Tuesday 13 June 2017

குலதெய்வம் ஏன் நம் வீட்டை விட்டு செல்கிறது ?*

     குலதெய்வம் ஏன் நம் வீட்டை விட்டு செல்கிறது ?* 


குலதெய்வம்  பதிவுகளில் இதை பற்றி பல தகவல்களை நாம் பதித்து இருந்தோம்
 ,
தற்பொழுது ஒரு நண்பருக்காக மீண்டும் ஒரு பதிவு ..
பொதுவாக குலதெய்வம்கள் என்று சொல்வதை விட குலத்தின் வழியாக வழியாக நாம் பின்பற்றும் தெய்வம் என்று சொல்லலாம் .
குலதெய்வம்கள் மாறி போவது விலகி போவது என்பது நம்முடைய தவறான ஆன்மிக பழக்கவழக்கம் என்று தான் முதலில் சொல்லவேண்டும்.

இதை பற்றி எளிமையாக சொல்லவேண்டும் என்றால் தவறான பூசைகளை வீட்டில் செய்வது ,தவறான முறையில் மந்திர உச்சாடனம் செய்வது ,குல தெய்வத்திற்கு பிடிக்காத ஒத்துவராத படம்களை வீட்டில் வைத்து விளக்கு ஏற்றுவது

உதாரணமாக கருப்பு கயிறு ஏற்கும்  குலத்தவர் சிகப்பு கயிறு கட்டும் அமைப்பினரின் குலதெய்வ படம்களை வீட்டில் வைப்பது போன்ற தவறான செயல்களை தெரியாமலோ தெரிந்தோ செய்வது ...
இரண்டாவது   ஜாதி கலந்து திருமணம் செய்வது..
இது குலத்தின் பழக்கவழக்கத்தில் சில குழப்பத்தை ஏற்படுத்தி விலக செய்யும் ,
பழக்கவழக்கம் என்பது நம் குல தேவியரின் மேன்மைக்கு உட்பட்டது .

மூன்றாவது மற்றவரின் ஏவல் வினைகளை நாம் கண்டு கொள்ளாமல் விடுவது..
.
இந்த சூழ்நிலை பற்றி நிறைய
பதியலாம் எளிமையாக புரிந்து கொள்ள நம் குடும்பத்தில் உள்ள ஒற்றுமை முதலில் குலையும் ,

அல்லது கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வரும்  ,
சிலருக்கு உடல் கோளாறுகள் ஏற்படும் ,

சிலருக்கு அதீத கனவுகள் ஏற்பட்டு குறியால் உணர்த்தும் ,
சிலருக்கு சில சோதிடர் மூலம் அல்லது உடுக்கு நபர்கள் மூலம் தெரிவிக்கப்படும் ,

இவைகளை அறிந்தோ உணர்தோ முயற்சி செய்யாமல்   நம் இருந்து விடுவது விலக செய்யும்
 .
நான்காவது ஒரு ஒரு குலத்திற்கும் சில கட்டுப்பாடுகள் விதிமுறைகளை
கோவிலில்  வருடம் ஒருமுறை செய்யவேண்டும் என்ற கணக்கு விட்டு போவது போன்ற நிலைகள் குலதெய்வம் நம் வீட்டில் இருந்து விலக செல்லும் ...

நிறைவாக  நாம் எந்த எல்லையில் வாழ்கிறோமோ அந்த எல்லை தெய்வம்கள் ஆசிகளை நாம் பெறவில்லை என்றால் நம் குலதெய்வம் எல்லைக்குள்  வராது...அதாவது நாம் குடி இருக்கும் எல்லையில் உள்ள கோவில்களை நாம் மரியாதையை நிமித்தமாக வழிபட்டு   வணங்கவேண்டும் .

விலகி சென்ற குலதெய்வம்கள் மூன்று வருடத்தில் திரும்பி வரவில்லையென்றால் 40  வருடம் கழித்து தான் மீண்டும் வேறு தலைமுறையினரால் உள்ளே வரும்.
 
முறையான வழிகளை பின்பற்றி குலதெய்வத்தை வீட்டில் உள்ள அழைத்து வர முயற்சி செய்யவேண்டும் ,

ஆண் குலதெய்வத்தை வணங்குபவர்கள் அவர்களின் குலதெய்வத்தை ஒத்து உள்ள தெய்வத்தின் வழியாக முயற்சி செய்வது ,

அதே போல பெண் குலதெய்வத்தை வணங்குபவர்கள் அவர்களின் குலதெய்வத்தை ஒத்து உள்ள தெய்வத்தின் வழியாக முயற்சி செய்வது 

முறையான வழிகளாகும் ...
முனி ஈஸ்வர குலத்தை சேர்ந்தவர்கள் குலதெய்வ வழிபாட்டில் வீரர்கள், 

மாரியம்மன் ,
தெற்கு பார்த்த காளி தேவி ,போன்றவர்கள் மூலம் தங்கள்  குலதெய்வத்தை அழைக்கலாம் சிலர் வீரபாகு ,அய்யனார்  மூலமும் இவர்களை காவல் தேவதைகளாக உள்ள சிவன் பெருமான் கோவில் உள்ள  சக்திகளை 

வணங்கி குல தேவியர் ஆசிகளை பெறலாம்---
மாறாக இவர்கள் வீட்டில் கருப்புசாமி ,பெரிய சாமீ , தலகாளி    அம்சம்களை வீட்டில் வைத்து வணங்குவது மேன்மை இல்லை .
இது போல தான் காமாட்சி,கருப்புசாமி ,பெரியசாமி  வணங்குபவர்கள் முனி சாமீ ,மாரி ,வீரர்கள் என்றவர்களையும்  இவர்களுடைய  சிகப்புக்கு அதிகாரமான தேவதைகளை வீட்டில் வைத்து வாங்க கூடாது ,மேலும்
 
காமாட்சி               ,கருப்புசாமி ,
பெரியசாமி  இவர்களை காவல் தேவதைகளாக உள்ள சிவன் பெருமான் கோவில் உள்ள  சக்திகளை
வணங்கி குல தேவியர் ஆசிகளை பெறலாம் வீட்டிற்கு  அழைத்துவர உதவி கேட்கலாம் ....

மந்தையில் அமர்ந்து உடுக்கை அடித்து அழைத்து காரணம் கேட்டு  அதற்க்கு  பரிகாரம் செய்து
வீட்டிற்கு அழைப்பது ஒருவகை
 ,
சுவடிகள் பார்த்து பரிகார பூஜைகள் செய்து அழைப்பது ஒரு வகை ,
வெறுமனே சில பொருட்களை வைத்து பூஜித்து மந்திர உச்சாடனம் செய்து அழைப்பது குலதெய்வத்தை வரவழைக்கும் சாத்திய கூறுகள் இல்லை ,
எல்லை தேவதைகள் தெய்வம்கள் ஒரு வேளை வரலாம்.

தேவதைகளை தெய்வம்களை மந்திர உச்சாடனத்தில் அழைக்கலாம் அதற்க்கு சில நெறிமுறைகள் உள்ளது இவைகளை பின்பற்றி செய்யவேண்டும் தவறாகும் பொழுது சில சங்கடம்கள் நாம எதிர்கொள்ள
தயாராக இருக்கவேண்டும் .


பதிவுகளை  படித்தவர்கள் கருத்துக்களை பதிவு செய்யுகள்

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...