இந்தக் கண் திருஷ்டி இதெல்லாம் இருக்கிறதா என கேட்டால் இருக்கிறது என்று தான் சொல்வேன். இதெல்லாம் முட்டாள்தனம் என சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள், கண் திருஷ்டி என்பது ஒருவர் தீய எண்ணத்துடன் தான் பார்க்க வேண்டும் என்ற அர்த்தம் கிடையாது, ஒரு அழகான குழந்தையை அழகா இருக்கே என பார்த்தாலும் கூட அந்த குழந்தைக்கு திருஷ்டி பட்டு விடுகிறது.அதனால் சின்ன குழந்தைகளுக்கு பெற்றோர்கள் திருஷ்டி சுற்றி போட்டு விடுகிறார்கள், சின்ன குழந்தைகளுக்கு மட்டுமல்ல வீட்டில் இருக்கும் அனைவருக்குமே வெள்ளி செவ்வாய்களில் திருஷ்டி கழிக்க வேண்டும்.
இதுபோக சில விஷயங்களில் கடுமையாக திருஷ்டி இருக்கும் அடுத்த வாரம் வெளிநாட்டுக்கு போகிறேன் என எல்லோரிடமும் சொல்லிக் கொண்டே இருந்தால் நீங்கள் போகும் பயணத்திற்கு தடை ஏற்படும், அடுத்த வாரம் ஒரு இடத்தில் வேலை கிடைக்க இருக்கிறது என சொல்லிக்கொண்டு இருந்தாலும் அதற்கும் தடை ஏற்படும், இதெல்லாம் அனுபவ உண்மை.
எனது வட்டாரங்களில் பல நண்பர்கள் உறவினர்கள் நன்றாக முதல் நாள் இரவு 9 மணி வரை பேசிக் கொண்டிருப்பார்கள், எதுவும் சொல்லியதில்லை காலையில் கேட்டால் வெளிநாடு சென்று விட்டார் சென்னைக்கு வேலைக்கு சென்று விட்டார் என கூறுவார்கள் அந்த அளவுக்கு ரகசியம் காப்பார்கள், இப்படி பல பேரை பார்த்து விட்டேன். எல்லாம் திருஷ்டி ஆகிவிடும் என்ற ஒரு பிரச்சனை தான். இது இருக்கவும் செய்கிறது அதனால் தான் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள் அதனால் தவறு ஒன்றுமில்லை.
திருஷ்டி என்பது அடுத்தவர் தான் நம் மீது கண் வைக்க வேண்டும் என்ற அர்த்தமில்லை, என் கண்ணே பட்டுவிடும் போல என பொதுவாக சொல்வதைக் கேட்டு இருப்பீர்கள் அதுபோல நம் கண்ணே நம் மீது பட்டுவிடும் விஷயங்களும் திருஷ்டியில் இருக்கிறது.
நேற்று பீரோவை திறக்கும் போது அதில் ஒரு சட்டை ஒன்று இருந்தது அந்த சட்டை வாங்கி 10 வருடம் ஆகிவிட்டது, என் உடல்வாகு ஒரே மாதிரியாக இருப்பதால் 10 வருடம் ஆனாலும் அந்த சட்டை எனக்கு பொருந்துவதால் அந்த சட்டையை நான் அணிவேன், அயன் பண்ணி இருந்த அந்த சட்டையை எடுத்து பார்த்தபோது பெரிதாக எந்த டேமேஜும் அந்த சட்டையில் இல்லை வெளுக்க வில்லை எதுவும் இல்லை, சரியாக அந்த சட்டையை கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் வில்லிவாக்கத்தில் ஒரு கடையில் வாங்கினேன், மூன்று சட்டை 600 ரூபாய் என்ற கணக்கில் அந்த சட்டையை கொடுத்தார்கள், அதை நான் நேற்று அந்த சட்டையை பார்க்கும்போது நினைத்துக் கொண்டேன், பரவாயில்லை இவ்வளவு வருசம் சட்டை எந்த ஒரு டேமேஜும் இல்லாமலே இருக்கிறது என நினைத்துக் கொண்டே இங்கு அருகில் உள்ள ஒரு ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றேன், வண்டியை நிறுத்திவிட்டு துளசி வாங்க சட்டையிலிருந்து காசை எடுத்தால், பையில் இருக்கும் காசு பக்கவாட்டில் இருந்து மொத்தமாக கீழே விழுகிறது என்ன என்று பார்த்தால் அப்போதுதான் சட்டை கிழிந்து இருக்கிறது, எப்படி கிழிந்தது என்றே தெரியாது, அப்போ பாருங்கள் திருஷ்டி செய்யும் வேலையை.
இதுபோல மனிதர்கள் வாழ்வில் பல்வேறு தடைகளுக்கு காரணம் திருஷ்டி தான் இதை சரியான முறையில் கழித்தால் வாழ்வில் தடைகள் எதுவும் இருக்காது இதெல்லாம் முட்டாள்தனம் என பலர் சொல்வார்கள் அவர்கள் சொல்வதை நீங்கள் கேட்டால் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியது தான்.
உங்கள் வாழ்வில் தடைகள் இருந்து கொண்டே தான் இருக்கும் அதனால் வெள்ளி செவ்வாய் சாதாரண கற்பூரம் ஆவது வைத்து சிறு குழந்தைகள் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அனைவருக்கும் திருஷ்டி சுற்றி போடுதல், குளிக்கும் தண்ணீரில் அடிக்கடி உப்பு போட்டு குளித்தல், கண் திருஷ்டி நீக்கும் சக்தி வாய்ந்த காளி கோயில்கள் உக்கிர தெய்வங்களை வழிபடுதல் இந்த திருஷ்டியிலிருந்து உங்களை பாதுகாக்கும்.

No comments:
Post a Comment