Monday, 23 March 2026

பக்தர்களின் துயர் துடைக்க தாவி வரும் அடி முருகப்பெருமானின்

 


பக்தர்களின் துயர் துடைக்க

தாவி வரும் அடி
முருகப்பெருமானின் திருவடியாகும்.
பெருமைகளையுடைய முருகப்பெருமான்
திருவடிகள் இவ்வுலகினில்
மூன்று இடத்தில் பட்டது.
எங்கு என்றால்?
அவன் வாகனமான மயில் மேல்,
தேவர்கள் தலை மேல்,
அருணகிரிநாதர் பாடல்
எழுதப்பட்ட ஏட்டிலும்
திருவடிகள் பட்டது.
எது பட்டது ?
மகாபலி சக்கரவர்த்தியிடம்
மூன்றடி கேட்டு அன்று
மூன்று அண்டங்களையும் சேர்ந்த
அனைத்துக்கும் மேலாக
செம்மையான அடி, சிவந்த அடி,
நீட்டிய, அளந்த,
பெருமாள், விஷ்ணு மருமகன்
சிற்றடியே என்கிற சிறிய திருவடியே
என்கிறார் மகான் அருணகிரிநாதர்.
இந்தப் பாடலில் அருணகிரிநாதர்
முருகப்பெருமானின் திருவடிகளின்
பெருமைகளைப் பற்றி பாடுகிறார்.
முருகப்பெருமானைப் பற்றிய
பாடல்கள் எழுதிய ஏட்டிலும்
திருவடி பட்டது என்கிறார்.
ஆகவே திருவடி என்பதே ஞானம் ஆகும்.
திருவடியே ஆகமம், ஞானம், யோகம், அருள்.
தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென்
பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே. ...
தாவடி =தா + அடி = தாவி வரும் அடி. அடியவர்கள் துயரை துடைக்க தாவிவரும் அடி. முருகன் திருவடி.
அது உலகத்தில் மூன்று இடத்தில் படிந்தது.
எங்கு எல்லாம் ?
மயிலும் = அவன் வாகனமான மயில் மேல்
தேவர் தலையிலும் = தேவர்களின் தலை மேலும்
என் பாவடி ஏட்டிலும் = என்னுடைய (அருணகிரிநாதர் ) பாடல் எழுதப்பட்ட ஏட்டிலும்
பட்டது அன்றோ = பட்டது.
எது பட்டது ?
படி மாவலிபால் = மகாபலி சக்ரவர்த்தியிடம்
மூவடி = மூன்று அடி (நிலம் )
கேட்ட = கேட்டு
அன்று = அன்று
மூதண்ட = மூன்று அண்டங்களையும்
கூடி = சேர்ந்து
முகடு முட்ட = அனைத்துக்கும் மேலாக
சேவடி = செம்மையான அடி, சிவந்த அடி
நீட்டும் = நீட்டிய, அளந்த
பெருமான் = பெருமாள், விஷ்ணு
மருகன் = மருமகன்
சிற்றடியே = சின்ன திருவடியே

No comments:

Post a Comment

#பிரபஞ்சத்தின்ரகசியம்:

  #பிரபஞ்சத்தின்ரகசியம் : நீ எதை விதைக்கிறாயோ, அதையே அறுவடை செய்வாய்! ​இந்த உலகம் ஒரு பெரிய #கண்ணாடி . நீ எதைக் காட்டுகிறாயோ, அதையே அது பிரத...