வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்;-
வாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள் வாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு சாஸ்திரம்.
இதை சரியான முறையில் பின்பற்றினால் நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம்.
ஆனால், அதில் தவறு ஏற்பட்டால், நீங்கள் அதள பாதாளத்தில் விழுந்து விடுவீர்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது.
உங்கள் கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டும்.
அதாவது, நீங்கள் தூங்கும் போது உங்கள் தலை மேற்குப் பக்கமாக இருக்க வேண்டும்.
சூரியன் உதிக்கும் பக்கத்திற்கு எதிர்ப்பக்கமாக இருப்பது மேற்கு பக்கம்.
இந்த பக்கம் தலை வைக்கும் விதத்தில் உங்கள் கட்டிலை திருப்பி வைத்துக்கொள்ளுங்கள்.
எவ்வளவுதான் கஸ்டப்பட்டு வேலை செய்தாலும் அதற்கு ஏற்ற விதத்தில் பணம் கிடைக்காமல் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த முறை நிறையவே பயன்தரும்.
எக்காரணம் கொண்டும் வடக்குப் பக்கம் தலை வைத்துப்படுக்காதீர்கள்.
இப்படி செய்வதன் மூலம் நீங்கள் சோம்பேறிகளாகி விடுவீர்கள்.
பணம் அதிகமாக கைமாறும் காரியம் ஒன்றில் நீங்கள் கலந்துகொள்ளச் செல்லும் போது, காணி விற்றல், வீடு கட்டல், சிகப்பு அல்லது இளம் சாம்பல் நிற உடைகளை அணிந்து செல்லுங்கள்.
உடைகள் இல்லையென்றால் இந்த நிறத்தில் கைக்குட்டை ஒன்றையாவது எடுத்துச் செல்லுங்கள்.
இதனால் சில அதிசயங்களும் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
உங்கள் வீட்டில் உள்ள குழாய்களில் அடிக்கடி தண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கிறதா என்பதில் கவனமாக இருங்கள் சில வீடுகளில் உள்ள பைப்புகளில் பார்த்தால் சொட்டுச் சொட்டாக தண்ணீர் ஒழுகிக் கொண்டே இருக்கும் இப்படி நடப்பதனால் அந்த வீட்டில் செலவு அதிகமாகவே இருக்கும்.
இதேபோல், வீட்டினுள் எந்தப் பகுதியிலும் ஈரத்தன்மை இல்லாமலும், பூசணம் பிடிக்காமலும் வைத்திருப்பதில் கவனமாக இருங்கள்.
உங்கள் வீட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் எந்த இடத்திலாவது சில்லறை காசுகள் போட்ட பானை ஒன்றை வையுங்கள்.
இதற்காக சிறுவர்கள் கூட்டாஞ்சோறு ஆக்கும் பானை ஒன்றை நீங்கள் பயன்படுத்துவதுதான் சிறப்பு.
இந்த பானை நிறைய மாற்றப்பட்ட சில்லறைக் காசுகளைப் போட்டு அதன் வாயை மூடாமல் கிழக்கு பக்கத்தின் ஒரு பகுதியில் வையுங்கள்.
முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இப்படி ஒரு பானை அந்தப் பகுதியில் இருப்பது எவருக்கும் தெரியக்கூடாது.
அதாவது, யாருடைய பார்வையிலும் படாத ஓர் இடத்தில் தான் இந்தப் பானையை வைக்க வேண்டும்.
சாதாரண அறைகளில் குடியிருப்பவர்கள் கிழக்கு பக்கத்தில் உள்ள ஓர் இடத்தில் இந்தப் பானையை வைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு மேலதிகமாக பணம் வந்து சேருவதை நீங்கள் அனுபவ ரீதியாக பார்த்துக் கொள்ளலாம்.
உங்களது சாப்பாட்டு அறையில் பிரேம் போட்ட வட்ட வடிவமான கண்ணாடி ஒன்றை மாட்டி வையுங்கள். இதிலும் முக்கியமான ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்.
அதாவது, சாப்பாட்டு அறை சுவற்றில் மாட்டப்படும் அந்தக் கண்ணாடியில் மேசைமீதுள்ள உணவுவகைகள் தெரிய வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம், உங்களுக்குக் கிடைக்கும் பணம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
உங்கள் வீட்டுக்குள் தென்கிழக்குப் பகுதி எது என்பதைக் கண்டுபிடித்து அந்தப் பகுதியில் ஒன்பது மீன்கள் கொண்ட மீன் தொட்டி ஒன்றை வையுங்கள்.
