குலதெய்வ கட்டில் உள்ளது என்று சில பிரசன்ன ஜோதிடர்கள் அல்லது தெய்வ உபாசனை செய்யும் நபர்கள் கூறுகிறார்களே அது உண்மையா என்று ஒரு நண்பர் கேட்டு இருந்தார்.
சக்திவாய்ந்த தெய்வங்களை கட்டுப்படுத்த முடியுமா என்று கேட்டு இருந்தார்.
குலதெய்வ கட்டு என்பது உண்மை.
குலதெய்வ கட்டில் இருந்தால் அந்த தெய்வத்தின் சக்தி ஒட்டம் தடை படும்.
நித்திய பூஜைகள் நடைபெறாத ஆலயங்களில் இயல்பாகவே சக்தி ஒட்டம் குறைவாக இருக்கும்.
சக்தி ஒட்டம் குறைந்த நிலையில் உள்ள தெய்வங்கள் மாந்திரீக கட்டில் சிக்கி மேலும் தன்னுடைய சக்தியை இழந்து நிற்பதை தெய்வ கட்டு என்கிறோம்.
சக்தி ஓட்டம் தடை பெறுவதால் வேண்டுதல்களை( கோரிக்கைகளை) அந்த தெய்வம் நிறைவேற்றாது.
சக்தி ஓட்டம் குறைவதால் நித்திய பூஜைகள் நடைபெறாமல் ஒரு கால கட்டத்தில் அந்த கோவில் பழுதடையும் நிலை வரும்.
ஏனென்றால் முதலில் இத்தகைய வினைகளுக்கு எதிராக முதலில் எதிர்த்து நிற்கும் சக்தி குலதெய்வமே
மாந்திரீகர்கள் தாங்கள் எடுக்கும் காரியம் வெற்றி பெற எதிர்க்கும் குலதெய்வத்தை முதலில் கட்டி விட்ட பின்னரே எதிராளிக்கு எதிராக மந்திர பிரயோகம் செய்வார்கள்.
இதன் மூலமும் குலதெய்வம் கட்டில் சிக்குகிறது.
நீண்ட ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்த பழமையான சிவ ஆலயத்திற்கு திருப்பணி நடைபெற்ற பொழுது ஆலய இடத்தில் குடி இருந்தவர்கள் செய்த துர்காரியத்தால்
அங்கு வேலை செய்த ஸ்தபதியார் உட்பட பல நபர்களுக்கு கால் வீங்கி உடல் நலம் பாதித்தது. திருப்பணி வேலை சில காலம் தடைபெற்றது.
தோஷநிவர்த்திக்கு பின்பே மீண்டும் திருப்பணி துவங்கியது.
இதற்கு காரணமாக இருந்தவர்கள்
உயிர் இழப்பார்கள் அல்லது உடல் நிலை பாதிக்கப்படுவார்கள்.
கட்டிற்கு காரணமாக இருந்தவர் உயிரோடு இல்லாவிட்டால் அவரின் வாரிசுகளை அழித்து விடுகிறது.
என்ற வரி இதற்கு நன்கு பொருந்தும்.
அதே போல் தனக்கு ஏற்பட்ட கட்டை உடைக்க முயற்சி செய்த நபரை
அந்த தெய்வம் வாழ வைக்கிறது.
நீண்ட காலம் விடுபட இயலாமல் பிரச்சனைகளில் சிக்கி இருந்து சம்மந்தப்பட்ட நபரை அந்த சிக்கலில் இருந்து விடுபட வைத்து தன்னுடைய நன்றி கடனை அந்த தெய்வம் வெளிப்படுத்துகிறது என்பது நிதர்சனமான உண்மை.

No comments:
Post a Comment