Tuesday 24 September 2019

*கோயில்களில் உள்ள துவார பாலகர்கள் யார்?*

 முக்தியின் வாசலில் நான்கு துவார பாலகர்கள் உண்டு என்கிறார் வசிஷ்டர்.
அவை:
*சமம்:* புலன்களை தீமையில்லாத நல்ல வழிகளில் திருப்பி கட்டுப்படுத்துதல்.
*விசாரம்:* எதையும் ஆழமாய் சிந்தித்து தெளிந்து அதன்படி வாழ்தல். கொள்ளத்தக்கன எவை, தள்ளத்தக்கன எவை என்பதில் தெளிவாயிருத்தல்.
*சந்தோஷம்:* வேட்கைகளை ஏற்படுத்திக் கொண்டு அதன் பின் ஓடி சஞ்சலப்பட்டு துயரம் கொள்ளாமல் தான் செய்ய வேண்டிய கர்மங்களைச் செய்து நிறைவாக, சந்தோஷமாய் வாழ்தல்.
*சத்சங்கம்:* உண்மையான சாதுக்கள் மற்றும் அறநெறியில் உயர்ந்தோரை அணுகி இருத்தல்.
இந்த நான்கு வழிகளில் ஒன்றையேனும் முழுமையாகப் பின்பற்றினால் மீதி மூன்றும் தானாகவே அமையும் என்கிறார் வசிஷ்டர்.
துக்க வடிவான சம்சாரத்திலிருந்து விடுதலையைப் பெற ஒரே வழி மனதை வசப்படுத்துதலே என்கிறார் வசிஷ்டர்.
கோவிலில் நுழையும் போது `துவார பாலர்கள்’ என்று இரு வாயிற்காப்போரைக் காணலாம்.
ஒரு துவார பாலகர், தன் ஆள்காட்டி விரலை மட்டும் உயர்த்தி காட்டி நிற்பது ஏன் தெரியுமா?
கடவுள் ஒருவர் தான் என்று நமக்கு நினைவுபடுத்துவதற்காக. மற்றொரு துவார பாலகர், கையை விரித்து காட்டுவது- கடவுள் ஒன்றைத் தவிர, வேறொன்றில்லை என்பதை உணர்த்துவதற்காக.
இதையே வேதம் ஏகம் ஏவஅத்விதீயம் ப்ரம்மம்’ என கூறுகிறது. `நிந்தா ஸ்துதி’ என்று ஒன்று உண்டு.
ஈசனை, கள்ளன், பிச்சைக்காரன், கிறுக்கன் என்றெல்லாம் வசைபாடியே அவனை துதிப்பதுதான் அது.
அன்பு இருக்கும் இடத்தில் தானே கோபமும் இருக்கும்! அடியார்களுக்காக எதையும் மகிழ்ச்சியுடன் ஏற்பான் ஈசன்
*பெருமாள் கோயில் துவார பாலகர்கள்:*
விஷ்ணு ஆலயங்களில் உள்ள துவாரபாலகர்கள் ஜயனும், விஜயனும் ஆவர்.
இவர்கள் வைகுண்டத்தில் எம்பெருமானுக்கு துவாரபாலகர்களாக இருந்தவர்கள் சனத்குமாரர்களின் சாபத்தினால் மூன்று பிறவிகளில் அசுரர்களாக இருந்து, பின்னர் திருமாலின் சேவைக்கே அவர்கள் வந்து சேர்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
இந்த துவாரபாலகர்கள் கரங்களிலே சங்கும் சக்கரமும் கதாயுதமும் ஏந்திக் காட்சி தருகின்றனர்.
*சிவன் கோயில் துவார பாலகர்கள்:*
சிவாலயங்களில் துவார பாலகர்களுக்கு சண்டன், பிரசண்டன் என்ற பெயர்கள் வழங்குகின்றன.
இவர்கள் வீராதி வீரர்கள். தமிழில் வழங்கப்படும் ஒரு பழமொழி தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்ட, பிரசண்டன் இதன்மூலம் இந்த துவாரபாலகர்கள் பற்றிய விவரத்தை முற்காலத் தமிழர்கள் அறிந்து வைத்திருந்தனர் என்பதை உணரலாம்.
*அம்மன் சன்னதியைப் பாதுகாக்கும் துவாரபாலகி*
(பெண்)களை ஹரபத்ரா, சுபத்ரா என்று அழைக்கிறார்கள்.
மூலஸ்தானத்தின் வாயிலில் மட்டுமன்றி தேர்களிலும், தெப்பங்களிலும், ராஜகோபுரங்களிலும்கூட இந்தத் துவார பாலகர்களைக் காணலாம்.
தஞ்சை பெரிய கோயில் ராஜகோபுர துவாரபாலகர்கள் காண்போரைக் கவரும் விதத்தில் உள்ளனர்.
கோயிலுக்குள் தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்கள் முதலில் துவார பாலகர்களின் எதிரில் நமஸ்கரித்துஉட்செல்ல அனுமதி பெற்று, பிறகே மூல ஸ்தானத்தை வழிபடச் செல்லவேண்டும் என்பது ஆலய தரிசன விதி.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...