இன்று
பதவியும் அதிகாரமும் பணமும் நிரந்தரம் என்று தன்னிலை மறந்து சுயத்தை இழந்து ஆடும் சிலருக்கு இந்த பதிவு
இவரைத் தெரிகிறதா......
#அமர்சிங்..ஒரு காலத்தில் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இந்திய அரசியலை ஆட்டி படைத்த பவர் செண்டர் அதிரடி அரசியவாதி..கிங் மேக்கர் என்று சொல்லப்பட்டவர்..இவர் நினைத்தால் மத்தியில் ஒரு ஆட்சியை உருவாக்குவார்..கவிழ்ப்பார் பெரும் தொழிலதிபராக இருந்து அரசியலுக்கு வந்தவர்..
அதனால் பணததை அதிகாரத்தை வைத்து எதையும் விலைக்கு வாங்கமுடியும் என்று மமதையில் ஆணவ திமிரில் வாழ்ந்தவர். வாழ்ந்தவர் மட்டும் இல்லை நடத்தியும் காட்டியவர்.
ஆட்சியும் அதிகாரமும் இளமையும் இருந்த போது தான் நினைத்ததை நடத்தி காட்டியவர் நல்ல நண்பர்களை புகழ் உச்சத்தில் இருந்த போது உதறி தள்ளியவர்
பிறகு நோய்வாய்ப்பட்ட நிலையில் யாரும் இன்றி அனாதை போல் சிகிச்சையில் இருந்து அப்பொழுதும் நண்பர் மட்டுமே உதவிக்கு இருந்து பார்த்துக்கொண்டார்
அவரே சொல்கிறார்..''நான் மரணத்தின் வாயிலில் இருக்கிறேன்.அதனால் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்..முதலில் நண்பர் அமிதா பட்சன் அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.
ம்...வாடகைக்கு வாங்கி வந்த வாழ்க்கையை நிரந்தரம் என்று கருதி என்ன ஆட்டம் எல்லாம் ஆடுகிறோம்..மேலே ஒருவன் வாடகை வாழ்க்கையை என்றைக்கு காலி செய்ய சொல்லப்போகிறான் என்று தெரியாமலே
அமர்சிங் அவர்கள் காலமாகிவிட்டார்.
உணர வேண்டியது திருந்த வேண்டியது இப்படிப்பட்ட சிலரே காலம் புரிய வைக்கும் உணர்வார்கள்.

No comments:
Post a Comment