Friday 16 June 2017

வாழ்த்தும் பயனும்


                                             வாழ்த்தும் பயனும் 



பிறர் நலமாக வாழ வேண்டும் என்ற நினைவோடு எழும் ஓர் ஒலியே வாழ்த்து என்ற வார்த்தையாகும். வாழ்த்து என்றாலே அதை நினைக்கும்போதும், அதை சொல்லும்போதும் மனத்திலே ஓர் அமைதியான இயக்கம் ஏற்படும்.

"வாழ்க வளமுடன்" என்று மற்றவரைப் பார்த்து சொல்லும்போது எல்லாப் செல்வங்களையும் உங்களுடைய வாழ்க்கையில் பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என்று கருத்தை உள்ளடக்கியதாக அமைகிறது என்று வேதாத்திரியம் கூறுகிறது

.ஆத்துப்பொள்ளாச்சி என்கிற கிராமத்தில்                                                                                                                                           
 அன்னைஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் கோவிலில்

மாதா மாதம் பெளர்ணமி அன்று யாகம்,  அபிஷேகம்,  அலங்காரம்அன்னதானம்,சிறப்பு பூஜைகள் செய்வதற்கும், ஆலய கட்டிட திருப்பணிக்கு, பணம் உதவி செய் கருணை உள்ளம் நிறைந்த எதுவும் தான் என்று  வெளிக்காட்டாத குடும்பத்தாருக்கு நன்றிகள் இவர்கள் குடும்பத்திற்கு சகல ஐஸ்வர்யாங்களும் செல்வமும்செல்வாக்கும் பெருகும், வியாபாரம் அபிவிருத்தியாகிகோடிஸ்வர யோகம் தரும்குடும்பத்தில் அமைதி நிலவும் தெய்வ அனுக்ரஹம் கிடைக்கும் அதிர்ஷ்டமான திருப்பங்களும் ஏற்பட வாழ்த்துக்கள் 




இப்பதிவை பார்க்கின்ற 10,000 பேர்களும் மனமாற வாழ்த்துக்கள் 


வாழட்டும் பல்லாண்டு காலம் 


வாழ்க என்ற வார்த்தையில் உள்ள 'ழ்' என்ற சிறப்பான எழுத்தை உச்சரிக்கும்போது நமது நாக்கு மடிந்து மேலண்ணத்தில் நன்கு தொட்டு அழுத்துகிறது. இந்த அழுத்தம் உள்ளே இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியையும், பீனியல் சுரப்பியையும் நன்கு இயக்குவதற்குத் தூண்டுகிறது. உடலியக்கத்திற்குத் தலைமைச் சுரப்பி பிட்யூட்டரி சுரப்பி. மன இயக்கத்திற்கு தலைமைச் சுரப்பி (Master Gland) பீனியல் சுரப்பி. இவ்விரு சுரப்பிகளுகம் இயக்கம் பெறுவதால் நமது உடல்நலமும், மன நலமும் சிறப்படைகின்றன
. <br.
பீனியல் சுரப்பியை 'மனோன்மனி' என்றும் அழைக்கின்றனர். மனத்திற்குரிய ஒரு நல்ல ஆற்றல் உள்ள கருவி என்பதற்காக மன+உள்+மணி என்ற 3 வார்த்தைகளைச் சேர்த்து மனோன்மனி என்று சொல்லப்படுகிறது. மனத்திற்கு உட்பொருளாக உள்ள இரத்தினம் என்பது பொருள். அதனால் நாம் வாழ்த்தும்போது மனோன்மனியோடு தொடர்பு கொண்டு எண்ணற்ற பலன்களை பெறுகிறோம்.

வாழ்க வளமுடன் என்ற மந்திரத்திற்கு வலு அதிகம். தவம் செய்த முடிக்கின்ற போது சொல்லும்போது வாழ்த்துக்கு இன்னும் வலிமை கூடுகிறது. உதாரணமாக ஒரு வில்லில் அம்பு எய்வதற்கு எவ்வளவு தூரம் நாணை இழுக்கிறோமோ, அந்த அளவுக்கு அம்புக்கு வேகம் கூடும். அதுபோன்று மனம் எவ்வளவு அமைதி நிலையிலிருந்து வாழ்த்துகிறதோ அந்த வேகத்தில் அந்த வாழ்த்து செயலுக்கு வரும்

வாழ்த்து அலை

வாழ்த்து என்பது அலை. இந்தச் சீவகாந்த அலைக்கு 5 வகையான இயக்கங்கள் உள்ளன.
1 மோதுதல் (Clash)
2 பிரதிபலித்தல் (Reflection)
3 சிதறுதல் (Refraction)
4 ஊடுருவதல் (Penetration)
5 இரண்டிற்கும் இடையே ஓடிக் கொண்டிருத்தல் (Interaction)

ஒருவர் மற்றவரை வாழ்த்தும்போது அந்த வாழ்த்து இருவருக்கிடையே ஓடிக் கொண்டே இருக்கும். இவ்விருவருக்கும் இடையே ஓர் உயிரோட்டம் உண்டாகி விடுகிறது. அது ஆயுள் முழுவதும் இருக்கும். நீங்கள் அன்போடு நல்ல எண்ணத்தோடு பாய்ச்சி விட்டால் போதும். அவர் உங்களை பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் அவரது உயிரிலிருந்து நன்மையான அலை வீசிக் கொண்டே இருக்கும்.

வாழ்த்தின் நன்மை

1 "வாழ்க வளமுடன்" என்று சொல்லும்போது பிறர் உள்ளத்திலே நமது கருத்தும் உயிராற்றலும் ஊடுருவி இரண்டு பேருக்குமிடையே ஓர் இனிய நட்பை வளர்க்கிறது.
2 இந்த வாழ்த்துப் பயிற்சியினால் சினம் அடிக்கடி வருவதைத் தவிர்க்கலாம்.

3 அப்படி வாழ்த்தி, வாழ்த்தி எப்பேர்பட்டவர்களையும் நண்பர்களாக மாற்றி பகைமையைத் தவிர்க்கலாம். அவர்களுடைய செயல்களைத் திருத்திவிட முடியும்.

4 ஒரு செடியைப் பார்த்துக் கூட "வாழ்க வளமுடன்" என்று சொன்னால், அந்தச் செடியில் இருக்கக் கூடிய பலவீனம் நீங்கி அது நல்லதாக மாறும்

எனதுபதிவு கள் நிச்சயமாக உங்கள் மனதில் சிம்மாசனம் இடும் ! பதிவுகளை  படித்தவர்கள் கருத்துக்களை பதிவு செய்யுகள்

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...