பணம்னா என்னன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களா?. பணம் என்பது வெறும் காகிதம் கிடையாது. அது ஒரு மனிதனின் சுதந்திரம்.
காசு இல்லாதவன் இந்த உலகத்தில் நடைபிணம் என்று சொல்றாங்க. ஆனா அதைவிட கொடுமை திறமை இருந்தும் காசு சம்பாதிக்கத் தெரியாம இருக்கிறதுதான்.
பணம் சம்பாதிக்க பெரிய படிப்பு
வேணும் அல்லது பெரிய பின்னணி வேணும்னு. நீங்க நினைக்கலாம்
ஆனால் பணம் சம்பாதிக்கத் தேவையானது புத்திசாலித்தனமான ஒரு திட்டம் தான்னு வள்ளுவர் சொல்றார்.
இன்னைக்கு நான் சொல்லப்
போற இந்த விஷயங்கள் சரியான முறையில் நீங்கள் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்தினால்.
பணத்தைப் பற்றிய உங்களது மொத்தப் பார்வையையே மாற்றிவிடும். நீங்கள் இதுவரைக்கும் ஓடுன ஓட்டம் வேற, இனிமே ஓடப்போற ஓட்டம் வேறயா இருக்கும்.
ஏன்னா இது எதுவும் என்னுடைய
சொந்த கருத்து அல்ல வள்ளுவர் சொன்னது.
அல்லது வள்ளுவர் சொன்னத
நான் இந்த மாதிரி புரிஞ்சுகிட்டேன்னு சொல்றது தான் சரியாக இருக்கும்.
இந்த ரகசியங்கள் தெரிந்தால்
சரியான முறையில் நீங்கள் இதை உள்ளவாங்கினால் சாதாரணமாக இருக்க மாட்டீங்க. ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்க துடிப்பீங்க.
சரி வாங்க, நேரத்தை வீணாக்காம விஷயத்துக்குள்ள போவோம்.
1. பொருள் – மதிப்பு கொடுக்கும் சக்தி
முதல்ல ஒரு கசப்பான உண்மையை ஏத்துக்குங்க. பொருள் இல்லாதவரை
இந்த உலகம் ஒரு பொருட்டாக கூட மதிக்காது. இது நான் சொல்லல. வள்ளுவர் சொல்றாரு:
“பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருள் அல்லது இல்லை பொருள்.”
அதாவது, எந்த ஒரு மதிப்பும் இல்லாத நபரையும் முக்கியமான ஆளாக மாற்றும் சக்தி பணத்துக்குத்தான் இருக்கு.
இதுல வருத்தப்பட வேண்டியதில்லை. இதுதான் உலக நியதி.
நீங்க ஏழையாக இருப்பது உங்கள் தப்பு இல்லை. ஆனால் ஏழையாகவே சாவது உங்க தப்பு தான். ஏன்னா பணக்காரன் ஆவதற்க்கான விதை வெளியே இல்ல. உங்களுக்குள்ளே. உங்கள் மனசுக்குள்ள தான் இருக்கு.
2. உயர்ந்த சிந்தனை
“உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.”
உங்கள் கனவு பெருசா இருக்கணும். நிறைய பேர் பண்ற முதல் தப்பு என்ன தெரியுமா? அவங்க ஆசைப்படுறதுக்கே பயப்படுறாங்க.
மாசம் பத்தாயிரம் கிடைச்சா
போதும்னு நினைக்கிறவங்களுக்கு
ஒரு நாளும் ஒரு லட்சம் கிடைக்காது.
நீங்கள் கோடிகளில் சிந்திக்க ஆரம்பித்தால் தான் உங்கள் மூளை அதற்க்கான வழியைத் தேட ஆரம்பிக்கும்.
உங்கள் எண்ணம் தான் உங்களது எல்லை. அந்த எல்லையை உடைப்பது தான் முதல்படி.
3. முயற்சி – வியர்வையின் விலை
“தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி
தன் மெய் வருத்தக் கூலி தரும்.”
அதாவது, கடவுளே உனக்கு வரம்
கொடுக்க மறுத்தாலும், அதிஷ்டமே
இல்லன்னு யாராவது சொன்னாலும்,
உன் உழைப்பிற்கான கூலி உனக்கு கண்டிப்பாக கிடைக்கும்.
குறுக்குவழி தேடாதீங்க. உழைப்பில்லாம வர்ற பணம் வந்த வேகத்துல போய்விடும். நீங்க ஒரு தொழில் எடுத்தா அதுல உடம்போ அல்லது மனசோ வலிக்கிற அளவுக்கு உழைக்கணும். அது தான் வெற்றியின் அடையாளம்.
4. வகுத்து வாழுதல் – திருப்புமுனை
“ஆகாறு அளவிட்டிதாயினும்
கேடில்லை போகாறு அகலாக்கடை.”
