திடீர் பணக்காரர் ஆக மாற்றும் யோகம் எது ?
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
"காசேதான் கடவுளப்பா!
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா!
கைக்கு
கைமாறும் பணமே
உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே!"
ஒருவன் திடீர் பணக்காரராக மாறவேண்டும் எனில் யாரோ பெயர் தெரியாத லட்சக்கணக்கான நபர்கள் தனது பணத்தை இழந்து நிற்க வேண்டும்.பலரது தோல்வி ஒருவரது அதிர்ஷ்டத்தால் நிகழ்கிறது.
இன்று எவ்வித உடல் உழைப்பு இல்லாமல் திடீர் பணக்காரராக வேண்டும் எனில் அவரது ஜாதகத்தில் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் தரும் ஜாதக அமைப்பு இருத்தல் வேண்டும்.
ஷோர் மார்க்கெட்டிங், ஆன்லைன் விளையாட்டு, ஆன்லைன் ரம்மி , ஷாக்பாட், லாட்டரி, சூதாட்டம், ரேஸ் போன்றவற்றின் மூலம் சில நேரங்களில் எதிர்பாராத அதிர்ஷ்டம் தரும் அமைப்பு சிலரது ஜாதகத்தில் அமைந்து தக்க தசா புக்தி காலங்களில் தந்து விடுவது
உண்டு.
"கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்" என்ற வகையில் மறைவிட ஸ்தானாதிபதி கள் தங்களுக்குள் பரிமாறி நிற்பின் அதன் தசை காலங்களில் மிகுந்த யோகத்தை தரும் என்பது பொது விதியாக இருப்பினும் சில விதிவிலக்குகள் உண்டு.
எந்த வகையிலும் பங்கப்படாத லக்கன யோகாதிபதிகள் (1,5,9) தசைகள்,குரு பார்வை பெற்ற தசைகள் போன்ற தசை காலங்களில் யோகம் தரும் அமைப்பை ஜாதகர் பெறுவார்கள்.
சில நேரங்களில் நெருக்கமான உறவுகள் மூலமாக கிடைத்த எதிர்பாராத சொத்து அல்லது
வீட்டிற்கு தெரியாமல் கடன் கொடுத்த நபரது மரணம் அல்லது ஒருவர் வாங்கி போட்டுள்ள தரிசு நிலமானது பிளாட்டாக பல லட்சம் லாபத்திற்கு விற்கும் நிலை போன்றவை.
திடீர் பணக்காரராக ஒருவர் மாறினார் எனில் நிச்சயமாக நேரிய வழியில் உழைத்து பொருள் ஈட்ட முடியாது.ஆனால் சில விதிவிலக்குகள் இருக்கலாம்.
எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் தரும் சாதகங்களை எடுத்துப் பார்த்து ஆய்வு செய்து பார்த்தால் அவர்களது ஜாதகத்தில் உபஜெய ஸ்தானம் என்று அழைக்கப்படும் 3, 6 ,10, 11 ம் இடங்களில் இயற்கை பாவ கிரகங்களான ராகு ,சனி, செவ்வாய் நட்பு நிலையில் நின்று அதன் தசை நடக்க கூடிய காலங்களில் எதிர்பாராத வகையில் பெருமளவில் பணம் சேர்த்து பணக்காரராக கூடிய யோகத்தை தரும்.
எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் ஒருவருக்கு மூன்று வகைகளில் பெறமுடியும்.
1) மூளையைப் பயன்படுத்தி பெரும் தனம். ஈட்டும் யோகம் ,
2) உடலுழைப்பை பயன்படுத்தி பெரும் தனம் ஈட்டும் யோகம்,
3) உடல் உழைப்பையும் மூளையையும் பயன்படுத்தாமல் திடீர் தனயோகம் பெறும் அமைப்பு.
மூளையை அதாவது தான் பெற்ற அறிவை பயன்படுத்தி பெரும் பணம் ஈட்ட வேண்டும் என்றால் அவரது ஜாதகத்தில் அறிவு நிலை காரக கிரகம் என்று அழைக்கப்படும் புதன் மற்றும் குரு பகவான் நல்லமுறையில் சுபத்துவம் பெற்று தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்துடனும் மற்றும் தன ஸ்தானமான இரண்டாம் இடத்தில் தொடர்பு பெற்று அவைகள் லக்கன யோகராக அமைந்து அதன் திசை நடக்கக்கூடிய காலங்களில் தனது மூளையால் தான் மேற்கொண்ட தொழிலில் பணம் ஈட்டக் கூடிய யோகத்தை ஜாதகர் அடைவார்.
