Tuesday 27 June 2017

வீட்டில் கண்ணாடி உடைந்தால் அபசகுணமா? இறப்பும் ஏற்படுமா?...

    வீட்டில் கண்ணாடி உடைந்தால் அபசகுணமா? இறப்பும் ஏற்படுமா?...


வீட்டில் அல்லது நாம் பயன்படுத்தும், புழங்கும் இடங்களில் கண்ணாடி உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது காலம், காலமாக நாம் பின்பற்றி வரும் ஒரு விஷயம். அதே போல உடைந்த கண்ணாடியை வீட்டில் வைப்பதும் அபசகுனத்தை உண்டாகும் என கூறுவார்கள்.

வீட்டில் பயன்படுத்தும் கண்ணாடி உடைந்தால் அபசகுனம் என்பது தாண்டி, நிறைய தீமை உண்டாகும், உயிரிழப்பு உண்டாகும் என பல கூற்றுகள் நம் வழக்கத்தில் கூறப்படுகின்றன.

அப்படி வீட்டில் கண்ணாடியின் பயன்பாடு சார்ந்து கூறப்படும் ஒருசில கூற்றுகள் பற்றி இங்கு பார்க்கலாம்...

துரதிஷ்டம்!
வீட்டில், அலுவலகத்தில் கண்ணாடி உடைந்தால், அன்றிலிருந்து ஏழு வருடங்கள் துரதிஷ்டம் தொடரும்.

தானாக உடைத்தல்!
ஒருவருடைய இல்லத்தில் மாட்டப்பட்டிருக்கும் கண்ணாடி தானாக கீழே விழுந்து உடைந்தால், அவரது வீட்டில் உயிரிழப்பு நேரிடும்.

இறப்பு மரணம்!
இறப்பு அல்லது மரணம் நிகழ்ந்த வீட்டில் அல்லது அவரது வீட்டில் இருக்கும் கண்ணாடிகளை துணி போன்ற ஏதாவது இன்றை வைத்து மூடி வைக்க வேண்டும். இல்லையேல் அவரது ஆத்மா வெளியே செல்லாமல், கண்ணாடியில் மாட்டிகொள்ளும் என கூறப்படுகிறது.

மெழுகுவர்த்தி ஒளி!
கண்ணாடியை ஒருவர் மெழுகுவர்த்தி ஒளியில் காண்பதால், அவருக்கு துரதிஷ்டம் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளன.

இறந்தவர் அறையில்...
இறந்தவரது அறையில் இருக்கும் கண்ணாடியில் ஒருவர் தனது சொந்த பிம்பத்தை பார்த்தல், அவர் விரைவில் இறந்துவிடுவார்.

பிறந்த குழந்தை!
பிறந்ததில் இருந்து ஒரு வருடத்திற்கு குழந்தையை கண்ணாடியில் காண்பிக்க கூடாது, அல்லது பார்க்க வைக்க கூடாது.

அம்மை நோய்!
அம்மை நோய் இருப்பவர்கள், கண்ணாடியை பார்த்தல், நோய் மேலும் தாக்கம் பெறும் அல்லது கொடூரம் ஆகும்.

ஆவிகள்!
வீட்டு வாசலில் கண்ணாடி மாட்டுவதால், துர்தேவதைகள், கெட்ட சக்திகள், மற்றவர் தீய கண் அண்டாது.


No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...