Thursday, 26 February 2026

" வெடிச் சத்தமும், வேத கோஷமும்"


 "வெடிச் சத்தமும், வேத கோஷமும்"

ஸ்வாமிகளின் குழந்தை விளையாட்டும், பண்ணிய அற்புதமும்.
(படித்தது,கேட்டது,யாரோ சொன்னது என்பதன்று இது. நேரில் கண்டது, நெகிழ்ந்தது" - டாக்டர் சுதா சேஷய்யன்
கட்டுரையாளர்-டாக்டர் சுதா சேஷய்யன்.
தினமணி வெள்ளி மணி 19-02-2016
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
1985-ஆம் ஆண்டு, தீபாவளிக்கு முந்தைய நாள் காஞ்சிபுரத்தில் கம்பன் கழக நிகழ்ச்சியில் பங்கு கொண்டு விட்டு தீபாவளியன்று ஸ்ரீமடம் சென்று தரிசித்தபோது ஏற்பட்ட அனுபவம். ஆனந்தம் அற்புதம்.
அன்று தீபாவளி என்பதால் ஆசீர்வாதம் பெற வந்த பக்தர்கள்; தீபாவளி மலர்களைக் கொண்டு வந்து சமர்ப்பித்த பத்திரிகைக்காரர்கள் எல்லோருக்கும் ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்கள் ஸ்ரீ மஹா பெரியவா.
தட்டுத்தட்டாகப் பட்டாசுகள்.தாம்பாளம் தாம்பாளமாகப் பழங்கள் -காணிக்கையாய் வந்தவையெல்லாம் ஸ்ரீ மஹா பெரியவர்கள் அருகில். தாயாரோடும் தந்தையோடும் நின்று தரிசித்துக் கொண்டிருந்த அடியேனுடைய அனுபவம் இது!
வேத பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த நிறைய சிறுவர்கள் வந்திருந்தார்கள்.(அவர்கள் எந்த ஊர், எந்த பாடசாலை என்றெல்லாம் விசாரிக்கத் தோன்றாத வயசு)
ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் அவர்களை வேதம் ஓதச் சொன்னார்கள்.அவர்களும் செய்தார்கள். நிறைவடைந்தவுடன், அதில் ஒரு சிறுவன் சொன்னது;
"ஸ்வாமி நான் வேதம் படிக்கிறேன். உச்சரிப்புக்கும், ஸ்பஷ்டத்துக்கும் குரல் ரொம்ப முக்கியம். ஆனால் என் குரல், சித்த நாழி கழிச்சு கட்டிக்கிறது. சத்தமே வருவதில்லை"-உடைந்து போய் கண்ணீரோடு கூறினான்.
ஸ்வாமி காதில் வாங்கிக் கொண்ட மாதிரியே தெரியவில்லை.அவர்கள் பட்டாசுக் கட்டுகளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அந்தச் சிறுவன் திரும்பத் திரும்பச் சொல்லி வருந்தி "இதப் பாருங்கோ ஸ்வாமி.குரல் என்னாறது பாருங்கோ.." அடுத்து அந்தச் சிறுவன் என்ன பேசினான் என்று யாருக்கும் தெரியாது. காரணம் அவன் வாய் அசைந்தது. ஆனால் சத்தம் கேட்கவில்லை. தொடர்ந்து என்னமோ சொல்லிக் கொண்டே போகிறான்.ஆனால் ஒன்றும் வெளிவரவில்லை.
ஸ்வாமிகள் வேறோதோ யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
பல நிமிடங்கள் ஓடி விட்டன. கூட்டம் வரவர, வேத பாடசாலை மாணாக்கர்கள் நகரத் தொடங்கினார்கள். 'பிரசாதம்' இழுத்தார்கள்.
ஸ்வாமி கையில் சில பழங்கள்.அவற்றை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்.
பக்கத்திலிருந்த ஸ்ரீ மடத்துக்காரர் ஒருவர் (கூட்டத்தைக் குறைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன்) "இவர்களுக்கு பிரசாதம் - பழம் கொடுத்துடலாமா" என்றார்.
நிமிர்ந்து பார்த்து "எனக்கும் வேண்டும்" என்றார்கள் பெரியவா. அந்த மடத்துக்காரர் பட்டாசுத் தட்டில் கை வைக்கப் போக விருட்டென்று அதையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டார்கள். "எனக்குடா" என்று குழந்தை போல் சொன்னார்கள்.
இப்படியே ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் இழுப்பதும்.... குழந்தை போல் விளையாடுவதும் தொடர்ந்தது.
15 நிமிடங்களுக்கு மேல் சென்றிருக்க வேண்டும்.மெல்ல நகரத் தொடங்கிவிட்டார்கள் மாணாக்கர்கள். இரண்டடி தாண்டி விட்டுத் திரும்பிப் பார்த்த அந்தக் குறிப்பிட்ட சிறுவனின் கையில் திடீரென்று ஒரு சர வெடியைக் கொடுத்தார்கள் ஸ்வாமிகள்.அவன் லேசாகத் தலையை சாய்ந்து கொண்டு நகர்ந்தான்
அவன் தள்ளிப் போய்விட்டான்.பக்கத்தில் இருந்தவனிடம் சொல்லி அவனைக் கூப்பிட்டார்கள் ஸ்வாமிகள்.
"இப்போ வேதம் சொல்லு" ஏதோவொரு குறிப்பிட்ட பகுதியைச் சொல்லி-அதைச் சொல்லச் சொன்னார்கள்.
இடி முழக்கமாய் ஒலித்தது குரல்.
அதற்கு முன்னாலிருந்த அந்தச் சிறுவனின் குரல் போலின்றி புதியதாய்....பெரியதாய்.... தெளிவாய். முழங்கியது வேத கோஷம்.
"இப்ப எல்லாம் சரியாய்ப் போச்சு போ" ஸ்வாமிகள் அப்பவும் கையில் பழங்களை வைத்துக். கொண்டு குழந்தை மாதிரி விளையாடிக் கொண்டிருந்தார்கள்

பெற்றோர் செய்த தவறுகள்… பிள்ளைகளின் வாழ்க்கையையும் தொடுமா?


 பெற்றோர் செய்த தவறுகள்… பிள்ளைகளின் வாழ்க்கையையும் தொடுமா?

இதற்கு சொன்ன ஒரு ஆழமான குட்டிக்கதை…
குருசேத்திரப் போர் முடிந்தபின், கிருஷ்ணரிடம் கேட்டார்:
“நான் தர்மப்படி ஆட்சி செய்தேன்… இருந்தும் என் 100 மகன்களும் ஏன் உயிரிழந்தார்கள்?”
அதற்கு கிருஷ்ணர் நேரடி பதில் சொல்லவில்லை. ஒரு கதையைச் சொன்னார்…
ஒரு அரசனிடம் வறியவன் ஒருவன் சமையல்காரனாக சேர்ந்தான். அரசனை கவர வேண்டும் என்ற ஆசையில், அரண்மனை குளத்தில் இருந்த அன்னக் குஞ்சை ரகசியமாக சமைத்து அரசனுக்குப் பரிமாறினான்.
அரசன் அது என்ன உணவு என்று அறியாமல் ரசித்து சாப்பிட்டான். பின்னர் அதையே மீண்டும் மீண்டும் சமைக்கச் சொன்னான்.
பின்னர் கிருஷ்ணர் கேட்டார்:
👉 “அதிக தவறு செய்தவர் யார்? சமையல்காரனா? அரசனா?”
திருதராஷ்டிரன் பதிலளித்தார்:
“பரிசுக்காக செய்த சமையல்காரன் தவறு சிறியது.
ஆனால் தினமும் சாப்பிட்டும் உண்மையை அறியாத அரசன்தான் பெரிய தவறு செய்தவன்.”
அப்போது கிருஷ்ணர் புன்னகைத்தார்…
“அந்த அரசன் நீயே!
முன் பிறவியில் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாக உண்டாய்.
அந்த தாய் அன்னம் அனுபவித்த வேதனையை — இப்பிறவியில் நூறு மகன்களை இழந்து நீ உணர்கிறாய்.”
👉 தெய்வ நியாயம் தாமதமாகலாம்… ஆனால் தவறாது.
👉 நாம் செய்கிற செயல்களின் விளைவு ஒருநாள் நம்மைத் தேடி வரும்.
தன்வினை தன்னைத் துரத்தும்.
நல்லதை நினைப்போம். நல்லதை செய்வோம். 🙏

அதிகாலையில் தெரியும் அதிர்ஷ்ட நட்சத்திரம்.


 அதிகாலையில் தெரியும் அதிர்ஷ்ட நட்சத்திரம்...