உடல் உழைப்பைப் பயன்படுத்தி பெரும் அதிர்ஷ்டத்தை பெற அவரது ஜாதகத்தில் பாவ கிரகங்களான செவ்வாய் மற்றும் சனி பகவான் சுபத்துவம் பெற்று தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்திலும் மற்றும் தன ஸ்தானமான இரண்டாம் இடத்திலும் தொடர்பு பெற்று மறைமுகமாக முறையில் வலுப்பெற்ற அமைப்பைப் பெற்றவர்கள் அதன் தசை காலங்களில் உடல் உழைப்பை பயன்படுத்தி பெருந்தனம் ஈட்டுவார்கள்.
சில நேரங்களில் உடல் மற்றும் மூளை உழைப்பை பயன்படுத்தாமல் எதிர்பாராதவிதமாக ஒரு தொழிலில் ஈடுபடும் போதோ அல்லது தான் வாங்கி வைத்திருந்த ஒரு நிலமானது எதிர்பாராத வகையில் பெரும் விலை ஏற்றம் பெறுவதன் மூலம் யோகத்தை அடைவார்கள்.
இதுபோன்று மூன்றாம் வகை அமைப்பினர் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெற கீழ்க்காணும் கிரக நிலைகளும் காரணமாக அமைகிறது.
நிழல் கிரகங்களில் ராகு பகவானுக்கு எதிர்பாராத தீடீர் அதிர்ஷ்டம் தரக்கூடிய யோக அமைப்புகள் உண்டு.சற்றும் எதிர்பாராத பிரமாண்டத்தை தருவதில் ராகுவுக்கு நிகர் ராகு பகவானே ஆகும்.
ராகு பகவான் மேஷம்
, ரிஷபம், கடகம்,
மகரம்,
கன்னி போன்ற ஐந்து ராசிகளில் ஏதாவது ஒன்றில் அமர்ர்ந்து அந்த வீடானது உப ஜெய ஸ்தானமான 3,6,10,11 ஆம் வீடுகளில் ஒன்றாக இருந்து
அதன் தசை நடப்பில் வரக்கூடிய காலங்களில் ஜாதகருக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்களை கொடுக்கும்.
அதிலும் குறிப்பாக மூன்று மற்றும் பதினொன்றாம் இடங்களில் அமர்ந்து இருக்கக்கூடிய ராகு பகவான் அதன் தசை காலங்களில் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் தரக்கூடிய அமைப்பை பெற்றிருக்கும்.மூன்று மற்றும் பதினொன்றாம் இடங்களில் அமர்ந்து இருக்கக்கூடிய ராகு பகவான் லக்கன யோகர்களது நட்சத்திர
சாரத்தில் நிற்க கூடிய அமைப்பை பெற்றிருக்கும்.
ராகு பகவான் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்றிருந்தாலும் அல்லது ராகு பகவான் உடன் கோணதிபதிகள் தொடர்பு பெற்றிருந்தாலும் மிகுந்த யோகத்தை ஜாதகருக்கு அளிக்கிறது.
மேற்கண்ட அமைப்பினை பெற்றுள்ள ராகு பகவான் அந்நிய மொழி பேசக்கூடிய அந்நிய நாட்டு தேசம் சென்று பொருள் ஈட்ட கூடிய அமைப்பு,, ஆன்லைன் வர்த்தகம், ஷேர் மார்க்கெட், லாட்டரி, குதிரை
ரேஸ், மாந்திரிகம்,மருந்து பொருட்கள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், கமிஷன், போன்ற வகையிலான தொழிலில் ஈடுபட்டு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் தரும் அமைப்பை பெற்றிருக்கும்.
மகா தன யோகம் தரக்கூடிய ஸ்தானங்களான தன, பாக்கிய மற்றும் லாப ஸ்தான அதிபதிகள் தங்களுக்குள் பரிமாறி நின்றாலோ அல்லது லக்கன ,தன,பாக்கிய மற்றும் லாப ஸ்தானங்களில் ஏதோ ஒரு இடத்தில் நின்று சுபத்துவமான நிலையில் நின்று அதன் தசை நடப்பில் இருக்க கூடிய காலங்களில் எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டம் தரும் அமைப்பை தரும்.
பாவ கிரகங்களான சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது போன்றவை உப ஜெய ஸ்தானமான 3,6,10,11 போன்ற இடங்களில் நட்பு நிலையில் சுபத்துவமான நிலையில் நின்று அதன் தசை நடக்க கூடிய காலங்களில் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் தரும் அமைப்பை ஜாதகர் பெறுவார்கள்.
No comments:
Post a Comment