பாம்பை பெல்ட்டாகக் கட்டிய விநாயகர்...
ஒரு நாள் பிள்ளையார் பெரிய விருந்தில் கலந்து கொண்டு நிறைய இனிப்புகளும், மோதகங்களும் சாப்பிட்டார். அதன் பிறகு தனது வாகனமான சிறிய எலியின் மீது ஏறி வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் திடீரென்று ஒரு பாம்பு எலியின் முன் தோன்றியது.
பயந்த எலி திடுக்கிட்டு ஓடியது. அதனால் விநாயகர் கீழே விழுந்தார். வயிறு கிழிந்து உள்ளே இருந்த இனிப்புகள் வெளியே வந்தது.
விநாயகர் உடனே அமைதியாக எல்லாவற்றையும் மீண்டும் எடுத்து வயிற்றில் வைத்தார்.
பாம்பை எடுத்து தன் வயிற்றை சுற்றி கட்டிக்கொண்டார். அந்த காட்சியை பார்த்து வானத்தில் இருந்த சந்திரன் சிரிக்க ஆரம்பித்தார். அதை பார்த்த விநாயகர் கோபமடைந்தார்.
அவர் சொன்னார்:
“மற்றவரின் துன்பத்தை பார்த்து சிரிக்கும் உன் அகம்பாவத்திற்காக
இனிமேல் உன்னை யாரும் பார்க்கக் கூடாது!”
இவ்வாறு கூறி சந்திரனுக்கு சாபம் அளித்தார். அதன் பிறகு உலகில் இருள் அதிகமாகியது. தேவர்கள் அனைவரும் வந்து விநாயகரிடம் மன்னிப்பு கேட்டார்கள். அப்போது விநாயகர் சாபத்தை சிறிது குறைத்தார்.
“மாதத்தில் சில நாட்கள் மட்டும் சந்திரனை பார்க்கக் கூடாது.”
அதனால் தான் இன்று வரை
விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்று கூறப்படுகிறது.
மற்றவரின் தவறுகளை பார்த்து சிரிக்க கூடாது. அகம்பாவம் இருந்தால் அதற்கான பாடம் வரும்.

No comments:
Post a Comment