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை விண்ணிற்கு மேலே தெரியும் ஒரு அதிர்ஷ்ட நட்சத்திரம் பூமியை நோக்கி இப்பொழுது வந்துள்ளது. அதை காண வேண்டுமென்றால் அதிகாலை நாலு மணிக்கு எழ வேண்டும். அந்த நட்சத்திரம் நமது மன விருப்பங்களை பூர்த்தி செய்யக் கூடியது. கேட்டதை கொடுக்கக் கூடியது. அதிர்ஷ்டத்தை உருவாக்க கூடியது. துன்பங்களை போக்கக்கூடியது. இப்படிப்பட்ட ஒரு நட்சத்திரம் நமது பூமியை நோக்கி வந்திருந்தால் நாம் அதை காணாமல் உறங்கிக் கொண்டிருந்தால் அந்த நட்சத்திரத்தைப் பார்ப்பவர்கள் உறங்கிக் கொண்டிருப்பவர்களை பார்த்து என்ன சொல்வார்கள்? இப்படிப்பட்ட ஒரு அதிர்ஷ்டமான வாய்ப்பை இழந்து உறங்கிக் கொண்டிருப்பதை பார் என்று நம்மை பார்ப்பதை கூட தவிர்ப்பார்கள். விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார் என்று இந்த அதிகாலை 4 மணி நேரத்தை குறிப்பிடலாம். ஒரு மனிதனுக்கு தன்னுடைய பிரச்சனைகள் சங்கடங்கள் தீர்கின்றது. தடைகள் அகல்கின்றது. செல்வம் உடல்நலம் அதிர்ஷ்டம் இவை எல்லாம் உருவாகின்றது என்றால் அந்த நேரம் உறக்கம் என்ன பெரிது? ஆனால் அந்த நட்சத்திரத்தைப் பார்ப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அந்த நட்சத்திரத்தை காண வேண்டுமென்றால் தன்னை இரு புருவ மத்தியில் ஒரு நட்சத்திரமாக உணர்ந்து மனதால் காண்பவருக்கே அந்த பிரகாசமான ஒளி பொருந்திய நட்சத்திரம் மனதின் எண்ணத்தால் தெரியும். அதற்காகத்தான் அந்த பிரம்ம முகூர்த்தம் என்ற நேரம் குறிக்கப்பட்டுள்ளது. பிரம்மா எழுந்து தன்னை நட்சத்திரம் போன்ற ஆன்மாவாக உணர்ந்து பரமாத்மாவை உடலற்ற நட்சத்திரமாக நினைத்த நேரம் ஆதலால் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்பட்டது. பரமாத்மாவை சிலர் துருவ நட்சத்திரம் என்று வணங்குகிறார்கள். சிலர் தீபாரதனையாக பார்க்கின்றார்கள். சிலர் அகண்ட ஜோதியாக பார்க்கின்றார்கள். சிலர் மெழுகுவர்த்தியில் மனம் குளிர்கின்றார்கள். சிலர் பிறைக்கு மேல் இருக்கும் நட்சத்திர ரூபத்தை பார்த்து மகிழ்ச்சி அடைகின்றார்கள். இன்னும் சிலர் நந்தியின் இரு கொம்புக்கு மத்தியில் இருந்து தந்தை சிவனை
காண்பதற்காக முயற்சி செய்கின்றார்கள். ஆனால் ஒருவரும் தன்னுடைய அகத்தில் நாம் ஒரு நட்சத்திரம் என்பதை உணர்வதே கிடையாது. உலகத்தில் நடிக்கும் நடிகர்களை கூட ஸ்டார் என்றே குறிப்பிடுகின்றார்கள். ஆனால் எந்த ஸ்டார் அழியாத ஸ்டார் நமது புருவ மத்தியில் இருக்கின்றது அதுதான் நாம் என்பதை மறந்து விடுகிறார்கள். நீங்களும் நானும் அந்த ஸ்டார் தான். கொடுக்கும் விபூதி கூட இந்த உடல் சாம்பல் நான் ஒரு ஸ்டார் என்பதை அறிவதற்காக தான் நெற்றியில் பரிமளிக்கின்றது.
உடலற்ற நட்சத்திரமான பரமாத்மா சிவன் அமிர்த வேளையில் கேட்டவர்களுக்கு கேட்ட வரத்தை கொடுக்க ஆயத்தமாக இருக்கின்றார். ஆனால் உடல் இருக்கும் சங்கரனை சிலர் சிவன் என்று வணங்குகின்றார்கள். மகேசனுக்கு பூமியில் எந்த ஒரு பாகமும் கிடையாது. எல்லா பாகமும் படைப்பவரான
ஈசன் ஒருவருக்கு மட்டும் தான். அவருடைய வரலாற்றை மனிதனுக்கு புரிய வைப்பதற்காக ஒளி தேகம் உடைய
சங்கரனோடு இணைத்து புராணங்களை உருவாக்கி விட்டார்கள். சிவபெருமானோ சத்திய ஸ்வரூபமான நட்சத்திரம் போன்றவர். இந்த உண்மையை உணரும் பொருட்டு சிவலிங்கத்திற்கு பின்னால் கண்ணாடியின் நடுவில் ஜோதி பிரகாசிக்கின்றது. கண்ணாடியில்ஜோதியின் தெரியும் பல பிம்பங்கள் ஒரு ஈஸ்வரனே உலகில் காணும் அனைத்து தெய்வங்களாகவும் காட்சியளிக்கின்றார் என்பதாகும். நீங்கள் ஒரு சித்தரின் கோவிலுக்கு
செல்லலாம். அல்லது அம்பாளின் கோவிலுக்கு செல்லலாம். அல்லது ஆஞ்சநேயர் கோவிலுக்கு
செல்லலாம். ஆனால் அந்த எல்லா ரூபத்திலும் காட்சியளிப்பவர் அந்த மேலான பரம்பொருளான தந்தை சிவனே ஆவார். நாம் கடந்த காலங்களில்
நிறைய பழைய பக்தி படங்களை பார்த்திருக்கின்றோம்.
ஒரு நட்சத்திரம் மேலிருந்து வந்து பிறகு தெய்வமாக மாறுவதாக காண்பித்து இருப்பார்கள். அந்த படங்களை எடுத்த
டைரக்டர்களுக்கு
கடவுள் உணர்த்தினாரோ என்னவோ என்று தான் நினைக்க தோன்றுகிறது. அதிகாலை எழுந்து தவத்தில் அமருபவருக்கு பிரச்சனைகள் துன்பங்கள் அவரைக் கண்டால் நடுநடுங்கும். தந்தை சிவனின் உண்மையான ரூபத்தை அறிந்து அவருடன் தொடர்பு வைப்பது என்பது உலகில் அனைத்து தெய்வங்களையும் உருவாக்கிய முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் நாயகனான தந்தை ஈசனின் நினைவு மிகக் கொடூரமான பாவியையும் புண்ணியம் நிறைந்தவனாக அதிர்ஷ்டசாலியாக உலகிற்கு உதாரணமானவனாக மாற்றும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. இதையெல்லாம் வெறுமனே படிக்காமல் அனுபவத்தில் நடைமுறையில் உணர வேண்டும். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு இது உண்மையா என்பதை அனுபவத்தில் தெரிந்து கொள்ள வேண்டும்.நல்லது. வாழ்த்துக்கள்.
ஓம் சாந்தி. முறைப்படி தியானத்தில் இறைவனை சந்திக்கும் இராஜயோகத்தை எவ்வித கட்டணமும் இன்றி முற்றிலும் இலவசமாக அருகிலுள்ள பிரம்மா குமாரிகள் நிலையத்தில் கற்று மகிழ்வீர். நல்வாழ்த்துக்கள்.

பறிபோன பதவி, சொத்துக்களை மீட்டுத் தரும் அற்புத ஆலயம்! 🔱

 பறிபோன பதவி, சொத்துக்களை மீட்டுத் தரும் அற்புத ஆலயம்! 🔱

இழந்த பதவி, உரிமைகள், சொத்துக்கள், அதிகாரம் — அனைத்தையும் மீட்டுத் தர வல்ல தெய்வீக சக்தி கொண்ட அரிய சிவாலயமாக விளங்குவது
ஆதலையூர் பீமேஸ்வரர் ஆலயம்.
இந்த திருக்கோயில், கும்பகோணம் – நாகப்பட்டினம் சாலையில், ஆதலையூரிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பதவியை இழந்தவர்களுக்கும், சொத்துகளை வழக்கு, சச்சரவு, துரோகம் போன்ற காரணங்களால் இழந்தவர்களுக்கும் மீட்பு தரும் ஆலயமாக இது பெரும் புகழ் பெற்றுள்ளது.
🕉️ ஆதலையூர் எனப் பெயர் வந்த தெய்வீக திருவிளையாட்டு
ஆதலையூர் எனும் பெயருக்குப் பின்னால் ஒரு அற்புதமான சிவ திருவிளையாட்டு உள்ளது. ஒருமுறை, திருக்கயிலாயத்தில் சிவபெருமான் புதிதாக ஒரு திருவிளையாட்டைத் தொடங்கினார். அவர் வில்வமரமாகவும், கங்கையாகவும், பல்வேறு ரூபங்களில் மறைந்தாலும், அன்னை பார்வதி தேவி அவரை ஒவ்வொரு முறையும் கண்டறிந்து விட்டாள்.
இதனால் சிவபெருமான் பூலோகம் வந்து, ஒரு முரட்டுப் பசுவாக உருமாறினார். அந்தப் பசு யாருக்கும் அடங்காமல் ஊர் மக்களுக்கு பெரும் துன்பங்களை விளைவித்தது. மக்கள் அந்தப் பசுவை கட்டிப் போட்டு வைத்தனர். அப்போது அங்கே வந்த பார்வதி தேவி, அந்தப் பசுவைக் கண்டு மனமிரங்கி, கருணையுடன் அதை அவிழ்த்து விட்டாள்.
அந்தக் கணமே, பசு உருவத்தில் இருந்த சிவபெருமான் தன் சுய ரூபத்தைக் காட்டினார். இதைக் கண்ட அன்னை பார்வதி ஆனந்தத்தில் திளைத்தாள். அதனால் இத்தலத்து அம்பாளுக்கு ஆனந்தநாயகி என்ற திருநாமம் ஏற்பட்டது.
‘ஆ’ என்றால் பசு, ‘தளை’ என்றால் கட்டுதல்.
பசுவைக் கட்டிய இடம் என்பதால் ஆதளை + ஊர் = ஆதளையூர் என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் அது மருவி ஆதலையூர் என ஆனது.
🗡️ பீமேஸ்வரர் எனப் பெயர் பெற்ற வரலாறு
இத்தலத்தில் சிவபெருமான் பீமேஸ்வரர் என அழைக்கப்படுவதற்கும் ஒரு மகத்தான புராண வரலாறு உள்ளது.
மகாபாரதப் போருக்கு முன்பு, துரியோதனன் பாண்டவர்களுக்கு தங்களுக்குரிய பாதி நாட்டை வழங்க மறுத்தான். இதனால் தங்கள் இழந்த தேசத்தையும் உரிமைகளையும் மீட்க வேண்டி, பாண்டவர்கள் பல புண்ணியத் தலங்களில் வழிபாடு செய்தனர்.
அந்த நேரத்தில், பாண்டவர்களில் ஒருவரான பீமன், தனியாக ஆதலையூருக்கு வந்தான். அங்கே உள்ள தாமரைக் குளத்தில் நீராடி, சிவபெருமானை ஆழ்ந்த பக்தியுடன் வழிபட்டான்.
“நாங்கள் இழந்த ராஜ்யத்தையும், பதவியையும் மீட்டுத் தர வேண்டும்”
என்று மனமுருக வேண்டினான்.
சிவபெருமான் பீமனுக்கு நேரில் தரிசனம் அளித்து, அவனுக்கு வெற்றியின் வரம் அருளினார். பின்னர் நடந்த குருக்ஷேத்திர யுத்தத்தில், பாண்டவர்கள் தங்கள் இழந்த தேசத்தையும், அரச பதவியையும் மீட்டனர்.
பீமன் வந்து வழிபட்டு வெற்றி பெற்றதால், இத்தலத்து ஈஸ்வரன் பீமேஸ்வரர் எனப் பெயர் பெற்றார்.
🌿 இழந்ததை மீட்டுத் தரும் நம்பிக்கையின் தலம்
பீமனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு,
பதவியை இழந்தவர்கள்
சொத்து, வீடு, நிலம் போன்றவற்றை வழக்கு, கோர்ட் சச்சரவுகளால் இழந்தவர்கள்
அதிகாரம், உரிமைகள் பறிக்கப்பட்டவர்கள்
ஆதலையூர் பீமேஸ்வரரை மனமார வழிபட்டால், அவை மீண்டும் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.
🏛️ தேர்தல் வெற்றிக்கும் புகழ்பெற்ற ஆலயம்
இன்றைய காலத்தில், தேர்தலில் போட்டியிடுபவர்கள், தாங்கள் வெற்றி பெற்று பதவியை அடைய வேண்டும் என்ற வேண்டுதலுடன் இக்கோயிலுக்கு வந்து வழிபடுகின்றனர். அதனால், பீமேஸ்வரர் ஆலயம் தேர்தல் வெற்றிக்கும் அருள்புரியும் ஆலயம் எனப் பெரும் புகழ் பெற்றுள்ளது.  

