*குளிப்பதில் இவ்வளவு* *விசயங்களா*!
குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும்.
(இவை இரண்டும் உத்தம திசைகள்)
(கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம்)
மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் நோவு வரும்).
வீட்டிலேயே தினமும் கங்கா ஸ்நானம் செய்யமுடியும்.
குளிக்கும் முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிரவிரலால் “ஓம்” என்று த்யானம் செய்து எழுதுங்கள்.
அந்த நீர் அப்போதுமுதல் கங்கை நீராக மாறிவிடும்.
ஒரு நிமிட த்யானத்தில் “இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று இறையிடம் வேண்டிக்கொண்டு குளித்தால், உள்பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும்.
தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து கடைசியில் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும்.
நமது மண்டை ஓடுக்கு எப்படிப்பட்ட அக்னியின் வேகத்தையும் தாங்குகிற சக்தி உண்டு.
காலிலிருந்து பரவும் குளிரிச்சி மேல் நோக்கி பயணிக்கும் போது உள் அக்னியானது தலையை நோக்கி பயணிக்கும்.
இதுவே சரியான முறை.
தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை “பிரஷ்டம்” என்பர்.
அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது.
அங்கு தான் அக்னியின் வீச்சம் கூடுதல் வேகமாக பரவும்.
ஆதலால், குளித்து முடித்தவுடன், முதலில் முதுகு பாகத்தைதான் துவட்ட வேண்டும்.
துவலையை (துண்டு) குளிக்கும் நீரிலே நனைத்து பிழிந்து துவட்டுவது தான் உத்தமம்.
அனேகமாக, அனைவரும் ஈரம் படாத துண்டைத்தான் உபயோகிப்பீர்கள்.
உலர்ந்த துணியானது உள் சூட்டை வேகமாக பரவச்செய்து பல வித
உள் நோவுகளை உருவாக்கும்.
பிறருடன் வாய் திறந்து பேசக்கூடாத மூன்று நேரங்களில் ஒன்று, குளிக்கும் நேரம்.
மௌனத்தை கடைபிடிக்கலாம்,
அல்லது மனதளவில் தெரிந்த ஜெபத்தை செய்யலாம்.
குளிக்கும் போது,வாயில் கொள்ளளவு நீரை வைத்து குளித்தபின் துப்புவதால், கண்டத்துக்குமேல் (கழுத்துக்கு) வருகிற நீர் சம்பந்தமான கட்டுகளை, நோய்களை தவிர்க்கலாம்.
வாயில் இருக்கும் நீர்
மேல் நோக்கி எழும்பும் அக்னியின் வேகத்தை எடுத்துவிடும்.
நீர் நிலைகள், குளம், ஆறு, கடல் இவைகளில் எல்லா தேவதைகளும், பெரியவர்களும் அரூபமாக ஸ்நானம் செய்வதாக கூறுகிறார்கள்.
ஆதலால், ஓடி சென்று அதில் குதிக்காமல், கரையில் நின்று, சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்தபின், நீர் கலங்காமல், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில் மெதுவாக இறங்கி சென்று குளிக்கவேண்டும்.
நீரில் காரி உமிழ்வதோ, துப்புவதோ கூடாது.
நீரை விரயம் செய்ய கடன் அதிகரிக்கும்.
உப்பு நீர் ஸ்நானம் திருஷ்டி தோஷங்களை அறுக்கும். வெள்ளியன்று குளிப்பது நல்லது.
அசுத்தமான நீரை ஒரு போதும் நாம் வசிக்கும் இடத்தில் சேர்த்து வைக்கக்கூடாது.
உடனேயே நம் இடத்தை விட்டு வெளியேற்றி விடவேண்டும்.
சுத்த நீரில் அழுக்கு நீரை ஒரு போதும் கலக்க கூடாது.
அது மிகுந்த தோஷத்தை கொண்டு தரும்.
விளையாட்டுக்கேனும் நீரை காலால் உதைத்து விளையாடக்கூடாது.
குளிக்கும் போது குவளையில் நீரெடுத்து குளித்தால்,
நிதானமாக எடுத்து ஊற்றிக்கொள்ள
வேண்டும்.
நம்மில் பலருக்கும் வேக வேகமாக தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றிக் குளிப்பது தான் பிடிக்கும்.
அது தவறு.
அப்படி குளிப்பது தண்ணீரை
பழிப்பதற்கு சமம்.
குளிக்கும் போது, குளித்த கழிவு நீரில் ஒரு போதும் துப்பாதீர்கள்.
வாரத்தில் ஒருமுறை எண்ணை தேய்த்து குளிப்பதால், உடலில் சேரும் அதிகமான சூட்டை விலக்க முடியும்.
ஆண்கள் புதன், சனி தினங்களிலும், பெண்கள் செவ்வாய், வெள்ளி கிழமைகளிலும்
எண்ணை தேய்த்து குளிக்கவேண்டும்.
குளிக்கும் போது தலையிலிருந்து வழிகிற நீர் முன் நெற்றி வழியாக அல்லது முன்பக்கமாக வழிந்து ஓடுகிறபடி குளிக்கவேண்டும். தலையின் பின் பக்கமாக வழிகிற நீர் “நரக தீர்த்தம்” எனப்படும்.
அதை ஒரு போதும் அப்படி வழிய விடக்கூடாது.
ஓடும் நீர் சுத்தமான தீர்த்தமாக கருதப்படுகிறது.
குளம் ஆறு, நதி, கடல் போன்ற பொது இடங்களில் குளிக்கும் போது, நாம் குளிக்கும் நீர் பிறர் மீது தெறிக்காமல்/படாமல் இருக்க பார்த்துக் குளிக்கவேண்டும்.
அது போலவே, பிறர் குளிக்கும் நீர் திவலைகள், நம் மீது படாமல் விலகி நின்று குளிக்கவேண்டும்.
தீர்த்தமாடும் முறை...
கடலிலோ, புண்ணிய நதிகளிலோ புனித நீராடும் போது ஒரே ஆடையை மட்டும்
உடுத்தி நீராடக்கூடாது.
உடுத்தியிருக்கும் ஆடையின் மீது இடுப்பில் மற்றொரு ஆடையை சுற்றி கட்டிக்கொள்ள வேண்டும்.
தீர்த்தத்தில் மூழ்குவதற்கு முன் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இடுப்பு வரை தண்ணீரில் நனையும்படி நிற்கவேண்டும்.
மூன்றுமுறை சிறிதளவு தீர்த்தத்தை உள்ளங்கையில் எடுத்து ஆசமனம் (சிறிதளவு குடித்தல்) செய்ய வேண்டும்.
பின்பு புரோட்சணம் (தலையில் சிறிதளவு தெளித்தல்) செய்ய வேண்டும்.
முதல்முறை மூழ்கும்போது கண்கள், காதுகள், மூக்குத்துளைகளை கைகளால் மூடிக்கொண்டு மூழ்கவேண்டும்.
ஈர ஆடையுடன் மூழ்கக்கூடாது.
இரவில் தீர்த்த நீரில் மூழ்கக்கூடாது.
சிவராத்திரி, சந்திர கிரகணம் ஆகிய நாட்களில் மட்டும் இரவு நீராடலாம்.
சித்தர்கள் அருளிய எண்ணைய் குளியல் :
பழங்காலத்தில் மனிதன் நோயின்றி வாழ பல வழிகளை சித்தர்கள் எடுத்துரைத்தார்கள்.
எண்ணைய் தேய்த்து குளித்தால் உடலுக்கு நல்லது என அதற்கான வழிமுறைகளை உருவாக்கினார்கள் .
அதனாலேயே அவ்வையார் சனி நீராடு என எடுத்துரைத்தார்கள் .
சரி சனி நீராடு என சொல்லிவிட்டால் போதுமா ?
அதற்கான சித்தர்கள் கூறிய வழி என்ன என்பதை விளக்கவே
இந்த பதிவு !
தயாரிப்பு முறை : முதலில் நல்லெண்ணெய் 200 மில்லியில் 20 கிராம் சீரகத்தை போட்டு லேசாக சூடாக்கவும் .
பின் இளஞ்சூடானதும் எடுத்து சீரகத்தை வடிகட்டி ஆற வைத்து உடலின் தலையில் ஆரம்பித்து எல்லா இடங்களிலும் தேய்த்து நிழலில் உட்காரவும் .
வெயிலுக்கு வந்தால் உடலில் எண்ணைய் உள்ளே இறங்காமல் வெளியேறி எண்ணெய் குளியலை பயனில்லாமல் போகும் .
காலை சூரிய உதயமான
6 மணிமுதல் 8 மணிக்குள் நமக்கு உகந்த ஒரு மணி நேரம் எண்ணையில் உடலை ஊறவைக்கவேண்டும் .
பின் பெரிய அண்டாவில் சுடுதண்ணீர் இளஞ்சூடாக காய்ச்சி குளிக்க வேண்டும்.
அரப்பு ,சீயக்காய் தலைக்கு தேய்த்து குளிக்க உடல் குளிர்ச்சியாகும் .
குளித்த பின்பு 200 மில்லி இளஞ்சூடான தண்ணீர் அருந்த உள்சூடு சமப்படும்.
எண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நாட்கள் ஆண்கள் :புதன் ,சனி
பெண்கள் :செவ்வாய் ,
வெள்ளி
எண்ணெய் தேய்த்து குளித்த அன்று ஆகாதவை :
பழைய சாதம் , மோர் ,தயிர் ,இளநீர் போன்ற உடலை குளிர்ச்சி ஊட்டம் பொருட்கள் ஆகாது .
இவைகளை சாப்பிட்டால் சளி காய்ச்சல் வர வாய்ப்புகளுண்டு ..
சரி எண்ணைய் குளியல் அன்று என்ன சாப்பிடலாம் ?
சூடான உணவு வகைகள் , மட்டும் சாப்பிடவும் ,
அன்றைய தினம் உடலுறவு கொள்வதால் உடல் தளர்ச்சியுறும் .
ஆக அதையும் தவிர்த்து உடலை மேன்மையுடையதாய் ஆக்குங்கள் .
எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உண்டாகும் நன்மைகள் :
உள்சூடு கணச்சூடு சமனாகிறது .
அல்சர் போன்ற வயிற்று புண்கள் மெல்ல சரியாகிறது .
சரீரம் எண்ணெய் படுவதால் மூலம் போன்ற கொடிய நோய்கள் உருவாகாது.
பொதுவாக சூட்டினால்உண்டாகும் நோய்கள் உருவாகமல் உடலை பாதுகாக்கிறது .
யார் எண்ணெய் தேய்த்து குளிக்ககூடாது : சைனஸ் , ஆஸ்துமா , காசநோயளிகள் சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படு எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.
எண்ணெய் குளியல் தானே என அலட்சிய படுத்து பலர் பைல்ஸ் போன்ற நோய்களில் சிக்கி அவதிப்படுகின்றனர் .
48 சனிக்கிழமைகள் நீங்களும் எண்ணெய் தேய்த்துகுளியுங்கள் , தேகம் தங்கமாக மின்னும் .
No comments:
Post a Comment