Monday 12 June 2017

அடியும் இல்லை தலையும் இல்லை முதலும் இல்லை முடிவும் இல்லை எரியு

அடியும் இல்லை தலையும் இல்லை முதலும் இல்லை முடிவும் இல்லை எரியு 


அடியும் இல்லை தலையும் இல்லை
முதலும் இல்லை முடிவும் இல்லை
எரியும் கோபம் கண்ணில் உண்டு
முக்கண்ணனுக்கு மூவிலை சிறப்பு

ஆடும் ஆட்டம் எவருக்குத் தெரியும்
பாடும் பாட்டு எவருக்குப் புரியும்
மர்மம் காக்கும் மாயனே
சித்தம் தெரிந்த சிவனே

விதியும் நீயே விந்தையும் நீயே
விதையும் நீயே விபூதியும் நீயே
ஆனும் நீயே அவளும் நீயே
அழகும் நீயே அசிங்கமும் நீயே

பற்று அறுத்து
இயற்கை இணைத்து - பஞ்ச
பூதமடக்கி
தனிமையில் தன்னை
வதம் செய்து 
தவம் செய்து
மரணத்தை மரணித்து
முக்காலத்தை வென்றோனே!

உருவம் இல்லா உச்சனே
அச்சம் அறுக்கும் அம்சனே
அர்த்தம் நிறைந்த ஈசனே
பாலினம் துறந்த அர்த்தநாரீசனே!!

உடுக்கை சப்தம் உலகை சிலிர்க்க
உந்தன் சப்தம் உலகை கிழிக்க
பலதீமையில் ஓர்நன்மை புதைத்து
ஓர்தீமையால் பலநன்மை புரிந்து 
தீதின்றி வாழ் நடத்த 
துணை நிற்போனே!

சுற்றும் உலகை காக்கும் சூலனே
சூரனை அழிக்க
தேவனை கொணர்ந்த தேவதேவனே!

அருச்சனை துறந்த துறவியே
பற்று அறுக்கும் ருத்ரனே!

உன்னை புரிய ஓர்ஜென்மம்
உன்னை துதிக்க ஓர்ஜென்மம் 
உன்னை அணைக்க ஓர்ஜென்மம் 
உன்னை அடைய ஓர்ஜென்மம்

பக்தி கொண்டால்
சித்தி தெளித்து
முக்தி தரும் 
ஈஸ்"வரனே"! 

என்னைத் தேடியே
உன்னை அடைந்தேன் !
உன்னைக் காணவே
உடலை அடைந்தேன்!

ஓம் நமசிவாய !

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...