பாட்டி வைத்தியம்:-


 பாட்டி வைத்தியம்:-

வேப்பிலையை அரைத்து சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ரத்த சோகை குணமாகும்.
பூண்டை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் பிபீ பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும்.
வெள்ளரி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் சம அளவில் எடுத்து சாறு பிழிந்து குடித்து வந்தால் உடல் பருமன் மற்றும் ஊளைச் சதை குறையும்.
வெந்தயம், சுண்டைக்காய் வற்றல், மிளகு ஆகியவை ஒவ்வொன்றிலும் 50 கிராம் எடுத்து வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட உடல் எடை குறையும்.
வாழைத்தண்டு சாறு, பூசணிச்சாறு, அருகம்புல் சாறு மூன்றையும் சம அளவில் எடுத்துக் கலந்து கொள்ளவும். இதனை ஒருநாள் விட்டு ஒருநாள் குடித்து வந்தால் உடல் எடை குறைந்து அழகிய தோற்றம் கிடைக்கும்.
வல்லாரைக் கீரை 3, சீரகம் 10 கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை இரவில் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும்.
வங்காரவள்ளைக் கீரையை தொடர்ந்து சமைத்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.
லவங்கப் பட்டையுடன் வேப்பிலை மற்றும் மிளகு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைத்து அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிடவும். இதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.
ரோஜாப்பூ, வெள்ளை மிளகு, சுக்கு, ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்துக் கொள்ளவும். இதனை அரைத்து காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
உலர்ந்த ரோஜா இதழ்கள், சுக்கு, ஏலக்காய் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும். தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறைவதுடன் கெட்ட கொழுப்புகள் கரையும்.
* சாணி வரட்டியை பற்ற வைத்து அது எரியும் போது மஞ்சள் தூளை தூவி வரும் புகையை நுகர்ந்தால் மூக்கடைப்பு தீரும்.
* தணல் மூட்டி அதில் ஏலக்காய் போட்டு வரும் புகையை நுகலாம்.
* ஓமத்தை துணியில் கட்டி அடிக்கடி நுகர்ந்தால் மூக்கடைப்பு குணமாகும்.
* ஓமத்தை காட்டன் துணியில் கட்டி தயணைக்கு அடியில் வைத்து தூங்கலாம்.
* துளசி, பூண்டு, மிளகு, இஞ்சியுடன் தண்ணீர் சேர்த்து, அதை நான்கில் ஒரு பங்காக காய்ச்ச வேண்டும். பின்னர் வடிகட்டி தேன் கலந்து குடித்தால் சளி தீரும்.
* உடல்சூடு காரணமாக சிலருக்கு மூக்கில் ரத்தம் வடியும். அப்போது எலுமிச்சை சாறு சில சொட்டுகளை மூக்கில் விட்டால் நிவாரணம் கிடைக்கும்.
* அதுபோல மல்லி இலைச்சாறு சிறு சொட்டுகளையும் மூக்கில் விடலாம்.
* மூக்கில் துர்நாற்றத்தை உணர்ந்தால், பரங்கிக்காயை அரைந்து சாறு எடுத்து சில சொட்டுகள் மூக்கில் விடலாம். உணரு செரிமானத்தை சரிபடுத்துவதும் முக்கியம்.
* நெல்லிக்காயை தண்ணீரில் ஊற வைத்து, வடிகட்டிய தண்ணீரை அருந்தலாம். நீரில் ஊறிய நெல்லிக்காயை அரைத்து நெற்றில் பற்று போடலாம்...

வலம்புரி சங்கு – செல்வமும் சாந்தியும் தரும் தெய்வீக வரம்


 வலம்புரி சங்கு – செல்வமும் சாந்தியும் தரும் தெய்வீக வரம்

பாற்கடலைக் கடைந்தபோது தேவர்கள் மற்றும் அசுரர்கள் பெற்ற அமுதத்துடன் வெளிப்பட்ட பல மங்களகரமான பொருட்களில் ஒன்று வலம்புரி சங்கு. பொதுவாக நாம் காணும் சங்கு இடம்புரியாக இருக்கும். ஆனால் வலப்பக்கமாகச் சுழன்று திறக்கும் அரிய வடிவமுடையதே வலம்புரி சங்கு. இந்தச் சங்கு மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. அதனால் இதை வீட்டில் வைத்திருப்பது மிகுந்த புண்ணியமாகப் பார்க்கப்படுகிறது.
🌊 புராண வரலாற்றின் பின்னணி
பாற்கடலைக் கடைந்தபோது முதலில் வெளிப்பட்டது ஹாலாஹல விஷம். அதை இறைவன் பரமசிவன் அருந்தினார். பின்னர் காமதேனு, உச்சைஸ்ரவஸ் குதிரை, ஐராவதம், கௌஸ்துபம், மகாலட்சுமி தேவி, அமிர்தம் ஆகிய பல தெய்வீக பொருட்களுடன் வலம்புரி சங்கும் வெளிப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மகாலட்சுமி தேவி வெளிப்பட்ட நாளில் தேவர்கள் அனைவரும் வலம்புரிச் சங்கை ஊதிச் சப்தம் எழுப்பினர். அந்தச் சப்தம் செல்வம், சுபீட்சம், ஐஸ்வர்யம் ஆகியவற்றின் அடையாளமாகப் போற்றப்பட்டது.
🏡 வீட்டில் வலம்புரி சங்கு வைத்திருப்பதால் கிடைக்கும் நன்மைகள்
✨ 1. குபேரன், மகாலட்சுமி நித்திய வாசம்
வீட்டில் வலம்புரி சங்கை வெறும் அலங்காரமாக வைத்திருந்தால்கூட, அந்த இல்லத்தில் குபேரனும் மகாலட்சுமியும் நித்திய வாசம் புரிவார்கள் என்று ஆகமங்கள் கூறுகின்றன.
✨ 2. இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும்
செல்வ இழப்பு, செல்வாக்கு இழப்பு போன்றவற்றால் மனம் உடைந்தவர்கள், பக்தியுடன் வலம்புரி சங்கை பூஜித்தால் இழந்ததை மீண்டும் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.
✨ 3. தடைகள் நீங்கும்
முயற்சிகளில் தோல்வி, தொழில் தடைகள், உத்தியோகத்தில் வருமானக் குறைவு, குடும்ப சச்சரவுகள் — இவை அனைத்தும் குறைந்து சாந்தி நிலவும்.
✨ 4. செல்வ வளம் உயரும்
வலம்புரி சங்கு வைத்திருப்பவர்களுக்கு தங்களுக்கே அல்லாமல், பிறருக்கும் உதவி செய்யும் அளவிற்கு செல்வ வளம் பெருகும்.
✨ 5. மரியாதை உயர்வு
முன்பு அலட்சியம் செய்தவர்கள்கூட மதிப்புடன் அணுகும் நிலை உருவாகும்.
🪔 சிறப்பு பூஜை நாட்கள்
பின்வரும் நாட்களில் வலம்புரிச் சங்கில் பால் நிரப்பி மகாலட்சுமியைப் பூஜித்தால் மிகுந்த பலன் கிடைக்கும்:
ஆடி மாதம் பூர நட்சத்திரம்
புரட்டாசி பௌர்ணமி
ஆனி மாத வளர்பிறை அஷ்டமி
சித்திரைப் பௌர்ணமி
இந்நாட்களில் நைவேத்தியங்களுடன் பூஜை செய்தால் தனபாக்கியம், பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். இப்பூஜையைச் செய்யும் தம்பதிகள் தீர்க்க ஆயுளுடன் நோய் நொடியின்றி வாழ்வார்கள்.
💧 வலம்புரிச் சங்கின் தீர்த்த மகிமை
வலம்புரி சங்கில் ஊற்றப்படும் எந்த நீரும் புனிதமாகும்.
தினமும் தண்ணீர் நிரப்பி துளசி இலை சேர்த்து பருகினால் ஆயுள் விருத்தி கிடைக்கும்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் 27 செவ்வாய்க்கிழமைகள் பால் வைத்து அம்மனை பூஜித்தால் தோஷங்கள் நீங்கி திருமணம் நடைபெறும்.
தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது வலம்புரி சங்கால் அபிஷேகம் செய்தால் பத்து மடங்கு பலன் கிடைக்கும்.
குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் வந்தால், வலம்புரி சங்கில் நீர் வைத்து ருத்ராட்சம் ஊறவைத்து அந்த நீரை அளித்தால் உடல் நலம் மேம்படும் என்று பழமொழி.
ஸ்கந்த புராணத்தில் வலம்புரி சங்கினால் அர்ச்சனை செய்தால் ஏழு பிறவிகளில் செய்த பாபங்கள் நீங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பாலை நிரப்பி இறைவனை நீராட்டினால் ஆயிரம் யாகங்கள் செய்த பலன் கிடைக்கும்.
கங்கை நீர் நிரப்பி அபிஷேகம் செய்தால் பிறவிப் பிணி நீங்கும் என்று நம்பிக்கை.
💰 சேமிப்பு மரபு
பூஜை செய்யாத நாட்களில் வெள்ளிப் பெட்டியில் வலம்புரி சங்கை வைத்து, அதன் உள்ளே பணம், தங்க நாணயங்கள், நவரத்தினங்கள் வைத்து வைப்பது செல்வம் நிலைத்திருக்கச் செய்கிறது என்று பரம்பரை நம்பிக்கை.
🌺 ஒரு சிறிய உண்மை சம்பவம்
திருவையாறு அருகே வசித்த ராமசாமி ஐயர் குடும்பம் பல ஆண்டுகள் பொருளாதார தட்டுப்பாட்டில் தவித்தது. மூதாதையர் காலத்து ஒரு வலம்புரி சங்கு வீட்டில் இருந்தாலும் அது அலட்சியமாக வைக்கப்பட்டிருந்தது.
ஒரு நாள் ஒரு சன்னியாசி வந்து, “இது வெறும் சங்கு அல்ல, லட்சுமி வாசம் புரியும் தெய்வீக சங்கு” என்று கூறி அதற்கான பூஜை முறையைச் சொன்னார். அதன்படி குடும்பம் பக்தியுடன் பூஜை செய்து வந்தது. சில மாதங்களில் அவர்களின் நிலை மாறியது.
முன்பு நின்றுபோன தொழில் வளர்ச்சி பெற்றது. கடன் தீர்ந்தது. வீடு வளம் பெற்றது. அவர்கள் அனுபவித்த மாற்றம், நம்பிக்கையுடனான பக்தியின் பலனாகவே கருதப்பட்டது.
🌼 முடிவுரை
வலம்புரி சங்கு வெறும் கடல்சார் ஓடு அல்ல. அது செல்வம், சாந்தி, ஐஸ்வர்யம் ஆகியவற்றின் சின்னமாகப் போற்றப்படும் தெய்வீகச் சின்னம். ஆனால் உண்மையான பலன் கிடைக்க வேண்டுமெனில் பக்தி, நம்பிக்கை, நற்செயல் ஆகியவை இணைந்திருக்க வேண்டும். 