இதிலும் முக்கியமான ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
அதாவது தொட்டியில் இருக்கும் மீன்களின் எண்ணிக்கை ஒன்பதாகத்தான் இருக்க வேண்டும்.
அதில் எட்டு மீன்கள் கோல்பிஷ் என்று சொல்லப்படும் மீன்களும் (சிவப்பு அல்லது பொன்நிறம்) ஒரு மீன் கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும்.
இப்படிச் செய்வதன் மூலம் பணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்டும்.
வாஸ்து பலன்கள்;-
#அறைகளும் Vs #திசைகளும்;-
அலுவலக அறை வடமேற்கு திசை.
புத்தக அறை தென்மேற்குத் திசை.
சமையல் அறை தென் கிழக்குத் திசை.
உணவு புசிக்கும் அறை தெற்குத் திசை.
படுக்கை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள்.
பூஜை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள்.
குளியல் அறை கிழக்கு திசை.
சேமிப்பு அறை வடக்கு திசை.
கழிவறை வட மேற்கு திசை.
இறைவனை வழிபடும் ஒருமுறையை உபசாரம் என்பார்கள் . வீட்டில் இறைவனை வழிபடும் முறைகளில் பஞ்சோபசாரம் எளிமையானது.
1. இறைவனின் திருவுருவ படங்களுக்குச் சந்தனம் இடுவது
2. இறைவனின் திருப்பெயரைச் சொல்லி, மலர் தூவி அர்ச்சிப்பது.
3. சாம்பிராணி, பத்தி தூபம் இடுவது.
4. நெய்தீபம், சூடம் தீபாராதனை செய்வது.
5. நைவேத்யமாக பிரசாதம் படைப்பது.
இந்த ஐந்து முறைகளில் இறைவனை வழிபடுவதை பஞ்சோபசாரம் என்று சொல்வர். இந்த எளிய முறைகளில் ஏதேனும் ஒன்றையாவது தினமும் கடைபிடித்து, பயபக்தியோடு இறைவனை வணங்கி, நியாயமான வழியில் வாழ்பவர்கள் நிறைந்த செல்வமும், தீர்க்காயுளும், வாழ்வுக்குப் பின் பிறப்பற்ற நிலையும் அடைவ
கோள்களிலிருந்து
வருகின்ற
காந்த அலைகள்
மனிதனுடைய எந்தப்பகுதியோடு
அதிகம் தொடர்புகொள்கின்றன.?
1) சூரியனிலிருந்து வருகின்ற
அலை = எலும்புகளோடும்;
2) புதன் = நரம்புகளோடும்;-
3) சுக்கிரன் = ஜீவ சக்தியோடும்;
4) சந்திரன் =இரத்தஓட்டத்திலும்;
5) செவ்வாய் = எலும்பிலுள்
மஜ்ஜையோடும்;
6) குரு = மூளை செல்களோடும்;
7) சனி = தோல் மீதும்;
வாஸ்து முறைப் படி பூஜை அறை அமைப்பது எப்படி?
வாஸ்து முறைப் படி பூஜை அறை அமைப்பதற்கு மிகச் சிறந்த திசை வடகிழக்கு மூலையாகும். மற்றும் வடக்கு, கிழக்குத் திசைகளிலும் பூஜை அறையை
அமைக்கலாம்.
பூஜை அறையின் உட்கூரைப்பகுதி வீட்டின் உட்கூரைப்பகுதியை விட தாழ்வாகயிருக்க வேண்டும்.
வாஸ்து முறைப் படி பூஜை அறையின் கதவை உச்சத்தில் அமைக்க வேண்டும்.
வாஸ்து முறைப் படி பூஜை அறைக்கு இரட்டைக் கதவுகள் தான் போட வேண்டும்.
கதவுகளில் சிறுசிறு துவாரங்களை அமைத்து அத்துவாரங்களில் மணிகளைத் தொங்கவிடும் போது மிகவும் சிறந்த பலன்கள் உண்டாகம், மணியோசை சகல ஐஸ்வர்யங்களையும் வீட்டிற்குள் கொண்டு வரும்.
பூஜை அறையின் வடக்கில் ஒரு ஜன்னலை வைக்க வேண்டியது அவசியம்.
அப்படி ஜன்னல் அமைக்கும் போது அதன் வழியே சூரிய ஒளி பூஜை அறைக்குள் வரும், இதனால் நன்மைகள் உண்டாகும்.
