களுக்குப் பெரும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
5. காலத்தால் முந்தைய தலம்
"மண் தோன்றிய போதே மங்கை தோன்றியது" என்பது இக்கோவிலின் பழமையைச் சொல்லும் வாசகம்.
அதாவது பூமி உருவான காலத்திலிருந்தே இந்தத் தலம் இருப்பதாக நம்பப்படுகிறது.
இராவணன் இந்த ஈசனை வழிபட்டுத் தான் தனது வரங்களைப் பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.
அறிவியல் விதிகளையும் தாண்டி, நம் முன்னோர்களின் சிற்பக்கலையும், ஆன்மீக ரகசியமும் இந்த மரகத நடராஜர் சிலையில் ஒளிந்துள்ளது. வாழ்நாளில் ஒருமுறையாவது காண வேண்டிய அற்புதமான தரிசனம் இது!

ஒரு குரு இருந்தார்.

 ஒரு குரு இருந்தார். ஒரு நாள் அவரை தேடி ஒருவன் வந்தான். ஐயா நான் ரொம்ப துன்பத்திலே இருக்கிறேன். அதிலிருந்து விடுதலையடைய ஆசைப்படுகிறேன். துன்...