துளசி செடியின் அருகில் தவறியும் இதையெல்லாம் வைக்காதீர்கள்..


 துளசி செடியின் அருகில் தவறியும் இதையெல்லாம் வைக்காதீர்கள்.. துர்திஷ்டம் ஏற்படுமாம்..!!

பொதுவாக இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் துளசி மிகவும் புனிதமானதாக கருதப்படுகின்றது. துளசி என்பது இந்திய புராணங்களிலும் இந்து தத்துவத்திலும் குறிப்பிடத்தக்க ஒரு மூலிகையாகும்.
வீட்டில் துளசியை வளர்ப்பது அதிர்ஷ்டத்தை தரும் என்பது ஐதீகம். ஆனால் துளசியை நட்டுவிட்டால் அதிர்ஷ்டம் கிடைத்துவிடும் என்று அர்த்தம் அல்ல, அந்த துளசியை நன்றாக பராமரிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் துளசிக்கு அருகில் வைக்கக்கூடாத சில பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
துளசி அருகில் வைக்கக் கூடாத பொருட்கள்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, முள் செடி மற்றும் மரங்களை துளசி செடிகளுக்கு அருகில் வைக்கக்கூடாது.
அவ்வாறு வைத்திருப்பது, வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கிறது. அதனால் வாழ்வில் சிக்கல்கள் மற்றும் கவலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
குப்பைத் தொட்டியை துளசியின் அருகில் வைக்க கூடாது. அப்படி செய்வதால் விஷ்ணுவுக்கு கோபத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
துளசிக்கு அருகில் குப்பைத்தொட்டி வைப்பவர்கள் லட்சுமியால் ஆசீர்வாதத்தை பெற மாட்டார்கள்.
துளசிக்கு அருகில் எந்த ஒரு செருப்புகளையும் வைக்கக்கூடாது இது துளசியை அவமதிக்கிறது. இதனால் வீட்டிற்கு துர்திஷ்டம் ஏற்படும் என நம்பப்படுகின்றது. இதனால் வீட்டில் வறுமை ஏற்படும்.
துளசி செடிக்கு அருகில் விளக்குமாறு வைப்பது நல்லதல்ல. இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் நிதி பிரச்சினைகள் மற்றும் சிரமங்கள் ஏற்படும் என சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனக்கஷ்டம் பணக்கஷ்டம் போக்கும் வெற்றிலை தீர்த்தம்.....

 


மனக்கஷ்டம் பணக்கஷ்டம் போக்கும் வெற்றிலை தீர்த்தம்.....

வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்சனை இருந்து கொண்டே இருந்தால் ஒருசில தாந்திரிக பரிகாரங்கள் மூலம் இந்தப் பிரச்சனையை எளிதாக தீர்க்க முடியும்.
அந்தவகையில் எளிதாக பிரச்சனையை தீர்க்கும் ஒரு செயல் முறையைப் பார்ப்போம். இந்த முறையை பயன்படுத்தினால் எந்த கெட்ட சக்தியும் வீட்டை அனுகாது.
வீட்டில் பூஜை அறையில் கடவுளை வணங்கும் போது, அவசியம் வெற்றிலையை பயன்படுத்த வேண்டும். வெற்றிலை வைத்து வணங்கும் போது பல நண்மைகள் உண்டாகிறது என சாஸ்திரங்கள் சொல்கின்றன.
இதில் வெற்றிலை தீர்த்தம் மிகப்பெரிய பலனை தரும். வெற்றிலை தீர்த்தத்தை தயாரிக்கும் முறையை பற்றி பார்ப்போம்.
வெற்றிலையோடு நன்னாரிவேர் 2 துண்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், பச்சைகற்பூரம் ஒரு சிறிய துண்டு, ஜவ்வாது தூள் ஒரு சிட்டிகை, இவை அனைத்தையும் சேர்த்து, வீட்டில் பித்தளை அல்லது செம்பு பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சுத்தமான நீரை ஊற்றி அதில் மேற்குறிப்பிட்ட பொருட்களை எல்லாம் போட்டு விடவேண்டும். நறுமணம் மிக்க இந்த தண்ணீருக்குள், வெற்றிலைக்காம்பு மேல் பக்கத்தில் இருக்கும் படி, வெற்றிலை ஒன்றை தண்ணீரில் மூழ்க வைத்து விடுங்கள்.
இதை எப்போது செய்ய வேண்டும்? வெள்ளிக்கிழமை காலை மகாலட்சுமி பூஜை செய்யும்போது இந்த சொம்பை
தயார் செய்து, மகாலட்சுமி தாயாரின் முன்பு வைத்து, பூஜை செய்ய வேண்டும்.
மாலை பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, அந்த சொம்பில் இருக்கும் தீர்த்தத்தை எடுத்து, அந்த வெற்றியினால் உங்கள் வீட்டு மூலைமுடுக்குகளில் தெளித்து விட வேண்டும்.
சமையலறை, படுக்கையறை வரவேற்பறை இப்படி உங்கள் வீட்டில் எவ்வளவு அறைகள் இருக்கின்றதோ! அந்த அறைகள் முழுவதிலும் இந்த தண்ணீர் படும் அளவிற்கு தெளித்து விட்டீர்கள் என்றால், மூதேவி உங்கள் வீட்டில் வாசம் செய்யவே மாட்டாள்.
நறுமணமிக்க இந்த தீர்த்த மானது வீட்டில் சந்தோஷத்தை நிலையாக வைத்திருக்கும். பணக்கஷ்டம் ஏற்படாது. மனக் கஷ்டம் ஏற்படாது. சண்டை சச்சரவு ஏற்படாது. நோய் நொடிகள் இல்லாத வளமான வாழ்க்கையை வாழ்வதற்கு இது ஒரு சிறந்த முறையாகும். இந்த நீரில் கலக்கப்படும் பொருட்களுக்கு தீய சக்திகளையும், துர் எண்ணங்களையும் அழிக்கும் ஆற்றல் அதிகம் இருக்கிறது. இதன்கூட மகாலட்சுமிக்கு உகந்த வெற்றிலை சேரும்போது வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும்.
புதிய தொழில் துவங்கும்போதும், தொழில், வியாபாரம் நடைபெறும் இடங்களில் இந்த நீரை தெளித்து லட்சுமி பூஜை செய்தால் மிகுந்த லாபம் கிடைக்கு, தொழில் மற்றும் வியாபாரம் வெற்றிகரமாக நடைபெறும்...

அரசமர இலையின் அற்புத பயன்கள்


 அரசமர இலையின் அற்புத பயன்கள்

நம் முன்னோர்கள் பயன்படுத்திய முக்கியமான பொருள்களில் ஒன்றுதான் அரச மரத்து இலை. அரசமரம் முன்பெல்லாம் அனைத்து தெருக்களிலும் இருக்கும், அதிகளவு ஆக்சிஜன் வழங்கக்கூடிய இதனை நாம் விநாயகர் இருக்கும் வீடாக மட்டுமே பார்த்தோம். ஆனால் உண்மையில் அரச மரத்து இலை மிகச்சிறந்த மூலிகையாகும். அரச மரத்து இலைகளை பற்றி நமக்கு தெரியாதவற்றை இங்கு பார்க்கலாம்.
அரசமரம்
அரசமரம் பெரும்பாலும் இந்திய காடுகளிலும், சில இடங்களில் வீட்டின் அருகிலும் காணப்படுகிறது. இதன் இலைகளில் அதிகளவு டானிக் அமிலம், அஸ்பார்டிக் அமிலம், ஸ்டெராய்டு, வைட்டமின்கள், மெத்தயோனின், கிளைசின் என எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இவையெல்லாம் அரசமர இலைகளை மிகச்சிறந்த ஆயுர்வேத மருந்தாக மாற்றியுள்ளது. ஆனால் நாம் அரசமர இலைகளை சமையலுக்கு பயன்படும் பொருளாக மட்டுமே அறிவோம்.
சளி மற்றும் காய்ச்சல்
தொடர்ச்சியாக சளி மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் அரசமர இலைகளை பாலுடன் சேர்த்து கொதிக்கவைத்து பின்னர் அதனுடன் சர்க்கரை சேர்த்து தினமும் இரண்டு முறை குடித்து வர விரைவில் காய்ச்சல் குணமாகும். ஆனால் குழந்தைகளுக்கு இதனை கொடுக்கும் முன் மருத்துவருடன் ஆலோசிக்கவும்.
ஆஸ்துமா
அரசமர இலைகள் மட்டுமின்றி காய்களும் மருத்துவ குணமுடையதுதான். அரசமர இலைகளையும், காய்களையும் எடுத்து காயவைத்து பொடியாக்கி கொள்ளவும். பின்னர் அவற்றை சமமான அளவில் கலந்து கொள்ளவும். இந்த பொடியை நீருடன்கலந்து 14 நாட்கள் தொடர்ந்து குடித்துவந்தால் விரைவில் அற்புத பலனையளிக்கும்.
கண்வலி
அரசமரத்து இலைகளின் பால் கண்வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும். கண்வலி இருக்கும்போது அரசமர இலைகளை கசக்கி அதனை கண்களில் ஊற்றினால் சில நிமிடங்களில் வலி குறைய தொடங்கும்.
பல் ஆரோக்கியம்
அரசமரத்தின் கொளுந்து இலைகள் அல்லது புதியதாக வளரும் மரத்தின் வேர் போன்றவற்றை உபயோகித்து பல் துலக்குவது பற்களில் உள்ள கறைகளை போக்குவதோடு பற்களை பாக்டீரிய தாக்குதல்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
பாம்புக்கடி
ஒருவேளை பாம்புக்கடித்துவிட்டால் அரசமர இலைகளை கசக்கி இரண்டு ஸ்பூன் கொடுத்தால் அது பாதுகாப்பு கவசமாக செயல்பட்டு விஷம் மேற்கொண்டு உடலில் பரவுவதை தடுக்கிறது.
மஞ்சள் காமாலை
இளஞ்சிவப்பான அரசமர இலைகளை எடுத்துக்கொண்டு அதனை சாறாக்கி அதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து தினமும் மூன்று முறை குடிக்க வேண்டும். இது மஞ்சள் காமாலையை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தக்கூடியது.
சருமபாதுகாப்பு
இதன் இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர சருமத்தில் ஏற்படும் அரிப்புகள், தடிப்புகள் போன்றவை குறையும். சாப்பிட பிடிக்கவில்லையெனில் இலைகளை பயன்படுத்தி தேநீர் தயாரித்தும் குடிக்கலாம்.
கல்லீரல் பாதுகாப்பு
சில இலைகளை எடுத்துக்கொண்டு அவற்றுடன் கற்கண்டை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். இதனை நீருடன் நன்கு கலந்து பின் வடிகட்டி கொள்ளவும். இந்த நீரை தினமும் குடித்து வந்தால் கல்லீரல் பாதுகாப்பாய் இருக்கும். அதிக குடிப்பழக்கம் உள்ளவர்கள் இதனை செய்வது மிகச்சிறந்த பலனையளிக்கும்.
மலச்சிக்கல்
மலச்சிக்கலை குணமாக்க இது சிறந்த மருந்து. சிறிதளவு அரசமர இலையின் தூள், சோம்பு மற்றும் வெல்லத்தை எடுத்துக்கொள்ளவும். இதனை பாலுடன் கலந்து தூங்க செல்லும்முன் குடிக்கவும். சிலமணி நேரங்களிலியே உடனடி நிவாரணத்தை உணரலாம்.
இதய ஆரோக்கியம்
சில மென்மையான இலைகளை எடுத்துக்கொண்டு அதனை இரவில் தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள். காலையில் தண்ணீரை வடிகட்டி தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் அது இதயம் படபடப்பாய் உணர்வதை குறைப்பதோடு இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் செய்யும்.
வயிற்றுப்போக்கு
சில கொளுந்து அரசமர இலைகளை எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிது கொத்தமல்லி தழைகளை சேர்த்து பின் சிறிது பனங்கற்கண்டை சேர்த்து வாயில் போட்டு மென்றால்வயிற்றுப்போக்கிலிருந்து உடனடி தீர்வை பெறலாம்.
சர்க்கரைநோய்
சர்க்கரைநோய் பிரச்சினை உள்ளவர்கள் அரசமர காயின் பொடியையும், கடுக்காய் பொடியையும் சமமான அளவில் பாலுடன் கலந்து குடித்துவர உடலில் உள்ள சர்க்கரையின் அளவு தானாக குறையும்.
இரத்த சுத்திகரிப்பு
சிறிதளவு அரசமர விதை தூளை தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். இரைப்பை சார்ந்த கோளாறுகள் உள்ளவர்கள் இதில் கசாயம் தயாரித்து அதனுடன் தென் சேர்ந்து குடித்து வந்தால் விரைவில் குணமடையலாம்.

ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன்.


 ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன்.

அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன்.
அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது.
உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி லாவகமாக தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துக் கொண்டது. உடனே மனம் உடைந்துப் போனான்.
அப்போது வந்த அரசர் "ஏன் சோகமாக இருக்கிறாய்?" என கேட்க "இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாதபோது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே!" என விவரித்தான் இளவரசன்.
மன்னர் சிரித்து விட்டு "எலியைக் கொல்ல வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே!" என்றார். உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது.
அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்து, தப்பித்துச் சென்றது.
இப்போது இளவரசருடன் சேர்ந்து அரசரும் சோகமானார்.
அப்போது மந்திரி வந்தார். "என்ன அரசே..நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்?" என்றார்.
அதற்கு அரசர் நடந்ததைக் கூறினார். "நம் நாட்டு பூனைகள் எதற்கு லாயக்கு...? ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன.
எனவே அங்கிருந்து வரவழைப்போம்" என்றார் மந்திரி. அதேபோல் அந்நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.
ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது.
எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்துக் கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் "இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும்" என்றான்.
மன்னருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. "என்ன அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரணமாக வளர்ந்த உன் வீட்டு பூனையால் முடியுமா?" என்றார்.
உடனே இளவரசர் மறித்து "சரி...எடுத்து வா உனது பூனையை" என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன்.
அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் "லபக்" என்று கவ்விச் சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். "என்ன இது அதியசம்!
ஜப்பான்,பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்?" என்று வியந்தவாறே கேள்விகளைக் கேட்க தொடங்கினார்.
அதற்குக் காவலாளி "பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே...
என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவு தான்" என்றான்.
உடனே இளவரசருக்கு "சுரீர்" என்றது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்றுக் கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவெற்று தெரிய வாய்ப்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்?.
ஆக எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றால், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும்.
அப்போது தான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்...!

சரஸ்வதி தேவிக்கு ஏன் கோயில் இல்லை தெரியுமா?....


 சரஸ்வதி தேவிக்கு ஏன் கோயில் இல்லை தெரியுமா?....

சரஸ்வதியைப் பற்றி எப்படி நினைக்கிறோம்? பூர்ண பிரம்ம சக்தி என்று நினைக்கிறோமோ இல்லையோ வித்யாதி தேவதை, கலை மடந்தை, அறிவுத் தெய்வமென்று அவளுக்கு ரொம்பவும் உன்னதமான ஸ்தானம் கொடுத்திருக்கிறோம்.
வெள்ளை வெளேரென்று வீணா, புத்தகங்களோடு அவளை நினைத்தாலே சாந்தியாயிருக்கிறது. சரஸ்வதி பூஜை பண்ணுகிறோம்.
அவளைப் பற்றி ஸ்தோத்திரங்கள், மகான்கள் பண்ணியிருப்பது, கம்பர், ஒட்டக்கூத்தர், குமர குருபரர், பாரதியார் போன்றவர்கள் தமிழில் அழகாகப் பண்ணியிருக்கிறார்கள். அவற்றை ஓதுகிறோம். முத்துஸ்வாமி தீக்ஷிதர் முதலானவர்கள் அவள் மீது செய்திருக்கும் கீர்த்தனங்களைப் பாடுகிறோம். குழந்தையாக பள்ளி போக ஆரம்பிக்கும்போதே அவள்மேல் சுலோகங்கள் சொல்லி பிரியத்துடன் பக்தி பண்ண ஆரம்பித்துவிடுகிறோம்.
இத்தனை இருந்தாலும், இவ்வளவு ஆயிரம் கோயில் இருந்தும் சரஸ்வதிக்கு ஒன்றையும் காணோம். தமிழ்நாடு பூராவிலும் தஞ்சாவூர் ஜில்லாவில் கூத்தனூர் என்ற ஒரு இடத்தில்தான் சரஸ்வதி ஆலயம் இருக்கிறது. அது ஒட்டக்கூத்தர் கட்டிய கோவில். ஒட்டக்கூத்தருடைய ஊர்தான் கூத்தனூர்.
காமகோட்டத்தில், காஞ்சி காமாட்சி ஆலயத்தில் சரஸ்வதிக்கு சந்நிதி உண்டு. ஆனால் அதுகூட பிரம்ம பத்னியான சரஸ்வதி இல்லை என்றும், ராஜ ராஜேச்வரிக்கு மந்த்ரிணியாக இருக்கும் ராஜசியாமளையான மகா சரஸ்வதி என்றும் ஒரு வித்தியாசம் சொல்வதுண்டு. சரஸ்வதிக்கு பிம்பம், சந்நிதியுள்ள மற்ற கோவில்களிலும் அவை முக்கியமான இடம் பெறாமல் ஏதோ ஒரு மூலையில்தான் இருக்கின்றன.
மொத்தத்தில், பிரம்மா மாதிரியே சரஸ்வதிக்கும் கோயில் முக்கியத்துவம் இல்லை. ஆனால் பிரம்மாவிடம் ஜனங்களுக்கு விசேஷ பக்தி, மரியாதைகள் இல்லாததுபோல, சரஸ்வதிக்கு இல்லாமலில்லை. அவளை எல்லாரும் நிரம்பப் போற்றி பக்தி செய்கிறோம். படிக்க ஆரம்பிக்கும்போதே கல்வித் தெய்வம் என்று அவளைத் துதிக்கக் கற்றுக் கொடுத்துவிடுவதால், அது பசுமரத்தாணியாக மனசில் பதிந்து என்றைக்கும் அவளிடம் பக்தி நீங்காமலே இருக்கிறது.
பதிவிரத்யம் என்பது நம் தேசாசாரத்தில் ஊறிப்போன விஷயம். பதிவிரதைகள் புருஷனுக்கு இல்லாத எதையும் தாங்கள் அனுபவிக்க மாட்டார்கள். சரஸ்வதி பிரம்மாவின் நாக்கிலேயே உட்கார்ந்துகொண்டிருக்கும் பதிவிரதை. அதாவது பிரம்மாவின் நாக்குதான் அவள் குடியிருக்கும் கோயில். அவள் எப்படிப் பதிக்குக் கோயிலில்லாதபோது தான் மட்டும் கோயிலில் குடிகொள்வாள்? அதனால்தான் அவளுக்கும் அவர் மாதிரியே கோயில் இல்லை.
அகத்திலே நாம் கூப்பிட்டால் அவள் வருவாள். தாயாரல்லவா? அதனால் நம் குடும்பத்து மனுஷியாக வருவாள். நமக்கு அறிவு புகட்ட வேண்டிய வேலையும் அவளுக்கு இருப்பதால் தனிப்பட்ட முறையில் அகத்துக்கு வருவாள். ஆனால் ஊர் உலகத்துக்குப் பொதுவாக அவளைப் பெருமைப்படுத்திக் கோயில் கட்டுவது என்றால், அப்போது பதியை விட்டுவிட்டு, தான் மட்டும் மகிமை கொண்டாடிக்கொள்ள அவள் சம்மதிக்க மாட்டாள்.
அவளுடைய அந்த உத்தம ஸ்த்ரீ குணத்தை மதித்துத்தான் அவளுக்கு ஆலயமில்லாமல் வைத்திருக்கிறது. சக்திகளை வழிபடுவதற்கென்றே நவராத்ரி என்று வைத்துப் பூஜை பண்ணும்போது துர்கா, லட்சுமிகளுடன் அவளும் வந்து சரஸ்வதி பூஜை பெறுவாள். அதோடு சரி. பதியை நீக்கி, பொதுத் தலத்தில் கோயில் என்று வைத்து ஊர் கூடி நித்ய பூஜை, உத்ஸவாதிகள் பண்ணுவதற்கு அவள் ஒப்புக்கொள்ள மாட்டாள்.
சகல கலைகளுக்கும், கல்வி செல்வத்திற்கும் அதிபதியாகவும், அதி தேவதையாகவும் விளங்குபவள் சரஸ்வதி தேவி. கலைமகள், வாணி, பாரதி, காயத்ரி, வாகீஸ்வரி, சகலகலாவல்லி, நான்முகன் நாயகி, என பல்வேறு திருப்பெயர்களால் போற்றப்படுகிறாள். சைவ, வைணவ அடியார்கள் மட்டுமின்றி, ஜெயின் மற்றும் புத்த சமய மக்களாலும் வழிபடப்படுகிறாள் சாரதா, மானவி, சரஸ்வதி.
நான்முகன் நாவில் கலைமகள் குடியிருப்பதாக புராணங்கள் கூறுகிறது. சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி இருவருமே, ஞானம் அருளுபவர்கள். அதனால் ஜெபமாலை, சுவடி ஏந்தி இருவருமே காணப்படுகிறார்கள். ஆசை அழிந்தால் தான் ஞானம் பிறக்கிறது எனவே, இருவருமே ஜடா மகுடம், ஸ்படிக மாலை, சந்திரகலை சூடி, ஆணவம் அழிக்கும் மூன்றாம் நெற்றிகண்ணை கொண்டுள்ளனர் என வேதம் குறிக்கின்றது.
அம்பிகையின் திருவடிகள் சரணம்....