வாஸ்து முறைப் படி பூஜை அறையின் வடகிழக்குப் பகுதியில் அதிக பாரத்தை வைக்க கூடாது, வாஸ்து முறைப் படி பூஜை அறைக்குள் வடகிழக்கு மூலையில் மாடம் அமைக்கக் கூடாது.
பூஜை அறையின் மேற்குச் சுவரில் ஜன்னல் வைக்கக் கூடாது, வாஸ்து முறைப் படி மேற்குச் சுவரில் பூஜை சம்பந்தப்பட்ட பொருட்கள்.
விக்ரங்கள், படங்களைத் தவிர வேறு எந்த பொருளையும் வைக்கக் கூடாது.
படுக்கை அறை மற்றும் கழிவு அறைப் பக்கத்தில் பூஜை அறை அமையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வாஸ்து முறைப்படி கடவுள் படங்களை மேற்கு அல்லது தெற்குச் சுவரில் மாட்ட வேண்டும், அப்போது தான் அவை முறையே கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கியிருக்கும்.
கடவுள் படங்கள் மாட்டப் பட்டிருக்கும் உயரத்திற்கு மேலே எந்தப் பொருளும் மாட்டப் கூடாது.
ஆஞ்சநேயர் படத்தை தெற்கு திசை நோக்கி வைக்க வேண்டும்.
விளக்குகளை தெற்கு அல்லது வடக்கு நோக்கி வைக்கக் கூடாது, ஈசானியத்தில் பூஜை அறை அமைக்கும் பட்சத்தில் அதில் இறந்த முன்னோர்களின் படங்களை மாட்டக் கூடாது என்று ஒரு நியதி வாஸ்து சாஸ்திரத்தில் இருக்கிறது.
பூஜை அறையில் கடவுள்களின் உருவத்திற்கு மலர்கள் போடும்போது அந்தக் கடவுள்களின் முகமும், பாதமும் மலர்களால் மறைந்து விடாதபடிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எந்த நாள்களில் குறிப்பிட்ட நல்ல செயல்களைச் செய்யலாம்?
நாள் நட்சத்திரம் பார்த்துச் செய்தால் நல்லதே நடக்கும் என்பார்கள்.
அந்த அந்த நட்சத்திர நாளில் குறிப்பிட்ட சில செயல்களைச் செய்தால் நன்மையே கிட்டும். அந்த விவரம்:
குழந்தையைத் தொட்டிலில் விடுதல்:
உடல் வளர்ச்சிக்கு ஓய்வு அவசியம். குழந்தைகளுக்கு இறைவனாலேயே ஏற்படுத்தப்பட்ட உடற்பயிற்சிதான் கை-கால்களை அசைத்துக் கொள்ளுவது. அவ்வுடற்பயிற்சிக்குப் பின்னர் ஓய்வு கொள்ள கண் வளர வேண்டும். குழந்தைப் பிறந்த 10, 12, 16 மற்றும் 22-ம் நாளில் தொட்டிலில் இடுவது வழக்கம். இதற்கு ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, த்விதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி சுபகோள்கள் பார்த்த லக்னமும் எட்டாமிடம் சுத்தியும் ஏற்றது.
அன்னப்ராஸனம் - அமுதூட்டல்
தாயமுதால் வளரும் குழந்தைக்கு சிறந்த உணவுப் பழக்கத்தை ஏற்படுத்தச் சிறந்த நாளைத் தேர்ந்தெடுப்பது மரபு. இது 6, 8, 9 அல்லது 12-வது மாதத்தில் அஸ்வினி, மிருகசீர்ஷம், புனர்வசு, பூசம், உத்திராடம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் த்விதியை, திருதியை பஞ்சமி, ஸப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகளில் திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகர, கும்பமாகிய லக்னங்களில் செய்வது உத்தமம். இதற்கும் எட்டாமிடம் சுத்தமாக இருக்க வேண்டும். லக்னம் பலம் வாய்ந்ததாக இருந்தல் அவசியம்.
கேச கண்டமென்னும் முடியிறக்குதல்:
நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ, இச்சடங்கு மேற்கொள்ளப்படுகிறது. 3 அல்லது 5-ம் ஆண்டு செய்வது வழக்கம். வளர்பிறை மிகவும் ஏற்றது. த்விதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி ஆகிய திதிகள் அஸ்வினி, ரோகிணி, மிருகசீர்ஷம், புனர்வசு, பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள். திங்கள், புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகள். ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், மீனம் ஆகிய லக்னங்கள் ஏற்றது. எட்டாமிடம் சுத்தமாக இருத்தல் அவசியம். எழில் சூரியன், செவ்வாய் இருக்கக் கூடாது.
