நீ எதை விதைக்கிறாயோ, அதையே அறுவடை செய்வாய்!
இந்த உலகம் ஒரு பெரிய #கண்ணாடி. நீ எதைக் காட்டுகிறாயோ, அதையே அது பிரதிபலிக்கும்...
உன் ஆழ்மனதில் நீ எதை அடிக்கடி நினைக்கிறாயோ, எதை உண்மையாக நம்புகிறாயோ, அதை நோக்கியே #உன்வாழ்க்கை நகர்கிறது...
பயத்தை விதைத்தால்: தடைகளும், தோல்விகளும் உன் கண்ணுக்குப் பெரிதாகத் தெரியும். "என்னால் முடியுமா?" என்ற சந்தேகம் உன்னைச் சூழ்ந்து கொள்ளும்.
நம்பிக்கையை விதைத்தால்: #மூடப்பட்டகதவுகளுக்குப் பின்னால் இருக்கும் புதிய வாய்ப்புகள் உன் கண்ணுக்குத் தெரியும். பிரபஞ்சம் உனக்கான பாதையை ரகசியமாகச் செப்பனிடும்...
உன் எண்ணமே உன் ஆயுதம்
சூரிய ஒளி ஒரு காகிதத்தின் மேல் சாதாரணமாகப் பட்டால் ஒன்றும் ஆகாது. ஆனால், ஒரு #பூதக்கண்ணாடி (Magnifying Glass) கொண்டு அந்த ஒளியை ஒரு புள்ளியில் குவித்தால், அந்தக் காகிதம் எரியத் தொடங்கும்...
உன் கவனமும் அப்படித்தான்! உன் ஆற்றலைச் சிதறவிடாமல், உன் #இலக்கில்மட்டும் குவிக்கத் தொடங்கினால், எந்தப் பெரிய இலக்கும் சாத்தியமே....
பிரபஞ்சத்திடம் நீ கேட்க வேண்டியது இதுதான்:
வெளியில் நடக்கும் #சலசலப்புகளைக் கண்டு அஞ்சாதே...
அவை மேகக்கூட்டங்கள் போல வந்து போகும். ஆனால் நீ #வானத்தைப் போல நிலையாக இரு...
தெளிவான முடிவு: நீ எதை அடையப் போகிறாய் என்பதில் துளியும் #சந்தேகம் இருக்கக்கூடாது....
தொடர் செயல்: பலன் கிடைக்குமா கிடைக்காதா என்ற #கவலைஇன்றி, இன்றைய வேலையை முழுமையாகச் செய்....
காத்திருப்பு: விதை போட்ட அடுத்த கணமே கனி கிடைக்காது. காலத்தின் மீது #நம்பிக்கைவை....
"தகுதியுள்ளவனுக்குத் தான் சோதனைகள் வரும். அந்தச் சோதனைகளைக் கடப்பவனுக்குத் தான் #சாதனைகள் சொந்தமாகும்."
நீ #பிரபஞ்சத்தின்செல்லப்பிள்ளை. உன் மன உறுதி இமயமலையாய் இருந்தால், #தடைகள் எல்லாம் வெறும் #தூசியாக மாறும்!
வெற்றி உன்னிடமே இருக்கிறது...
No comments:
Post a Comment