இரண்டு துண்டான காளையை ஒன்றாக்கிய திருவண்ணாமலையின் அதிசயம் 🔱


 இரண்டு துண்டான காளையை ஒன்றாக்கிய திருவண்ணாமலையின் அதிசயம் 🔱

பழமையான சிவஸ்தலங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு வரலாறு உண்டு. ஆனால், தீயையும் தர்மத்தையும் சாட்சியாக வைத்து நடந்த அற்புதம் ஒன்றை சொல்லும்போது, முதலில் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்.
அருணாசல மலையை அண்டி உயர்ந்து நிற்கும் அந்தத் திருக்கோயில், முகலாய ஆட்சிக் காலத்தில் பேராபத்தை எதிர்கொண்டதாகப் பரம்பரைச் செய்தி கூறுகிறது. கோயிலின் மேல் கண் வைத்த ஒரு முகலாய மன்னன், அதன் செல்வங்களையும், ஆன்மீக சக்தியையும் சவாலுக்குள்ளாக்க எண்ணினான்.
பக்தர்களின் பாக்கியம் — மன்னனின் அவமதிப்பு
ஒரு நாள், கோயிலுக்குள் ஐந்து சிவபக்தர்கள் ஒரு காளையைத் தூக்கிச் சென்றனர். அது சாதாரண மாடு அல்ல; “ஈசனைச் சுமக்கும் நந்தி வாகனம்” என்ற உணர்வோடு அவர்கள் அதைத் தூக்கிச் சென்றனர்.
அதை கண்ட மன்னன் கேலி கலந்த குரலில் கேட்டான்:
“ஏன் இந்தக் காளையைச் சுமக்கிறீர்கள்?”
அவர்கள் பணிவுடன் பதிலளித்தனர்:
“இது எங்கள் ஈசனின் வாகனம். இதைச் சுமப்பது எங்களுக்கு கிடைத்த பாக்கியம்.”
இந்த வார்த்தை மன்னனின் அகம்பாவத்தைத் தூண்டியது. கோபத்தில்,
“உங்கள் ஈசன் சக்திவான் என்றால், இதை மீண்டும் உயிர்ப்பிக்கட்டும்!”
என்று கூறி அந்தக் காளையை இரண்டு துண்டுகளாக வெட்டினான்.
அதிர்ச்சியில் துடித்த பக்தர்கள், உடனே சந்நிதிக்குச் சென்று அருணாசலேஸ்வரரிடம் முறையிட்டனர்.
அசரீரியின் அருள்
அப்போது சந்நிதியில் இருந்து அசரீரியாக ஓர் அருள் வாக்கு கேட்டது:
“ஓம் நமசிவாய என்று ஜெபித்தபடி வடக்கு திசையில் அமர்ந்திருக்கும் என் பக்தனை அழைத்து வாருங்கள்.”
பக்தர்கள் வடக்கு நோக்கி ஓடி சென்றனர். அங்கு ஒரு சிறுவன் தியானமாய் அமர்ந்திருந்தான்.
“இந்தச் சிறுவனா?” என்று அவர்கள் சந்தேகப்பட்டனர்.
அந்தவேளையில் ஒரு புலி அவர்களை நோக்கி பாய்ந்தது.
சிறுவன் கண்களைத் திறந்து,
“ஓம் நமசிவாய!”
என்று முழங்க, புலி பின்வாங்கியது.
அப்போது தான் அவர்கள் உணர்ந்தனர் — இது சாதாரண சிறுவன் அல்ல!
உயிர் பெற்ற காளை
அச்சிறுவனை கோயிலுக்கு அழைத்து வந்து, இரண்டாக வெட்டப்பட்டிருந்த காளையை காட்டினர்.
சிறுவன் அமைதியாக கண்களை மூடி, இடைவிடாது “ஓம் நமசிவாய” என்று ஜெபித்தான்.
அந்த மந்திர ஒலியின் அதிர்வில்,
இரண்டு துண்டுகளாக இருந்த காளை ஒன்று சேர்ந்தது.
உயிர் பெற்று எழுந்தது!
அதை கண்ட மக்கள் பரவசமடைந்தனர்.
இரண்டாவது சவால் — மாமிசம் மலராக
மன்னன் தோல்வியை ஏற்க மறுத்தான்.
“இன்னொரு சோதனை. இதில் நீ வென்றால் என் செல்வம் அனைத்தும் கோயிலுக்கே. தோற்றால் கோயிலை இடித்துவிடுவேன்!” என்றான்.
ஒரு தட்டில் மாமிசம் வைத்து,
“உன் இறைவன் இதை மலர்களாக மாற்றட்டும்!” என்றான்.
சிறுவன் சிரித்தபடி “ஓம் நமசிவாய” என்று ஜெபித்தான்.
அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையில்,
மாமிசம் மணம் வீசும் பூக்களாக மாறியது!
நந்தி எழுந்த அதிசயம்
இன்னும் அகம்பாவம் குறையாத மன்னன், ராஜகோபுரம் அருகிலிருந்த பெரும் நந்தியைச் சுட்டிக்காட்டி,
“இதற்கு உயிர் கொடுத்து, கால்களை மாற்றி அமரவைக்க முடியுமா?” என்று சவால் விட்டான்.
அந்த நந்தி, ஐந்தாவது பிராகாரத்தில் அமைந்திருந்தது.
பொதுவாக சிவாலயங்களில் நந்தி இடது காலை மடக்கி, வலது காலை முன்னிட்டு அமர்ந்திருக்கும். ஆனால் இங்கு அது மாறுபட்ட அமைப்பில் உள்ளது.
சிறுவன் மீண்டும் “நமசிவாய” என்று உச்சரித்தான்.
அடுத்த நொடி —
நந்தி எழுந்து, கால்களை மாற்றி அமர்ந்தது!
அதன் தலை வடக்கு திசை நோக்கி லேசாக சாய்ந்தது.
இன்று வரை அந்த நந்தி, வீரேகிய முனிவர் தியானமிருந்த வடக்கை நோக்கிச் சாய்ந்தபடி காட்சி தருகிறது என்று நம்பப்படுகிறது.
வீரேகிய முனிவர்
அந்தச் சிறுவன்தான் பின்னாளில் “வீரேகிய முனிவர்” எனப் போற்றப்பட்டார்.
பர்வதமலை அருகிலுள்ள சீனந்தல் பகுதியில் அவரின் ஜீவசமாதி இருப்பதாகக் கூறப்படுகிறது.
பர்வதமலை பகுதியைச் சுற்றி இன்னும் அவரின் ஆன்மிகத் தாக்கம் நிலைத்திருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
இன்றும் தொடரும் வழிபாடு
ஆயிரம் கால் மண்டபம் அருகே உள்ள அந்த நந்திக்கு, மாட்டு பொங்கல் நாளில் 108 பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
108 வகை அலங்காரங்களும் செய்யப்படுகிறது.
அந்த அபிஷேகத்தை காணும் பக்தர்களுக்கு தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
பசும்பால் வழங்குவது, தும்பைப் பூ வாங்கிக் கொடுப்பது — செல்வ வளமும், பதவி உயர்வும் தரும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
நம்பிக்கையின் செய்தி
இந்த வரலாறு நமக்குச் சொல்லுவது ஒன்றே —
அகம்பாவம் எவ்வளவு உயர்ந்தாலும், பக்தியின் முன் அது சாயவே செய்யும்.
“ஓம் நமசிவாய” என்ற ஐந்தெழுத்து மந்திரத்தின் சக்தி, கல்லையும் உயிர்ப்பிக்கும். 

மரணம் வந்துவிட வேண்டும்.

 கட்டிய மனைவி சலிப்படைந்து எட்டி உதைப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.

பெற்ற பிள்ளை சனியனே என்று சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
சொத்து சேர்த்த தகப்பனை தவிக்க விட்டு சொத்துக்கு மக்கள் அடித்துக் கொள்ளும் நிலை வருவதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
இழுத்துக் கொண்டிருப்பதை பார்த்து நாளை போக வேண்டும் என்று கடவுளை மகள் வணங்குவதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
மூன்று வேளை உணவில் ஒருவேளை உணவை கொடுத்து தின்னு தொலை சனியனே என்று சொல்லும் முன் மரணம் வந்து விட வேண்டும்.
உறவுகள் எல்லாம் கூடி அறியாமல் செய்த பாவத்தை எடுத்துரைத்து கைத்தட்டி சிரிப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
நோயில்லாத உடல் ஆரோக்கியமாக இருக்கும் நேரத்தில் மரணம் வந்துவிட வேண்டும்.
பெற்ற பிள்ளைகள், கட்டிய மனைவி எட்டி உதைப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
நீ எல்லாம் வாழ்ந்து என்ன பயன் என்று மனைவியும் மக்களும் மற்றவர்களும் சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.......

தெய்வங்களை தரிசிக்கும் முறைகள்!

 தெய்வங்களை தரிசிக்கும் முறைகள்!

*சிவன் கோயிலில் சிவனை வணங்கிவிட்டுதான்,உமாதேவியரை வணங்கவேண்டும்.
*பெருமாள் கோவிலில் முதலில் தாயாரை வணங்கிவிட்டுதான்,பெருமாளை வணங்கவேண்டும்.
*நவக்கிரக வழிபாடு செய்ய சென்றால் அந்த கோயிலின் பிராதான தெய்வங்களை வணங்கிவிட்டு பிரகாரத்தை சுற்றிவிட்டுதான் நவக்கிரகங்களை வணங்க வேண்டும்.
*ஆஞ்சநேயரை வணங்கிவிட்டு 5 நிமிடம் கோயிலில் உட்கார்ந்து கண்ணை மூடி அவரை நினைத்து தியானிக்க வேண்டும்.
*விநாயகர் கோயில் பிரகாரத்தை ஒரு முறை சுற்ற வேண்டும்.
*சிவன்கோயில் பிரகாரத்தை மூன்று முறை சுற்ற வேண்டும்.
*பெருமாள் கோயில் பிரகாரத்தை நான்கு முறை சுற்ற வேண்டும்.
*நவகிரகங்களை ஒன்பது முறை சுற்றி வர வேண்டும்.
*அம்மம் கோவிலுக்கு வெள்ளிகிழமை போறது நல்லது.
*துர்க்கை அம்மனை ஞாயிறு அல்லது செவ்வாய் கிழமையில் ராகு காலத்தில் போய் தரிசிக்க வேண்டும்.
*ஆலய வாசலில் அமர்ந்து பிச்சை எடுப்பவர்களுக்கு உள்ளே நுழையும் போதே காசு போட்டு விட வேண்டும். வெளியே வரும் போது போட்டால், தரிசன பலனை தாரை வார்த்து போல ஆகிவிடும்.
*சாமி பேருக்கு அர்ச்சனை செய்யவேண்டாம். அவர்தான் சகல வசதியோடும் இருக்காரே. நம் பேர் நட்ச்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வதுதான் நன்மையாகும்.

