Saturday 28 September 2019

மஹா பரணி

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

 பித்ருக்கள் பக்ஷம் எனப்படும் மஹாளய பக்ஷத்தில் நான்காம் நாளான சதுர்த்தி தினத்தில் மஹா பரணி எனும் முக்கிய தினமாக அனுஷ்டிக்க படுகிறது.
மஹாபரணி” என்பது புரட்டாசி மாதத்தில் மஹாளய பக்ஷத்தில் வரும் பரணி நக்ஷத்திரமாகும். பரணி நட்சத்திரம் என்பது யமதர்ம ராஜனின் நக்ஷத்திரம் ஆகும்.
இந்நாளில் இறந்த நம் முன்னோர்கள் எல்லாம் அவரவர் கர்ம விணைக்க ஏற்ப யமதர்மனின் தீர்ப்புக்கு இணங்க சொர்க்கத்திற்க்கும் நரகத்திற்க் கும் செல்வார்கள் என்பது நியதி ஆகும்.
யமதர்மனுக்கு உகந்த மஹாபரணி நக்ஷத்திர நாளில் முன்னோர்களுக்கு ஸிரார்த்தம், திதிகள், தர்பணம் செய்வது மற்றும் யம தீபம் ஏற்றுவது போன்றைவைக ளை செய்தால் யமதர்மன் மனம் மகிழ்ந்து நரகத்திற்க்கு செல்ல வேண்டிய நம் முன்னோர்களின் வேதனையை குறைத்து சொர்க்கத்திற்க்கு அனுப்பி வைப்பார்கள் என ஐதீகம்.
மஹாளய பக்ஷத்தில் மஹா பரணியிலும் தீபாவளிக்கு முந்தைய தினத்தன்றும் யம தீபம் ஏற்றுவது நம் மரபு. மரணபயம் நம்மைவிட்டு அகலவும் துர்மரணமின்றி அமைதியான மரணம் ஏற்படவும் யமதர்மராஜனை தவறாமல் வழிபட வேண்டும்.
தக்ஷிணாயன புண்ய காலத்தில் வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை, மஹாளய பக்ஷம் மற்றும் தீபாவளி அமாவாசை ஆகிய நாட்களில் தர்பணம் செய்வது மரபு.
அவ்வாறு வருகை தரும் பித்ருக்களுக்கு. அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே. அவர்களை வழியனுப்பும் பொருட்டு தீபமேற்றுதல் வேண்டுமாம்.
சாத்திரப்படியான யம தீபம் ஏற்றும் முறை:
*********************************************
1. உங்கள் வீட்டின் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும்.
2. தெற்கு திசை நோக்கி விளக்கு எரிய வேண்டும்.
3. விளக்கேற்றிய பின்னர், இந்து பலிதானிகளையும் உங்கள் முன்னோரையும் மனதில் ஓரிரு நிமிடங்கள் சிந்திக்க வேண்டும்.
4. பின்னர்க் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.
ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய
ம்ருத்யவே சாந்த காயச
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச
ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே!
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:
சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...