Monday, 9 March 2026

கன்னியாகுமரி பகவதி அம்மனும் வைரக்கல்லும்:


 கன்னியாகுமரி பகவதி அம்மனும்

வைரக்கல்லும்:
💥வைரம்:
சுக்கிர கிரகத்தின் ஆதிக்கம் கொண்டது வைரம்.
சுக்கிரன் ஒருவருக்கு சுபபோகம்,சொகுசு வாழ்க்கை,
வாகனம் , மனைவி வழி வருமானம், இல்லற சுகம் ஆகியவற்றை தரும் கிரகமாக செயல்படுகிறது.
சுக்கிரன் ஆதிக்கம் பெற்ற வைரக்கல்லை ஓருவர் அணிந்தால் அவர் சுக்கிரனின் காரகத்துவத்தை பெற முடியும்.
‌‌
‌‌‌ வைரக்கல் மிக அதிக விலை கொண்டது . வைரக்கல்லில் இருந்து கிடைக்கும் சுக்கிரனின் ஆற்றல் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக தெய்வத்தை வைரத்தால் அலங்கரித்து நம் முன்னோர்கள் வழிபட்டார்கள்.
இதனால் சுக்கிரனின் பலன் ஏழ்மை நிலையில் இருப்போருக்கும் கிடைத்தது.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🛑கன்னியாகுமரி அம்மன்:
கன்னியாக்குமரி அம்மனின் மூக்குத்தி வைரக்கல்லால் ஆனது. கடலில் படகில் வரும் நபருக்கு கூட தெரியும் வகையில் பிரகாசிக்க கூடியது.
மிகவும் சிறப்பு வாய்ந்த அம்மனை வணங்குவோருக்கு சுக்கிரனின் ஆசி கிடைக்கும்.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🛑திருப்பதி ஏழுமலையான்
வைர கிரிடம் அணிந்து ஏழுமலையான் தன் பக்தர்களுக்கு அருள்புரிவார். ஏழுமலையானை வழிபட்டாலும் செல்வம் உயரும்.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🛑மதுரை மீனாட்சியம்மன்:
தீபாவளி அன்று மதுரை மீனாட்சி அம்மன் வைர கிரிடத்திலும் சொக்கநாத பெருமான் வைர நெற்றிப்பட்டை அணிந்தும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
அன்று வழிபடும் பக்தர்தளுக்கு சுக்கிரனின் ஆற்றல் வைரக்கல்லில் மூலம் கிடைத்து அவர்களின் வாழ்வில் சுபிட்ஷம் ஏற்படும்.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🛑திருப்பரங்குன்றம் முருகன் சுவாமிமலை முருகனுக்கு வைரவேல் அணிவிக்கும் போது வழிபட்டால் சுக்கிரனின் நன்மைகள் கிடைகும்.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🛑காஞ்சி காமாட்சி அம்மன் வைர கிரீடத்தில் காட்சி அளிக்கும் போது வழிபடுவது நன்மை கிடைக்கும்.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
💥 பசு சாண சாம்பல் விபூதியாக மாறி நற்பலனை அளித்தாலும் கோவில் கருவறைக்கு சென்ற பின்பு தான் அச்சாம்பல் அதீத சக்தி அடைவது போல்
கருவறையில் உள்ள தெய்வ விக்ரகங்கம்/ உற்சவமூர்த்திக்கு அணிவிக்கப்படும் இரத்தினங்கள் அதற்கு உரிய கிரக பலனை மிக அதிகமாக வெளியிடும் என்பது நிதர்சணமான‌‌ உண்மை.💥
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🌹உண்மையான வைரம் எது?
வைரத்தை சூரிய ஒளியில் பார்த்தால் வானவில்லின் ஏழு வண்ணமும் அதில் நன்கு தெரியும்.
புள்ளி,கீரல்,பிளவு போன்றவை வைரக்கல்லில் இருக்க கூடாது.
அப்படி இருந்தால் அது தோஷம் கொண்ட வைரம் ஆகும்.
போலி வைரக்கல்லும் தோஷமுடைய வைரக்கல்லும் அவயோகத்தை தரும்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🛑யார் பயன்படுத்தலாம்?
வைரக்கல்லை அனைவரும் பயன்படுத்த இயலாது.
‌ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன்‌யோகம் தரும் நிலையில் இருந்தால் அவர் வைரக்கல்லை பயன்படுத்தலாம். அவருக்கு வைரம் சுபயோகப்பலனை அதிகப்படுத்தும்.
அவயோகம் தருவதாக இருந்தால் ஒரு வாரத்தில் கெடுபலனைத் தரும்.

No comments:

Post a Comment

#பிரபஞ்சத்தின்ரகசியம்:

  #பிரபஞ்சத்தின்ரகசியம் : நீ எதை விதைக்கிறாயோ, அதையே அறுவடை செய்வாய்! ​இந்த உலகம் ஒரு பெரிய #கண்ணாடி . நீ எதைக் காட்டுகிறாயோ, அதையே அது பிரத...