“அஸ்வமேதயாகம்”


 “அஸ்வமேதயாகம்”

அஸ்வம்' என்றால் குதிரை, 'மேதம்' என்றால் பலி. வேத காலத்தில் யஜுர் வேதம் இது ஒரு முக்கிய சடங்காக இருந்தது.
ராஜ்ஜியத்தின் எல்லையை விரிவுபடுத்துதல், சக்கரவர்த்தி என்ற பட்டத்தைப் பெறுதல், மற்றும் செல்வச் செழிப்பை அதிகரித்தல் போன்றவற்றின் ஒரு சடங்காக அரசர்களால் செய்யப்படுவது .
இது எவ்வாறு செய்யப்படும்?
மிகவும் சிறந்த ஒரு ஆண் குதிரையை தேர்ந்தெடுத்து , அதன் நெற்றியில் ஒரு தங்க தகடு ஒன்றை பொருத்தி ஒரு வருடத்திற்கு கட்டவிழ்த்து விடப்படும் . அந்த குதிரை வெள்ளை அல்லது பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும் . எவரும் ஏறி சவாரி செய்யாத குதிரையாக தேர்வு செய்யப்படும் .அதன் வீரர்கள் , படை தளபதிகள் பின் தொடர்ந்து செல்வர் . அந்த குதிரை எந்த ராஜ்ஜியங்களுக்கு செல்கிறதோ அவர்கள் அனைவரும் அடி பணிய வேண்டும் அதை மறுத்தால் போரிட வேண்டும் . ஒரு வருடம் கழித்து நாட்டுக்குள் வரும் குதிரையை யாகம் நடத்தி பலியிடுவர் .
இதற்கு யாகத்தை செய்ய இருக்கும் மன்னனுக்கு கட்டாயம் திருமணம் ஆகி இருக்க வேண்டும் . இந்த யாகத்தை செய்து முடிக்க நான்கு புரோகிதர்கள் தேர்வு செய்யப்படுவர் . நூறு பசுமாடுகளும் தங்க காசுகளும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் . யாகம் செய்யும் புரோகிதர்களால் அரசனுக்கு தங்க மாலை அணிவிக்கப்படும். அதன் பிறகு அந்த குதிரை தர்ப்பை புல்லால் சுத்தம் செய்யப்பட்டு மன்னனின் மனைவியால் ஆயிரம் முத்துக்கள் கொண்ட மாலை அணிவித்து வெளியில் அனுப்பப்படும்.
திரும்ப வந்து சேரும் குதிரையை , பலியிட்டு அதை கொழுப்பை யாக தீயில் போட்டு உருக்கியும் , அதன் பின் குதிரையை நெருப்பில் போட்டு எரித்துவிடுவார்கள். இதை செய்து முடிக்கும் மன்னனே சக்கரவர்த்தி என்னும் பட்டத்தை பெறுவார் .
புராணங்களில் சந்திரகுலத்தில் பிறந்து அஷ்தினாபுரத்தை ஆண்ட நகுஷன் நூறு அஸ்வமேத யாகம் நடத்தி , இந்திரனின் அரியணையை கைப்பற்றினார் என்றும் ,யுதிஷ்டன் அஸ்வமேத யாகம் செய்ய அர்ச்சுனன் குதிரையுடன் சென்று ராஜ்யங்களை வென்று கொடுத்தார் என்றும் அறியப்படுகிறது!!
வரலாறுகளில் , சமுத்திரகுப்தர் , முதலாம் குமாரகுப்தர் , புஷ்யமித்திர சுங்கன்(இரண்டு தடவைகள்) ,சவாய் ஜெய்சிங் II போன்ற மன்னர்கள் அஸ்வமேத யாகம் செய்து சக்கரவர்த்தி பட்டம் பெற்றனர்

சனியின் பிடியிலிருந்து அகத்தியரை காத்தருளிய மதுநாதீஸ்வரர்..!


 சனியின் பிடியிலிருந்து அகத்தியரை காத்தருளிய மதுநாதீஸ்வரர்..!

அகத்திய முனிவர் வழிபட்ட- ஸ்தாபித்த சிவாலயங்கள் மிகப்பழமையும் சிறப்பும் வாய்ந்தவை. சிவ- பார்வதி திருமணத்தின்போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர, அதை சமன் செய்ய அகத்தியர் தென்திசை வந்த நிகழ்ச்சியோடு இந்த ஆலயங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. அவ்வகையில் அமைந்த ஒரு ஆலயம்தான் இலத்தூர் மதுநாதீஸ்வரர் ஆலயம்.
இறைவனின் ஆணைப்படி தென்னகம் வந்த அகத்தியர் தென்பொதிகைச் சாரலை அடைந்தார்.
அப்பகுதிக்கு வடக்கே அடர்ந்த மூங்கில் காடு விரவியிருந்தது. சந்தியா வேளையில் அங்கே வந்த அகத்தியர், நீராடி நித்திய பூஜை செய்ய நீர்நிலையைத் தேடினார். அப்போது அங்கு ஓடிக்கொண்டிருந்த புனித நதியைக் கண்டார்.
ராம- லட்சுமணர் வானர சேனையுடன் இலங்கையை நோக்கி இப்பகுதி வழியாக வந்தபோது, நீர் வேட்கையால் மிகவும் களைப்புற்றனர். அப்போது அனுமன் அங்கிருந்த ஒரு பாறையை ஓங்கி அடித்தான். அதிலிருந்து ஆகாய கங்கை பொங்கியெழுந்து பிரவகித்து, அவர்களின் தாகத்தைத் தீர்த்தது. இதன் காரணமாக அனுமன் நதி என்னும் பெயர் பெற்ற நதியையே அகத்தியர் கண்டார்.
அந்த நதியில் நீராடி, சிவபூஜை செய்ய எண்ணிய அகத்தியர் ஆற்றங்கரையிலிருந்த புளியமரத்தின் கீழ் அமர்ந்து மணலால் சிவலிங்கம் ஒன்றை அமைத்தார். அப்போது அவருக்கு ஏழரைச் சனி தொடங்கி இருந்த சமயம். புளியமரத்தின்மீது ஒரு தேனடை இருந்தது. அதிலிருந்த தேன் பெருகி வழிந்து மணல் லிங்கத்தின்மேல் தாரையாகக் கொட்டியது. கைகளை எடுத்தால் மணல் லிங்கம் கரைந்துவிடும் என்கிற நிலையில், என்ன செய்வ தென்று புரியாமல் திகைத்தார் அகத்தியர்.
இந்தச் செயலை நிகழ்த்திக் கொண்டிருந்தவர் சனி பகவான். இதையறிந்த சிவபெருமான், "ஏழரைச் சனியின் முதல் பாகம் முடிந்துவிட்டது. வீரிய காலம் கழிந்துவிட்டதால் அகத்தியரின் வழிபாட்டுக்குத் தடையாக இருக்காதே. யாம் வாக்களித்தபடி அகத்தியருக்கு என் திருமணக் கோலத்தைக் காட்டியருள வேண்டிய தருணமிது' என்று சனி பகவானுக்கு கட்டளையிட்டார்.
அதன்பின் சனி பகவான் தன் வீரியத்தைக் குறைத்துக்கொள்ள, தேனடையிலிருந்து பொழிந்த தேன்தாரை நின்றது. அகத்தியர் தம் கைகளை விலக்க, தேனில் ஊறிய மணல் லிங்கம் கெட்டிப்பட்டு நின்றது. அவருக்கு தேனீஸ்வரர் (மதுநாதீஸ்வரர்) என்று பெயரிட்டு வணங்கினார் அகத்தியர். ஈசனும் தான் அருளியபடி அகத்தியருக்கு திருக்காட்சி தந்து மறைந்தார்.
பின்னர் அகத்தியர் வடதிசை நோக்கி அமர்ந்து, சனியின் தாக்கம் விலக சனீஸ்வரர் தோத்திரம் பாடினார். அவருக்கு சனி பகவான் காட்சி தந்தருளினார்.
இத்தகைய புராணச் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்ட இலத்தூர் சிவாலயத்தில், அகத்தியரால் அமைக்கப்பட்ட மணல் லிங்கம் தேனீஸ்வரர், மதுநாதீஸ்வரர் என்னும் திருப்பெயருடன் மூலவராக விளங்குகிறது. ஆலயத்துக்கு அருகே அனுமன் நதி பாய்கிறது. அன்னை அறம் வளர்த்த நாயகி என்னும் பெயரோடு திருவருள் புரிகிறாள். வலம்புரி விநாயகர், சூரிய பகவான், தட்சிணாமூர்த்தி, வள்ளி- தெய்வானையோடு முருகப் பெருமான், சுவாமி ஐயப்பன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களும் சந்நிதி கொண்டுள்ளனர்.
அகத்தியருக்கு தெற்கு நோக்கி காட்சி தந்த சனி பகவான், அவ்வண்ணமே தெற்கு நோக்கி தனிச் சந்நிதியில் அருள்புரிகிறார். அவரை வலம் வரும் நிலையில் சந்நிதி அமைந்திருப்பது தனிச்சிறப்பு வாய்ந்தது.
""பொங்கு சனியாய் பொலிவைத் தருபவர் இவர். கடந்த சனிப் பெயர்ச்சியின்போது மட்டும் பல்லாயிரங்கணக்கான மக்கள் இவரை வழிபட்டுச் சென்றனர். தன்னை வணங்குபவர்களின் துன்பங்களை நீக்குவதில் நிகரற்று விளங்குகிறார் இந்த சனி பகவான்!'' என்று மெய்சிலிர்க்கச் சொல்கிறார் கள் ஆலய அர்ச்சகர்கள் சிவா, தட்சிணாமூர்த்தி ஆகியோர்.
முழு முதல்வனான ஈசனுக்கே சனி பகவான் தனது காலத்தில் இன்னலை ஏற்படுத்தியிருக்கிறார். கண்டச் சனி காலத்தில்தான் சிவன் ஆலகால விஷத்தை அருந்த நேர்ந்ததென்றும்; அஷ்டமச் சனியின்போதுதான் தட்சனால் அவமானப்படுத்தப் பட்டார் என்றும்; ஈசன் பிரம்ம கபாலத்தில் பிச்சையெடுக்க நேர்ந்ததும் சனியின் ஆதிக்கத்தின் போதுதான் என்றும் சொல்வார்கள். அதுபோல ஒரு குளத்திலுள்ள கருங்குவளை மலரின் கீழும் சிவபெருமான் ஏழரை நாழிகை மறைந்திருக்கும்படி நேரிட்டது. அந்தக் குளமே இவ்வாலயத்தின் அருகே அமைந்துள்ள அகத்திய தீர்த்தம். அகத்தியர் ஏழரைச் சனி விலகும்போது இந்தக் குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டார்.
எனவே, ஏழரைச் சனி விலகுபவர்கள் இந்தக் குளத்தில் நீராடி இறைவனையும் சனி பகவானையும் வணங்கினால், அல்லல்கள் அனைத்தும் அகன்று இன்பங்கள் பெருக வாழ்வர். "சனி பகவானைப்போல கொடுப்பாரில்லை' என்னும் வழங்கு நிதர்சனமாவதை உணரலாம்.
நெல்லை மாவட்டம், தென்காசியிலிருந்து வடக்கே ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இலத்தூர் கிராமம். இங்குதான் அற்புதமான இந்த மதுநாதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது

சாப்பாட்டு ராமன் என பெயர் வந்ததன் வரலாறு..


