Monday 12 June 2017

நீண்ட ஆயுளுக்கு உதவும் சாந்தி ஹோமங்கள்

                நீண்ட ஆயுளுக்கு உதவும் சாந்தி ஹோமங்கள் 



50 ஆண்டுகள் தூக்கத்திலும், 15 ஆண்டுகள் பால பருவத்திலும் செல்ல, மீதமுள்ள 35 ஆண்டுகளே ஒரு மனிதன் நல்வாழ்வுக்கு எஞ்சியிருக்கின்றது
.
மனிதனாகப் பிறந்தவர்கள் சாந்திகர்மாக்களை அனுஷ்டிக்க வேண்டும்.

1 வயதில் (365 நாளில்) அப்தபூர்த்தி சாந்தியும் :
59 வயதில் உக்ர ரத சாந்தியும் :
60 வயதில் ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தியும் :
77 வயதில் விஜயரத சாந்தியும் :
80 வயதில் சதாபிஷேகச் சாந்தியும் :
100 வயதில் கனகாபிஷேகம் என்னும் பூர்ணாபிஷேகச் சாந்தியும் 

செய்து கொள்ள வேண்டுமென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மனிதன் பிறக்கும்போதே ஷஷ்டிதேவி என்ற ஒரு சக்தியுடன் தோன்றுவதாக ஆகமங்கள் கூறுகின்றன. அந்த ஷஷ்டிதேவி மனிதனுக்கு துன்பத்தை தந்து வாழ்வை வாழ்வாங்கு வாழவிடாமல் தடையாக நிற்பாள்.


ஷஷ்டி தேவதையை ஜபம், பூஜை, ஹோமங்களினால் திருப்தி செய்து, அவள் அனுக்ரகத்தைப் பெற வேண்டும்.
மிருத்யுஞ்சய ஸ்தோத்திரத்தால் பரமேஸ்வரனை ஆராதிக்க வேண்டும். 100 ஆண்டு காலம் மனிதனுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகள் தூக்கத்திலும், 15 ஆண்டுகள் பால பருவத்திலும் செல்ல, மீதமுள்ள 35 ஆண்டுகளே ஒரு மனிதன் நல்வாழ்வுக்கு எஞ்சியிருக்கின்றது.


சதாபிஷேக தம்பதிகள் இன்சொல்லும், பணிவுடைமையும் இயல்பாகக் கொண்டவர்கள், ஈகையால் இசைபட வாழ்பவர்கள், ஊக்கம் குன்றாதவர்கள், எண்ணித் துணியும் செய்கையினால் ஏற்றம் பெற்றவர்கள்.


ஆகவே, என்றும் இளமை குன்றாதவராக, தளர் நடை இல்லாமல், இன்முகத்தோடு வாழ்த்து வருபவர்கள், அவர்களைப்பற்றி கூறவேண்டுமாயின் நாள் போதாது. இளவயது முதல் எதைச் செய்தாலும் அவற்றில் நற்பலன்கள் விளைந்திட வேண்டுமென்றும், எல்லோரும் இன்புற்று வாழவேண்டுமென்றும், இறையருளை எல்லோரும் பெற்றுத் துய்க்க வேண்டுமென்றும் நினைப்பவர்.
சதாபிஷேகம் என்றால் எண்பதாண்டு வயது நிறைவில் செய்துகொள்ளும் அபிஷேகம் என்பது, மனிதனை நூறு ஆண்டுகள் வாழ்க என வாழ்த்துகிறது வேதம்

. கிரகங்களோ நூற்று இருபது வயது வாழ வாழ்த்துகின்றன. இது ஜோதிடவிதி. இதன் படிதான் அனைத்து ஒன்பது தசைகளும் சேர்ந்து நூற்று இருபது ஆண்டுகள் ஆகும் என யாவரும் அறிந்ததே!
இவ்வாறு பூரண ஆயுள் பெறும். மனிதன் உலக விவகாரங்களில் ஈடுபடும் போது அவ்வப்போது - ஆங்காங்கு சிறு சிறு தவறுகளும் அனிச்சையாக அல்லது அறிந்தும் தவிர்க்க முடியாத நிலையில் செய்கிறான். இதற்காகவே தன் வயது கணக்கின் பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு சாந்திகளைச் செய்துகொள்கிறான். இவைகள் பரிஹாரங்களும், பிராயச்சித்தங்களுமாகும்.


ஆயுஷ்யஹோமம்
(முதலாண்டு நிறைவு),
உக்ரரத சாந்தி
(59 ஆண்டு பூர்த்தி),
60 ஆரம்பம் ஷஷ்டியப்த பூர்த்தி
(60 பூர்த்தி),  
பீமரத சாந்தி
(70 ஆரம்பம்),
விஜயரத சாந்தி(77 ஆரம்பம்),
சதாபிஷேகம் (80 வருஷம்)
எட்டு மாதம் முடிந்து உத்தராயண சுக்லபட்ச நல்ல நாளில் நடத்தவேண்டியது.


ஆனால், நடைமுறையில் 80 வயது நிறையும் நாளில், ஜன்ம நட்சத்திரத்தில் செய்து விடுகின்றனர். ப்ரபௌத்ர ஜனன சாந்தி (கொள்ளுப்பேரன் பிறந்தால் ஒருவர் செய்து கொள்ளும் எட்டு மாதத்தில் ஆயிரம் பௌர்ணமி கண்டவர் என்ற தகுதியைப்பெறுகிறார்.

இன்னொரு கணக்கு சொல்கிறது. குழந்தைகள் அது பிறந்த மூன்று மாதம் நிறைந்த பின் சூரியனையும், நான்கு மாதம் நினைந்த பின் சந்திரனையும், பசுவையும் காட்ட வேண்டும் என காலவிதானம் கூறுவதால், முதல் நாலு மாதம் குழந்தை சந்திரனை பார்க்காததால்,  80 வருடம், 8 மாதத்தில் நாலு மாத தரிசனம் குறைந்திருக்கும்

.
எனவே 80 வருடம் 8 மாதத்துடன் 81 வயது 4 மாதத்தை இப்போது சேர்த்து 81 வயது நிறையும் போது ஆயிரம் பிறை கண்டவர் என்பதால் 81 வயது நிறையும் நாளில் சதாபிஷேகம் நடத்தலாம்.
ஆயிரம் பௌர்ணமியிலும் அவர் சந்திரனைக் கண்டிருப்பரா?
மழைக்கால மேகங்களாலும், வேறு பல காரணங்களாலும் சாத்தியமில்லைதான். 


ஆனால் சந்திரன் இவரை பார்த்துவிடுகிறது. எனவே, 80 வயது நிறைவு முதல் 81 வயது நிறைவு வரை நல்ல நாளும் பார்த்து சதாபிஷேகம் நடத்தலாம் என்பதே சரி.
சிவ சக்தியின் அங்கம் நீ  ஏன் சாதிக்க தயங்குகிறாய்
மன  மோகத்தால் பினை ஆனாய்
மனிதனுள் அடங்கி கிடக்கும் சக்தி மகத்தானது


No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...