Monday, 23 March 2026

தொந்தி வயிற்றுத் தந்தி போற்றி!



தொந்தி வயிற்றுத் தந்தி போற்றி!

முந்திய பொருட்கும் முந்தியோய் போற்றி!
ஐந்துகையுடைய ஐய போற்றி!
ஐந்தொழில் ஆற்றும் அமர போற்றி!
🔹அருளாய் அருள்வாய் ஆண்டவ போற்றி!
தருவாய் மணமலர்த் தாராய் போற்றி! போற்றி!
கயமுக அசுரனைக் காய்ந்தாய் போற்றி!
மயலறும் இன்ப வாழ்வே போற்றி!
🔹ஆனையாய்ப் புழுவாய் ஆனாய் போற்றி!
பானை வயிற்றுப் பரமே போற்றி!
கடம்பொழி யானைக் கன்றே போற்றி!
மடம் ஒழி அறிவின்வளவனே போற்றி! போற்றி!
🔹பாலொடு தேனும் பருகுவோய் போற்றி!
மேலொடு கீழாய் மிளிர்வாய் போற்றி!
எய்ப்பில் வைப்பாய் இருந்தோய் போற்றி!
மெய்ப்பொருள் வேழமுகத்தாய் போற்றி!
🌹விநாயகா போற்றி... விக்னேஸ்வரா போற்றி...
ஓம் அருள்மிகு ஶ்ரீ மணக்குள விநாயக போற்றி ஓம் போற்றி 🙏.
ஓம் அருள்மிகு ஶ்ரீ ஆறுமுகப் பெருமானுக்கு ஹரஹரஹோஹரா 🙏.
ஓம் அருள்மிகு ஶ்ரீ ஸ்வாமியே சரணம் சரணம் ஐயப்பா 🙏.
ஓம் அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவடிகள் போற்றி போற்றி 🙏.
ஓம் அருள்மிகு ஶ்ரீ மஹாலக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் ப்ரபத்யே 🙏.
ஓம் அருள்மிகு ஶ்ரீ மஹா சரஸ்வதி தாயார் திருவடிகள் சரணம் 🙏.
ஓம் அருள்மிகு ஶ்ரீ திரௌபதி அம்பாள் துணை 🙏.

No comments:

Post a Comment

#பிரபஞ்சத்தின்ரகசியம்:

  #பிரபஞ்சத்தின்ரகசியம் : நீ எதை விதைக்கிறாயோ, அதையே அறுவடை செய்வாய்! ​இந்த உலகம் ஒரு பெரிய #கண்ணாடி . நீ எதைக் காட்டுகிறாயோ, அதையே அது பிரத...