Friday, 10 April 2026

பாவங்கள் ஏற்பட என்ன காரணம்?




 பாவங்கள் ஏற்பட என்ன காரணம்?

பாவங்கள் ஏற்படுவதற்கான காரணம் அறியாமை ஆகும்.ஒரு பாவத்திற்கான பலன் என்ன என்பதை தெரிந்தால் அந்த மனிதன் அந்த பாவத்தை செய்ய முற்பட மாட்டான் . பாவம் எதிலிருந்து ஆரம்பமாகிறது இச்சையிலிருந்து ஆரம்பமாகிறது. இச்சை ஈர்ப்பினால் உருவாகின்றது.ஈர்ப்பு காண்பதின் தன்மையால் உருவாகின்றது. ஒன்று ஸ்தூல கண்களின் மூலமாக அடுத்து மன கண்களின் மூலமாக. எந்த பலவீனம் உள்ளே இருக்கின்றதோ அந்த பலவீனத்தின் அம்சம் இச்சையை உருவாக்குகின்றது. இச்சை அதை காட்சியாக காணும் போது அது எண்ணங்களாக உருவெடுக்கின்றது இச்சையுடைய எண்ணங்களை பலவீனமான புத்தியால் கட்டுப்படுத்த முடிவதில்லை எனவே அது செயலாக மாறி விடுகின்றது.இந்த செயலே பாவச் செயலாக மாறிவிடுகின்றது. எனவே, பாவத்தை ஒருவர் வெல்ல வேண்டுமென்றால் முதலில் தனக்குள் என்ன என்ன சூட்சுமமான இச்சைகள் இருக்கின்றது என்று சோதிக்க வேண்டும்.ஏனென்றால் இந்த உலகில் மாயை அப்படிப்பட்டது பலவீனமான சமஸ்காரங்களை உடையவர்களை எளிதாகவே கவிழ்த்து விடக்கூடியது மாயை என்பது எதுவென்றால் சூழ்நிலைக்கு தகுந்தாற் போல தன்னை மாற்றிக் கொள்ளக் கூடியது. அதாவது நீங்கள் நல்வழிக்கு செல்லும் போது அது தீய வழியில் இழுத்துச் செல்லும் நீங்கள் தீய வழிக்கு வந்த பிறகு அது தன்னை நல்லதாக காட்டிக்கொள்ளும். பிறகு தீமையில் இருந்து விடுபடுவதற்கு நீங்கள் மிகப்பெரும் பிரயத்தனம் செய்யவேண்டியதாக இருக்கும். பலவீனமானவரை மேலும் மேலும் மாயை அவரை கீழே தள்ள முயற்சிக்கும். எப்படி சேற்றில் சிக்கிக் கொண்டவர் மெல்ல மெல்ல சேற்றிற்குள் மூழ்குகின்றாரோ அதுபோல. எனவே, பாவம் என்பது தன்னை உயிரோடு சேற்றில் புதைத்துக் கொள்வதாகும். தான் சேற்றில் மூழ்கிக் கொண்டிருக்கின்றோம் என்பதே அறியாமல் இச்சைகள் மெல்ல மெல்ல மனிதனை மூழ்கடிக்க செய்கின்றன.இறுதியில் மூழ்கும் நிலை வரும்பொழுது தான் ஒருவருக்கு விழிப்புணர்வு வருகின்றது.அந்த நேரத்தில் யாரால் காப்பாற்ற முடியும். இறைவன் மனது வைத்தால் காப்பாற்ற முடியும். அப்பொழுது மூழ்கிக் கொண்டிருக்கும் மனிதன் பல உறுதிமொழிகளை எடுப்பான்.ஏனென்றால், அவனது இறுதி நேரமானது தெரிந்து விட்ட காரணத்தினால் இனிமேல் இந்த தவறுகளை நான் செய்ய மாட்டேன் இந்த துன்பத்திலிருந்து என்னை விடுவியுங்கள் என்று இறைவனிடம் இறைஞ்ச ஆரம்பிப்பான். நாம் நம்முடைய நேரத்தை வீணாக இழப்பதன் காரணமாக அந்த நேரமானது ஒன்று பிரயோஜனமற்ற நேரமாக கழிந்து கொண்டிருக்கும் அல்லது பாவ வழியில் கழிந்து கொண்டிருக்கும். எனவே இரவு உறங்கும் பொழுது நாம் நம்மை சோதனை செய்ய வேண்டும் எனது நேரத்தை நான் எவ்வளவு பயனுள்ளதாக பயன்படுத்தினேன். இன்று நான் பாவங்கள் செய்யவில்லை நல்லது புண்ணியங்கள் செய்தேனா. ஏனென்றால் நீங்கள் வாழும் வாழ்க்கையில் பாவம் செய்யாமல் இருக்கிறீர்கள் என்றால் நல்ல விஷயம் ஆனால் புண்ணியம் செய்யவில்லை என்றால் அது கெட்ட விஷயம் ஏனென்றால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு புண்ணியமானது உங்களை பின் தொடரக் கூடியதாக இருக்கின்றது. எனவே ஒரு காரியம் செய்வதற்கு முன்பாக அதனுடைய நல்ல மற்றும் தீய பலனை உணர்ந்து அதற்குப் பிறகு அந்த காரியத்தில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால் அந்த காரியத்தின் சுமைகளை நாம் சுமக்க வேண்டியதாக இருக்கும். பாவம் என்பது நம் மூலமாக பிறருக்கு துக்கம் ஏற்படுத்தும் செயலை செய்வது. புண்ணியம் என்பது நம் மூலமாக பிறர் ஆசீர்வதிக்கும் செயலை செய்வது. கடினமான வார்த்தைகளை பேசுவது தன்னுடைய தோற்றத்தின் மூலம் கடுமையை வெளிப்படுத்துவது. மனதின் மூலமாக பிறரை இகழ்வது. பிறரிடம் பிறரை தூற்றுவது இது அனைத்துமே பாவச் செயல்களாகும். அவனவன் செய்த வினையை அவனவன் அனுபவித்தே ஆகவேண்டும் என்று விதி இருக்கையில் அடுத்தவனை போய் ஏன் குறை சொல்வானேன். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று சொல்லும் போது நமது செயல்கள் யாவற்றிற்கும் நாமே பொறுப்பு ஒருவேளை பிறர் உங்களுக்கு துக்கம் கொடுத்தால் அவரை விட்டு விலகி இருங்கள் அந்த துக்கம் உங்களது மனதை பாதிக்காமல் இருப்பதுதான் நீங்கள் புண்ணிய ஆத்மாவாக வாழ்கின்றீர்கள் என்பதற்கான அடையாளமாகும். நல்லது. வாழ்த்துக்கள் ஓம் சாந்தி. இராஜயோக தியானத்தின் மூலம் தெய்வீக குணங்களை வளர்த்துக் கொள்ள அருகிலுள்ள பிரம்மாகுமாரிகள் நிலையத்தை அணுகி இலவச இராஜயோகத்தை கற்று மகிழ்வீர்.

No comments:

Post a Comment

#வேங்கைபால்மை

 * #வேங்கைபால்மை* வேங்கை மரம் நவ கிரகங்களில் செவ்வாய் கிரகத்தின் சக்தியை பூரணமாக உடையது.. இம்மரத்தை வெட்டினால் சிவப்பு நிறத்தில் பால் வடியு...