கர்ண பூஷணம் - காது குத்துதல்:
ஆக்யூபங்க்சர் என்னும் முறை இன்று மிகவும் பிரபலமாகியுள்ளது. உடல் நலத்துக்கும், வளர்ச்சிக்கும், நோய் நிவாரணத்துக்கும் இம்முறை சிறந்ததாகக் கருதப்படுகிறது. எல்லாவற்றிலும் மிகவும் உயர்ந்த நிலையை எட்டிய நமது முன்னோர்கள் இதனைக் கருத்தில் கொண்டே காது குத்தும் நிகழ்ச்சியைக் குழந்தைப் பருவத்திலேயே செய்வித்தனர். 6, 7 அல்லது 8-வது மாதத்தில் பகலில் செய்ய வேண்டும். இரண்டு திதிகள், இரண்டு நட்சத்திரங்கள் கொண்ட நாட்களைத் தவிர்க்க வேண்டும். மிருகசீர்ஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் த்விதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி ஆகிய திதிகள். ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்கள் ஏற்றது. எட்டாமிடம் சுத்தமாக இருந்தல் அவசியம்.
அட்சராப்யாஸம் - கல்வி புகட்டுதல்:
கல்வியின் சிறப்பைக் கூறுமிடத்து எண்ணும் எழுத்தும் கன்ணெனத் தகும் என்பார். ஐந்தாவது வருடத்தில் ஐந்தாவது மாதத்தில் ஐந்தாவது நாளில் செய்வது உத்தமம் எனப் பெரியோர்கள் கூறுவார்கள். அஸ்வினி, ரோகினி, திருவாதிரை-புனர்வசு, பூசம் உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி,
அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகியனவும். துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, மிதுனம், கடகம், மகரம், மீனம் ஆகியனவும் ஏற்றது. நான்கு, எட்டு ஆகிய இடங்களில் கிரகங்கள் இருக்கக் கூடாது. லக்னத்தையும் நான்காமிடத்தையும் சுபகோள்கள் பார்த்தல் உத்தமம்.
நிஸ்சயதார்த்தம் அல்லது நிச்சயதாம்பூலம்:
த்விதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி. ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி, அஸ்வினி, ரோகினி, மிருகசீர்ஷம், புனர்வசு, பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி, ரேவதி ஆகியன ஏற்றாது.
கேந்திரகோணங்களில் பாவக்கோள்கள் இல்லாத லக்னமாக அமைய வேண்டும்.
திருமாங்கல்யம் செய்ய:
அஸ்வினி, ரோகினி, மிருகசீர்ஷம், புனர்வசு, பூசம், மகம், உத்திராடம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி,
த்விதியை, திருதியை. பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி மற்றும் திரயோதசி,
ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம், இரண்டாமிடம் சுத்தமான லக்னமும் ஏற்றது.
கர்ப்பமான பெண்ணை தாய் வீட்டுக்கு அழைத்து வரல்:
த்விதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, திரயோதசி, திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமைகளிலும் பொதுவான சுப நட்சத்திரங்களில்
பெண்ணுக்கு தாராபலமுள்ள நாளில், பிரயாணத்துக்கு உகந்த நாட்களில் வாரசூலை, சுக்கிரன், எதிரில் இல்லாத நாளில் அழைத்து வரல் வேண்டும்.
ஏழாவது அல்லது எட்டாவது மாதத்தில் அழைத்து வர வேண்டும்.
குழந்தை பெற்ற பின்னர் மாமியார் வீட்டுக்கு அனுப்புதல்:
குழந்தைக்கு 3, 5, 7, 9, அல்லது 11-வது மாதத்தில் அனுப்பலாம். மூன்றாவது அல்லது ஐந்தாவது மாதம் அனுப்புதல் சிறந்தது.
துவிதியை, திருதியை, சதுர்த்தி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி, திதிகள்,
அஸ்வினி, ரோகினி, மிருகசீர்ஷம், புனர்வசு, பூசம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி,
குழந்தை-தாய் இருவருக்கும் தாராபலமுள்ள நாட்கள் ஏற்றன.
ஆனந்தாதி யோகப்படி நல்ல நாள் ஆகியவற்றை பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment