Wednesday, 22 April 2026

நிற்காமல் சுற்றும் அனாதியான பிறவிச் சக்கரம்


 நிற்காமல் சுற்றும் அனாதியான பிறவிச் சக்கரம்...

இந்த பிறவி நாடக சக்கரம் என்பது நிற்காமல் சுற்றிக் கொண்டே இருக்கின்றது. எப்பொழுது அதர்மம் தழைத்து தர்மம் நிலை குலைகின்றதோ அப்பொழுது நான் பூமியில் அவதரிக்கின்றேன் என்பது பரமாத்மாவின் வாக்கு. இந்த வார்த்தையை நாம் இதற்கு முன்பு கேட்டிருந்தால் இதற்கு முன்பு அதர்ம கால கட்டத்தில் பரமாத்மா வந்திருக்கும் பொழுது இந்த வார்த்தையை கூறியிருப்பார். எனவே அது கடந்து போன சக்கரம் என்று ஆகிவிட்டது. வரும் சக்கரத்தின் காலகட்டத்திலும்
இந்த வார்த்தை கூறப்படுமானால் நாம் அடுத்த காலகட்ட சக்கரத்தில் இருப்போம். வரும் அதே பரமாத்மா அவரே தான் வருவார் என்றால் நாமும் அதே சக்கரத்தில் நாமாகத்தான் இருப்போம். அதாவது அவரது தோற்றம் ஒளி வடிவமாக இருக்கிறது என்றால் நம்முடைய ஆன்மாவின் தோற்றமும் இரு புருவ மத்தியில் ஒளி வடிவமாக இருந்து அதே உடலில் இருந்து கேட்டிருப்போம். ஆக சக்கரம் நிற்காமல் சுற்றிக் கொண்டே இருக்கின்றது. இந்த சக்கரம் அனாதியானது. இந்த சக்கரத்தில் கடவுளுக்கும் பாகம் உண்டு. அவரது பாகம் என்னவென்றால் பிறப்பு இறப்பில் வந்து பாவம் நிறைந்த ஆத்மாக்களாக மாறியிருக்கும் கலியுக இறுதி வேளையில் ஆத்மாவிற்கு ஞானத்தை கொடுத்து பிறப்பு இறப்பற்ற பரமாத்மாவாகிய தன்னை நினைக்க செய்வதன் மூலம் ஆத்மாவின் பாவத்தை அழித்து திரும்ப பிரம்ம தத்துவத்திற்கு அழைத்துச் செல்வதாகும். இதைத்தான் சிவனின் ஊர்வலம் என்று அழைக்கப்படுகின்றது. கூட்டிச் செல்வது ஓரிரு ஆத்மாக்களை கிடையாது உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஆத்மாக்களையும் அழைத்து செல்கின்றார். 5000 வருடம் கொண்ட இந்த பிறவி சக்கரத்தில் ஸ்வஸ்திக் போல நான்கு பாகங்கள் சம பாகங்களாக 1250 வருடங்கள். இதில் சத்திய யுகம் திரேதா யுகம் 2500 வருடங்கள் சொர்க்கம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த சொர்க்கத்தை பூமியில் படைப்பதற்காக தந்தை அதர்மத்தை அழிக்கின்றார்.மீதி 2500 வருடங்கள் துவாபரயுகம் கலியுகம் என்றழைக்கப்படுகின்றது. துவாபரயுக ஆரம்பத்திலிருந்து மனிதன் பாவங்கள் செய்ய ஆரம்பிக்கின்றான் அது கலியுக இறுதியில் அதர்ம நிலையை அடைகின்றது. அப்பொழுது ஜோதிவடிவமான தந்தை சிவபரமாத்மா ஞானத்தை புகட்டுவதற்காக ஒரு வயதான மானிட உடலில் இரு புருவங்களுக்கு மத்தியில் ஜோதியாகப் பிரவேசிக்கின்றார். அந்த வயதான மானிட உடலின் கமல வாயின் மூலமாக இந்த சிருஷ்டியின் ரகசியத்தையும் அதில் ஆன்மாவின் பிறவிகளையும் ஞானமாக எடுத்துரைக்கின்றார். ஒருவர் சொர்க்கத்திற்கு வரவேண்டும் என்றால் அவர் பரமாத்மாவின் மூலமாக ஞானத்தை கேட்டிருக்க வேண்டும். அந்த ஞானத்தை தனது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும். அவர்கள் தான் சொர்க்கத்தில் வருவார்கள். மற்றபடி உலகத்தில் நான் தானம் புண்ணியம் செய்தேன் என்று சொல்பவர்கள் இதே உலகத்தில் ஒரு நல்ல வீட்டில் ஜென்மம் எடுப்பார்கள். சொர்க்கம் என்பது முற்றிலும் தீய குணங்கள் அற்ற பாவங்கள் அற்ற உலகம். அங்கே செல்ல வேண்டுமானால் தன்னை ஆத்மா என்ற ஜோதியாக புரிந்து தனது தந்தையாகிய சிவ பரமாத்மாவை ஜோதியாக மனதினால் உணர்ந்து ஆத்மார்த்தமாக அவரை நினைவு செய்வதன் மூலம் ஆத்மாவில் உள்ள பாவங்களின் கரை அழிந்து ஒருவர் சொர்க்கம் செல்ல தகுதி அடைய முடியும். உலகில் வேறு யாரை நினைத்தாலும் பாவம் அழியாது. பரமாத்மாவின் மூலம் தூய்மையானவர் மட்டுமே சொர்க்கத்திற்கு செல்ல முடியும். மற்றபடி சன்னியாசிகள் உலக சுகத்தை காக்கையின் எச்சத்திற்கு சமமானது என்று சொல்கின்றார்கள். ஆனால் இரண்டு யுகங்களுக்கு சொர்க்கத்தின் பிராப்தியானது நீடிக்கின்றது என்பது சன்னியாசிகளுக்கு தெரியாது. அவர்கள் இந்த உலக சுகத்தை அற்ப கால சுகம் என்று கருதி நிரந்தர சுகத்தை அடைவதற்காக இறைவனை நாடி செல்கின்றார்கள். அந்த நிரந்தர சுகமானது இறைவன் படைக்கக்கூடிய யுகத்தில் இருக்கின்றது என்பதை அவர்கள் அறிவதில்லை. மேலும் தந்தை சிவனிடம் கங்கை இருக்கின்றது என்றால் என்றாவது கங்கை பேசி இருக்கின்றதா என் மூலமாக உங்கள் பாவம் அழியும் என்று அதை சொல்பவர் பரமாத்மா தந்தை சிவன் தானே. படைப்பின் மூலம் ஒருபோதும் பாவம் அழியாது. படைப்பவரை நினைப்பது மூலமாகத்தான் பாவம் அழியும். எனவே தன்னை உடலில் வீற்றிருக்கும் சத்திய சொரூபமான ஆத்மாவாக உணர வேண்டும். அவ்வாறு நினைத்து தனது சத்திய தந்தையாகிய சிவனை நினைவு செய்ய வேண்டும். இந்த உலகில் ஆத்மாவும் பரமாத்மாவும் மட்டுமே நிரந்தரம். மற்ற எல்லாமே பாவ புண்ணியங்களின் பலன்கள். அது மனிதர்களுக்கு தகுந்தார் போல மாறுபடுகின்றது. செல்வந்த நிலை ஏழ்மை நிலை வியாதி நிலை துன்ப நிலை கவலையுற்ற நிலை இவை அனைத்துமே பாவ புண்ணியங்களின் பலன்கள். இதை அனுபவிக்கும் மனிதர்களை நாம் உலகில் வித விதமாக காண்கின்றோம். இவற்றிற்கெல்லாம் விடிவுகாலம் வரவேண்டும் என்று இறைவனை தேடி மனிதன் அலைந்து கொண்டிருக்கின்றான். ஆனால் இறைவனோ இந்த உலகத்திற்கு வந்து விட்டார்.
கலியுகம் இறுதி அடைந்து விட்டது இது அஞ்ஞான இருள் எனவே உலகம் இதை சிவராத்திரி என்று அழைக்கின்றது.சிவனாகிய நான் இந்த இரவில் வந்து விட்டேன் எனது ஆத்ம குழந்தைகளே விழித்துக் கொள்வீர். இந்த உலகத்தில் உங்களுக்காக சொர்க்கத்தை படைக்கப் போகின்றேன். யார் சொர்க்கத்தை ஆட்சி செய்த
ஸ்ரீ நாராயணரோ அவருடைய இறுதி பிறவியில் 60-வது வயதில் அவருடைய இரு புருவ மத்தியில் நான் பிரவேசம் ஆகின்றேன். அவர் மூலமாக உங்களுக்கு ஞானத்தை வழங்கி சொர்க்க பிராப்தியை தருகின்றேன். எனவே என்னை நினைவு செய்து உங்களது ஜென்ம ஜென்மாந்திர பாவங்களை அழித்து என்னோடு பிரம்ம தத்துவம் வாருங்கள். யார் என் மூலமாக இப்பொழுது இந்த மேலான ஞானத்தை கேட்கின்றார்களோ அவர்களை பிரம்ம தத்துவத்தில் இருந்து சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். நான் வரக்கூடிய இந்த பிரம்மாவும் சொர்க்கத்தில் ஸ்ரீ நாராயணனாக மாறிவிடுவார். அவருடன் சென்று நீங்களும் அந்த ராஜ்யத்தில் பங்கு பெறுவீர்கள். ஒரு ராஜ்யம் உருவாகின்றது என்றால் அங்கு அனைவரும் தேவை அல்லவா. எனவே யாம் கொடுக்கும் இந்த ஞானத்தை உங்களுக்குள் எவ்வளவு கடைபிடிக்கின்றீர்களோ அந்த அளவு அங்கு உங்களுடைய பதவி இங்குள்ள முயற்சியின் படி நிர்ணயிக்கப்படுகின்றது. எனவே இப்பொழுது இந்த கலியுகம் தனது இறுதி மாற்றத்தை அடையப் போகின்றது. பிறகு நான் இந்த உலகத்திற்கு வந்தது தெரியாது என்று நீங்கள் கூறக்கூடாது. மீண்டும் புதிய சக்கரம் ஆரம்பமாகும். யாம் அதே ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்த உங்களது சிவ தந்தை. யாம் இந்த பிரம்மாவின் உடலில் பிரவேசித்து அவர் மூலமாக தேர்ந்தெடுத்த குழந்தைகளுக்கு பிரம்மா குமாரிகள் மற்றும் பிரம்மா குமாரர்கள் என்று பெயரிட்டு அழைத்தோம். நீங்கள் அங்கே சென்று யாம் இந்த உலகத்திற்கு வழங்கிய ராஜயோகத்தை கற்று எமது வழிப்படி நடந்து எம்மை வந்தடைவீர். நல்லது. வாழ்த்துக்கள்.ஓம் சாந்தி.

No comments:

Post a Comment

நிற்காமல் சுற்றும் அனாதியான பிறவிச் சக்கரம்

 நிற்காமல் சுற்றும் அனாதியான பிறவிச் சக்கரம்... இந்த பிறவி நாடக சக்கரம் என்பது நிற்காமல் சுற்றிக் கொண்டே இருக்கின்றது. எப்பொழுது அதர்மம் தழை...