உங்க வருமானம் சின்னதா இருக்கலாம். ஆனா உங்க செலவு அதைவிட அதிகமாகாமல் இருந்தால் நீங்கள் தான் ராஜா.
வருமானம் வர்றதுல ஒரு பகுதியை சேமிக்காம முழுசையும் செலவு பண்றவன், ஓட்டப்பானையில தண்ணீர் பிடிக்கிற மாதிரி. எவ்வளவு ஊத்தினாலும் நிரம்பாது. சிக்கனம் கஞ்சத்தனம் கிடையாது. அது புத்திசாலித்தனமான கட்டுப்பாடு.
5. காலம் அறிதல்
“ஞாலம் கருதினும் கைகூடும்
காலம் கருதி இடத்தால் செயின்.”
தொழிலில் சரியான நேரம் ரொம்ப முக்கியம். இப்ப நல்லா போகுது என்பதற்காக எல்லாரும் ஆரம்பிக்கும் போது நீங்களும் ஆரம்பிச்சா ஜெயிக்க முடியாது. அடுத்த ஐந்து வருடங்களில் என்ன தேவை வரும்னு கணிச்சு இப்பவே அதுல இறங்கணும். காத்து அடிக்கிற திசையை பார்த்து பாய்மரத்தை திருப்புறவன்தான் கரை சேருவான்.
6. சோம்பல் – மறைமுகப் பகைவர்
“மடிமை குடிமையை கெடுக்கும்.”
இன்னைக்கு செய்யலாம், நாளைக்கு செய்யலாம்னு தள்ளிப் போடுற பழக்கம் தரித்திரத்தோட நண்பன். ஒரு யோசனை தோணுதா உடனே செயல்படுத்துங்க. யோசிச்சுக்கிட்டே இருக்கிறவன் கரையிலேயே நிப்பான். துணிஞ்சு குதிக்கிறவன்தான் நீச்சல் கத்துப்பான்.
7. நேர்மை – நிலையான வளர்ச்சி
“அறன் ஈனும் இன்பம் ஈனும் திறனறிந்து
தீது இன்றிச் சேர்ந்த பொருள்.”
தப்பான வழியில
சம்பாதிச்ச பணம் நிலைக்காது.
“அழக்கொண்ட எல்லாம் அழப்போம்.”
மற்றவர்களை அழவச்சு சம்பாதிக்கிற
காசு உங்களை அழ வச்சுட்டுதான் போகும். நம்பிக்கையில்லாத தொழில் நீண்ட நாள் நிலைக்காது.
8. அறிவு – பாதுகாப்பு கருவி
“அறிவு அற்றம் காக்கும் கருவி.”
உழைப்பு மட்டும் போதாது. அறிவு வேணும். தொழிலில் புதிய மாற்றங்கள், சட்டங்கள், நுணுக்கங்கள் — எல்லாத்தையும் கத்துக்கிட்டே இருக்கணும். நேத்து இருந்த அறிவு இன்னைக்கு போதாது. தினமும் புதுப்பிக்கணும்.
9. இடுக்கண் – மன உறுதி
“இடுக்கண் வருங்கால் நகுக.”
நஷ்டம் வரலாம். ஏமாற்றம் வரலாம்.
ஆனால் சோர்ந்து போகக்கூடாது. தோல்வி என்பது முடிவில்லை. அது அடுத்த வெற்றிக்கான பாடம்.
10. சொல் வன்மை – வெற்றியின் ஆயுதம்
“சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல்
அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து.”
நீங்க திறமையானவரா இருந்தாலும் உங்கள் கருத்தை எடுத்து சொல்ல தெரியலன்னா வியாபாரம் நடக்காது. உரையாடல் திறனை வளர்த்துக்குங்க. நல்லா பேசுறவங்கதான் பெரிய இடத்தில இருக்காங்க.
---
வள்ளுவர். எவ்வளவோ சொல்லி இருக்கார். அதில் ஒரு சிறுதுளி தான் இது.
நம் முன்னோர்கள் நமக்குத் தேவையான சகலத்தையும் தந்துவிட்டே சென்றுள்ளனர். நாம் தான் எதையும் கண்டுகொள்வதில்லை.
பணம் சம்பாதிப்பது தப்பு இல்லை.
ஆனால் பணத்துக்காக மனிதத்
தன்மையை இழக்கக்கூடாது.
வள்ளுவர் காட்டும் வழியில் நடந்தால் உங்களுக்கு பணம் மட்டும் கிடைக்காது. கூடவே புகழும் நிம்மதியும் கிடைக்கும்.
பணக்காரன் ஆவது அதிஷ்டம்
இல்லை. அது ஒரு முடிவு.
அந்த முடிவை
நீங்க இன்னைக்கு எடுக்கணும்.

No comments:
Post a Comment