 சாப்பாட்டு ராமன் என பெயர் வந்ததன் வரலாறு....

இலங்கையில் போர் முடிந்தது. அதற்கு பின்பு ராமர், சீதை, லட்சுமணன், சுக்ரீவன், விபீஷணன் மற்றும் வானரப்படைகள் அனைவரும் அயோத்திக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அயோத்திக்கு செல்லும் முன்பாக பரதவாஜ முனிவரை தரிசிக்க ராமர் விரும்பினார். ஆனால் பதினான்கு ஆண்டுகள் முடிந்த உடனேயே ராமர் அயோத்திக்கு திரும்பி வரவேண்டும். அப்படி வரவில்லை என்றால் தான் தீயில் விழுந்து மாண்டு விடுவதாக பரதன் ராமரிடம் சொல்லி இருந்தான்.
இதனை ராமர் நினைத்துப் பார்த்தார்.
பரதன் சொன்னதை செய்யக்கூடியவன் என ராமர் நன்கு அறிவார். பதினான்கு வருடங்களுக்கு முன்பு பரதவாஜ முனிவரிடம் ஆசிர்வாதம் பெற்ற பின்பு வனவாசத்திற்கு ராமர் கிளம்பினார். அதன் காரணமாக மீண்டும் பரதவாஜ முனிவரிடம் ஆசி பெற்று அயோத்தி திரும்பி செல்ல ராமர் முடிவு செய்தார். பரத்வாஜ முனிவர் ராமரையும் சீதையையும் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்து வரவேற்றார்.
இன்று இரவு இங்கே தங்கி உணவு உண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ராமரால் முனிவரின் வேண்டுகோளை நிராகரிக்க முடியவில்லை. ஆனால் அதே நேரம் தன் வருகை தாமதமானால் தம்பி உயிர் துறப்பான் என்றும் அஞ்சினார். ஆகவே அனுமனை அழைத்தார். எனக்காக நீ பரதனிடம் சென்று நான் அனைவருடனும் வந்து கொண்டிருப்பதை சொல்லி விட்டுவா என்று கேட்டுக் கொண்டார். ராமரின் உத்தரவை நிறைவேற்ற அங்கிருந்து விரைவாக அனுமன் சென்றார்.
அனுமன் உடனே திரும்பி வருவார் என்று பரதவாஜ முனிவர் எண்ணவில்லை. அதனால் வந்திருக்கும் அனைவருக்கும் சாப்பிட இலை ஏற்பாடு செய்த பரதவாஜ முனிவர், அனுமனுக்கு தனியாக உணவு சாப்பிட இலை ஏற்பாடு செய்யவில்லை. அனைவரும் சாப்பிட ஆரம்பிக்கும் நேரம் சரியாக அனுமன் வந்து விட்டார். இதனைக் கண்ட ராமர் தனது இலையின் மேல்பக்கம் அனுமன் சாப்பிடட்டும் என்று சொல்லி தனக்கு எதிர்பக்கம் அனுமனை அமரச் செய்தார். அனுமன் காய் பழங்களைத் தான் விரும்பி உண்பார் என ராமருக்குத் தெரியும்.
ஆகவே பரிமாறுபவர்களிடம் தனது இலையின் மேல்பக்கத்தில் காய் பழங்களை பரிமாரச் சொன்னார். அரிசி சாதம் மற்ற உணவு வகைகளைத் தன் பக்கம் வைக்கச் சொன்னார். இருவரும் ஒரே இலையில் சாப்பிட்டு முடித்தார்கள். தான் உடனடியாகப் போகாவிட்டால் பரதனின் உயிர் சென்றுவிடும் என்று தெரிந்தும், பரதனிடம் தான் வந்து கொண்டிருப்பதாக அனுமனை தூது போகச் சொல்லி விட்டு பரதவாஜ முனிவரின் விருந்தில் ராமர் கலந்து கொண்டார்.
மேலும் தனது இலையில் அனுமனுக்கு பழங்கள் காய்களிகளை மட்டும் வைக்கச் சொல்லி தான் சாப்பாட்டை சாப்பிட்டதாலும் ராமர் சாப்பாட்டு ராமர் ஆனார். அதுவே காலபோக்கில் சாப்பாட்டில் விருப்பம் உடையவர்களை இப்படிப் பெயரிட்டு அழைப்பது வழக்கமாகிவிட்டது.
ஜெய் ஸ்ரீ ராம் 🙏🏻

பாவம் ஓரிடம்...பழி ஓரிடம்..


 பாவம் ஓரிடம்...பழி ஓரிடம்..

ஒரு அந்தணரும் அவரது மனைவியும் தங்கள் இரண்டு வயது குழந்தையுடன் காட்டுப்பாதையில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். வழியில் ஓரிடத்தில் களைப்பாய் இருக்கவே, தாகசாந்தி செய்ய எண்ணினர்.
அந்தணர், மனைவியை குழந்தையுடன் ஒரு மரத்தடியில் அமர வைத்தார். அவள் களைப்பில் மரத்தடியில் படுத்தாள்.
கூஜாவுடன் அருகில் தெரிந்த நீரோடையை நோக்கிச் சென்றார்.அந்த மரத்தின் மீது யாரோ ஒரு வேடன் விட்ட அம்பு கிளைகளிடையே தங்கி நின்றது. சற்றுநேரத்தில் காற்றடிக்கவே,
கிளையில் தொக்கி நின்ற அம்பு படுத்திருந்த அந்தப் பெண்ணின் வயிற்றில் தைத்தது. அது விஷம் தோய்ந்த அம்பு. விஷம் உடலில் பரவி அவள் இ*றந்தாள். அப்போது அங்கே ஒரு வேடன் வந்தான்.
ஒரு பெண் இ*றந்து கிடப்பதையும், அருகில் அவளது குழந்தை அழுது கொண்டிருப்பதையும் பார்த்தான். இதற்குள் அந்தணரும் வந்து விடவே, வயிற்றில் அம்பு தைத்து இ*றந்து கிடக்கும் மனைவியைப் பார்த்தார்.அருகில் நின்ற வேடன் மீது சந்தேகம் கொண்டு, என்ன நோக்கிலடா என் மனைவியைக் கொ*ன்றாய்? நீ வேட்டைக்காரனா?
அல்லது காமுக நோக்குடன் இப்படி செய்தாயா? நீ நல்லவன் என்றால், கடவுளின் மீது சத்தியமாக இங்கிருந்து ஓடக்கூடாது. என்னோடு உன் ஊர் மன்னனைக் காண வா! அவன் தீர்ப்பளிக்கட்டும், என்றார். வேடன் கெஞ்சினான். அந்தணரே! உமது மனைவியை நான் கொ*ல்லவில்லை.
நான் ஏதுமறியாதவன். உமது மனைவியின் இ*றப்புக்கு காரணமும் எனக்குத் தெரியாது, என கெஞ்சினான். அவனை நம்பாத அந்தணர், மனைவியின் உடலை தோளிலும், ஒரு கையில் குழந்தையுடனும் அரண்மனைக்கு வந்தார்.
மன்னனிடம் புகார் சொன்னார். வேடன் மன்னனிடம், தான் ஏதுமறியாதவன் என புலம்பித் தீர்த்தான். அவனை சேவகர்கள் அடித்தும் மிரட்டியும் பார்த்தனர். மன்னா! என்னைக் கொ*ல்லுங்கள். வேண்டாம் என சொல்ல வில்லை. ஆனால், நான் சாகும் முன் உண்மை செ*த்துவிடக்கூடாது, என்றான்.
மன்னன் அவனை சிறையில் அடைத்து விட்டு, அந்தணரிடம், உம் மனைவியின் ஈமக்கிரியையை முடித்து விட்டு நாளை வாருங்கள் , என சொல்லிவிட்டான். மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று,
சுந்தரேஸ்வரா!
🔥தவறான தீர்ப்பை நான் வழங்கி விடக்கூடாது. அதற்கு நீயே அருள் செய்ய வேண்டுமென பிரார்த்தித்தான். அன்றிரவு கனவில் வந்த சுந்தரேஸ்வரர், மன்னா! நீ நாளை மாசிவீதியிலுள்ள மண்டபத்தில் நடக்கும் திருமணத்துக்கு செல்.
உண்மை தெரியும், என்றார்.மறுநாள் மன்னனும் அந்தணரும் மாறுவேடத்தில் அங்கு சென்றனர். அப்போது சமையலறையில் இருவர் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. ஆனால், பேசுபவர்களின் உருவம் தெரியவில்லை.
🔥தூதனே! நம் எமதர்ம மகாராஜா, இந்த மண்டபத்தில் திருமணம் செய்யப்போகும் மணமகனின் உயிரைப் பறிக்க உத்தரவிட்டுள்ளார். இவனோ மணமேடையில் ஆரோக்கியத்துடனும், உறவினர்கள் புடைசூழவும் இருக்கிறான். என்ன செய்வது? என்றது ஒரு குரல். மற்றொரு குரல், தூதர் தலைவரே!
கவலை வேண்டாம். நேற்று காட்டில் இருந்த அந்தணரின் மனைவியின் மீது மரத்தில் தங்கியிருந்த விஷ அம்பை எப்படி அவளது வயிற்றில் விழச்செய்து உயிரைப் பறித்தோமோ,
அதே போல இந்த தெருவில் நிற்கும் காளையை மிரளச்செய்து மண்டபத்திற்குள் விரட்டி விடுவோம். கூட்டம் கலைந்தோடும் போது, காளை மணமகனை முட்டிக் கொ**லட்டும், என்றது. மன்னரும் அந்தணரும் உண்மை நிலையைப் புரிந்து கொண்டனர்.
வேடனிடம் மன்னிப்பு கேட்டார் அந்தணர். சிறையில் வைத்ததற்காக மன்னன் அவனுக்கு ஏராளமான பொருளை நஷ்ட ஈடாக கொடுத்து அனுப்பி வைத்தான்.

*சக்கரை நோயை இந்த நாட்டை விட்டு அடித்துத் துரத்தும் வேளை வந்து விட்டது*

 *சக்கரை நோயை இந்த நாட்டை விட்டு அடித்துத் துரத்தும் வேளை வந்து விட்டது* சக்கரை நோயை வைத்து இந்தியாவில் மட்டுமே *700 மருந்து நிறுவனங்கள்* (க...